-
அன்புள்ள வாசு,
காற்றினிலே வரும் கீதம் படத்தைப் பற்றி எழுதி அந்த நாட்களுக்கே என்னை அழைத்து சென்று விட்டீர்கள். 1976 மேயில் புயலாக அறிமுகமாகி பின் சற்றே தளர்ந்து 1977-ல் மீண்டும் வலுக் கொண்டு இளையாராஜா முன்னேறிக் கொண்டிருந்த நேரம். எங்கம்மா சபதம் போன்ற படங்களை எடுத்த விஜயபாஸ்கர் பிலிம்ஸ் இந்தப் படத்தை எடுத்தார்கள். அன்றைய நாளில் பிரபலமாக இருந்த எஸ்பி.முத்துராமன் -பஞ்சு அருணாசலம் -இளையராஜா கூட்டணியில் படம் உருவானது
படம் வருவதற்கு முன்பே பாடல்கள் வெளியாகி பிரபலம் ஆகி விட்டன. இசைத்தட்டில் ஒரு பக்கம் சித்திர செவ்வானம் பாடல் அடுத்த பக்கம் ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய். இரண்டுமே மிகப் பிரமாதம் என்ற நிலையில் ரசிக்கப்பட்டாலும் எனக்கும் என் நண்பன் ஒருவனுக்கும் ஒரு வானவில் போலே ரொம்ப ரொம்ப பிடித்துப் போனது. பஞ்சு அருணாசலம் பாடல் எழுதியிருந்தார். எனக்கு பஞ்சுவின் பாடல் இயற்றும் திறனில் மிகுந்த அவநம்பிக்கை உண்டு. கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்ததாலும் அவரே பல படங்களுக்கு கதை வசனம் எழுதியதாலும் இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் என்பதனால் அதீத சலுகை எடுத்துக் கொண்டு தானே பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார் என்பது என் எண்ணம். பாடல்களின் வரிகளை கேட்டால் நான் சொல்வது புரியும். [ஒரே ஒரு விதிவிலக்கு பொன்னெழில் பூத்தது புதுவானில் பாடல்].
ஆனால் இந்த படப் பாடல்களை கேட்கும்போது நன்றாகவே எழுதியிருக்கிறார் என்று தோன்றியது. குறிப்பாக ஒரு வானவில் போலே பாடலில் வரும் சரணம்
உனக்காகவே கனிந்தது மலைத்தோட்ட மாதுளை
உனக்காகவே மலர்ந்தது கலைக் கோவில் மல்லிகை
இனிக்கின்ற காலம் தொடராதோ
இனி எந்தன் உள்ளம் உனது
அணைக்கின்ற சொந்தம் வளராதோ; இனி
எந்தன் வாழ்வும் உனது
தொடர்கவே வளர்கவே
இது ஒரு காவியம்!
இந்த வரிகளும் சரி பாடலின் மெட்டும் சரி நம்மை எங்கோ கொண்டு செல்லும். 1977- 78 கல்வியாண்டில் மதுரை கல்லூரிகளில் பலமுறை பல காரணங்களுக்காக ஸ்ட்ரைக் நடந்தது. அதன் காரணமாக நிறைய லீவ் முதல் செமெஸ்டர் தேர்வுகளே ஜனவரியில்தான் எழுதினோம். வெளியாகும் படங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தோம். 1977 டிசம்பரில் இதே முத்துராமன்-எஸ்பி முத்துராமன் combination-ல் ஆளுக்கொரு ஆசை வெளிவந்தது.[நீங்கள் கூட அந்த படத்தின் பாடலை இந்த தொடரில் உள்படுத்தியிருந்தீர்கள். அந்தே நேரத்திலெல்லாம் இந்த பாடல்கள் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன.
1978 ஜனவரி 26 ரிலீஸ் என்று விளம்பரம் வந்து விட்டது. உங்களுக்கு நினைவிருக்கும் அதே தேதியில் நம் அந்தமான் காதலியும் வெளியானது.
