-
http://i68.tinypic.com/2ikqqtv.jpg
நான் நேத்து முன்தினம் போட்ட பதிவுக்கு அதிராம் என்பவர் நேத்து இங்கே வந்து பதில் சொல்லிருந்தார். டைப்பிங் செய்ய எனக்கு லேட் ஆகும் . நிதானமா டைப்பிங் செய்து பதில் போடலாம் என்ற பாத்தால் என் பதிவும் இல்லை. அவர் பதிவும் காணவில்லை.
பரவால்ல. இருந்தாலும் அவருக்கு என் பதில் இங்கே.
நான் பதிவு செய்த போஸ்டர் நீங்கள் சொன்னபடி 1967 தேர்தலில் ஒட்டப்பட்ட போஸ்டர்தான். ஆமாம்.
ராஜிவ் காந்தி ரத்த வெள்ளத்தில் கிடக்கும் போஸ்டர்களை ஒட்டித்தான் ஜெயலலிதாவும் ஆட்சியைப் பிடித்தார். ஆமாம். உண்மை.
ஜெயலலிதா பிணத்தை செட்டப் செய்து பன்னீர் கோஸ்டி ஓட்டுக் கேட்டது தப்பு. கேவலமானதுதான். என் பதிவில் சொல்லியிருக்கிறேனே. பார்க்கலீயா?
ஆனால், நான் சொல்வது இதே தவறை செய்த திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும், ஓபிஎஸ்சை பார்த்து பிண அரசியல் நடத்துவதாக சொல்ல தகுதி இல்லை என்பதுதான். (1984-ல் புரட்சித் தலைவர் உடல் நிலை சரியில்லாததை போஸ்டரில் போட்டு உடல் நலம் சரியாக வாழ்த்து சொல்லிவிட்டு ஆனால், உதயசூரியனுக்கு வாக்கு கேட்டு போஸ்டர் ஒட்டிய கேவலம் நடந்தது. மக்களை முட்டாளாக நினைத்துக் கொண்டு, புரட்சித் தலைவர் வந்தவுடன் ஆட்சியை ஒப்படைப்பதாகவும் கருணாநிதி சொன்னார்)
உடனே, அந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெறும் படத்தை அதிமுக போஸ்டர் அடிக்கவில்லையா? தியேட்டரில் விளம்பரப்படம் காட்டவில்லையா? என்று கேட்காதீர்கள். புரட்சித் தலைவரை ஐஸ் பெட்டியில் வைத்திருக்கிறார்கள் என்று திமுகவினர் செய்த பொய் பிரசாரத்தை முறியடிக்கத்தான் அது காட்டப்பட்டது.
தினகரன் பணத்தை கோடிக்கணக்காக அள்ளிவிட்டார். ஆமாம். ஆனால், இந்த மாதிரி அநீதிக்கெல்லாம் வழி வகுத்து அழகிரி புண்ணியத்தில் திருமங்கலம் தேர்தலில் வெற்றி பெற்று (அந்த அக்கிரம வெற்றிக்காக அறிவாலயத்தில் நடந்த விழாவில் அழகிரிக்கு கருணாநிதி தங்க சங்கிலி போட்டார்) அந்த அக்கிரமத்தை திருமங்கலம் பார்முலா என்று பெருமையடித்துக் கொண்ட திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் தினகரன் பணத்தை அள்ளிவிடுவதாக சொல்லவும் தகுதி ஏது?
நீங்கள் சொன்னபடி மோடியின் கைப்பாவையான தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்துவிட்டது. ஏன்? தினகரன் வெற்றி பெறுவாரோ என்ற பயம்தான் காரணம். வளர்ந்துவிடுவார்களோ என்று திமுகவும் மற்ற கட்சிகளும் பயப்படும் இப்படியாப்பட்ட ஆள்தான் வேண்டும் என்கிறேன். அப்போதுதான் புரட்சித் தலைவரால் தொடங்கப்பட்ட அதிமுக பலமாக தொடரும். இதில் என்ன தப்பு?
நீங்கள் சொன்னபடி முதலமைச்சர் ஆகணும் என்று திட்டம்போட்ட தினகரன் வாயில் மண் விழுந்துதான் விட்டது.
ஆனால், பிப்ரவரி 18ம் தேதி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நடந்த நம்பிக்கைத் தீர்மானத்தின் போது திமுக எம்எல்ஏக்களை ஏவி விட்டு சபாநாயகரைத் தாக்கி, அவர் சட்டையைக் கிழித்து, கையைப் பிடித்து இழுத்து, அவர் நாற்காலியில் உட்கார்ந்து, மைக்கை உடைத்து அமளி செய்து, (இதெல்லாம் டிவியில் காட்டப்பட்டன. பேப்பரிலும் படங்கள் வந்தது. பார்த்திருப்பீர்கள்)சட்டசபையில் கலவரத்தை தூண்ட முயற்சி செய்து, (புரட்சித் தலைவர் மீதே சட்டசபையில் செருப்பு வீசியவர்களிடம் சட்டசபையில் ஜெயலலிதாவின் சீலையைப் பிடித்து இழுத்த கும்பலிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்)
தன் சட்டையை தானே கிழித்துக் கொண்டு (முதலில் வந்த போது ஸ்டாலின் சட்டைப் பையில் பேனா இருந்த படமும் மீண்டும் தன் அறைக்கு போய்விட்டு வந்தவுடன் சட்டைப் பை கிழிந்த மாதிரி இருந்த படங்களும் வெளியானது. நீங்களும் பார்த்திருப்பீர்கள்) சபையை விட்டு வெளிய வந்து, காரில் இருந்து இறங்கி, மக்களைப் பார்த்து தன் அருகில் கூப்பிட்டு தன் சட்டையைக் காட்டி வன்முறையை தூண்டிவிட முயற்சி செய்து,
கவர்னரிடம் ஓடிப்போய் கிழிந்த சட்டையை காட்டி, மெரினா பீச்சில் உட்கார்ந்து கூட்டத்தை சேர்த்து ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி கூட்டத்தை கூட்டி
குழப்பத்தை ஏற்படுத்தப் பார்த்து, எப்படியாச்சும் ஆட்ச்சியை கலைத்து விடலாம். தேர்தல் வரவழைத்து உடனே முதலமைச்சராகிவிடலாம் என்று மனப்பால் குடித்த ஸ்டாலின் வாயில் விழுந்த மண்ணைவிட தினகரன் வாயில் விழுந்த மண் அளவு குறைச்சல்தான்.
இறைவன் விருப்பப்படிதான் எல்லாம் நடக்கும். இறைவன் நாடினால் தினகரன் முதல்வராவதையோ அதிமுக பலமடைவதையோ யாரும் தடுக்க முடியாது. புரட்சித் தலைவர் தொடங்கிய கட்சி தொடர வேண்டும், இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைக்க வேண்டும் திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என்பதே என் ஆசை. அல்லாவின் விருப்பம் அதுவாகவே இருக்க வேண்டும் என்று வேண்டுதல் செய்கிறேன்.
நீங்கள் இங்கே பதிவு போட்டதற்கு மன்னிப்பு எல்லாம் எதற்கு கேட்கிறீர்கள்? உங்கள் கருத்து உங்களுக்கு. என் கருத்து எனக்கு.
