எனக்கு,கார்த்திக்,வாசு எல்லோருக்கும் விருப்பம்.
கால்கள் நின்றது நின்றதுதான்
http://www.youtube.com/watch?v=f_OclT91zH4
Printable View
எனக்கு,கார்த்திக்,வாசு எல்லோருக்கும் விருப்பம்.
கால்கள் நின்றது நின்றதுதான்
http://www.youtube.com/watch?v=f_OclT91zH4
அடிக்கடி நாம் கேட்ட பாடல்தான் இருந்தாலும் எப்பொழுது கேட்டாலும் புதுசாகவே இருக்கும்
ஏ.எம்.ராஜாவின் இசையில் அவரும் இசையரசியும் இசைத்த “தனிமையிலே இனிமை காண முடியுமா” பாடல் தான். இதை எழுதியது யார் என்று பலருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை
அதை எழுதியவர் கே.டி.சந்தானம்.. நல்ல குணச்சித்திர நடிகர் இவர்
இதோ அவரைப்பற்றி என் கட்டுரை
திரு கே.டி.சந்தானம். இவரை தெரியாதவர்கள் இருக்க நியாயமில்லை
மிக அருமையான குணச்சித்திர நடிகர். எத்தனையோ படங்களில் தந்தையாக நடித்திருக்கிறார்
குறிப்பாக புரட்சி தலைவரும் ஜெயலலிதாவும் பாடும் என்ன பொருத்தம் நமக்குள் என்ன பொருத்தம் பாடலுக்கு மத்தியில்
என்னம்மா அங்கே சத்தம் என கேட்பாரே அவரே தான். வா ராஜா வாவில் பிரபாகருக்கு கட்டளைகளை சொல்லுவாரே அவரே தான்.
இவர் நடிகர் மட்டுமல்ல எப்படி கே.பி.காமாட்சி பாடலாசிரியராகவும் இருந்தாரோ அதே காலகட்டத்தில் இவரும் பாடலாசிரியராக இருந்தார்.
திரு கே.பி.காமாட்சியைப்போல் இவரும் எந்த வருடம் பாடலாசிரியராக நுழைந்தார் என்பது தெரியாது.ஆனாலும் இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் முத்துக்கள்.
பானுமதியின் மிகப்பெரிய வெற்றிப்படமான சண்டிராணியின் இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமனாக இருந்தாலும் மிகவும் பிரபலமான பாடலான
இன்ப தேன் மாறி பாயுதே என்ற பாடலை எழுதியது திரு கே.டி.சந்தானம் அவர்கள். இதற்கு இசை மெல்லிசை மன்னர்கள்.
இதே வரிசையில் இவர் இயற்றிய பாடல்கள் இதோ.
தேவதாஸ் திரைப்படத்தில் எல்லாம் மாயை
தாய் மகளுக்கு கட்டிய தாலியில் பல பாடல்கள் என எல்லவாற்றையும் எழுதியது இவர் தான்.
அம்பிகாபதி திரையில் கு.மா.பா, தஞ்சை ராமய்யாதாஸ் எல்லோருடும் இவரும் பாடல் எழுதினார்.
ஆம் ஆடட்டுமா கொஞ்சம், வாடா மலரே என்ற பாடல்களை எழுதியது இவரே.
மணமகள் தேவை படத்தில் ஒலித்த மிகப்பிரபலமான பாடல் பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே பாடலை
எழுதியது இவர் தான்.
மோகன சுந்தரம் படத்தில் சுகுமாரன் எழில் கண்டு ,பாட்டு வேண்டுமா, ஓம் ஜகம்தனில் இன்பம் என பிரபலமான பாடல்களை எழுதியதும் இவரே.
கோமதியின் காதலன் படத்தில் சீர்காழியார் ஜிக்கி குரல்களில் ஒலித்த மின்னுவதெல்லாம் பொன் என்றே எண்ணி என்ற பாடலை இயற்றியது இவரே.
கலைவாணரின் மிகவும் பிரபலமான பாடலான “தேதி ஒன்னிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்” என்ற பாடல் எவ்வளவு கருத்தாழமிக்க
பாடல் .. சிந்தனையை தூண்டும் வரிகளுக்கு சொந்தக்காரர் இவரே.
சக்ரவர்த்தி திருமகள் படத்திலும் நலுங்கிட்டு பார்ப்போமடி என்ற பாடலை எழுதியது இவரே.
ஆடிப்பெருக்கு திரையில் ஒலித்த தனிமையிலே இனிமை காண முடியுமா .. என்ன அருமையான வரிகள்
“மலர் இருந்தால் மனம் இருக்கும் தனிமையில்லை செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை”
கண்ணிழந்த மனிதர் முன்னே என அர்த்தமுள்ள பாடல்களை எழுதியது இவரே.
திரு சீர்காழியாரின் அகத்தியர் படத்தை மறந்திருக்க நியாயமில்லை
ஆம் தலைவா தவப்புதல்வா, இசைத்தமிழாய் இருப்பவனே என்ற் பாடல்களுக்கு சொந்தக்காரர் இவரே.
அதே போல் ஏ.பி. நாகராஜனின் கண்காட்சி படத்தில் பாடல்கள் எழுதினார். குறிப்பாக
பாலசுப்பிரமணியம், ஈஸ்வரி பாடிய "அனங்கன் அங்கஜ்ஜன் அன்பன் வசந்தன் மன்மதன்" என்ற மன்மதன் ரதி பாடுவதாக அமைந்த பாடலை இயற்றியது இவரே.
