http://i58.tinypic.com/zl6682.jpg
Printable View
என்னை இளம் வயதில் செதுக்கிய எம்.ஜி.ஆர்
எனது 5 வது வயதில் கமுதியில் நான் பார்த்த முதல் படம் பல்லாண்டு வாழ்க. அன்றைக்கு அந்த படத்தில் என் மனதில் பதிந்த 3 பாடல்கள்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward.
இந்த 2 பாடல்கள் திருவள்ளுவர் எழுதியது என்று எனக்கு அந்த 5 வயதில் தெரியாது. அது எம்.ஜி.ஆர் சொன்னதாகத்தான் எனது மனதில் பதிந்தது.
புதியதோர் உலகம் செய்வோம் -
கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் (புதிய)
பொதுஉடைமைக்கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம் (புதிய)
இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனதென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம் (புதிய)
உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள்தனி எனும் மனிதரைச் சிரிப்போம் (புதிய)
இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம் (புதிய)
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தது, ரசித்து என் உள்ளத்தில் 5 வயதில் நிலை நின்ற பாடல்.
இது அந்த வயதில் பாரதிதாசன் எழுதியது என்று எனக்கு தெரியாது. எம்.ஜி.ஆர் சொன்னார் அதைப்போல் நாம் வாழவேண்டும், வளர வேண்டும் என்று என் மனதில் பதிந்து விட்டது. இளம் வயதில் என் மனதில் பதிந்த இந்த கருத்துக்கள் போன்று, இலட்சக்கணக்கான குழந்தைகள், இளைஞர்கள் மனதில் அவர் நல்ல விதைகளை விதைத்தார். என்ன செதுக்கிய எம்.ஜி.ஆர் பாடல்களை இத்துடன் இணைத்துள்ளேன்.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்று சொன்னபடி வாழ்ந்த மகான் எம்.ஜி.ஆர் அவர்கள்.
தனது அனுபவங்களை மற்றவர்கள் பின்பற்றி நடக்கும் வகையில் புத்தகமாக எழுதுவது ஒரு வகை, ஆனால் வாழும் போது வள்ளாக, மகானாக, நேர்மையாக வாழ்ந்து, வாழ்ந்த பின் ஒருவரைப்பற்றி பல்வேறு புத்தகங்கள் வந்தால் அவரது வாழ்வு எத்தகைய ஒரு அருமையான வழிகாட்டியாக மக்களுக்கு இருந்திருக்கிறது என்பதற்கு ஒரு உதராணமாக இருக்கும். எம்.ஜி.ஆர் எழுதிய நான் ஏன் பிறந்தேன் என்ற பத்திரிக்கை தொடரை படித்ததை தவிர அவர் எழுதிய புத்தகத்தை நான் பார்க்கவில்லை, ஆனால் அவரைப்பற்றி மற்றவர்கள் எழுதிய நூற்றுக்கணக்கான புத்தகங்களை படித்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒர் அனுபவ பெட்டகம், வாழ்க்கைப்பாடம். அந்த புத்தகங்கள் போதும் எம்.ஜி.ஆரது வாழ்வின் மகத்துவம் பற்றி, உன்னதம் பற்றி அறிந்து கொள்ள, நமது வாழ்வை செப்பனிட அது ஒர் கால கண்ணாடி.
படித்தவர்கள் பக்குவப்பட பகவத்கீதை, பைபிள் மற்றும் குரான். ஆனால் பாமரரர்கள் பக்குவப்பட எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து. ஆம் வாத்தியார் என்று கோடிக்கணக்கான தமிழர்கள் அழைத்த ஒரு அறிவார்ந்த பெட்டகமாக திகழ்ந்து, சினிமாவால் சீர் திருத்தம் செய்யமுடியும், சினிமாவால் ஒரு மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று சாதித்து காட்டி, தர்மத்தின் வாழ்வை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்; இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று லட்சோப லட்சம் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, நல்வழிப்படுத்திய ஆசான் எம்.ஜி.ஆர்.
18 வயதில் பாதை மாறும் இளைஞர்களை, கொள்கையோடு வாழ் என்று இலட்சியத்தை ஆழ் மனதில் விதைத்த உன்னத தலைவன் எம்.ஜி.ஆர். அப்படி ஒருவனாக உருவாக்கப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்ளவதில் நான் பெறுமை அடைகிறேன்.