-
-
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கேப்டன் டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பெற்றால்தான் பிள்ளாயா " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/3325r2s.jpg
-
இன்று இரவு 10 மணிக்கு ஜெயா மூவிஸில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "பெரிய இடத்து பெண் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது
http://i65.tinypic.com/2ytobcm.jpg
-
-
-
Sad news
To day at Salem
mayyam thread hubber thiru muthayan ammu passed away. Great loss to our thread.
Rip.
-
மக்கள் திலகத்தின் பக்தரும்
நமது திரியின் பதிவாளருமான
சேலம் முத்தையன் அம்மு அவர்கள்
இன்று காலமானார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை
வேண்டிக்கொள்கிறேன்.
இப்படிக்கு
எஸ் ரவிச்சந்திரன்
-
அன்பார்ந்த நண்பர் திரு. சேலம் முத்தையன் அம்மு அவர்கள் மறைந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரும் உற்றேன்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் உருவ படங்கள், மற்றும் திரைப்படங்களில்
உள்ள பல்வேறு வடிவ தோற்றங்களை மிக அழகாக , பலரது கவனத்தை ஈர்க்கும் வண்ணம் நள்ளிரவிலும் இந்த திரியில் பதிவு செய்த அவரது சேவைகள் மகத்தானவை . இன்னும் கொஞ்ச காலம் நம்முடன் இருந்திருக்கலாம் .
உடல்நலத்தில் சிறிது அக்கறை எடுக்க தவறிவிட்டார்.
திரு. சேலம் முத்தையன் அம்மு அவர்கள் மறைவு குறித்து, ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பிலும், என் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம் .
ஆர். லோகநாதன் .
ஆயிரத்தில் ஒருவன்
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .
-
ம.தி.மு.க. தலைவர் திரு. வை.கோ. அவர்களின் சிறப்புரை தொடர்ச்சி ..........
நாடோடிமன்னன் திரைப்படத்தில்,வரும் முத்துக்கூத்தன் எழுதிய,அட் வகேட் அமரன் நாடகத்திற்காக செ ந்தமிழே வணக்கம் என்கிற பாடலுடன் ,படம் அற்புதமாக தொடங்குகிறது .ஒவ்வொரு காட்சியும் மெய் சிலிர்க்கவைக்கும் .
படம் தயாரித்தது எப்படி ? Prisoner of jendaa என்கிற படத்தின் கதை /தழுவல்
நான் சிறிய வயதில் .if i be the king -நான் மன்னனால் என்கிற படத்தை பார்த்தேன் .நாடோடி மன்னன் தயாரிக்க முடிவெடுத்து ,நடிகை பானுமதியை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்தபோது ,நடிகை பானுமதி சொன்னார். அதாவது ,இதே கதையை நாங்கள் பரணி ஸ்டுடியோவில், பரணி பிக்ச்சர்ஸ் சார்பில் எடுக்கப்போகிறோம் என்று.prisoner of jendaவைத்தான் நாங்கள் எடுக்கப் போகிறோம். கடந்த 10 மாதங்களாக வேலைகள் நடைபெறுகின்றன ஆகவே எப்படி முடியும் என்றும் கூறினார் .எம்.ஜி.ஆர். சொன்னார் பானுமதியிடம்,நீங்களும் எடுங்கள், நானும் எடுக்கிறேன். நான்
கதையின் கரு மட்டும் வைத்துக் கொண்டு ,ஒரே உருவ ஒற்றுமை உள்ள இரு கதாபாத்திரங்கள் ஒருவன் மன்னன் .இன்னொருவன் மன்னன் போல தோற்றமுள்ள நாடோடி .மேலும் கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறேன்.
நீங்கள் pirisoner of jendaa கதையை அப்படியே எடுக்கிறீர்கள் . நான் எடுக்கும் படத்தில் மன்னன் போல போலியாக நடிக்கிறவன் மன்னனின் மனைவியோடு உறவாடுகிறான் . காதல் உறவாடுகிறான் . பின்னர் அவளுக்கு உண்மை தெரிந்து அவன் விலகுகிறபோது கூட அவள் அந்த தாபத்திலிருந்து விலக முடியாதவளாக இருக்கிறாள் இதுதான் என் கதை. உங்களுடைய கதையில் அவர்கள் இருவரும் உறவினர்கள் என்னுடைய கதையில் மன்னனை போல நடிக்கிறவன் மன்னனின் மனைவி தன்னை கணவனாக என்னும் பட்சத்தில், நான் அவளை தங்கையாக
பாவித்து விலகி செல்லும் பாத்திரம் நான் கதையமைப்பையே மாற்றி இருக்கிறேன் .என்று எம்.ஜி.ஆர். கூறினார் பானுமதியிடம் .பல நாள் கழித்து
திரு.ஏ.கே. வேலன் கதை வசனம் எழுதி தயாரித்த படத்தை பாதியில் நிறுத்திவிட்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களிடம் ஒப்படைத்துவிடுகிறார் .
பானுமதி. எம்.ஜி.ஆர். அவர்கள் தயாரித்த நாடோடி மன்னன் படத்தில் வரும் வேட்டை மண்டபம் சண்டைக்காட்சியை நான் மிகவும் ரசித்து பார்ப்பேன் .அவருடைய வாள் சண்டை எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த காலத்தில் 4 மணி நேரம் ஓடக்கூடிய அளவில் எம்.ஜி.ஆர். தயாரித்தார் .இப்போதுள்ள படம் 3 மணி நேரம் கூட ஓடவில்லை நான் இயக்குனர் திரு. பி.வாசு அவர்களை கேட்கிறேன்
4 மணி நேரம் ஓடக்கூடிய ஒரிஜினல் நாடோடி மன்னன் பிரிண்ட் இருந்தால் வாங்கி கொடுங்கள் வேட்டை மண்டபம் சண்டை காட்சி மிகவும் அற்புதமானது .நான்
5000 கி.மீ. நடந்திருக்கிறேன். நான் நடக்கும்போது வேனில் பாடல்கள் என்னுடைய களைப்பை போக்க ஒலித்துக் கொண்டே இருக்கும் , அதில் ஒரு பத்தாயிரம் தடவையாவது கேட்ட பாடல் , நாடோடி மன்னனில் வரும் உழைப்பதிலா உழைப்பில் பெறுவதிலா இன்பம் என்கிற பாடல்..இந்த பாடலை கேட்கும்போது என்னுடைய சோர்வு நீங்கிவிடும் . எஸ்.எம்.சுப்பையா நாயுடு பாடலை இசை அமைத்தார் .பாடலை எழுதியவர் லக்ஷ்மண தாஸ் ஈவதில்கூட மகிழ்ச்சி இல்லை என்கிற வரிகள் இந்த பாடலில் வரும் .இதுவரை இலக்கியத்தில்கூட இல்லாத கருத்து அதில் மையம் கொண்டுள்ளது படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சி
உணர்ச்சிபூர்வமானது . எம்.ஜி.ஆர். தன் சக்திக்கு மீறி, அவ்வள்வு பணத்தையும்
கொட்டி படத்தை தயாரித்தார் .ஆனால் திரையுல வாழ்வில் , எம்.ஜி.ஆர். அவர்கள் அவருடன் நடிக்கும் நடிக நடிகையரை பற்றி எவ்வளவு கவலைப்பட்டிருப்பார்
என்று கருதுகிறீர்கள் .சிம்லாவில், அன்பே வா படப்பிடிப்பில் ,எம்.ஜி.ஆர். அவர்களும், சரோஜாதேவி அவர்களும் மலை உச்சியின் சிகரத்தில் இருக்கும்போது ,திடீரென எம்.ஜி.ஆர். , சரோஜாதேவியை சற்று தள்ளி விடுகிறார் .ஏன் நம்மை தள்ளிவிட்டார் என்று திரும்பி எழுந்து பார்க்கும்போது , அரிய வகை நாகம் ஒன்று அங்கே படமெடுத்து கொண்டிருந்தது .பாம்பு என்று சத்தம் போட்டால் உயிருக்கு தீங்கு நேரிடலாம் என கருதி , தள்ளி விட்டபின் , அந்த பாம்பை தன் பூட்ஸ் காலால் மிதித்து கொன்றார் என்று நான் புத்தகத்தில் படித்தேன் .(அவர் இதை பேசும்போது ,நடிகை சரோஜாதேவி, அருகில் உள்ள பி.சுசீலாவிடம் -இது நடந்தது உண்மை என்பது போல தலையாட்டி பேசிக்கொண்டிருந்தார் )
ஒருநாள் தமிழக முதல்வர் பூங்காவை சுற்றி வருகிறார். திரும்பி வரும்போது அங்குள்ள மேஜையில் ஒரு திருமண அழைப்பிதழ் கண்டெடுக்கிறார் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆசியோடு நடைபெறும் திருமணத்திற்கு வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறேன் கீழே மாரியப்பன் மற்றும் முகவரி எழுத ப்பட்டுள்ளது .
