http://i1302.photobucket.com/albums/...psffe70f44.png
Printable View
உண்மை உணரும் நேரம்
ஒரு சந்தேகம். ஆங்கிலத்தில் weekend என்று சொன்னால் எனக்கு தெரிந்தவரை வெள்ளி சனி ஞாயிறுதானே? ஏன் கேட்கிறேன் என்றால் படம் வெளியானது 14th வெள்ளியன்று. Weekend என்று சொல்லப்படுவது 3 நாட்கள். 16th ஞாயிறு அன்று 3 நாட்கள் முடிவடைந்தது. மூன்று நாட்கள் வசூல் என்று ஒரு தொகை 13 லட்சம் பிளஸ் . அதற்கு அடுத்து, வாரத்தின் மொத்த வசூல் 26 லட்சம் என்று ஒரு வரி. இந்த தகவல் வெளியாவது 17-ந் தேதி. அதுவரை மொத்தம் ஓடியதே 3 நாட்கள்தான். அதற்கு 13 லட்சம் பிளஸ் என்று சொல்லியாகி விட்டது. பிறகு எங்கிருந்து 26 லட்சம் வந்தது? கீழே ஒரு disclaimer. இந்த வசூல் விவரங்கள் தியேட்டர் உரிமையாளர்களோ அல்லது விநியோகஸ்தர்களோ கொடுக்கவில்லை. இங்கே குறிப்பிட்டிருப்பது ஒரு உத்தேச கணக்கே என்றும் எழுதியிருக்கிறது. படத்தின் வெற்றி தோல்வி பற்றி நாம் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் இப்படி அடிப்படையிலே பிழையான ஒரு செய்தியை ஆதாரமாக வைத்து நமது திரி நண்பர்களை சவாலுக்கு அழைப்பது போன்ற தொனியில் மீண்டும் பதிவிடுவது வேதனைக்குரிய போக்கு.
மற்றொரு உண்மை. Inox மயிலாப்பூர் மற்றும் விருகம்பாக்கம் Fame National போன்ற multiplex-களில் முதன் முதலாக வெளியான பழைய திரைப்படம் நடிகர் திலகத்தின் பாச மலர்.
அன்புடன்
பார்த்ததில் பிடித்தது 17
1963 ல் வெளி வந்த அறிவாளி படத்தை பற்றி தான் இந்த பதிவு , இந்த படத்தை பற்றி பார்க்கும் முன் திரு ரவி அவர்களின் பங்களிப்புக்கு மிகவும் நன்றி தெரிவித்து ஆரம்பிக்கிறேன்
இந்த படம் திரு MGR அவர்கள் நடிக்க இருந்தது . இந்த படம் 1953 ல் ஷூட்டிங் தொடங்கப்பட்டு பல பிரச்சனைகளுக்கு பிறகு 1963 ல் தான் வெளி வந்தது . 9 வருடம் கழித்து வந்தாலும் படம் நல்ல வெற்றி தான்
கதை :
ஆளவந்தான் படித்த பட்டதாரி , படிப்பை , ஆஸ்தியை வைத்து மக்களுக்கு அதுவும் குறிப்பாக விவசாயிகளுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் , படித்த நபர்களை தன் கூட வைத்து கொண்டு காந்தி கிராமம் என்ற பெயரில் இந்த நல்ல காரியத்தை செய்து வருகிறார்
இது ஜமிந்தார் சிங்கம் (ராமதாஸ்) மற்றும் அவர் agent நல்லமுத்து நாயகர் (பாலய்யா) இருவருக்கும் பிடிக்கவில்லை
தண்டபாணி பிள்ளை (சாரங்கபாணி) பெரிய பணக்காரர் , அவர் தன் மகளுக்கு கல்யாணம் செய்து நினைக்கிறார் , ஆனால் அவர் திமிர் பிடித்த மகளுக்கு கல்யாணம் எப்படி நடக்கும் ? , அவர் வரதக்ஷணையாக 60 acre நிலமும் , 1 லட்சம் பணமும் தருவதாக சொல்லுகிறார் , இந்த விஷயம் தன் நண்பர் குமார் மூலமாக அறிந்து கொளுகிறார் ஆளவந்தான் .இந்த பணத்தால் ஏழை விவசாயிகளுக்கு உதவ முடியும் என்று எண்ணி அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்.