பாடலாசிரியராக இவரை பலருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை ஆனால் நல்ல குணச்சித்திர நடிகராக பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.
இன்னுமொரு குறுந்தகவல் நாடக கம்பெனியில் சிறுவர்களான சிவாஜியையும் காகா ராதாகிருஷ்ணனையும் சேர்த்துவிட்டவரும் இவர் என்பது பலருக்கு தெரியாது.
இப்படி முகம் தெரியாமல் தமிழ் தொண்டாற்றிய எத்தனையோ முகங்களில் இவரும் ஒன்று. இன்றைய இசை ரசிகர்களுக்கு இவரை தெரிந்திருக்கவே நியாயமில்லை
அதனாலேயே இந்த அறிமுகம்..
http://www.youtube.com/watch?v=s0Tskmj9OYc
கோபால் சார், கார்த்திக் மற்றும் வாசு சார் அருமையான கட்டுரைகள்
ராகவேந்திரா சார் கூடுதல் பாராட்டுக்கள் உங்களுக்கு
ராஜேஷ் சார்,
https://encrypted-tbn2.gstatic.com/i...l3-IhKXyWQBPTA
http://i812.photobucket.com/albums/z...ps7bd40eb2.jpg
கே.டி.சந்தானம் என்ற ஒரு அருமையான நடிகரையும், பாடலாசிரியரியும் வெளி உலகிற்குக் கொண்டு வந்து கௌரவப் படுத்தியதற்கு நன்றி! நல்ல முயற்சி.
கே.டி.சந்தானம் ஒரு அருமையான நடிகர் பிளஸ் பாடல் ஆசிரியர். இவரை ஏ.பி.நாகராஜன் தன் படங்களில் இவரை அதிகம் பயன்படுத்திக் கொண்டார்.
'ராஜ ராஜ சோழன்' திரைப்படத்தில் மும்முடிச் சோழனின் தலைமை சிற்பியாக கே.டி.சந்தானம் படத்தைத் துவங்கி வைப்பார். நந்தி சிலையை தஞ்சை பெரிய கோவிலுக்கு தயார் செய்யும் சிற்பி ரோல். சிற்பி கவனியாமல் கடமை தவறாமல் சிற்பம் செதுக்கும் போது நடிகர் திலகம் வெற்றிலை மடித்துக் கொடுக்கும் அடப்பைகாரன் போல சந்தான சிற்பிக்கு பணிபுரிவார்.
முதல் தேதி, திருமலை தென்குமரி படங்களிலும் நடித்திருப்பார்.
அதே போல 'சங்கமம்' திரைப்படத்தில் 'ஒரு பாட்டுக்கு பலராகம்' பாடலின் போது ஜெமினி, கே.ஆர்.விஜயாவை தூரத்திலிருந்து கண்காணிப்பார். பெரும்பாலும் வயதான தந்தை, ஆசிரியர் ரோலில் வருவார்.
காரைக்கால் அம்மையார், சக்கரவர்த்தி திருமகள், குமார ராஜா, கோமதியின் காதலன் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
கே.டி.சந்தானம் அவர்கள் இடம் பெற்ற ஒரு பாடல்.
'திருமலை தென்குமரி' படத்தில் ஒரு அருமையான தென்னிந்திய மொழிகள் கலந்த ஒரு பாடல்.
'அமுதே தமிழே நீ வாழ்க'
மலையாளம், கன்னடம், தெலுங்கு, சென்னைத் தமிழ், ஆங்கிலம், சுத்தத் தமிழ் என்று எல்லாம் ஒன்று சேர்ந்த 'பாரத விலாஸ்' டைப் ராகம் இந்தப் பாடல்.
திருமலையிலிருந்து தென்குமரி வரை பஸ்ஸில் டூர் செலும் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த பயணிகள் பொழுதுபோக்காக பாடும் பாடல்.
ஒவ்வொரு மொழியும் அவ்வளவு இனிமை. 'பாடணுன்னு மனசுகுள்ளே ஆச நெறையகீது' உட்பட.
http://www.dailymotion.com/video/x15glvk_azhage-thamizhe-thirumalai-thenkumari-1970_shortfilms
அனைவருக்கும் காலை வணக்கம்
கொஞ்சம் சொந்த ஜோலி மற்றும் சிஸ்டம் இல்லாமல் கஷ்டம் எல்லாம் சேர்ந்து கொண்டு திரியில் கலந்து கொள்ள (கொல்ல) முடியவில்லை
மன்னிக்கனும்
கே.ர. சந்தானம் பற்றிய பதிவு மிக அருமை
தெரிந்த முகம் தெரியாத பல தகவல்கள் .
எல்லாம் ஒண்ணுக்கு ஒண்ணு சளைத்தது அல்ல
ராகவன் - கல்லும் கனியாகும்,கண்ணில் தெரியும் கதைகள் இரண்டு படத்திற்கும் சொந்தகாரர் என்று நினைவு
சிவகாமி நான் ஜெயுசெட்டேன் ஜெயுசெட்டேன்
கை விரலில் பிறந்தது நாதம்
இது கல்லும் கனியாகும் தானே
http://i1.ytimg.com/vi/RpRpyoR6Sb0/hqdefault.jpg
அண்ணாமார்களே
மேல உள்ள பாடல் எந்த படத்திலே சார்