மக்களின் கலங்கரை விளக்கம்
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்;
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும், அலைகடல் ஓய்வதில்லை.
ஏற்றுயர் எடுத்தான்
ஏணியாய் இருப்பான்
எல்லையில்லா ஒருவன்
எம்.ஜி.ஆர். விஸ்வரூபம்
ரூபம், ரூபம், ரூபம்.
குடையாய் இருப்பான்
கொடையாய் வருவான்
காலமெல்லாம் வள்ளல்
எம்.ஜி.ஆர். யுக தர்மம்.
தர்மம் தர்மம் தர்மம்.
உழைப்பினில் மகிழ்வான்
உத்தம தலைவன்
உறவாய் மலர்வான்
எம்.ஜி.ஆர். அருள் வேதம்
வேதம், வேதம், வேதம்.
நலன்களை தருவான்
நன்மையை செய்வான்
நீடித்து நிலைப்பான்
எம்.ஜி.ஆர். ஓர் உலகம்
உலகம், உலகம், உலகம்.
கடமையில் சிறப்பான்
கொள்கையில் வாழ்வான்
கருணையின் இறைவன்
எம்.ஜி.ஆர். புகழ் கழகம்
கழகம், கழகம், கழகம்.
மதுரை வீரன்
மன்னாதி மன்னன்
மக்கள் திலகம்
மாதவ தலைவன்
எம்.ஜி.ஆர். இமயம்.
இமயம், இமயம், இமயம்.
ஏழையின் இறைவன்
எங்க வீட்டு பிள்ளை
எம்.ஜி.ஆர். தமிழ் தெய்வம்
தெய்வம், தெய்வம், தெய்வம்.
இவன் யார் என்று தெரிகிறதா?
இவன் தெய்வம் புரிகிறதா.
http://i57.tinypic.com/5r21s.jpg