அதிகாரிகளை அழைக்கிறார் காவலர்கள் மூலம் விசாரிக்க சொல்கிறார் .
சேரும் சகதியும் நிறைந்த சாலையில் குடிசை பகுதி , பிளாட்பாரத்தில் ,தகரப்பெட்டி கொண்ட கடை. ஏராளமான செருப்புகள் அங்கே கிடக்கின்றன .அங்கே செருப்பு தைக்கும் தொழிலாளியை கேட்கிறார்கள் .நீங்கள்தான் மாரியப்பனா ஆம்.
உங்கள்இல்லத்தில் கல்யாண ஏற்பாடு நடந்துள்ளதா .ஆமாம். இரண்டு பெண்களுக்கு திருமணம் ஆகிவிட்டது .மூன்றாவது பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது .நீங்கள் முதல்வருக்கு தபால் அனுப்பியிருந்தீர்களா . ஆம் அழைப்பிதழ் அனுப்பி இருந்தேன் .எம்.ஜி.ஆர். அவர்கள் மீது உங்களுக்கு அவ்வளவு பிரியமா என்ன அப்படி சொல்லிவிட்டீர்கள். என்னுடைய பேரன், பேத்திகூட அவர் அளிக்கும் மதிய உணவைத்தான் சாப்பிடுகிறார்கள் . நாங்கள் எம்.ஜி.ஆரின் இரட்டை இலைக்குத்தான் ஒட்டு போடுவோம் .எம்.ஜி.யாருக்காக
நாங்கள் குடும்பத்தினரே உயிரை கூட கொடுப்போம் . காவலர்கள் மாறுவேடத்தில் அவரிடம் கேட்கிறார்கள் உங்கள் திருமணத்திற்கு எம்.ஜி.ஆர். வருவார் என்று எதிர்பார்க்கிறீர்களா , அவர் எவ்வளவு பெரிய மனுஷன் .எப்படி எதிர்பார்க்க முடியும் ,அவர் இருப்பிடத்திற்கு ஒரு திருமண அழைப்பிதழ் போய் சேர்ந்தது என்கிற சந்தோசம் எனக்கு என்று கூறுகிறார் மாரியப்பன் .விசாரித்தவர்கள் முதல்வரிடம் செய்திகளை தெரிவிக்கின்றனர் . முதல்நாள் இரவே ,அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் தொலைபேசியில் அவரே அழைப்பு விடுக்கிறார் .மறுநாள் காலை .6.30 மணியளவில் 10 அமைச்சர்கள், 12 எம்.எல்.ஏக்கள் ராமாவரம் வருகிறார்கள்.எங்கு போகிறோம் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் டிரைவருக்கும், பைலட்டுக்கும் போகும் முகவரி சொல்லப்படுகிறது .அதே நேரத்தில் ஒரு முக்கியமான வி ஐ.பி.வீட்டு கல்யாண முகூர்த்தமும் இருக்கு .அந்த சேரி பகுதியில் முதல்வர் கார் போய் நிற்கிறது .
வேட்டியை தூக்கி மடித்து காட்டியவாறு முதல்வர் வருகிறார். செய்தியறிந்து
அந்த ஏரியா மக்கள் படைதிரண்டு ஓடி வருகிறார்கள் .எம்.ஜி.ஆர். அவர்களை பார்த்ததும் மாரியப்பன் ஐயா என்று கூறி நெகிழ்ந்து போகிறார். எம்.ஜி.ஆர். கேட்கிறார் மாரியப்பனிடம் முகூர்த்த நேரம் தவறுவதற்குள் வந்துவிட்டேனா என்று. மாரியப்பன் அசந்து நிற்கும் அந்த கண நேரத்தில், எம்.ஜி.ஆர். தன் சக அமைச்சரிடம் கூறுகிறார். இதே நேரத்தில் நடக்கும் இன்னொரு செல்வந்தன் வீட்டு திருமணம் நான் போகாவிட்டால் கூட சிறப்பாக நடக்கும் , ஆனால் இந்த ஏழைதொண்டன்தான் இந்த கட்சிக்கு ஜீவநாடி .(அரங்கில் பலத்த கைதட்டல் )
ஒருநாள் முதல்வர் காரில் சென்று கொண்டிருக்கும்போது ,ஒருவன் குழந்தையை தூக்கி கொண்டு ஓடுகிறான். எம்.ஜி.ஆர். பார்க்கிறார். முதல்வரின் பைலட் கார் சென்றுவிட்டது .இரவு 10 மணி.ஓடு கிறவன் பக்கத்தில் வேகமாக சென்று காரை நிறுத்த சொல்கிறார் எம்.ஜி.ஆர். கார் நின்றதும் இறங்கி, அவனை பிடித்து, (குழந்தையை யாரோ கடத்திக்கொண்டு ஓடுகிறான் என்ற நினைப்பில் ) கேட்கிறார் .குழந்தைக்கு காய்ச்சல் ரொம்ப அதிகம். அதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஓடுகிறேன். தொட்டு பாருங்கள் என்கிறான் .அதற்குள் காவலர்கள் விரைந்து வருகிறார்கள் .எம்.ஜி.ஆர். அவனை அழைத்து, தன் பக்கத்தில் பின் சீட்டில் உட்காருமாறு சொல்கிறார் . மருத்துவமனையில் டாக்டரிடம் குழந்தைக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்குமாறு கூறிவிட்டு , தன் பாக்கெட்டில் உள்ள
பணத்தை அந்த ஏழையிடம் கொடுத்து விடை பெறுகிறார். அதுதான் எம்.ஜி.ஆர்.