நடிகர் திலகத்தின் படங்களைப் பொறுத்தவரை நான் இரண்டு செட்டுகளோடு ஓபனிங் ஷோ பார்ப்பது வழக்கம். ஒன்று பள்ளி பின் கல்லூரி என்று ஒன்றாக படித்த நண்பர்கள். இரண்டாவது செட் வீட்டருகே இருக்கும் நண்பர்கள் [அவர்களும் அதே டிகிரி முதல் வருடம் ஆனால் வேறு கல்லூரி]. ஒன்று முதல் செட்டோடு போவது இல்லையென்றால் இரண்டாவது செட்டோடு போவேன். அந்தமான் காதலியைப் பொறுத்தவரை இருவரிடமும் சொல்லி வைத்திருந்தேன். இரண்டு செட்டிலும் சொல்லி வைத்திருப்பது இரண்டு செட்டிற்கும் தெரியும். ஆனால் சொல்லி வைத்தது போல் இரண்டு செட்டுமே முதல் நாள் இரவு எனக்கு டிக்கெட் வாங்க முடியவில்லை என்று கையை விரித்து விட்டனர். டிக்கெட் கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சுடா நீதான் அவங்களிட்ட சொல்லியிருந்தியே அவங்க வாங்கியிருப்பாங்கனு நினைச்சோம். இப்படி இரண்டு செட்டும் சொல்லிவிட செம கடுப்பாகி விட்டது. ஆனால் என்ன செய்வது? தியேட்டருக்கு போய் முயற்சி பண்ணலாம்னு பார்த்தா அந்தமான் காதலி சினிப்ரியா தியேட்டரில். அங்கே பிளாக் டிக்கெட்லாம் கிடைக்காது. ஆகவே ஓபனிங் ஷோ ஆசையை துறந்து விட்டு மற்றொரு நண்பனையும் அழைத்துக் கொண்டு தங்கம் தியேட்டரில் வெளியாகியிருந்த காற்றினிலே வரும் கீதம் படம் பார்க்க போனோம். படத்தின் கதையமைப்பு பொது மக்களுக்கு ஏற்புடையதாயில்லை. ஆனாலும் எனக்கு பெரிய வருத்தம் என்னவென்றால் நான் ஆசை ஆசையாய் பார்க்க வேண்டும் என்று நினைத்த ஒரு வானவில் போல் பாடல்காட்சி வந்தபோது பாதி தியேட்டர் எழுந்து தம்மடிக்க, டீ குடிக்க என்று போய் விட்டது. இவ்வளவு நல்ல பாடலை ஏன் யாருமே ரசிக்க மாட்டேன் என்கிறார்கள் என்று வருத்தம் வந்தது. சித்திர செவ்வானம் பெரிதும் ரசிக்கப்பட்டது.
டெயில் பீஸ்: படம் முடிந்து வீட்டிற்கு வந்துவிட்டு சற்று நேரம் கழித்து வெளியே போகவேண்டிய வேலை. போய்விட்டு வந்தால் [மாலை 5.30 மணி இருக்கும்]. அம்மா சொல்கிறார்கள் " ராஜா [பக்கத்துக்கு தெரு நண்பன்] 4. 30 மணி வாக்கில் வந்திருந்தான். அந்தமான் காதலிக்கு ஈவினிங் ஷோ டிக்கெட் கிடைச்சிருக்காம். உன்னை வர சொன்னான்" என்றதும் உடனே ஓடினேன். அனால் அவன் வீட்டில் இல்லை. "யாரோ இரண்டு பேரோட வெளியே போறேன்னு சொல்லிட்டு போனான்பா" என்று அவன் அம்மா சொன்னார்கள். பக்கத்தில் பஸ் ஸ்டாப் எல்லாம் சென்று பார்த்தேன். ஆள் இல்லை. வெறுப்போ வெறுப்பு.