இந்தியா மிக வேகமாக முன்னேற வழி என்ன என்ற கேள்விக்கு எம்.ஜி.ஆர் சொல்கிறார் – முதலாளித்துவம், சுயநலம், பதவிப்பித்து, சாதிவெறி, பணபலம், லஞ்சம் முதலிய தடைக்கற்களை நீக்க வேண்டும் என்று தெளிவாக தீர்க்கமாக கூறினார் எம்.ஜி.ஆர். என்ன ஒரு தேசியப்பார்வை அவருக்கு.
அப்படிப்பட்ட ஒரு நல்ல சமுதாயம் உருவாக என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, தமிழ் சமுதாயம் ஒரு அறிவார்ந்த இந்திய சமுதாயமாக மாற வேண்டும் என்று திட்டங்களை தீட்டினார். அதாவது, மாணவர்கள் பள்ளியில் இடை நிற்றலை தமிழகத்தில் குறைக்க வேண்டுமென்றால், பள்ளியில் சத்துணவு போடவேண்டும், அதற்காக பிச்சை எடுத்தாவது அந்த திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று அதிகாரிகளின் எதிர்ப்பை, மற்றவர்களின் எள்ளி நகையாடலை எதிர்த்து புறந்தள்ளி, வெற்றிகரமாக நிறைவேற்றினார். இன்றைக்கு உலகம் போற்றும், ஐக்கிய நாடுகள். பின்பற்றும் திட்டமாக உருவாக்கினார் அதனால் தமிழக பள்ளிகளில் இடைநிற்றல் குறைந்தது.
இடைநின்றவர்களை தனது சினிமாவால் சமுதாயத்திற்கு ஏற்ற நல்ல மனிதனாக மாற்றினார். அறிவொளி இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றி படிக்க வாய்ப்பு கிடைக்காத பெரியோர்களையும், தாய் மார்களையும் கற்றவர்களாக மாற்றினார். 1980களிலே தமிழகத்திலே நடைபெற்ற அறிவுப்புரட்சியான அறிவொளி இயக்கத்திலே பணியாற்றினேன் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
அதுமட்டுமல்ல, இன்றைக்கு 2005ல் மத்திய அரசாங்கம் நியமித்த தேசிய அறிவுசார் கமிஷன், நமது இந்தியாவின் மேற்படிப்பு படிப்போர் சதவீகிதத்தை 2020க்குள் 20 சகதவீகதமாக மாற்றவேண்டுமென்றால், அதற்கு 1500 பல்கலைக்கழகங்கள் உருவாக வேண்டும் என்ற கண்க்கிட்டுள்ளார்கள். ஆனால் 1980களிலே, 25 வருடங்களுக்கு முன்பாக அவர் விதைத்த விதை இன்றைக்கு ஒவ்வொரு தமிழ் குடும்பத்திலும் ஒரு என்ஜினியரை உருவாக்க காரணம் யார் என்றால், அது எம்.ஜி.ஆர்தான். அவர் உண்மையிலேயே, அறிவுப்புரட்சிக்கு வித்திட்டவர் என்றால், தொலைநோக்கு பார்வை கொண்ட எம்.ஜி.ஆர்தான்.
1962 இந்தியா – சீன போரின் போது முதல் யுத்த நிதியை அளித்து தனது தேசியப்பற்றை உணர்த்தியவர் எம்.ஜி.ஆர். தனுஷ்கோடி புயலின் போது அரசின் நிதியுதவியை விட முன்னால் சென்றது எம்.ஜி.ஆர் தானே. நதி நீர் என்பது தேசிய சொத்து, இதில் என்ன பங்காளி சண்டை என்று குண்டுராவ் வீட்டுக்கு சென்று தமிழகத்திற்கு தண்ணீர் கொடுத்தால் தான் உன் வீட்டில் தண்ணீர் கொடுப்பேன், என்று சட்டத்தால் முடிக்க முடியாததை தனது தலைமைப்பண்பால், தனது அன்பால் செய்து காட்டினாரே, அவரல்லவா எம்.ஜி.ஆர்.