அதுதான் மனிதநேயம் .(பலத்த கைதட்டல் )
சிகை அலங்காரம் செய்யும் சாந்தம்மாள் என்று ஒருவர் இருந்தார். வீட்டு வாடகை தரமுடியவில்லை.கடன்காரர்கள் தொல்லை ஒருபக்கம் .ராமாவரம் இல்லத்தில் காலை 7 மணிக்கு எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்க காத்திருக்கிறார் கண்கலங்கி நிற்கும் சாந்தம்மாளை எம்.ஜி.ஆர். நலம் விசாரிக்கும்போது விஷயங்களை கேள்விப்பட்டு .நான் சிகை அலங்காரம் செய்ய பணம் கொடுத்து, ஒரு வீட்டையும்
ஏற்பாடு செய்து கொடுத்திருந்தேன் .இருப்பினும் மீண்டும் ஒருமுறை இவருக்கு உதவி செய்வோம் என உதவியாளரிடம் சொல்கிறார் .
காங்கிரஸ் கட்சியில் நேர்மையானவர் என்று சொல்லப்பட்ட மந்திரி கக்கன் என்பவரின் மனைவி எம்.ஜி.ஆர். அவர்களை தேடி வந்துள்ளார் . வீட்டு வாடகை ரூ.178/- கொடுக்க இயலவில்லை.வீட்டை காலிசெய்யும்படி சொல்கிறார்கள் என்று கலங்குகிறார் . அதை கேள்விப்பட்டு எம்.ஜி.ஆர். கண்ணீர் விட்டபின் உடனடியாக ரூ.4,000/- தருகிறார் .பின்னர் அவருடைய வீடும் அவருக்கு சொந்தமாக்கப்பட்டு
கடைசி வரை உதவித்தொகை மாதாமாதம் அளிக்கும்படி உத்தரவிடுகிறார் எம்.ஜி.ஆர்.
மேலவை கலைக்கப்பட்ட சமயம் திரு. ம.பொ சி. அவர்கள் கார் இல்லாமல் தவித்தார். அப்போது இருந்த சபாநாயகர் திரு. ராஜாராம் அவர்கள் மூலமாக
எம்.ஜி.ஆர். அவர்களுக்கு செய்தி தெரிவிக்கப்படுகிறது தற்செயலாக ராஜாராம் எம்.ஜி.ஆர். அவர்களிடம் சொல்ல, 15 நாட்கள் கழித்து ,கார் ஒன்று ம.பா.சி. அவர்கள் வீட்டு முன்னால் நிற்கிறது. முதல்வர் எம்.ஜி.ஆர். வீட்டிற்கு வருகை தருகிறார் .ம.பொ.சி. திகைத்து நிற்கிறார் .கார் சாவியை அவரிடம் ஒப்படைத்து
தமிழ் வளர்ச்சி துறைக்கு தங்களை தலைவராக நியமித்துள்ளேன் ,மாதம் ரூ.15,000/- ஊதியம் என்று சொல்கிறார். நன்றி பெருக்குடன் வணக்கம் தெரிவிக்கிறார் ம.பொ,சி .இந்த மாதிரி எம்.ஜி.ஆர். அவர்கள் செய்த சாதனைகள் சொல்லி மாளாது .(பலத்த கைதட்டல் )
எம்.ஜி.ஆர். அவர்களை வைத்து அன்று சிந்திய ரத்தம் என்கிற திரைப்படம்
அந்த காலத்தில் இயக்குனர் ஸ்ரீதர் எடுப்பதாக இருந்தது .சில காரணங்களால் கைவிடப்பட்டது. ஸ்ரீதர் பல வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் .ஒரு கட்டத்தில்
மிகவும் கடன்பட்டு, துன்பப்படுகிறார் என்று கேள்விப்பட்டு ,தகவல் சொல்லி அனுப்புகிறார் எம்.ஜி.ஆர். .ஸ்ரீதர் என்னை தேடி உதவிக்கு வந்ததாக இருக்க வேண்டாம் என்று சொல்லி ஒரு பொது இடத்தில சந்திக்க ஏற்பாடு செய்கிறார்
இப்போதிருக்கும் நிலையில் நான் உங்களுக்கு உதவ ஒரு படத்தில் நடிக்கிறேன்.
அன்று சிந்திய ரத்தத்திற்கு வாங்கிய அட்வான்ஸ் தொகை அப்படியே இருக்கட்டும் .ஸ்ரீதர் சொல்கிறார். என்னிடம் பணமில்லை. எம்.ஜி.ஆர். சொல்கிறார். நான் நடிக்க நீங்கள் இயக்குவதாக அறிவிப்பு வெளியிடுங்கள். விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க முன்பணம் தருவார்கள்.என்று. அதன்படி விளம்பரம் வெளிவந்தது.
1974ல் ரூ.15லட்சம் குவிந்தது இந்த காலத்தில் ரூ.15கோடிக்கு மேல் சமம் .
ஸ்ரீதர் ,வாங்கிய பணத்தை எம்.ஜி.ஆரிடம் தர முற்பட்டபோது ,வாங்க மறுத்த எம்.ஜி.ஆர். அவர்கள் அந்த பணம் நீங்கள் படம் தயாரிக்க அளித்த முன்பணம்
எனவே அதை பெற்றுக் கொண்டு படத்தை ஆரம்பியுங்கள் என்றார் . 1974ம் ஆண்டின் ஈடு இணையற்ற வசூல் படமாக ஸ்ரீதரின் உரிமைக்குரல் திகழ்ந்தது .
எங்க வீட்டு பிள்ளை திரைப்படம் மிக பிரம்மாண்ட வெற்றி பெற்று அபரிமிதமான வசூலை ஈட்டியது .எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் வெளியீடு..மிக அதிக லாபம் வந்ததன் காரணமாக அப்போது ரூ.5 லட்சம் காசோலையை தயாரிப்பாளர் நாகிரெட்டி அவர்களுக்கு அனுப்புகிறார் எம்.ஜி.ஆர். அது இன்றைக்கு ரூ.5 கோடிக்கு சமம் .
தயாரிப்பாளர் நாகிரெட்டி ஒரு கடிதம் தயார் செய்து ரூ.5,00,001 /- காசோலையோடு
எம்.ஜி.ஆருக்கு அனுப்பி ,ஏழைகளுக்கு உதவும் தொண்டுள்ளம் படைத்த தங்களுக்கு இந்த பணம் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் என்ற நம்பிக்கையில்
திருப்பிஅனுப்புகிறேன். மறுக்காமல் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி என்றார் .
அவருடைய வாழ்வில் எவ்வளவோ சோதனைகள் வந்திருக்கின்றன
நாடோடிமன்னனில் எனக்கு பிடித்த காட்சி. கணவன் என்று கருதி ,மனைவி அவன் கரங்களை பற்ற வருகிறபோது (எம்.என்.ராஜம் ) எம்.ஜி.ஆர். விலகி செல்வார்.
