டியர் வாசு சார்,
'தம்பி பொண்டாட்டி' படம் எனக்கும் பிடித்ததுதான். பஞ்சு அருணாச்சலம் டைரக்ட் செய்த ஒரே படம். நன்றாகத்தான் செய்திருந்தார். ரஹ்மான், நிழல்கள் ரவி, அவர் மனைவியாக வரும் ரம்யாகிருஷ்ணன் என எல்லோரும் நன்றாக நடித்திருந்தனர். சுகன்யா பாத்திரம் மட்டுமே கொஞ்சம் எரிச்சலூட்டும்.
பஞ்சுவின் மீது எனக்கு அவ்வளவு பிடிப்பு கிடையாது. பொன்னெழில் பூத்தது புதுவானில், சின்னஞ்சிறிய வண்ணப்பறவை, காதலின் பொன் வீதியில் காலத்து பஞ்சுவைப்பிடிக்கும். ஆனால் 75-க்குப்பின் மாறிப்போனார். வித்தியாசமாக யதார்த்தம் பக்கம் மாறிக்கொண்டிருந்த தமிழர்களின் ரசனையை திரும்பவும் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், பாயும்புலி போன்றவை மூலம் மீண்டும் பழைய அடாசுகள் பக்கம் திருப்பியதில் இவர் பங்கு ரொம்ப உண்டு. தவிர, எனக்குப்பிடிக்காத (இங்குள்ள என் நண்பருக்கு பிடித்த) 'ஒருவரை' தேவைக்கதிகமாக பூஸ்ட் செய்து மேலே கொண்டுவந்ததில் இவருடைய பங்கு அதிகம். ஏ.வி.எம்., கவிதாலயா, சத்யா மூவீஸ், பாலாஜி, போன்ற கம்பெனிகளில் 'அவரை' புஷ் பண்ணி நுழைத்ததும் இவர்தான். கிட்டத்தட்ட 'அவரது' பி.ஆர்.ஓ. மாதிரி செயல்பட்டார்...