வீட்டிற்கு வந்தால் அங்கே வந்திருந்த மாமா [இவர் அம்மாவின் கசின் இளம் வயதுக்காரர்] சரி வா உன்னை ஒரு சினிமாவிற்கு கூட்டிப் போகிறேன் என்று சொல்லி பொங்கலுக்கு வெளியாகி சென்ட்ரலில் நடைபெற்றுக் கொண்டிருந்த மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்திற்கு போனோம். மறுநாள் நண்பனை மாலை பார்த்தபோது[மறுநாள் கல்லூரி இருந்ததால்] நீ 5.30 மணி வரைக்கும் வரலே.நாங்க பஸ் பிடிச்சு போகணுமில்லே, அதன் கிளம்பிட்டோம் என்றான். என்னிடம் நன்றாக வாங்கி கட்டிக் கொண்டான். அதன் பிறகு எப்போது அந்தமான் காதலி பார்த்தேன் என்று கேட்கிறீர்களா? ஜனவரி 26 வியாழன், 27 வெள்ளி அன்று கல்லூரி, 28 சனியன்றும் கல்லூரி மதியம் வரை. நேரே அங்கிருந்து சினிப்ரியா போய் படம் பார்த்தேன்.
இன்றைக்கு உங்கள் பதிவை படித்தவுடன் இந்த விஷயங்கள் அனைத்தும் மனதில் ஓடி வந்தன. நன்றி வாசு நன்றி!
அன்புடன் . . . .
-
திரு. வாசு சார் அவர்களுக்கு,
நீங்கள் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களை பற்றி எழுதுவதிலோ அவருடன் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது கிடைத்த அனுபவங்களை எழுதுவதிலோ ஆச்சர்யம் எதுவும் இல்லை. அதிலே ஊறித் தோய்ந்தவர் நீங்கள். ஆனால், காற்றினிலே வரும் கீதம் படத்தின் கதையை கூறியது வியப்பளிக்கிறது. நானும் ஒருமுறை அந்தப் படத்தை பார்த்துள்ளேன். என்றாலும் கதை நீங்கள் சொன்ன பிறகுதான் நினைவு வருகிறது. தங்களின் அபரிமித நினைவாற்றலுக்கு பாராட்டுக்கள்.
திரு. ரவி சார், மக்கள் திலகம் திரியில் இன்று உங்கள் பதிவை பார்த்தேன். தங்களின் பதிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
‘உள்ளம் தேடாதே என்று சொல்லுதே..’ பாடலை தரவேற்றிய திரு.எஸ்.வி.சாருக்கு நன்றி.
பாடலைக் கேட்டு ரசித்து அதற்காக நன்றி தெரிவித்த, ‘சின்னக் கண்ணன்’ என்று பெயர் இருந்தாலும் தனக்கென தனிப் பாணியுடன் கூடிய நகைச்சுவை மிளிரும் எழுத்தாற்றலில் ‘பெரிய கண்ணனாக’ திகழும் நண்பருக்கு அன்பு கலந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
//கட்டடத்துக்கு மனைப்பொருத்தம் அவசியம்
காதலுக்கு மனப்பொருத்தம் அவசியம்..
இந்த மேஸ்திரியின் (நடிகர் திலகம்) மேம்போக்கான ஆழ்பார்வை எவரும் கண்டறிய முடியாதபடி. ஆரியத்திலும் கண்...காரியத்திலும் கண்...காதலிலும் கண்.