ஒரு கட்டத்தில் வேதனைப்பட்டு பொறுக்க முடியாமல், நான் உன் கணவனே இல்லை என்பார் (கவிஞர் கண்ணதாசன் மற்றும் ரவீந்தர் வசனம் ) கத்தி எடுத்து
தற்கொலைக்கு முயலுவார் ராணி..அதை தடுத்து, நான் உன் கணவனல்ல (அற்புதமான வசனங்கள் ) மன்னனாக நீ என்னை நினைத்துக் கொண்டிருக்கிறாயே, என் முதுகில் இருக்கும் சவுக்கடியை பார் . நான் ராணுவத்தில் இருந்தேன் படையில் சேர்ந்தேன். சவுக்கால் எடுத்து அடிக்க சொல்வார்கள் அவர்களை தாவி அணைக்க ஏங்கும் என் உள்ளம் . பார் சகோதரி பார். உழுவார்கள், விதைப்பார்கள் ,அறுப்பார்கள் ,சுமப்பார்கள், உண்ண உணவின்றி மட்டும் தவிப்பார்கள் .உணர்ச்சிகரமான காட்சி.
தாய்க்கு பின் தாரம் தேவர் எடுத்த படம் . எனக்கும் கொஞ்சம் சிலம்பம் தெரியும்
சிறிய வயதில் பார்த்தது. வாத்தியார் படங்களில் எவ்வளவோ சண்டை காட்சிகள் பார்த்திருக்கிறேன். நான் ஒரு கலாரசிகன் .எனக்கு சண்டை காட்சிகள் மிகவும் பிடிக்கும் நான் கிராமத்து ஆள். தாய்க்கு பின் தாரம் படத்தில் வரும் சிலம்ப சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர். அவர்களும், தேவரும் மோதும் வயக்காட்டு
சண்டை காட்சி படப்பிடிப்பு முதல் நாள் காலை 7 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணிவரை நடைபெற்றது .தேவரும், எம்.ஜி.ஆர்.அவர்களும் முறையாக சிலம்பம் கற்றவர்கள் . ஆனால் எம்.ஜி.ஆர். அவர்கள் தானாக தன்பாணியில், சில ஸ்டைல்களை புகுத்தினார் .எப்படி என்றால் ,ஆங்கில படங்களில் நடிக்கும் ஏரால் பிளைன் என்பவரின் கத்தி மற்றும் வாள் சண்டை படங்களை அந்த காலத்தில் எம்.ஜி.ஆர். விரும்பி பார்ப்பார் .அந்த ஏரால் பிளைன் நடிகரின் ஸ்டைலுடன்
தன் சொந்த ஸ்டைலை எம்.ஜி.ஆர். சேர்த்துக் கொண்டார் .அந்த லாவகம் யாருக்கும் வரவில்லை.வந்ததுமில்லை. படத்தில் தேவர் சுமார் 50பேரை சிலம்பத்தில் விரட்டியடித்து விட்டு வருவார். இந்த பக்கம் எம்.ஜிஆரும் தன்
பங்கிற்கு 50 பேரை விரட்டியடித்து விட்டு வருவார் .கடைசியில் எம்.ஜி.ஆரும் தேவரும் மோதுவதற்கு முன்பாக ஒருவரையொருவர் முறைத்து கொண்டு பார்க்கும் காட்சி மற்றும் நெருங்கும் காட்சி மிகவும் அற்புதம் .benhur என்கிற ஆங்கில படத்தில் சேரியட் ரேஸ் ரொம்ப பிரபலம் அதை போலஆயிரம் தடவை அந்த காட்சியை நான் ரசித்து பார்த்திருக்கிறேன் .அந்த லாவகம், சிறப்பு, யாருக்கும் கைகூடி வராது .
எம்.ஜி.ஆர். அவர்களுடைய மனிதநேயம், மனிதாபிமானம்,கொடை உள்ளம் ஆகியன பற்றி பலர் இங்கு பேசினார்கள் . அனால் இயக்குனர் திரு. வாசு அவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். நான் பல இயக்குனர்கள் தயாரித்த பல வெற்றிப்படங்களை பார்த்திருக்கிறேன். பல ஆங்கில வெற்றிப்படங்களையும் பார்த்திருக்கிறேன் .ஆனால் எனக்கு தெரிந்தவரையில், எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நிகரான இயக்குனர் தமிழ் திரையுலகில் யாரும் கிடையாது என்பது என் கருத்து
அவருடைய நாடோடி மன்னன் ,உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண் (இயக்குனர் வேறு யாராக போட்டிருந்தாலும் ) படத்தின் இயக்கங்கள் தனி சிறப்பு.
அந்த காலத்தில் சொல்வார்கள் காமிரா ஆங்கிள் செட் செய்வதில் வல்லுனர் எம்.ஜி.ஆர். என்று.
ராமாவரம் இல்லத்தில் திரு. விஜயன் இருக்கும்போது எம்.ஜி.ஆர். அவர்கள் எழுதிய டைரி பார்த்திருக்கிறேன் .1945-46ல் நானும் ,நடிகர் வீரப்பாவும் இன்னாரை சந்தித்தோம் என்று எழுதி இருக்கிறார். மணியான எழுத்துக்கள் சங்கீதத்தை பற்றி 25 பக்கங்கள் எழுதி இருக்கிறார் .கர்நாடக இசையில் இருந்து தமிழ் இசை வரை
அப்படி ஒரு ஞானம் இருந்திருக்கிறது .இசையில் ஒரு நிறைகுடமாக திகழ்ந்து உள்ளார் .
ஏ.பி.நாகராஜன் தயாரித்த ,"நவரத்தினம் " திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் நடிக்கும்போது ,ஆந்திர எம்.ஜி.ஆர். என்று சொல்லப்படும் திரு. என்.டி.ஆர். அடுத்த ப்ளோரில் நடித்துக் கொண்டிருக்கிறார் .பக்கத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கிறார் என்று கேள்விப்பட்டு ,இடைவேளை நேரத்தில் அவரை சந்திக்க என்.டி.ஆர். வருகிறார் .
எம்.ஜி.ஆரை அண்ணகாரு என்றுதான் அழைப்பார். எம்.ஜி.ஆர். அவர்கள்தான்
தெலுகு ராஜ்ஜியம் என்று வைக்கப்பட இருந்த பெயரை தெலுகு தேசம் என்று
மாற்றி வைக்கும்படி என்.டி.ஆருக்கு யோசனை சொன்னார் .
