Originally Posted by
vasudevan31355
அன்பு நண்பர்களுக்கு
ஒழுங்காகப் பதிவு போட்டுக் கொண்டிருப்பவர்களை கெடுப்பதற்கென்றே ஒருவர் கங்கணம் கட்டி கொண்டிருப்பதாக தெரிகிறது. சுதந்திரமாக பதிவுகள் இட வேண்டும் என்றுதான் அன்பு பம்மலார் அவர்கள் இந்த திரியைத் தொடங்கி தற்போது இந்தத் திரி சாதனை சிகரங்களை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. செவ்வனே என்று பதிவு போடுபவர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று கருமமே கண்ணாக தங்கள் பணியை யாருக்கும் தொந்தரவு தராமல் செய்து வருகிறோம். பதிவிடுவது எனபது சாதாரண விஷயமல்ல. நிறைய கால நேரங்களை விரயம் செய்து, பல உடல் உபாதைகளைக் கூட பொருட்படுத்தாமல் நடிகர் திலகத்தின்பால் கொண்ட பேரன்பினால் குடும்பத்தைக் கூட இரண்டாம் பட்சமாக வைத்துதான் பதிவுகள் இடுகிறோம். அவரவர்கள் தங்களால் முடிந்த பதிவுகளை மிகுந்த சிரமங்களுக்கிடையில் தான் அளித்து வருகிறோம். எல்லோருமே பதிவுகளை அளித்து விட முடியாது. அவரவர்களுக்கு ஆயிரம் வேலைகள். ஒரு சிலரால்தான் அது முடிகிறது. ஆனால் அதையும் கெடுப்பது போன்ற தோரணையில் இங்கும் வந்து சிலர் கெடுக்க நினைப்பது தெளிவாகப் புரிகிறது. தானும் உருப்படியாக எந்தப் பதிவையும் அளிப்பதில்லை.. ஒழுங்காகப் பதிவிடுபவர்களையும் நக்கல் நையாண்டி செய்து வேதனைப்பட வைப்பதே இவர்களுக்கு வாடிக்கையாகிப் போய் விட்டது. பதிவிடுபவர்கள் இங்கு யாரும் பொன்னுக்கோ, பொருளுக்கோ, பணத்திற்கோ ஆசைப்பட்டு இங்கே பதிவிடவில்லை. பதிவிடுபவர்கள் யாருமே தங்கள் பதிவுக்கான கருத்துக்களை எதிர்பார்ப்பது நியாயமே! அது போல ஒருவர் பதிவை இடும் போது அவரை பாராட்டுவதும், நன்றி தெரிவிப்பதும் ஒரு சரியான நாகரீகமே! யாரும் இங்கு பாராட்டுகளுக்கு ஏங்கிக்கொண்டு நிற்கவில்லை. பிஸ்கட்டுகளுக்காக காத்துக் கிடக்கும் நாய்க் கூட்டமும் அல்ல. சிலர் இதை மிக கேலி செய்து வருவது வேதனைக்குரியது. வருத்தத்திற்குரியது. நிச்சயமாக சேவை மனப்பான்மையுடன்தான் நாங்கள் பதிவுகள் அளித்து வருகிறோம். நாங்கள் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சுதந்திரமாக பதிவுகள் அளிக்கத்தான் இந்தத் திரியை தொடங்கினோம். அதன் வளர்ச்சி பொறுக்க முடியாமல் இங்கேயும் வந்து சிலர் கெடுக்க முயற்சி செய்வதாகத் தெரிகிறது. ஒருநாள் உட்கார்ந்து இப்படிப்பட்டவர்கள் பதிவுகள் இட்டுப் பார்க்கட்டும். அப்போது தெரியும் அருமை! சும்மா பொழுது போக்கிற்காக உட்கார்ந்து அனைத்தையும் கெடுத்துக் கொண்டிருக்க பிறவி எடுத்தவர்கள் போல தெரிகிறது. நான் ஆரம்பத்திலேயே சிலரை இந்தத் திரியில் வரவேண்டாம் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தேன். 