மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு படம் - பிரதி மிகவும் மோசமாக இருந்த காரணத்தால் நாளை முதல் அண்ணா கலை அரங்கத்தில் மக்கள் திலகம் அவர்களின்
வீனஸ் பிச்சர்ஸ்
என் அண்ணன் படம் திரையிடுகிறார்கள் .
Printable View
மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு படம் - பிரதி மிகவும் மோசமாக இருந்த காரணத்தால் நாளை முதல் அண்ணா கலை அரங்கத்தில் மக்கள் திலகம் அவர்களின்
வீனஸ் பிச்சர்ஸ்
என் அண்ணன் படம் திரையிடுகிறார்கள் .
மக்கள் திலகம் திரியில் நூறு பதிவுகள் மின்னல் வேகத்தில் இரவு பகல் பாரது மக்கள் திலகத்தின் அபூர்வ செய்திகள் -படங்கள் பதிவிட்டு திரிக்கு பெருமை சேர்த்த ஜெய்சங்கர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் .
அன்புடன்
இராமமூர்த்தி
தொரப்பாடி - mgr படம் .23-12-2012 முதல் .
வேலூர் அருகில் இருக்கும் தொரப்பாடியில் தேவர் பிலிம்ஸ்
மக்கள் திலகம் 'தனிப்பிறவி' திரைப்படம் .
இராமமூர்த்தி
1984 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15-ம் நாள், நான் அரசவைக் கவிஞராக பதவி ஏற்கும் விழா திருச்சியில் நிகழ்ந்தது.
எத்தனை எத்தனையோ கசப்புக்களையும் வெறுப்புகளையும் அவருக்கு நான் ஏற்படுத்தியிருந்தாலும்... அதையெல்லாம் அந்த வள்ளல் மனம் எண்ணிப்பார்க்கவில்லை. எனக்கு அரசவைக் கவிஞர் பதவி கொடுத்துப் பாராட்டு விழாவை... என் உயிரோடு கலந்த அண்ணாவின் பிறந்தநாள் விழாவோடு சேர்த்து நடத்தினார்.
நான் அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டபோது என் மனம் என்னை உறுத்தியது; என்னை மிகவும் வருத்தியது! இந்த மனிதனுக்கு நாம் எத்தனை தொல்லைகளை செய்திருக்கிறோம்! ஆனால் இந்த மனிதன் எனக்குப் பெரும் பதவியை அல்லவா கொடுக்கிறார்! ஒரு கவிஞனுக்கு அரசவைக் கவிஞர் பதவி என்பதைக் காட்டிலும் அதிகபட்சப் பெருமை என்ன இருக்கிறது!
இவரை நாம் வேதனைப்படுத்தியதற்காக நம்மை வெட்கப்படச் செய்கிறாரா என்று கூட நான் நினைத்துக் கொண்டேன். அதனால் நான் அந்தப் பதவி ஏற்பு விழாவில், என் ஏற்புரையில் ஒரு நீண்ட கவிதை படித்தேன். அதில் ஒரு சில வரிகளை மட்டும் நான் இங்கு குறிப்பிடுகிறேன்!
கரைதனை மீறிய காட்டாற்று வெள்ளமாய்
ஒருசில நாட்கள் ஓடியும் இருக்கிறேன்...
கட்டி அணைத்த இவனது கையைச்
சுட்ட தீயாய் நானிருந்திருக்கிறேன்...
காயம் செய்ததைக் கருதாமல் எனக்கு
நியாயம் செய்யவே நினைக்கிறான்...
பல்பட்ட இடத்தில் பால்மட்டும் சுரக்கும்
அன்னை இதயம் அவனது இதயம்...
இந்தக் கவிதை வரிகளை நான் படித்தபோது, இலட்சக் கணக்கில் கூடியிருந்த கூட்டம் கைதட்டிஆரவாரம் செய்து இன்னொரு முறை படியுங்கள் என்று ஆணையிட்டது. நான் மீண்டும் படித்தேன்.
கண்ணிமைக்காது அவர் என்னையே கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது நெஞ்சம் கரைந்துவிட்டது என்பதை நான் கண்டுகொண்டேன். அவரது நெஞ்சம் கரைந்துபோனது; அவர் என் மீது வைத்த நேசம் நிறைந்துபோனது. கசப்பும் வெறுப்பும் காணாமல் போயின.