என்.டி.ஆர் அவர்களின் மூக்கு சிவந்து இருந்ததை கண்ட எம்.ஜி.ஆர். கேட்டபோது ,
மும்பையில் இருந்து வந்த ஸ்டண்ட் நடிகர் ஷெட்டி என்பவன் நடிப்பிற்காக சண்டை போடாமல் நிஜமாகவே குத்துவிட்டான். மூக்கில் இருந்து பலமாக ரத்தம் கொட்டியது. கேட்டால் சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா என்கிறான் .மன்னிப்பு கூட கேட்கவில்லை .வட நாட்டுக்காரர்களுக்கு தென்னிந்திய நடிகர்கள் என்றாலே கொஞ்சம் எகத்தாளம் அதிகம் .என்றார் .உங்களுக்கு அவனோட சண்டைக்காட்சி இருக்கு என்பதனால் கொஞ்சம் ஜாக்கிரதையாக நடியுங்கள் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார் .எம்.ஜி.ஆர். சற்று யோசித்து, 3 நாட்கள் படப்பிடிப்பை தள்ளி வைத்து விடுகிறார் .ஸ்டண்ட் நடிகர் ஷெட்டி எவ்வளவு எடை தூக்கி உடற்பயிற்சி செய்கிறார் என விசாரிக்கிறார் . 350 கிலோ என்று தெரிந்து கொண்டு 3 நாட்களுக்கு 375 கிலோ எடை தூக்கி உடற்பயிற்சி செய்கிறார் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு ஆரம்பம் ஆனது . என்.டி.ஆர். மூக்கை உடைத்த தெம்பில் ஷெட்டி வந்தான் .எம்.ஜி.ஆர். அவர்கள் பாக்சிங் கலை கற்றவர் .ஒரே ரவுண்டில் ஷெட்டியின் மூக்கு உடைந்து, கன்னம் கிழிந்து ரத்தம் கொட்டுகிறது .ஷெட்டி பார்க்கிறான் எம்.ஜி.ஆர் அவர்களை .எம்.ஜி.ஆர். சொல்கிறார்.சினிமாவில் இதுவெல்லாம் சகஜமப்பா .(பலத்த கைதட்டல் )தான் என்.டி.ஆருக்கு சொன்னதை ஒருகணம் நினைத்து பார்க்கிறான் ஷெட்டி. எம்.ஜி.ஆர். அவர்கள் அவனை மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி
சிகிச்சை செய்யவைத்து ,ரூ.10,000/- பணத்தையும் கொடுத்து அனுப்புகிறார் .
அவருடைய தன்மையை பாருங்கள்.உடல்வலிமையை பாருங்கள்.கடைசி காலத்தில் அவர் உடல்நலம் குன்றியது பற்றி சர்ச்சை வந்தது .தண்டயார்பேட்டையில் நடந்த ஒரு பொதுக்கூட்ட நிகழ்ச்சியில், அவருக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த ஒரு மூட்டையை அலாக்காக தூக்கி போட்டார் .அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த பிறகு 10 பேர் கொண்டுவந்த மூட்டையை அவர் ஒருவரே தூக்கி போட்டார் என்றால் அவர் உடல் வலிமையை பாருங்கள் .
தன்னுடைய வாழ்வில் கலைத்துறையில் எப்படி எல்லாமோ பாடுபட்டு முன்னுக்கு வந்து , பலபேரை தூக்கிவிட்டு, பல முறை விளம்பரம் இல்லாமலேயே தான தருமங்கள் செய்து மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தார் . நான் அவரிடம் அவ்வளவாக பழகியதில்லை 1971 தேர்தலின்போது பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு ராஜபாளையத்தில் இருந்து புறப்பட்டு போனார் .
நான் , கதிரவன், ஆலடி அருணா, விழுப்புரம் பாண்டியன் ஆகியோர் அவரை பார்க்க சென்றோம். எம்.ஜி.ஆர். சொல்கிறார். உங்களுடன் வந்தால் 4 ஜில்லா போக முடியாது .நான் ஒத்துக்கிட்ட இடங்களுக்கு செல்லாவிடில் பிரச்னைகள் ஏற்படும் என்றார் .அண்ணே , மற்றவர்கள் பேச்சைக் கேட்க கூட்டத்திற்கு வருகிறார்கள் என்றால் உங்கள் முகத்தை பார்த்தாலே போதும் என்று ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள் என்று நான் சொன்னேன் .என்னை ஒருமுறை பார்த்தார்.பின்பு
சம்மதம் தெரிவித்தார் .அவரிடம் பழகும் வாய்ப்பு அவ்வளவாக எனக்கு நேரிடவில்லை .பாராளுமன்ற நூலகத்தில் ஒருமுறை திரு.மோகனரங்கன் எம்.பி. அவர்கள் எம்.ஜி.ஆர். அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார்கள் .நான் எழுந்து நின்றேன். அவர் 4 ஸ்டெப் முன் வந்து எனக்குமுதல்வர் என்கிற நிலை மறந்து கை கொடுத்தார் .அவருடைய நிலையில், நான்தான் முன் சென்று வணக்கம் சொல்வதோ, கை கொடுப்பதோ செய்திருக்க வேண்டும் . அதுதான் எம்.ஜி.ஆர். அவர்களிடம் நான் கண்ட பண்பு மரியாதை, நான் இன்னும் இந்த நிகழ்வை நினைத்து வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன் .எம்.ஜி.ஆர். அவர்கள் சொல்லி இருக்கிறார் அதாவது இந்த வை.கோபால்சாமி ஏதாவது
செய்துகொண்டே இருக்கிறாரே என்று .
1985ல் நான் தி.மு.க. வில் இருந்தபோது நடைபெற்ற நிகழ்ச்சி இது.இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே புதுடெல்லி வருகிறார் .அருகில் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி இருக்கிறார். நிருபர்கள் கேள்வி கேட்கிறார்கள் .உங்களின் இலங்கை பிரச்சனைக்கு என்ன காரணம் என்று .ஜெயவர்த்தனே தனது பேட்டியில்
தமிழக முதல்வர் திரு. எம்.ஜி.ராமச்சந்திரன்தான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் என்று சொல்கிறார் .மறுநாள் பாராளுமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்தது .பூஜ்ஜிய நேரத்தில் , நான் எழுந்து, வெளிநாட்டில் இருந்து வருகிற எந்த
அதிபராக இருந்தாலும் மத்திய அரசு போடும் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு மரியாதையாக போய்விடவேண்டும் .நேற்று இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனே எங்கள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களை இழிவுபடுத்தி பேசியபோது
பல்லைக்காட்டிக் கொண்டு சிரித்து ரசித்தீர்களே, இது இந்தியாவுக்கு அல்ல அவமானம் என்று பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நோக்கி கேட்டேன் .ராஜீவ் காந்தியால் எந்த பதிலும் கூற இயலவில்லை. அருகில் இருந்த காங்கிரஸ்காரர்கள் என்ன வை கோவிற்கு எம்.ஜி.ஆர் மீது திடீர் காதல் என்று கிண்டல் செய்தனர் நான் சொன்னேன் .அவர் எங்கள் முதலமைச்சர்.அவரை இழிவுபடுத்தி இலங்கை அதிபர் பேசுவதை எந்த காரணம் கொண்டும் ஏற்கமாட்டோம் .. எந்த அரசியல் பிரச்னையாக இருந்தாலும் நாங்கள் எங்கள் மாநிலத்தில் அதை பேசி தீர்த்துக் கொள்வோம் அ தி.மு.க. எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் இருந்தார்கள் எதுவும் பேசவில்லை. வெளியில் வந்து சொன்னார்கள். அண்ணே நாங்கள் கூட்டணியில் உள்ளதால் கருத்துக் கூற முடியவில்லை. ஆனால் நீங்கள் அவர்களை நன்றாகவே வெளுத்து வாங்கிவிட்டீர்கள் நன்றி. என்று சொன்னார்கள் .அ.தி.மு.க. வில் நான் சேருவேன் என்று சிலர் எதிர்பார்த்தார்கள். ஆனால் நான் கலைஞர் மீது சற்று பிரியமாக உள்ளதாக நினைத்து எம்.ஜி.ஆர். அவர்கள் நினைத்து விட்டுவிட்டார் .