குடையைப் பிடித்து நடந்தபடியே குயிலைப் பிடிக்கும் அழகு
சாரத்திலே ஓரத்திலே தங்கம் நடந்தால்(ள்) இங்கே இவரது ஹிருதயம் 'லப் டப்' எகிறுவதென்ன (தே... தே.. பார்த்து அட! பார்த்துங்குறேன்..விழுந்துடப் போற!)// ஒரேயடியாய் ஏன் இம்புட்டு? தினம் ஒன்னு ஒன்னாத் தந்தாக்கா சுவை பட ரசிக்கலாமே. அப்புறம் பேஜ் தேடணும்…// ஆஹா வாசு சார்..அபார அலசல் நன்றி.. மறுபடியும் பாடல் பார்த்த போது அந்தப் படமாக்கல் நடிப்பு வெகுஅழகாய் உள்சென்று பொங்க வைத்து விட்டது.. கு.பி ந. குயிலைப் பி. அழகு.. ஓய் வெரி நைஸ்.. அகெய்ன் தாங்க்ஸ்.. வேலை நாட்களில் உட்கார முடியுமா எனத் தெரியவில்லை..எனில் எல்லாவற்றையும் இட்டு விட்டேன்..தவிர ஒட்டுக்க ப் பொங்கிவருவது கொஞ்சம் அபூர்வம் எனக்கு..(உடம்பெல்லாம் டயர்டாச்சுங்க்ணா எழுதி முடிச்சு எடிட் பண்ணப் படிச்சு ப் பார்த்து கொஞ்சம் வார்த்தைகள் கூட்டிக் குறைத்து பிழை திருத்தம் செய்ய) மீண்டும் நன்றி..
//எப்படி கணக்கு பண்ணேன் பார்த்தீயளா? கணக்கு வாத்தியார் தொழிலை நன்றாகக் கத்துக் கொடுத்தார்னு இப்பவாச்சும் நம்புதா சாமி?// இல்லியே அப்ப அவங்களுக்கு 16 17 இருக்கலாம்னு நினைக்கறேன்.. பொங்கும் இளமை புசுபுசு கன்னம்.. தர்பூசணியை நீள் கீற்றாக வெகு ஒல்லியாக வெட்டி வாயில் ஒட்டவைத்தாற்போன்ற இளஞ்சிவப்பு இதழ்கள், (கண்ணா இப்படில்லாம் எழுதக் கூடாதுன்னு இருந்தயே..பி சீரியஸ்.. ஓகே சரி மனசாட்சி..கய்ஸ்.. மேற்சொன்னதை ரப்பர் போட்டு அழித்து விடவும்!) அதுவும் அந்த மெர்க்காராவில் நாடோடி டிரஸ்ஸில் கொஞ்சம் ஜாஸ்தி அழகு தான்.. முரளி சாரைக் கேக்கணும்
முரளி சார்.. நானும் தங்கம்.. நீங்களும் தங்கம்.. நீங்கள் 24 நான் 18 நான் காரட் மற்றும் தியேட்டரைச் சொன்னேன்..! அந்த ஒரு வான வில் பாட்டு எனக்கும் ரொம்பப் பிடிக்கும்..படம் சுவாரஸ்யமான படம் தான்..எக்ஸெப்ட் அந்த தீப்பெட்டிப் ப்ளேன் க்ளைமாக்ஸ்.. அந்தமான் காதலி மூன்று தடவை பார்த்தீர்களா.. மதுரைக் கல்லூரியா. நான் எஸ்.என். காலேஜ் காலெடுத்து வைத்தது இரண்டு வருடங்கள் கழித்து. ஜூலை மாதத்தில்.
//எனக்கு படிக்கத்தான் புடிக்கும். எழுதத் தெரியாது.// கல் நாயக்ணா.. இதானே வேணாங்கறது..எழுதுங்காணும்.. அல்லது பிடிச் பாட் இதுன்னு சொல்லிகினு இந்தாபான்னு கோடு கொடுத்தீங்க்ணா நாங்க சின்னதா ஜல்லி அடிச்சு ரோடு போடுவோமில்ல..
//பாடலைக் கேட்டு ரசித்து அதற்காக நன்றி தெரிவித்த,// கலைவேந்தன் சார்..தங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.. நீங்கள் வேறு பாடல் எதுவும் கொண்டு வரவில்லையே..ஏ ஏஏன்..
