-
மீண்டும் ஏப்ரல் 2 -க்கு மாறிய கொம்பன் ரிலீஸ்
கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன், கோவை சரளா நடிப்பில் முத்தையா இயக்கியிருக்கும் கொம்பன் ஏப்ரல் 2 வெளியாகும் என அறிவித்திருந்தனர்.
ஏப்ரல் 2 சகாப்தம், நண்பேன்டா படங்கள் வெளியாவதாலும், ஏப்ரல் 10 கமலின் உத்தம வில்லன் வெளிவரும் என்பதாலும் கொம்பன் வெளியீட்டை முன்னதாக - மார்ச் 27 -ஆம் தேதிக்கு மாற்றினர்.
தற்போது மீண்டும் ஏப்ரல் 2 -ஆம் தேதிக்கு கொம்பனின் வெளியீட்டை மாற்றி வைத்துள்ளது, படத்தை தயாரித்திருக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.
கடைசி நேரத்தில் மீண்டும் ரிலீஸ் தேதி மாறுவதற்கு வாய்ப்புள்ளது.
-
மக்கள் தலைவர், வசூல் சக்கரவர்த்தி நடிகர்திலகத்தின் டிஜிட்டல் மிரட்டல் மீண்டும்.
20.03.2015 வெள்ளி அன்று டிஜிட்டல் ஹீரோ மக்கள் தலைவர் சிவாஜி அவர்கள் கர்ஜித்த வீரபாண்டிய கட்டபொம்மன் டிரைலர் வெளியீட்டு விழா.
—
https://scontent-sin.xx.fbcdn.net/hp...92&oe=557B8267
https://scontent-sin.xx.fbcdn.net/hp...17&oe=55B7D8F8
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...a3e75828bd01ce
-
GVM.. always forecast lot of projects.......
கௌதமம்மேனன்-விஷால், சர்ப்ரைஸ் காம்பினேஷன்!
‘என்னை அறிந்தால்’க்காக ஏற்கெனவே பாதியில் விட்ட சிம்பு படத்தை ‘அச்சம் என்பது மடமையடா’ என பெயரிட்டு படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறார் கௌதம்மேனன். இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களையும் இறுதி செய்து விட்டார்.
அதில் விக்ரம் & சமந்தா காம்பினேஷனில் படம் இயக்குவது அனைவரும் அறிந்ததே. அதைத் தொடர்ந்து அவர் விஷாலை இயக்குவதுதான் ஷாக் சர்ப்ரைஸ். சுமோக்கள் பறக்க, பனை மரங்கள் சாய, ‘நானும் மதுரைக்காரன்தாண்டா’ என மரண மாஸ் ஆக்ரோஷம் காட்டும் விஷாலும்...
மயிலிறகாக வருடும் மான்டேஜ் பாடல் ஸ்பெஷல் கௌதம்மேனனும் இணையும் படத்தில் என்ன ஸ்பெஷல் என்ற எதிர்பாப்பு இப்போதே எகிறி அடிக்கிறது. ஒருவேளை விஷால் இதில், ‘நானும் மெட்ராஸ்காரன்தாண்டா’ என வசனம் பேசுவாரோ?
-
kaட்டபொம்மன் கன்னத்தில் அறைந்து சொல்லும் உண்மை - வைரமுத்து பேச்சு
சிவாஜி கணேசன் நடித்து, பி.ஆர்.பந்துலு டைரக்டு செய்து 1959-ம் வருடம் வெளிவந்த வரலாற்று சிறப்பு மிகுந்த படம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்.’ 56 வருடங்களுக்குப்பின் இந்த படம் ‘சினிமாஸ்கோப்’பில் புதிய தொழில்நுட்பங்களுடன் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதன் ‘டிரைலர்’ வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.
இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசியதாவது்-
‘‘வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற வரலாற்று கலைப்படத்தின் பெருமையை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நிகழ்கால திரையுலகம் குறித்த தகவல் அறிவு வாய்த்திருக்க வேண்டும். இன்று வெள்ளிக்கிழமை வெளியாகும் ஒரு திரைப்படம் மூன்றாம் காட்சியில் நிலைத்திருந்தால், ஆஹா என்கிறார்கள். சனி, ஞாயிறு நீடித்தால், அபாரம் என்கிறார்கள். திங்கட்கிழமையும் மாற்றப்படாமல் இருந்தால், வெற்றிப்படம் என்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு திரைச்சூழலில் ஒரு படம், 56 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தொழில்நுட்பத்தோடு தமிழர் வீட்டு கதவுகளை மீண்டும் தட்டுகிறதென்றால், வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழையும், சிவாஜி கணேசனின் பெருமையையும் உணர்ந்து கொள்ளலாம்.