சில லட்சியங்களில் நான் உறுதியாக இருப்பதை அறிந்து எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை பாராட்டினார்கள் .என்ன திடீர் காதல் எம்.ஜி.ஆர். மீது. இப்போதுள்ள அரசியல் குழப்பத்தில் ஏதாவது மீன் பிடிக்க முயலுகிறாரா வை. கோ.ஒரு போதுமில்லை. சில நாட்களில் தினசரி, மற்றும் வார பத்திரிகைகளில்கூட செய்திகள் வரலாம் .ஒரே ஒரு காரணத்திற்காக..இலங்கையில் தலைவர் பிரபாகரன் அவர்களுடன் நான் வன்னிக்காட்டில் இருந்தபோது சொன்ன விஷயங்கள். சென்னையில் கிட்டுவை சந்திக்க முயன்றேன் .போலீஸ் என்னை தடுத்து கைது செய்தது .நள்ளிரவு 1 மணிக்கு விடுதலை செய்தது. மீண்டும்
திருவான்மியூரில் கிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன். மீண்டும் போலீஸ் கைது செய்தது .சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன் .சிறைவாசத்தை சில நாட்கள் நிம்மதியாக இருக்கலாம் என்றிருந்தேன். ஆனால் மாலை 5 மணிக்கு விடுதலை செய்தார்கள் .
எப்படி என்று அதிகாரிகளிடம் கேட்டேன். அமெரிக்காவில் உள்ள தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு செய்திகள் செல்கின்றன. அடுத்த நிமிடமே வை.கோவை விடுதலை செய்யும்படி உத்தரவிடுகிறார் .கிட்டுவை யார் வேண்டுமானாலும்
எப்போதாகிலும் சந்திக்கலாம் என்ற அறிவிப்பை அரசு சார்பில் வெளியிட எம்.ஜி.ஆர். உத்தரவிடுகிறார் .நான் கிட்டுவிடம் சொன்னேன். எம்.ஜி.ஆர். அவர்கள் உடல்நல குறைவால் அவதிப்படுகிறார். அடுத்த முதல்வர் கலைஞர்தான் வரப்போவதாக தோன்றுகிறது. நீங்கள் ரொம்ப எம்.ஜி.ஆர் அவர்களையே பாராட்டிக்கொண்டு இருக்கிறீர்களே. கொஞ்சம் கலைஞர் பக்கம் வரலாம் இல்லையா என்று கிட்டுவை கேட்டேன் .கிட்டு சொன்னது என்னவென்றால் எங்களுக்கும் வயிறு இருக்கிறது .எங்கள் சிறுவர்களுக்கு ஒரு நாளைக்கு உணவு செலவுக்கு ரூ.5/-தான் கொடுக்க முடிகிறது .அமெரிக்காவில் முதல்வர் எம்.ஜி.ஆர். வந்ததும் சென்று பார்த்தோம். உபசரித்து விட்டு, என்ன வேண்டும் என்று கேட்டார் .விவரத்தை சொன்னோம் .ரூ.50 லட்சம் முதல் தவணையாக கொடுத்தார் .மறு சந்திப்பில் ரூ.5 கோடி தருவதாக வாக்களித்துள்ளார் .(பலத்த கைதட்டல் ) கலைஞரை இந்த மாதிரி கொடுக்க சொல்லுங்கள். அவரிடம் பேசுகிறோம் என்றார் கிட்டு. நான் ஒன்றும் சொல்லவில்லை.கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன் .கிட்டுவிடம் இதுபற்றி கேட்டதற்கு மன்னித்து விடுங்கள் என்றேன் .என்மனதில் இந்த நிகழ்வு ஆழமாக பதிந்துவிட்டது. ஆயுதங்கள் விடுதலை போராளிகளுக்கு போய் சேரவில்லை .பாரத பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் ,எம்.ஜி.ஆர்.
டெல்லியில் தமிழ் நாடு இல்லத்தில் இருந்தபோது, தலைவர் பிரபாகரனும் ,பாலசிங்கமும் அவரை சந்திக்க வருகிறார்கள் . எம்.ஜி.ஆர்.கேட்கிறார் அவர்களை பார்த்து என்ன முகத்தில் வாட்டம் தெரிகிறது .என்ன பிரச்னை என்கிறார் .
முன்பு போல் உதவிகள் அவ்வளவாக இப்போது கிடைப்பதில்லை .பணம் கொடுக்க முடியாது என்கிறார்கள் என்று பிரபாகரன் தெரிவிக்கிறார் .என்ன வேண்டும் ,எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள் என்று எம்.ஜி.ஆர். கேட்கிறார். ஐயா ,
இயக்கம் நடத்த வேண்டும்.40,000 போர்வீரர்கள், உணவு, உடை,தாங்கும் வசதி
ஏற்பாடு செய்ய வேண்டும் யுத்த களத்திற்கு தேவையான ஆயுதங்கள் வேண்டும் .
சுமார் ரூ.4 கோடி எதிர்பார்க்கிறோம் என்கிறார் பிரபாகரன் .என்னுடைய அனைத்து நிகழ்ச்சிகளையும் டெல்லியில் ரத்து செய்துவிட்டு , இன்று இரவே நான் சென்னைக்கு விமானம் மூலம் திரும்புகிறேன். நீங்களும் சென்னை வந்து சேருங்கள் .சென்னை வந்ததும், பிரபாகரனிடம் ரூ. 4 கோடியை தமிழர் புனர்வாழ்வு கழகம் என்கிற பெயரில் கொடுத்தார் எம்.ஜி.ஆர். எப்போது வேண்டுமானாலும் பிரபாகரன் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரோடு தொடர்பு கொண்டு பேசும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. போரில் காயப்பட்டு வரும் வீரர்களுக்கு மதுரையில் பிரத்யேக மருத்துவமனை நிர்மாணித்து , நவீன ,மற்றும் உயிர்காக்கும் வசதிகள் கொண்ட சிகிச்சை சிறந்த மருத்துவர்கள் குழு அமைத்து
செய்யப்பட்டது .முதல்வரே தினசரி குண்டு காயத்துடன் வந்திருக்கும் போர் வீரர்கள் உடல்நலம் குறித்து தினசரி மருத்துவர்களுடன் தொலைபேசியில் விவரம் கேட்டு அறிந்துகொண்டார் . .தமிழ் இன விடுதலை போரில் இதுவரை 1.50 லட்சம் போர்வீரர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டு விட்டார்கள் 18 மைல்கல் தொலைவில் உள்ள 7.5 கோடி மக்களாகிய நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லை ஆனால் அந்த மாமனிதர் எம்.ஜி.ஆரை ,மலையாளி என்று பேசினார்கள் எம்.ஜி.ஆரை விட யார் தமிழன் (பலத்த கைதட்டல் )
இந்த தமிழ் மக்களையும், மண்ணையும்,நேசித்த எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழக ஏழை எளிய மக்களின் கண்ணீரை துடைத்ததோடு ,இலங்கையில் அவதிபடும்
தமிழ் ஈழ மக்களின் இன அழிவிலிருந்து காப்பாற்ற உதவியதோடு ,அவர்கள் தாயகத்தை மீட்க அனைத்து வகையிலும் உதவி அவர்கள் வெற்றி காண வேண்டுமென்று துடித்தார் இந்தியா இலங்கை அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது .பிரபாகரனிடம் கேட்டேன். அவர் சொன்னது
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரை சந்திக்க முயன்றோம் . அனுமதி கிடைக்கவில்லை.அவரை சந்திக்காமல் போவதாக இல்லை என்று சொன்னபிறகு
அனுமதித்தார்கள். பிரபாகரனை சந்தித்ததும் எம்.ஜி.ஆர். கட்டிப்பிடித்து அழுதார்.