குமார் மனோரமாவின் (பானுமதி) தங்கை இந்தியாவை ( சரோஜா ) காதலிக்கிறார் .
ஆளவந்தான் மனோரமா கல்யாணமும் , குமார்- இந்தியா கல்யாணமும் இனிதே நடக்கிறது , ஆளவந்தான் மனோரமா இருவரும் வாழ்கையை அரம்பிகிரார்கள் , மனோரம்மவிடம் எதை செய்யாதே என்று சொன்னாலும் அதை தான் முதலில் செய்வார் , இதை அறிந்து கொண்டு சாமர்த்தியமாக மனோரமாவை திருத்துகிறார்
தன் கனவு திட்டத்துக்கு ஜமிந்தார் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் ஆளவந்தான் அவரை சந்திக்கிறார் , தன் கூட படித்த மோகினி (ஜெமினி சந்திரா ) தான் ஜமிந்தார் அவர்களின் வருங்கால மனைவி தான் என்றதால் இந்த பிரச்சனை எளிதில் முடிந்து விடுகிறது . ஜமிந்தார் மற்றும் ஆளவந்தான் இருவரும் சேர்ந்து கூட்டுறவு விவசாய பண்ணை ஆரம்பிக்கும் அளவுக்கு நண்பர்கள் ஆகிவிடுகிறார்கள்
இதை பொறுக்காமல் நல்லமுத்து அவர் வேலைகாரர் கந்தசாமி மூலமாக ஆளவந்தான் மோகினி இருவருக்கும் தப்பான உறவு இருபதாக கதை கட்ட , அதை மனோரமா அலட்சியம் செய்கிறார் , ஆனால் ஜமிந்தார் ஆளவந்தான் அவர்களை தாக்க , மக்கள்
ஜமிந்தார் க்கு ஒன்று சேர்ந்து விடுகிறார்கள் , முத்துவேல் (ஜமிந்தார் மகன் ) , மற்றும் மனோரமா இருவரும் உண்மையை வெளியே கொண்டுவர , ஜமிந்தார் திருந்த
சுபம்
படத்தை பற்றி :
ஒரு திமிர் பிடித்த பெண்ணை அடக்கி ஆளுவது தான் கதை. Taming of the Shrew தான் இந்த மாதிரி கதை கருவுக்கு அடிப்படை
படத்தின் பெயர் போடும் போதே background காட்சியில் விவசாயம் சார்ந்த விஷயங்களை பார்க்க முடிகிறது , சொல்ல வந்த விஷியத்தை முதல் காட்சியில் சொல்லி விடுகிறார் இயக்குனர் A. T. கிருஷ்ணஸ்வாமி . படத்தின் பெயர் போட்டு முடிந்த உடன் சிவாஜி சாரின் தரிசனம் தான் , படத்தின் பெயர் போட்டு முடிந்த உடன் ஹீரோ வந்து , வணக்கம் போடும் வரைக்கும் ஹீரோ முகம் தெரிந்தால் சந்தோசம் படும் ரசிகர்களின் நானும் ஒருவன்
பல வருடங்கள் படம் எடுக்க பட்ட தாள் நடிகர் திலகத்தின் தோற்றத்தில் வித்தியாசங்கள் நன்றாக தெரிகிறது , முதல் காட்சியில் சற்று குண்டாக இருக்கிறார் , முதல் காட்சியிலே விவசாய தொழில் சார்ந்த பிரச்சனைகளையும் , அதில் படித்தவர்களின் பங்கும் , பணகரனின் அதிகம் ,அதை எதிர்கொள்ளும் பொது சந்திக்கும் practical difficuties பத்தியும் நன்றாக சொல்லுகிறார்
ஒரு ஹீரோ அதுவும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஹீரோ இது போன்ற விஷியங்களை சொல்லும் பொது அதின் வீச்சு மிகவும் அதிகமாக இருக்கும் .