தமிழ் திரை வரலாற்றின் நெடுங்கணக்கில் எத்தனையோ கதாநாயகர்கள் வந்து போயிருக்கிறார்கள். ஆனால், ஆண்மையை ஆர்ப்பரிக்கும் தமிழ் குரல் சிவாஜி கணேசனைப்போல் வேறு எவருக்கும் வாய்த்ததில்லை. அவரை, ‘சிம்மக்குரலோன்’ என்று அழைத்தார்கள். சிங்கத்தின் கர்ஜனைக்கு கூட ஒரே தொனிதான் உண்டு. ஆனால், நூறு குரலில் பேசிய சிம்மம், சிவாஜி கணேசன்.
மறைந்த பிறகும் ஒளியாக, ஒலியாக, உருவமாக, அசைவாக வாழ்ந்து கொண்டே இருப்பதால் நடிகர்கள் சாகா வரம் பெற்றவர்கள். பொதுவாக நடிகர்கள் ஒப்பனையை அணிந்து கொண்டு நடிப்பார்கள். ஆனால், சிவாஜியோ ஒப்பனையை அணிந்து கொண்ட பிறகு பாத்திரத்துக்குள் புகுந்து கொண்டு நடித்தவர்.
இந்த வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவில் இளைய நடிகர்களுக்கும், இந்தியாவுக்கும் ஒரு சேதி இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட்டுப் பார்ப்பதற்கு இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும்? என்ற கேள்வியை வீரபாண்டிய கட்டபொம்மன் எழுப்புகிறது.
அன்னிய முதலீடுகள் எந்த நாளும் இந்தியாவுக்கு ஆபத்து என்பதைத்தான் கட்டபொம்மன் வரலாறு நமக்கு போதிக்கிறது. இன்னொரு சுதந்திர போருக்கு இந்தியா தள்ளப்பட்டு விடக்கூடாது. இதைத்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் நிகழ்காலத்தின் கன்னத்தில் அறைந்து சொல்கிறான்.’’
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.
விழாவில் நடிகர்கள் சிவகுமார், ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, பட அதிபர் சித்ராலட்சுமணன், ராஜ் டி.வி. ராஜேந்திரன், டாக்டர் கமலா செல்வராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்
Courtesy :Webdunia Tamil
-
62 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப் படம் 'குற்றம் கடிதல்'! - VIKATAN
62 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தமிழ் திரைப்பட உலகின்
அறிமுக இயக்குநர் பிரம்மாவின் 'குற்றம் கடிதல்', சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது. 'ஜிகர்தண்டா' திரைப்படத்தில் நடித்த பாபி சிம்ஹா உறுதுணை நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமார் பெறுகிறார். 'சைவம்' படத்துக்கு பாடல் எழுதியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. 'ஜிகர்தண்டா' எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது.
http://img.vikatan.com/news/2015/03/...uthu0224_1.jpg
சிறந்த குழந்தைகளுக்கான படமாக, தமிழ்த் திரைப்படமான 'காக்கா முட்டை' தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உன்னி கிருஷ்ணன் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன் சிறந்த பாடகிக்கான விருது பெற்றுள்ளார். இவர் 'சைவம்' படத்தில் அழகே அழகு பாடலைப் பாடினார்.
சினிமா குறித்த சிறந்த எழுத்துக்கான விருது (பிரைட் ஆஃப் தமிழ் சினிமா) ஜி.தனஞ்செயனுக்கு வழங்கப்படுகிறது.
முக்கிய விருதுகளை வென்றுள்ள குற்றம் கடிதல் மற்றும் காக்கா முட்டை ஆகிய திரைப்படங்கள் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத போதிலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் கவனத்தை ஈர்த்து தற்போது தேசிய விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கன்னட படமான 'நான் அவனல்ல அவளு'வில் நடித்த விஜய், சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுகிறார். 'குயின்' படத்தில் நடித்த கங்கனா ரணவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ப்ரியங்கா சோப்ரா நடித்த 'மேரிகோம்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. மராத்திய மொழி திரைப்படம் 'கோர்ட்' சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது
-
-
ஒரு காவிய சோகம்
62 -வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுப் பட்டியலைப் பார்த்தவர்களுக்கு சின்ன அதிர்ச்சி. காவியத் தலைவனுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த பல விருதுகளை ஹைதர் படம் தட்டிச் சென்றுள்ளது. ஒரு ஆறுதல் விருதுகூடவா காவியத்தலைவனுக்கு கிடைக்கவில்லை?