இது உண்மை. எனக்கும். இந்திய அரசு போட்ட ஒப்பந்தத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார் .அதன்பிறகு சென்னை கடற்கரையில் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது .முதல்வர் எம்.ஜி.ஆர். அமேரிக்கா செல்வதற்காக பயணப்பெட்டிகள் எல்லாம் புறப்பட்டு போய்விட்டன .டெல்லியில் இருந்து உத்தரவு வருகிறது எம்.ஜி.ஆருக்கு. நீங்கள் பிரதமரின் கடற்கரை கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டுத்தான் அமேரிக்கா செல்லவேண்டும்..மத்திய அரசு அந்த நிலையில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தது. ஏனென்றால் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்வதற்கு மத்திய அரசின் உதவி தேவை என்பதனால்..ஆகவே வேறுவழியின்று எம்.ஜி.ஆர். கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியதாயிற்று. பயணப்பெட்டிகள் அனைத்தும் திரும்பி வந்துவிட்டன .
கூட்டத்தில் மிகுந்த மனவேதனையோடு எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். ஏனென்றால் இந்தியா -இலங்கை ஒப்பந்தத்தில் அவருக்கு விருப்பமில்லை .
சிறு வயதில் மகாத்மா காந்தியை காரைக்குடியில் எம்.ஜி.ஆர். சென்று பார்க்கிறார் .
எல்லாரும் பணமும் ,பெண்கள் நகைகளையும் மகாத்மா காந்தி அவர்களிடம் கொடுக்கிறார்கள் .எம்.ஜி.ஆர். தான் நடித்த நாடகத்தில் கிடைத்த வருமானத்தில்
2 அணாவை கொடுத்துவிட்டு மகாத்மாவின் காலை தொட்டு கும்பிடுகிறார் .சிறிய வயதில் (12 வயது ) கள்ளுக்கடை போராட்டத்தில் காவலர்கள் எம்.ஜி.ஆரை பிடித்துக்கொண்டு யானை கவுனி காவல் நிலையம் கொண்டு செல்கின்றனர் .
அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி விவரம் அறிந்து காவல் நிலையத்திற்கு சென்று
எம்.ஜி.ஆரை விடுவிக்க ஆவன செய்தார் . .ஆரம்பத்தில் காங்கிரசை எம்.ஜி.ஆர். நேசித்தார் .அண்ணாவின் மீது பற்றுக் கொண்டார் .அதனால்தான் அண்ணா சொன்னார் .எல்லோரும் எதிர்பார்த்தார்கள் தங்கள் மடியிலே அந்த கனி விழும் என்று ..ஆனால் அது என் மடியிலேயே விழுந்துவிட்டது .என் இதயத்தில் எடுத்து வைத்துக்கொண்டேன் என்று அண்ணா சொன்னார். விருகம்பாக்கம் மாநாட்டில் அண்ணா பேசும்போது நான் தரையில் உட்கார்ந்து கேட்டேன். நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் நிதி தருவதாக சொன்னார்கள். நான் நிதி வேண்டாம் . உங்கள் முகத்தைக் காட்டுங்கள்தொகுதிக்கு 30 ஆயிரமென்ன, 30லட்சம் ஓட்டுக்கள் கிடைக்கும் என்று .அண்ணா சொன்னது உண்மைதான் (பலத்த கைதட்டல் ) 1967ல் எம்.ஜி.ஆர். அவர்கள் குண்டடிபட்டபோது ,கழுத்தில் கட்டு போட்ட தோற்றத்துடன் எம்.ஜி.ஆர். அவர்களின் அப்போதைய தேர்தலுக்குதமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டிதான் தி.மு.க. வுக்கு மிக பெரிய வெற்றியை தேடி தந்தது .எம்.ஜி. ஆர்.
தன் கொள்கைகளை கருத்தில் வைத்தார் பாடல்களில், வசனங்களில் வைத்தார் .
நாடோடி மன்னன் படத்தில் 4 தென்னிந்திய மொழிகளில் பாடல் வைத்தார் .
உதயசூரியன் சின்னம் வரும் . அண்ணா என்கிற பெயர் வரும் எல்லாருக்கும் அண்ணாவை காட்டினார். அண்ணா மறைந்த பிறகு அவர் பெயரையும், உருவத்தையும் மறைக்காமல் இந்த அரசியல் வரலாற்றில் பாதுகாத்தவர் எம்.ஜி.ஆர். என்பதை யாரும் மறுக்க இயலாது .அதனால் பேசுகிறேன். திராவிட இயக்கத்திற்கு எங்கே அழிவு நேரிடுமோ என்கிற அச்சத்தில் பேசுகிறேன்
அண்ணா என்கிற பெயரையும், எழுத்தையும், உருவத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்களில் வன்முறை தூண்டும் காட்சிகளோ,
கொடூரமாக ரத்தம் சொட்டும் காட்சிகளோ காட்சியளித்தது உண்டா ? கிடையாது .
அது போர்திறனையும், வீரத்தையும் ஊட்டியது. வக்கரித்து போன போன ஆத்திர உணர்ச்சிகளை தூண்டவில்லை எம்.ஜி.ஆர். படங்களில் . அவரது படங்கள் நல்ல சமுதாய கருத்துக்களை தந்தன .கொள்கையை தெரிவித்தன. பிள்ளைகள் பெற்றவர்களை மதிக்க வேண்டும் .பிள்ளைகள் திருந்தி வாழ வேண்டும் .எம்.ஜி.ஆர். தன் கலையை, வாழ்வை, சமூக முன்னேற்றத்திற்க்காக போதித்தார் .
எம்.ஜி.ஆர். அவர்கள் செய்த உதவிகளை ,தம்பி கிட்டு சொல்லும்போது,இவ்வளவு செய்திருக்கிறாரே, இன்னும் பத்தாண்டு காலம் அவர் உயிர் வாழ்ந்து இருக்கக் கூடாதா ,நமது நிலைமையும், நாட்டின் நிலைமையும் மாறி இருக்குமே என்றார்
ஆகவே, ஈழ தமிழர்கள் எம்.ஜி.ஆர். அவர்களின் உதவிகளை மறக்கமாட்டார்கள் .
அவரை தெய்வமாக நினைத்து பூஜிக்கிறார்கள் .அ தி,மு. க. கட்சி ஒரு பக்கம் இருக்கட்டும் .கோடானுகோடி தாய்மார்கள் உள்ளங்களில் இன்றும் எம்.ஜி.ஆர்.
வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார் .அண்ணா இன்று உயிரோடு இருந்திருந்தால்
எம்.ஜி.ஆரை பற்றி என்ன சொல்வாரோ , அண்ணா ஒரு இமயம், நான் ஒரு கூழாங்கல் . நான் ஒரு தொண்டன் என்கிற முறையிலே நான் எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி பேசுகிறேன் .
தொடரும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!