-
ஆதிராம் சார்,
நன்றி! தங்களைப் போலவே எனக்கும் 'தங்கச் சுரங்கம்' என்றால் மிக மிக பிடிக்கும். நடிகர் திலகத்திற்காக சில சென்டிமெண்ட் காட்சிகளை ராமண்ணா கூடச் சேர்த்திருப்பார். முழுமையான ஜேம்ஸ்பாண்ட் பாணியில் எடுத்திருந்தால் ராஜாவுக்கு முன்னோடியாய் இருந்திருக்கும். முதல் சில நிமிடங்களுக்கு வரும் கிராமத்துக் காட்சிகளைக் குறைத்திருந்தால் (முக்கியமாக "சக்தி தன்னாடு தென்னாடு பொன்னாடு"...பாடல்) இன்னும் விறுவிறுப்பு ஏறியிருக்கும். ஆனால் சென்டிமெண்ட் காட்சிகளைச் சேர்த்ததால் தாங்கள் குறிப்பிட்ட அட்டகாசமான கிளைமாக்ஸ் சர்ச் காட்சியும், தாயைக் கைது செய்து அனுப்பிவிட்டு துவளும் காட்சியும் என்றும் நம் இதயத்தில் குடிகொண்டு விட்டதே! இதயத்தை திருடிய படம்.
-
-
-
டியர் வாசு சார்,
சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளிவந்த நமது அபிமான இயக்குநர் சி.வி.ஆர். அவர்களின் பேட்டியை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றி. நடிகர் திலகத்தின் மேல் மாறாத பற்று கொண்டவர் சிவிஆர். அவருடைய அந்த பற்றும் பாசமும் அவருடைய கட்டுரையில் அழகாகக் கூறியுள்ளார்.
பாராட்டுக்களும் நன்றிகளும்.
அன்புடன்
-
My Choice என் விருப்பம்
http://www.dailymotion.com/video/xll...n#.UR_DRfKjKWJ
இந்த விஸ்வரூபம் படம் வந்தாலும் வந்தது, நம்முடைய மனசெல்லாம் நம் நடிகர் திலகத்தின் விஸ்வரூபத்தையே சுற்றி சுற்றி வருகிறது. அதுவும் திருமண நாள் கொண்டாட்டமாக காஷ்மீரில் இடம் பெறும் அந்தப் பாடல் காட்சி ... ஆஹா.... நாளெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். மெல்லிசை மன்னரின் கைவண்ணத்தில் வாலியின் வரிகளில் டி.எம்.எஸ். வாணி ஜெயராம் குரல்களில் ... மெலோடி என்றால் என்ன என்பதற்கு பொருளாக இப்பாடலை சொல்லலாம். புல்லாங்குழலில் ஆரம்பித்து புல்லாங்குழலில் முடியும் இனிமையான மெட்டு ... அருமையான குரல்கள் ...
மரங்கொத்தி பறவையைப் போலே வரிகளின் போது வலது கை சுட்டு விரலினால் நாயகியின் கூந்தலில் கொத்துவது போன்ற அபிநயமாகட்டும், யாரென்று ஏனிந்த கேள்வி என்ற வரிகளின் போது அதே சுட்டு விரலை கேமிராவுக்கு முன் நீட்டி பின் அப்படியே திருப்புவதாகட்டும் ... சிம்ப்ளி சூபர்.... இப் பாடல் காட்சியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்...
-
திரு ஜோ அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எல்லா வளங்களும் நிறைவாய் அமையும் பெருவாழ்வு வாழ வாழ்த்துகள்..
இன்னும் அதிகமதிகம் நம் நடிகர்திலகம் பற்றிய பதிவுகள் நீங்கள் தரவும் என் வேண்டுகோள்.
-
சிவீ ஆர் கட்டுரை தந்த அன்பு வாசு அவர்களுக்கு என் நன்றி..
வாழ்க்கை - இவரின் படங்களில் எனக்கு மிகவும் பிடிக்கும்
நடிகர்திலகத்தின் இரசிகராய் இயக்குநர் அமைந்தால் எப்படி படங்கள் அமையும் என்பதற்கு சிவிஆர் படங்களைச் சொல்லலாம்..
