http://youtu.be/QqpsguUjr0U
Printable View
சேலத்தில் 1981ம் வருடம் நடைபெற்ற எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டின் நுழைவு சீட்டு
முதல் நாள் (13-06-1981 அன்று) இரவு, மாநாடு முடிந்தவுடன், நான் மற்றும் சக தோழர்களுடன், மறைந்த அப்போதைய செங்கை மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் மோகனரங்கம் மற்றும் முன்னாள் அமைச்சரும், அனைத்துலக எம். ஜி. ஆர் மன்ற பொதுச் செயலாளருமாகிய திருச்சி சௌந்தரராஜன் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, திடீரென்று பிரகாசமாக பளிச்சென்ற மின்னலாய், நமது மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் அருகே வந்து, மறு நாளைய ஏற்பாடுகளும் நன்கு உள்ளதா என்று அவர்களை வினவியுதுடன், எங்கள் அனைவரையும் பார்த்து புன்னகை புரிந்து, நலம் விசாரித்தது, இன்றும் பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்த நினைவு. அதற்கு முன் அவரை பல சந்தர்ப்பங்களில் பார்த்திருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் பேசியிருந்தாலும் கூட, தானே அருகில் வந்து எங்கள் முன் தோன்றி, எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது, எங்கள் வாழ் நாளில் நாங்கள் செய்த பாக்கியம் என்றே சொல்லலாம். .
http://i49.tinypic.com/1zvx37q.jpg
அன்புடன் : சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்