விசாரித்தால் விவகாரம் வேறு மாதிரி உள்ளது.
காவியத் தலைவனை விருதுப் போட்டிக்கு அனுப்பவேயில்லையாம். ஏன்? சரித்திரம் படைக்கப் போறேன் என்று வசந்தபாலன் எடுத்த காவியத்தலைவன், தயாரிப்பாளர் சசிகாந்தின் 25 கோடிகளை காபந்து பண்ணிவிட்டது. 25 கோடிகளில் சில கோடிகள்தான் திரும்பக் கிடைத்தது. இதில் விருதுக்கு வேறு அனுப்பி இன்னும் சில லட்சங்களை இழக்க வேண்டுமா என்று பாராமுகமாக இருந்துவிட்டாராம் சசிகாந்த்.
இரண்டு விருது கிடைத்திருந்தாவது, தரமான படம்தான், அது மக்களுக்குதான் பிடிக்கலை என்று வசந்தபாலன் ஆறுதல்பட்டிருப்பார்.
-
கொம்பன் படத்துக்கு சிக்கல்... தடை கேட்டு மனு... ’குட்டிபுலி’ முத்தையா இயக்கத்தில் கார்த்தி , லட்சுமி மேனன் , ராஜ்கிரண், கோவை சரளா மற்றும் தம்பி ராமையா நடிப்பில் ஏப்ரல் 2ம் தேதி வெளியாக உள்ள படம் ‘கொம்பன்’. கிராமத்து மாமன் , மருமகன் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம்.
ஏற்கனவே படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் என அனைத்தும் வெளியாகி படத்தின் ரிலீஸ் பணிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில் படத்திற்கு தடை கேட்டு முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.அந்த மனுவில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது,
’கொம்பன்’ படம் முதுகுளத்தூர் கலவர சம்பவத்தை பின்னனியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தியாகி பேரையூர் வேலுச்சாமி நாடாரை கலங்கப்படுத்தும் காட்சிகள் இருப்பதாகவும் தெரிகிறது. படத்தின் பெயரான ‘கொம்பன்’ என்ற தலைப்பே சண்டையைத் துண்டுவதாக இருக்கிறது . கடந்த ஆறு மாதங்களாக தமிழகத்தில் சாதி கலவரங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்த படம் வெளியானால் மேலும் இந்த கலவரங்கள் அதிகரிக்கும். என கூறி படத்திற்கு தடை கேட்டு முதல்வரிடம் மனு கொடுத்துள்ளார் தமிழ் நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ்.
-
Hope கார்த்தி Luck changes....
கார்த்தி படத்தில் ஸ்ருதிக்கு பதில் தமன்னா
கார்த்தி, நாகார்ஜுன் நடிக்கும் தமிழ், தெலுங்கு இரு மொழிப் படத்திலிருந்து ஸ்ருதி விலகியதால் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது அல்லவா? அந்தப் படத்தில் ஸ்ருதிக்குப் பதில் தமன்னாவை நடிக்க வைப்பது என தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தத் தகவலை உறுதி செய்த தமன்னா தரப்பு, கால்ஷீட் பிரச்சனைகள் இருப்பதால் இதுவரை படத்தில் நடிப்பது குறித்து முடிவு செய்யவில்லை என கூறியது.
இந்த இரு மொழிப்படம், பிரெஞ்சில் வெளியான இன்டச்சபிள்ஸின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வில்லனாக மிஷ்கின், ஹீரோவாக ராம் ! - vikatan
தன் படங்களில் திகில் காட்டும் இயக்குனர் மிஷ்கின் வில்லன் அவதாரம் எடுக்கவுள்ளார். இயக்குநர் ராம் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார்.
'பிசாசு' படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சரத்குமார் நடிக்கும் புதிய படத்தின் பணிகளை வேகமாக நடத்தி வருகிறாராம் இயக்குநர் மிஷ்கின். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறதாம். இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.
மேலும் இவரிடம் இணை இயக்குநராக இருந்த ஜி.ஆர். அதித்யா இயக்கவிருக்கும் படத்தையும் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் மிஷ்கின்.
இப்படத்தின் நாயகனாக இயக்குநர் ராம், நாயகியாக ப்ரியாமணி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்களாம். கதை, தயாரிப்பு மட்டுமின்றி இப்படத்தின் வில்லனாகவும் நடிக்கிறாராம் இயக்குநர் மிஷ்கின்.