அந்த மன்னவர் என் கழுத்தில் டாலரோடு கூடிய தங்கச் சங்கிலி அணிவித்தார், தகுதியுரை படித்தளித்தார்.
தலைவருக்கு நான் பாட்டாடை போர்த்தியதற்குப் பதிலாக எனக்கு அவர் பட்டாடை போர்த்தினார், பாராட்டிப் பேசினார். அன்று நடந்த அந்த விழாக் கோலம், இன்றும் என் கண்ணையும் நெஞ்சையும் விட்டு விழாக் கோலமாக நிற்கிறது!
ஆனால் விழா நடத்தியவரோ கடற்கரை மண்ணில் விழுந்துபோனார்.
ஆற்றுவாரும் இல்லாமல், தேற்றுவாரும் இல்லாமல் இன்று நான் அழுகின்றேன். அந்த அண்ணன் இருக்கும் இடம் நோக்கி கைகூப்பித் தொழுகிறேன்.
தலைவர்- தம்பி -நான் தொடரில் புலமைப்பித்தன்
மக்கள் தலைவரின் கடைசி நாட்கள்.......
1987 டிசம்பர் 2...
ராமவரம் தோட்டம். ஆறு மாச ஆண் குழந்தையோடு நடிகர் ராஜேஷ் வந்தார். மலங்க மலங்க விழித்த மழலையைக் கொஞ்சுகிறார், எம்.ஜி.ஆர். மூன்று முத்தம் வரை உம்மென்று முறைத்த குழந்தை நான்காவது முத்தத்தில் பொக்கை வாய்திறந்து புன்னகைக்கிறது. அடுத்து கமகமக்கும் அமர்க்களமான விருந்தோம்பல்.
டிசம்பர் 5...
அம்பிகா, ராதா நடித்த திரைப்பட பூஜை ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தது. எம்.ஜி.ஆர். கலந்து கொள்கிறார் என்கிற செய்தியால் கோலிவுட்டில் குஷி. தலைவரை தரிசிக்க தமிழ்சினிமா உலகமே ஆஜர். கேரளாவில் இருந்து மோகன்லால் வந்திருந்தார். நட்சத்திரங்கள் எல்லாம் முண்டியடித்துக் கொண்டு (ராமச்) சந்திரனிடம் முகம்காட்டி நலம் விசாரித்தனர். எல்லோரையும் ஒன்றாகப் பார்த்த எம்.ஜி.ஆர் முகத்தில் நெகிழ்ச்சி ப்ளஸ் மகிழ்ச்சி.
டிசம்பர் 6... சிவாஜி, சத்யராஜ் நடித்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழா. சீஃப் கெஸ்ட் சி.எம். ‘‘உலகம் முழுக்கத் தேடிப்பார்க்கிறேன்... என் தம்பி சிவாஜிக்கு இணையாக ஒரு நடிகனும் இல்லை...’’ என்று சிவாஜி நடிப்புக்குப் புகழாரம் சூட்டுகிறார், எம்.ஜி.ஆர். கலங்கிய கண்களோடு ஷீல்டு வாங்கவந்த சிவாஜியை அரவணைத்து கன்னத்தில் பாசப்பெருக்குடன் ‘பஞ்ச்’ முத்தம் கொடுக்கிறார். ‘‘எனக்கும் முத்தம் வேண்டும்...’’ என்று அடம்பிடித்து எம்.ஜி.ஆர் முன்னால் கன்னத்தை நீட்டுகிறார், நம்பியார். ‘நோ’ சொல்லி மறுத்து விடுகிறார், எம்.ஜி.ஆர்.
டிசம்பர் 15..
எம்.ஜி.ஆர் மனசில் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த, கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி மறைந்தார். இருமல் தொல்லையால் அவதிப்பட்ட எம்.ஜி.ஆர்., இறப்புச் செய்தி கேட்டு துயரநெருப்பில் மெழுகாய் உருகினார். துக்கம் விசாரிக்கச் செல்ல வேண்டும் என்று துடித்த எம்.ஜி.ஆரை டாகடர்கள் தடுத்தனர்.