தமிழகம் வறட்சியை சந்தித்தபோது, ஒரு நாள் காலை முதல் மாலை வரை உட்கார்ந்த இடத்தை விட்டு ஒரு நிமிடம் கூட எங்கும் செல்லாமல் உண்ணாவிரதம் இருந்து அரிசியை கேட்டு பெற்று அரிசிப்பஞ்சம் தீர்த்தாரே அவர் தான் எம்.ஜி.ஆர்.
தெலுங்கு கங்கை திட்டம் கொண்டு வந்து இன்றைக்கும் இணக்கமாக, பிரச்சனை அதிகம் இல்லாமல் தண்ணீர் வரவழைத்தாரே அவர் அல்லவா எம்.ஜி.ஆர்.
இலங்கை தமிழர்களினின் வாழ்க்கைக்கு ஒர் ஆதாரமாக இருந்து, அனைத்து வழிகளிலும், அன்றைய பாரத பிரதமர் இந்திராவுடன் சேர்ந்து இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்தி வலிமை சேர்த்தாரே, அவரல்லவா எம்.ஜி.ஆர். இன்றைக்கும் ஒவ்வொரு தமிழ்ர்களும் தலைநிமிர்ந்து நடக்க காரணமாக ஆதார சுருதியாக, அடிப்படையாக இருந்தவர் அல்லவா எம்.ஜி.ஆர்.
ஒரு மாநில முதலமைச்சர் எப்படி ஜனநாயக நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று செயலில் நடத்திக்காட்டியவர் எம்.ஜி.ஆர். ஒரு மாநில முதலமைச்சராக தொடர்ந்து மூன்று முறை சாகும்வரை முதல்வராக இருந்து மறைந்த எம்.ஜி.ஆருக்கு தான் இந்தியாவே எழுந்து நின்று அஞ்சலி செலுத்தியது. மறைந்த பின் இந்தியா பாரத ரத்னா விருது கொடுத்து கவுரவப்படுத்தியது. வாழ்ந்து மறைந்து பின்பும், இன்றைக்கும் தமிழகத்தில் அரசியலை தீர்மானிக்கிற சக்தியாக, இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரே தலைவர் புரட்சித்தலைவர்தான்.
இந்தியாவில் மட்டுமல்ல, அவரது திறைமையையும், மனிதப்பண்பையும் மதித்த பல்வேறு உலக நாடுகள் கவுரவித்தது என்றால் அவர் எம்.ஜி.ஆர் ஒருவர்தான். எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் எம்.ஜி.ஆர் வாழ்கிறார்.
25 ஆண்டுகள் மட்டுமல்ல, எப்படி 2200 ஆண்டுகள் கழித்தும் திருக்குறள் உலக பொது மறை நூலாக இருக்கிறதோ, அப்படி பல்லாயிறம் ஆண்டுகள் கழித்தும் எம்.ஜி.ஆர் தமிழர்களின் வாழ்வில் ஒரு சரித்திரமாக மாறி நம்முடன் இருப்பார். எப்படி காந்திஅடிகளுக்கு 70 நாடுகளில் சிலை அமைத்து போற்றப்படுகிறாரோ, அவருக்கு அடுத்து எம்.ஜி.ஆரின் புகழ் உலகம் முழவதும் ஒங்கி ஒலிக்கும்.
எம்.ஜி.ஆர் கனவை நனவாக்க வேண்டும் என்றால். ஒர் அறிவார்ந்த தமிழ் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கையும், தன்னை அறிந்து தனது தனித்தன்மையை ஒவ்வொரு இளைஞர்களும் வெளிக்கொணர வேண்டும். இளைஞர்களின் மனதில் லட்சிய விதையை விதைக்க வேண்டும். நம்பிக்கையுடைய, தைரியமான, நேர்மையான, விவேகமான, வீரமான தமிழ் இளைஞர்களை உருவாக்கி, அவர்களுக்கு தமிழ்பற்றையும், தேசப்பற்றையும் ஊட்டி வளர்த்து, என்னால் முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டி, தமிழ்நாடு வளர்ந்தால் தான் இந்த தேசம் வளரும் என்ற நம்பிக்கையோடு, தனி மனிதனை விட இந்த நாடு பெரியது என்ற எண்ணத்துடன் இன்றைய இளைஞர்கள் அறிவார்ந்த முறையில் வளர நாம் பாடுபட வேண்டும்.