தன் நண்பர் ராமசந்திரன் உடன் பேசும் பொது அவர் பேசும் ஸ்டைல் , cigarette பிடிக்கும் ஸ்டைல் அனைத்தும் பிரமாதமாக இருக்கும் , அதுவும் அந்த காட்சியில் அவர் வெள்ளை சட்டை , கருப்பு pant அணிந்து கொண்டு நடிகர் திலகத்தின் சுர்ருட்டை முடியுடன் இருக்கும் காட்சி எழுதும் போதும் கண்ணுக்குள்ளே இருக்கிறது
ராமசந்திரன் தனக்கு தெரிந்த பெண்ணை பற்றி சொல்லி அவளை கல்யாணம் செய்வதால் வரும் பணத்தை பற்றியும் , அந்த பெண்ணை பற்றியும் சொல்ல சிவாஜி சார் சொல்லும் வசனம் டாப் : சகல விஷயங்களை தெரிந்த பெண்ணுக்கு கொஞ்சம் சண்டி தனம் இருக்கும் என்று சொல்லும் பேச்சு - எதையும் positive ஆக பார்க்கும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது
ராமசந்திரன் அந்த பெண் எப்படி சொன்னால் என்ன பேசுவே , அப்படி சொன்னால் என்ன பேசுவே என்று கேட்க அதற்கு நம்மவர் தூய தமிழில் பதில் சொல்ல மீண்டும் திருவிளையாடல் தரமி நினனிவு வந்தது
திருவிளையாடல் பிறகு தான் வந்தாலும் , அதன் வீச்சு மிகவும் அதிகம் அதனால் தான்
அடுத்த காட்சியில் சிவாஜி தன்னை தன் வருங்கால மாமனாரிடம் அறிமுகம் படுத்தி கொள்ளும் காட்சியிலும் நம்மவரின் மொழி புலமை , நன்றாக இருக்கிறது (எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளில் இதுவும் ஒன்று )
முதல் சந்திப்பில் டாமல் டுமில் தான் இதை எதிர்பார்த்தது தானே என்றது போன்று ஒரு சிரிப்பு நம்மவரிடம் .
கல்யாணம் செய்து கொள்ளும் பொது நம்மவர் கோமாளி போல் உடை
அணிந்து , கொண்டு வரும் காட்சி சிரிப்பை வர வைக்கிறது , தன் புத்தி சதுர்யதினால் பானுமதியை வழிக்கு கொண்டு வர செய்யும் காட்சிகள் சபாஷ்
அந்த காலத்திலேயே பதிவு திருமணம் காட்சி - நியூ கான்செப்ட்
அடுத்த காட்சியில் கோட் சூட் அணிந்து கொண்டு வாழிய நீளுழி நடன நிகழ்ச்சியை பார்க்கும் பொது , இவரா அவர் என்று நினைக்க தோன்றுகிறது
இவரால் மட்டும் எப்படி கூடு விட்டு கூடு பாய முடிகிறது , அதுவும் அவர் பானுமதியை பார்க்கும் பொது , இனிமே தான் இருக்கு உன்னக்கு என்று பார்ப்பது போல் ஒரு பார்வை
அதே போல் அவர் செய்யும் சேஷ்டைகள் சிரிப்பை வர வைக்கிறது , அதுவும் தண்ணியை தட்டி விடும் காட்சியும் , பானுமதி பாடும் பொது , இவர் அதற்கு சம்பந்தமே இல்லாமல் சுருதி சேராமல் படும் பொது சிரிப்பை அடக்க கஷ்டம் தான், பின் இருவரும் சமாதானம் ஆகி சத்யம் செய்து கொள்ளும் பொது சில வருடங்கள் முன்பு வந்த ரமணி vs ரமணி சீரியல் தான் நினைவுக்கு வந்தது
பின் ராமதாஸ் உடன் பேசும் காட்சியில் தான் எத்தனை எதார்த்தம் , ராமதாஸ் அவர்களும் எதார்த்த நடிப்பை கொடுத்து இருப்பார்
இருவரும் சேர்ந்து விட்டார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறது
அதே போல் அடி பட்ட உடன் ராமதாஸ் அவர்களை மக்களிடம் இருந்து காப்பாத்தனும் அது தான் நல்ல தளவைர்க்கு அழகு என்று சொல்லும் வசனம் நச்சு .