'உங்களுக்கும், இதற்கும் சரிப்பட்டு வராது ... உங்கள் கருத்துகளுக்கு அந்தத் திரி இருக்கிறது... இனி நீங்கள் discussion-களை எந்தத் தடையுமின்றி அங்கு தொடரலாம்" என்றும் கூறினேன். வரக்கூடாது என்று சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை என்பது எனக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனால் இரு திரிகளின் நலம் கருதிதான் அவ்வாறு கூறினேன். அப்போது சம்மதித்து விட்டு அங்கேயும் ஒன்றும் செய்யாமல் இங்கேயும் வந்து கெடுக்க நினைப்பது சரியல்ல என்பது என் தாழ்மையான கருத்து. நடிகர் திலகம் திரி என்று ஒரே பாதையில் பயணித்த திரியை இரண்டாகப் பிரித்து பிளவுகளையும், பேதங்களையும் உருவாக்கிய இந்த புண்ணியவான்களுக்கு இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்ற நினைப்பு இருக்கிறதோ தெரியவில்லை. இப்போதுதான் உண்மையிலேயே சந்தேகம் வருகிறது இந்த மேட்டுக்குடி பெருமகன்கள் நடிகர் திலகத்தின் புகழ் பாட வந்தார்களா அல்லது கெடுக்க வந்தார்களா என்று. நடிகர் திலகத்தையே உயிர் மூச்சென நினைத்து வாழும் எங்களை 'அனுகூல சத்ரு' என்று கூறிய இந்த கெட்ட கலக புத்தி படைத்த நாரத அதிமேதாவிகள் தானும் கெட்டு மற்றவர்களையும் புண்படுத்துவதில் பலே ஆசாமிகளோ! பதிவிடுபவர்களையும், பாராட்டுபவர்களையும் நக்கல் நையாண்டி செய்வதை விட்டு விட்டு இனியாவது உருப்படும் வழியை இவர்கள் பார்க்கட்டும். தப்பும் தவறுமில்லாமல் ஒரே ஒரு பதிவை ஒழுங்காக இடட்டும். இப்படிப்பட்ட புண்ணியவான்கள் செய்கையினால் பதிவுகள் இடும் என்னைப் போன்றோர் பதிவுகள் இட மறு யோசனை செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் நிச்சயம் நஷ்டம் எங்களுக்கல்ல. இனி அந்தத் திரியைக் கெடுத்த புண்ணியவான்களே இந்தத் திரியைக் கெடுத்ததற்கும் காரணகர்த்தா ஆகிறார்கள். திரியில் நாங்கள் பதிவுகள் அளிக்காமல் போகும் துரதிருஷ்டம் நேர்ந்தால் கண்டிப்பாக அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்பதை அருமை ஹப்பர்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வாய் கிழியப் பேசும் இந்த ஜாம்பவான்கள் இனி இந்தத் திரியில் ஆய்வுக்கட்டுரைகள், ஆவணப் பொக்கிஷங்கள், வீடியோக் காட்சிகள், புகைப்பட ஸ்டில்கள், அப்டேட் நிகழ்வுகள், திரைப்பட விழாக்கள், தொலைக்காட்சி தலைவர் நிகழ்ச்சிகள், உடனுக்குடனான பத்திரிகை செய்திகள் என்று அனைத்துப் பதிவுகளையும் அனுதினமும் வழங்குவார்கள் என்று நம்புகிறேன். இந்தத் திரியையும் கெடுத்து குட்டிச் சுவராக்குவதில் வெற்றி அவர்களுக்கே! யார் யாரெல்லாம் புதிதாக உள்ளே நுழைந்து எல்லாவற்றையும் கெடுத்து பிரிவினைகளை உண்டு பண்ணி குட்டிச்சுவராக்கினார்கள் என்று அவரவர்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். இது வரை இந்த விஷயத்தில் வாய் திறக்காத நான் இப்போது பகிரங்கமாகவே இப்பதிவின் மூலம் என் எண்ணங்களை சொல்லி விட்டேன். மறுபடியும் சொல்கிறேன். இதனால் பதிவிடும் எங்களுக்கு பதிவிட முடியாமால் போனால் எவ்வித நஷ்டமுமில்லை.
வருத்தத்துடன்,
வாசுதேவன்.