எம்.ஜி.ஆர் அவர்கள் சொன்னபடி, ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, அனுபவம் என்கிற நெருப்பில் போட்டு, தெளிவு என்கிற சம்மட்டியால் அடிக்கப்பெற்று, பகுத்தறிவு என்ற ஆயுதமாக வெளிவந்தால், அந்த ஆயுதம் என்ற இதயம் நிச்சயமாக எதையும் தாங்கி விடும்.
நாடு வளம் பெற வேண்டும், இல்லாமை அகல வேண்டும், சோம்பல் விலக வேண்டும், உழைத்து வாழ வேண்டும், உழைப்பவரே உயர்ந்தவர் என்ற எண்ணம் வேண்டும், மேடு பள்ளம் இல்லா சமதர்ம சமுதாயம் அமைய வேண்டும், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். விவசாயம் மீண்டும் செழிக்க கூடிய வழிமுறை செய்யப்பட வேண்டும், தமிழக நதிகளை இணைத்து நீர் வழிச்சாலை அமைத்து எம்.ஜி.ஆர் சொன்னபடி என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை நீட்ட வேண்டும் வெளிநாட்டில் என்ற கனவை நனவாக்க மட்டுமல்ல, தண்ணீரும், மின்சாரமும் தன்னிறைவு பெற்ற நாடாக தமிழகத்தை மாற்ற வேண்டும். தொழில் வளர ஏற்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி, எரிசக்தி சுதந்திரம் பெற்று, நமது நாட்டில் உற்பத்தியாகும் பொருள்கள் உலக தரத்தோடு உருவாக்க நமது மக்கள், இளைஞர்கள் தங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தி உழைத்து உயரக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். உலகத்தில் உள்ள யாருக்கும் தமிழர்கள் அறிவால், தன்மையால், அன்பால், நேர்மையால், உழைப்பால், அடுத்தவர்களை மதிக்கும் பண்பால், அமைதியை விரும்புவதில், விவேகத்தால், மொழியால், ஜனநாயகத்தை பேணிக்காப்பதில், நாட்டின் வளர்ச்சியை, லஞ்சம் இலாவண்யம் இல்லா சமூகத்தை, குடிப்பழக்கத்திற்கு ஆளாகாத ஒரு சமூகத்தை, மேடு பள்ளம் இல்லா சமூகத்தை, நாம் யாரும் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம் என்ற எண்ணமில்லா சமூகத்தை, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றமில்லா சமூகத்தை அமைத்து, தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்ற சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும்.
இந்த குணங்களை கொண்ட இளைஞர்களை தலைவர்களாக உருவாக்க எம்.ஜி.ஆரை பின்பற்றிய பெற்றோர்கள், எம்.ஜீ.ஆர் ரசிகர்கள் பாடுபடவேண்டும். அப்படி பட்ட சூழ்நிலையை நாம் அனைவரும் உருவாக்க பாடுபட்டால், எம்.ஜி.ஆர் கண்ட கனவு கண்டிப்பாக நனவாகும்.
உங்கள் அனைவருக்கும் எனது எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
வெ. பொன்ராஜ்
17 ஜனவரி 2015
" இயேசு கூட “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும்” என்று கூறியுள்ளார். எனவே அப்படிப்பட்டவர்களைக் கேளுங்கள் தரப்படும்.
எம்.ஜி.ஆர். இப்பொழுது மட்டுமல்ல; ஏற்கெனவே வேறு பல காரியங்களுக்குத் தாராளமாக அளித்துள்ளார்.
அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள் இப்படிப்பட்ட காரியங்களில் அளிப்பதற்குப் போட்டி மனப்பான்மை வளரவேண்டும் என்று. இதை நானும் வரவேற்கிறேன். சட்டமன்றத் தலைவர் அவர்கள் பேசும்போது, ‘அப்படி ஏற்படும் போட்டியிலும் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்’ என்று சொன்னார். இதை நான் வரவேற்கிறேன்.