கலாட்டா கல்யாணம், நீதி, சுமதி என் சுந்தரி...... அழகுப் படங்கள்..
இதேபோல் கே விஜயனும் நம் நடிகர்திலகத்தை நமக்களித்த விதமும் ( தீபம், தியாகம், திரிசூலம், நல்லதொரு குடும்பம்) அழகானது!
-
விஸ்வரூபப் பாடல் சுட்டிக்கு நன்றி அன்பு ராகவேந்திரா அவர்களே...
மனதில் நிலைபெற்ற நாயகன் நானே - என நடிகர்திலகம் பாடும்போது
வானத்துத் தேவதைகள் சொன்னது - ததாஸ்து!
அவர் மூளை கட்டளையிட்டதும் சட்டென மலரும் அந்த வசீகரமுகம்..
அது எப்படி எப்படி என எத்தனை எண்ணியும் இன்னும் என் அறிவுக்கு எட்டா ரகசியம்..
அதனால்தான் அன்னை மறைந்த சில நாட்களுக்குள்ளாகவே அவர் காதல் காட்சியில் சோபித்த அதிசயம்...
-
thangasurangam could have been made in line with a Bond movie.at that time NT was so slim and befitting the Bond tuxedo with a Connery shade. But, mixing lot of sentiments in a Bond pattern is like taking curd rice with chicken as the side dish. and this movie was a loose adaptation of Dean Martin starrer The Silencers and some scenes from Thunderball.Some of the songs should have been removed. NTs fight scenes were quite good, but the movie faired average due to the mixing of sentiments that are unlikely in a Bond pattern
-
என்ன சார் இது ஒரு பல்லவியாப் போச்சே... வரலாறு தெரியவில்லை என்றால் பழைய ரசிகர்களிடம் கேட்கலாமே..
தங்க சுரங்கம் வசூல் மழை பொழிந்த படம். திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் எடுக்கும் நாள் வரையிலும் அரங்கு நிறைவுடன் வெற்றிக் கொடி நாட்டிய படம். 100 நாட்கள் காணாததற்கு காரணம் அடுத்தடுத்த நடிகர் திலகத்தின் படங்களின் வரவே. இதை நாம் பல முறை சொல்லியாகி விட்டது. விஷயம் தெரியாதவர்கள் சொன்னால் பரவாயில்லை. நம்முடைய ரசிக நண்பர்களே மேம்போக்காக எழுதுவது வேதனையாக இருக்கிறது. எத்தனையோ லட்சக்கணக்கான ரசிகர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டு தியேட்டரிலிருந்து படத்தை எடுத்த போது பட்ட மனக் கஷ்டம் எங்களுக்குத் தான் தெரியும். அஞ்சல் பெட்டி 520 படத்தில் ஒரு காட்சியில் சென்னை சாந்தியில் தங்க சுரங்கம் பேனரைக் காட்டுவார்கள். அதைப் பார்க்கும் போதெல்லாம் அந்தக் கட்டுக்கடங்காத கூட்டம் இன்னும் கண் முன்னே நிற்கிறது.
படத்தைப் பற்றிய தங்கள் கருத்தில் நான் தலையிட விரும்பவில்லை செந்தில் சார். ஆனால் சராசரி ஓட்டம் என்று சொல்லாதீர்கள். வெள்ளி விழா ஓடும் அளவிற்கு ரசிகர்களின் தொடர் படையெடுப்பினைக் கண்ட படம் தங்க சுரங்கம். முதல் நாள் அன்று அந்த வெள்ளை தொப்பியுடன் நம்பியாருடன் கைகலுக்கும் காட்சியில் தியேட்டரில் ரசிகர்களின் அளப்பரையை நேரில் கண்ட என் போன்றோருக்கு அந்தப் படத்தின் வெற்றியைப் பற்றி நன்கு தெரியும்.
Thanga Surangam was a super hit movie witnessed the shows with packed houses and was not average fair as you mentioned.