பானுமதி - excellent performer எப்போதும் , திமிர் பிடித்த கதாநாயகி என்றால் இவர் நன்றாக ஸ்கோர் செய்வார் , படத்தி ல் சிவாஜியின் இளமைக்கு மத்தியில் இவர் தோற்ற்றம் சற்று முதிர்ச்சி . பிற்காலத்தில் வந்த மன்னன் விஜயசாந்தி கதாபாத்திரத்துக்கு இது தான் base . ராமசந்தரன் guitar வசிக்க இவர் வசிக்க கத்துக்க வரும் காட்சியில் , அவர் பேசும் வசனம் இவரின் குணத்துக்கு ஒரு எடுத்துகாட்டு. பின் திருந்தி புருஷன்க்கு ஆலோசனை சொல்லும் காட்சியிலும் , தன் புருஷன் வேறு ஒரு பெண்ணுடன் affair வைத்து இருபதாக வரும் செய்தியை அவர் handle செய்யும் விதமும் சபாஷ் போடா வைக்கிறது .
பாடல்களும் பாடி இருக்கிறார் ,
பாலய்யா :
இவர் தான் வில்லன் silent killer , இந்த மாதிரி பாத்திரங்களை அவர் handle செய்யும் விதமே அலாதி தான் , கொஞ்சம் நகைச்சுவை , கொஞ்சம் வில்லத்தனம் , கொஞ்சம் பயந்த சுபாவம் என்று கலக்கி இருக்கிறார்
தங்கவேலு :
படத்தின் attraction தங்கல்வேலு , முத்துலட்சுமி நகைச்சுவை தான் .
தங்கவேலு பாலையா வின் மகன் , தந்தை உடன் அவர் பேசும் வசனம் நல்ல நய்யாண்டி , குப்பை எரிவதை குடிசை எறிவதாக எண்ணி தங்கவேலு செய்யும் சேஷ்டையில் தொடங்கிறது இவர் நகைச்சுவை ராஜ்ஜியம்
தன்னை பார்க்க வரும் தன் நண்பர் வரவதாக அறிந்து , தன் மனைவியை அதற்கு தயார் செய்யும் காட்சி , அதை அரை குறையாக புரிந்து கொண்டு பவுடர் உடன் வந்து மானத்தை வாங்குவதும் , switch என்று சொல்ல முயற்சிக்கும் காட்சியும் , file கேட்க முத்துலட்சுமி பயல்(பையன்) குபிடுவதும், hard ஆக இருக்கு என்று தங்கவேலு சொல்ல , ஆடு எங்கே இருக்கு என்று கேட்பதும் , பின் தூங்கி , முன்னாடி எழுந்துக்கணும் என்று தங்கவேலு சொல்ல , அதை முத்துலட்சுமி அவர்கள் interept பண்ணும் பொது , தங்கவேலு வெறுத்து போய் கையை கட்டி நிற்பதும் என்று ஒரு ராஜாங்கமே நடத்தி இருக்கிறார்கள் இருவரும் . un adulterated காமெடி என்றால் இது தான்
படத்தின் முக்கிய பாத்திரமாகவும் தங்கவேலு அவர்கள் நன்றாக நடித்து இருக்கிறார்
நடிகர் திலகம் பானுமதி அவர்களை டீசே செய்யும் கண்ணாலே கல்லாமல் வந்தேனே என்ற பாடலும் அதில் நாமவர் அணிந்து இருக்கும் மோதிரமும் சூப்பர் . அதை தொடர்ந்து அவரை என் இப்படி திமிர் பிடித்த பெண்ணை கல்யாணம் செய்து சமாளிப்பிர்கள் என்று கேட்கும் பொது நடிகர் திலகத்தின் பாடலும் படத்தை நன்றாக நகர்த்துகிறது
"அறிவுக்கு விருந்தாகும் பாடல் நல்ல கருத்து உள்ள பாடல்
மொத்தத்தில் நல்ல படம்
இது நான் சின்ன வயசில் DD தொலைகாட்சியில் ஒரு சண்டே அன்று பார்த்த படம்