இப்படி அளிக்கப்பட்ட தொகையைப் பற்றி ‘விளம்பரத்துக்காக அளித்தார் என்று இன்று அல்ல நாளை கூறுவர் சிலர். அப்படிப் புகழுக்காக அளிக்கப்படுகிறது என்றாலும் அது ஒன்றும் தவறில்லை. தமிழர்கள் தங்கள் வாழ்வில் ஈதல் இசைப்பட வாழ்தல் என்று கூறியிருக்கிறார்கள். ஈதல் மூலம் அவன் இசைபட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சர் அவர்கள், ‘இப்படிப்பட்ட விழாவில் கட்சி எதுவும் கிடையாது’ என்று கூறினார். எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். அப்படியிருப்பினும் நிதியமைச்சர் அவர்கள் கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இவ்விழாவில் கலந்து கொண்டு அவ்வை இல்லத்தின் வளர்ச்சிக்கு நல்ல பல வழிவகைகள் கூறியுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
எம்.ஜி.ஆர் அவர்களின் உடல் மட்டும் அல்ல உள்ளம் கூட தங்கம் போன்றதாகும். தங்கம் உருக்கி வார்க்கப்பட்டு அடிதெடுக்கப்பட்ட பின்னரே பளபளப்பைப் பெறுகிறது. எம்.ஜி.ஆர் அவர்களும் வாழ்வில் வறுமையால் வாட்டப்பட்டு உருக்கி எடுக்கப்பட்டவர்.
ஆனால் தம்பி எம்ஜியார் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது இந்தத் தொகை தன்னிடமே இருந்தால் பின்னால் பயன்படுமே என்றும் நினைக்காது குறைவின்றிக் கொடுத்து வருகிறார். ரூ.10 லட்சம் சம்பாதிப்பவர் ஒரு லட்சத்தில் மண்டபம் கட்டுவதை நாம் பார்க்கிறோம். கட்ட ஆரம்பிக்கும்போதே பணம் சம்பாதிப்பவர்களையும் கூட நாம் சந்திக்கிறோம்.
அப்படியில்லாது எம்ஜியார் காத்திருக்கிறார் பணத்தை நோக்கி. எங்கே வருகிறது எங்கே வருகிறது என்று வழி பார்த்திருக்கிறார். வந்ததும் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று வழங்குகிறார். இந்த அனாதைகள் இல்லத்திற்கு அவ்வை இல்லம் என்று பெயர் இருப்பதை மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும்."
( சென்னை அவ்வை இல்லத்திற்கு 30 - 1- 1961 அன்று மக்கள் திலகம் எம்ஜியார் ரூபாய் 30,000 நிதி வழங்கிய விழாவில் அண்ணா .)
இன்று என் மதிப்பிற்குரிய தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாள்.....மதுரையில் கோலாகலம்.. எங்கு திரும்பினாலும் டி.எம்.எஸ். அவர்களின் குரலில் எம்.ஜி.ஆர்.பட பாடல்கள் தான்....
ஒரு பக்கம்...."நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்" என்ற கம்பீரமான பாடல்,,..கொஞ்சம் தள்ளிப்போனால்,,.."புத்தன், ஏசு, காந்தி , பிறந்தது, என்ற பாடல்,,....நான்,,,டூ வீலரில் சென்றுகொண்டே இருக்கிறேன்.. ....அடுத்த சாலையில்,.."திருடாதே....பாப்பா , திருடாதே."... ஒலித்தது....தொடர்ந்து ."வாங்கய்யா...வாத்தியாரய்யா" ....... அதற்கடுத்த் இடத்தில், நான் நின்றுவிட்டேன்...என் மனதை உருக்கிய பாடல், நான் அடிக்கடி விரும்பி கேட்கும் பாடல்...,"தரைமேல் பிறக்கவைத்தான் " .. என்ற இந்த பாடலை..எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாது....வீட்டில் டி.வி. சௌண்டுக்கும், , ரோட்டில் 8 ஸ்பீக்கர் கொண்ட பாக்ஸ் சௌண்டு கேட்கும்போது எப்படி இருக்கும் என்பதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.... பாடல் கேட்டு முடிந்தபின் இல்லம் திரும்பினேன்.....S.S.Ramakrishnan,
எங்கள் தலைமுறை மட்டுமல்ல எதிர்கால தலைமுறையும் போற்றி வணங்கும் புகழ் கொண்ட எம் தலைவா உங்கள் பிறந்த தினத்தில் வணங்கி மகிழ்கின்றோம்.