-
முரளி ஜி,
சரியாக சொன்னீர்கள். பஞ்சு ஒரு பாடலாசிரியர் அல்ல. ஏதோ தானும் எழுத முடியும் , கவிஞரிடம் இருந்ததால் தனக்கும் கவிதை நயம் உண்டு என்ற எண்ணத்தில் எழுத நினைத்திருப்பார் என்று நினைக்கிறேன். எல்லாம் ஒரு மழலை கவிஞர் நடையில் தான் இருக்கும். பொன்னெழிலுடன் நாம் ஒன்றியதற்கு இசையும், குரலும், நாயக நாயகியும் 80% பாடல் வரிகள் 20% . இதுவே கவியரசரோ வாலி ஐயாவோவாக இருந்தால் பாடல் வேறு ஒரு லெவலுக்கு சென்றிருக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. ஆம் இளையராஜாவிடம் சுதந்திரம் எடுத்துக்கொண்டு நிறைய எழுதி நம் உயிரை வாங்கினார்.
-
சி.க வணக்கம் நலம் தானே ..
-
நலமே ராஜேஷ்..முழுக்க குணமடைய அடுத்த வாரம் ஆகும்..!
-
முழுவதுமாக விரைவில் குணமடைய வேண்டுகின்றேன்
-
Ck - புதிய அணுகுமுறை , புதிய பாடல்கள் , புது புது கருத்துக்கள் , உங்களுக்கென்றே பிறந்த நகைச்சுவை கலந்த நடை , கிண்டல்கள் - அசத்துங்கள் - கீழ் கண்ட வரிகளை எப்படி ஒவ்வொரு தமிழனும் ரசிப்பானோ அப்படித்தான் , தமிழை புரிந்துகொள்ளும் ஒவ்வருவரும் உங்கள் பாடல் கலந்த பதிவுகளை ரசிப்பார்கள் - உத்தர்கண்ட் வெள்ளம் போல பொங்கும் பூம்புனலாக வரும் உங்கள் பதிவுகளை யாரால் அணை போட்டு தடுக்க முடியும் ???
தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாமுன்
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாமுன்
தாளையளித்திட வேணுமெனத் துதிபாடருணைக்கிரி நாதனழைத்திட
தயவுடன் இசைந்து அருள்மழை பொழிந்து
முத்தைத்தரு பத்தித் திருநகையென
முதலடி உரைத்த தழைத்த கருணையை
நினைந்து நினைந்து கவிமலர் தொடுத்த
தமிழ்மாலை தனைச் சூடுவான்------------
-
வாசு இப்படியே எழுதிக்கொண்டு போனால் , நாங்கள் எல்லாம் இந்த திரியில் பதிவிடுவதா , வேண்டாமா ? என்று தான் எங்கள் ( என்னுடைய ) standard க்கு வந்து பதிவுகள் போடுவீர்கள் என்று தெரியவில்லை - எழுத வேண்டிய எழுத்துக்கள் எல்லாம் உங்களிடம் வசப்பட்டு வெளி வராமல் துவண்டு போகின்றன ; CK என்னும் சுனாமியினால் அடித்து செல்ல படுகின்றன - பொங்கி வரும் பூம்புனல் மூலம் ஊதி தள்ள படுகின்றன - கல்நாயக் மூலம் dislike ஆகின்றது - ராஜேஷ் மூலம் இரவில் வந்து , பகலில் மறைந்து விடுகின்றது - கிருஷ்ணாஜி மூலம் காற்றில் கரைந்து விடுகின்றது - வினோத் சார் மூலம் பல பல ஆவணங்களினால் - ஆடி போய் விடுக்கின்றது ---
வருத்தத்துடன்
ரவி
-
ரவி சார்
வருத்த படாதீர்கள் . உங்கள் ரசனைகளை நாங்களும் விரும்புகிறோம் .உங்களை மகிழ்விக்க சில நிழற்படங்கள் . அந்த படங்களை வைத்து உங்களின் கற்பனை வளத்தில் பதிவுகளை போடவும் .