எம்.ஜி.ஆரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்
0
ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் தனது பெயரை எம்.ஜி.ராம்சந்தர் என்றே எழுதிவந்தார். இந்தப் பெயர் வட இந்தியர் பெயரைப் போல் இருக்கிறது எம்.ஜி.ராமச்சந்திரன் என மாற்றிக் கொள்ளுங்கள் என நடிப்பிசைத் திலகம் கே.ஆர்.ராமசாமி யோசனை கூறியிருக்கிறார் , அதன் பிறகே எம்.ஜி.ஆர் தனது பெயரை எம்.ஜி.ராமச்சந்திரன் என மாற்றிக் கொண்டார்.
0
சக்கரவத்தித் திருமகள் படத்தில் பாட்டுக் கோட்டையார் எழுதிய பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது என்ற பாடலில் இடம்பெற்ற வரிகளை
எம்.ஜி.ஆர் அடிக்கடி சிலாகித்துக் கொள்வாராம்.
வாழ்வின் கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத் தேடிப் பூட்டுது - ஆனால்
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது
0
"வசதியும் புகழும் உள்ள பொழுது வராதவர்களெல்லாம் வருவார்கள் நம்மிடம் வரவு இல்லையென்றால் அவர்கள் வரவும் இல்லை என்றாகி விடும் . ஒருவன் கஷ்டப் படும் பொழுது தேடிப் போய் உதவி செய்கின்ற பெருங்குணம் ராமச்சந்திரனிடம் இருக்கிறது " - என்.எஸ்.கிருஷ்ணன்
0
ஊருக்கு உழைப்பவன் படத்தில் நாகேஷ் நடிப்பதாகத் தான் இருந்தது . ஆனால் அவர் கால்ஷீட் கிடைக்கவில்லை , உடனே எம்.ஜி.ஆர் தேங்காய் சீன்வாசனை நடிக்க வைத்தார் . அந்தப் படத்திற்குப் பிறகு நிறைய படங்களில் தேங்காய் சீனிவாசனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
பொங்கலன்று எம்.ஜி.ஆர் வீட்டிற்குச் சென்ற முத்துலிங்கத்திற்கு ஊருக்கு உழைப்பவன் படத்திற்காக நீங்கள் எழுதப் போகும் பாடலுக்காக வீனஸ் பிக்ஸர்ஸ் உங்களுக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறி தனது 1000 ரூபாயை எடுத்துக் கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
0
எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் கூட எடுக்காத பாலாஜிக்குக் கூட வருடம் பிறந்தால் 100 ரூபாயும் பொங்கலுக்கு கதர் வேட்டியும் சட்டையும் அளிப்பாராம் எம்.ஜி.ஆர். அந்நேரம் பாலாஜியிடம் "ஏம்பா பணத்தை இங்க வாங்கி அங்க(சிவாஜியிடம்) கொடுக்குற" என்று தமாஷாகப் பேசுவாராம் எம்.ஜி.ஆர்
0
எம்.ஜி.ஆர். வாலியிடம் நீங்கள் எழுதிக்கொடுத்த வரிகள் எல்லாம் என் வாழ்வில் பலித்து விட்டது. ஆனால் இந்த ஒரு வரிமட்டும் பலிக்கவில்லை என்று வருத்தமாகச் சொல்வாராம்.
எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்
0
தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் ஒரு படக் கதையை எம்.ஜி.ஆருக்காக எழுதினார்.ஆனால் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு திரும்பி விட்டமையால் இந்தப் படத்தில் நடிக்கவில்லை.சிறிது காலம் கழித்து இநதக் கதை படமாகும் பொழுது ரஜினிக்கு அதில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அந்தப் படம் தான் ராணுவ வீரன்.
0
சிவாஜி நடித்த பைலட் பிரேம்நாத் படக்காட்சி ஒன்றை இலங்கை கண்டி நகரில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் படமெடுத்திருக்கிறார்கள். பைலட் பிரேம்நாத் படத்தின் வசனகர்த்தா ஆரூர்தாஸ் கண்டியிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக்கொண்டு சென்னை திரும்பியதும் எம்.ஜி.ஆருக்குக் கொடுத்திருக்கிறார்.
தான் பிறந்த மண்ணைக் கையில் வாங்கிய எம்.ஜி.ஆர் கண்ணில் ஒற்றிக் கொண்டு வாயிலும் சிறிது அள்ளிப் போட்டுக்கொண்டாராம்.