டிசம்பர் 20... ராமாவரம் தோட்டம். ‘வேதம் புதிது’ படத்துக்கு ஏற்பட்ட சென்சார் சிக்கலை நீக்கிய எம்.ஜிஆருக்கு நன்றி சொல்ல பாரதிராஜா வந்தார். பிறந்த நாளில் ஆசீர்வாதம் பெற்றுவிட்டு எம்.ஜி.ஆருக்கு சாக்லேட் பாக்ஸ் கொடுத்தார், ராஜேஷ். டயாபெட்டீஸ் பேஷன்ட் என்பதை மறந்து குஷியோடு சாக்லேட்டை ருசித்தார். அப்படியே ஸ்வீட் பாக்ஸை காவல் காத்த காக்கிகளுக்கு கொடுக்கும்படி உதவி மாணிக்கத்திடம் ஒப்படைக்கிறார், எம்.ஜி.ஆர். திடீரென்று ஜேப்பியார் விசிட். மூவரையும் சேர்ந்து பார்த்ததும் எம்.ஜி.ஆருக்கு ஆனந்தம் தாங்கவில்லை வாய்கொள்ளாச் சிரிப்பு. கல்லூரி அனுமதி தொடர்பாக எம்.ஜி.ஆரிடம் விவாதிக்கிறார், ஜேப்பியார். அருகில் அமர்ந்திருந்த பாரதிராஜவிடம், ‘‘பாரதி நீயொரு காலேஜ் கட்டிக்கிறியா... நான் கையெழுத்துப் போட்டு அனுமதி தரேன்...’’ கேட்கிறார், எம்.ஜி.ஆர். ‘‘தலைவரே எனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. ஆக்சுவலி ஐ யம் கிரியேட்டர்...’’ என்று கரகரகுரலில் பதில் சொல்லும் பாரதிராஜாவைப் பார்த்து, ரசித்துச் சிரிக்கிறார், எம்.ஜி.ஆர்.
டிசம்பர் 22... சென்னை கிண்டியில் நேரு சிலை திறப்புவிழா. பிரதமர் ராஜீவ்காந்தி கலந்து கொள்கிறார். ராமாவரத்தில் இருந்து புறப்படும் போதே சுகவீனம். உடல் உபாதையால் சுவரைப் பிடித்தபடி நடக்கிறார். எப்போதும் மேடையில் அரபிக்குதிரையாகத் தாவிக் குதிக்கும் எம்.ஜி.ஆரின் கைகளை வலிந்து உயர்த்திப் பிடிக்கிறார், ராஜீவ் காந்தி. வலியால் துடிக்கிறார், எம்.ஜி.ஆர்.
டிசம்பர் 23...
மதியம் எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை கொலாப்ஸ். தடதடவென கார்கள் தோட்டத்தை நோக்கி தோட்டாவாய் சீறுகின்றன. மறுநாள் எம்.ஜி.ஆர் பெயரில் போரூரில் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை திறப்புவிழா. ‘‘என் பெயரை வைக்காதே நான் கலந்து கொள்ள மாட்டேன்...’’ என்று உடையாரிடம் பல முறை சொன்னார், எம்.ஜி.ஆர். உடையாரோ எம்.ஜி.ஆர்மீது கொண்ட அபரிமிதமான அன்பால் விழாவை நடத்தத் திட்டமிட்டு இருந்தார். ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் திறப்பதாக ஏற்பாடு. அதனால் மாவிலை தோரணம்... கொடி என்று ராமாவரமே திருவிழாக் கோலம் பூண்டது.
டிசம்பர் 24...
அதிகாலை நேரம், ராமாவரம் தோட்டத்துக்கு வெளியே ஸ்பீக்கரில் ‘நீங்க நல்லாயிருக்கணும்...’ சீர்காழி வெண்கலக்குரலில் பாடிக்கொண்டு இருந்தார். வீட்டுக்குள் எம்.ஜி.ஆரை மரணதேவன் பறித்துக்கொண்டு சென்றான். சொன்னபடியே ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை திறப்புவிழாவில் எம்.ஜி.ஆர் கலந்து கொள்ளவில்லை.
3டி சிவாஜி தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியாகவிருகிறது. தற்போது தமிழ்நாட்டில் 65 தியேட்டர்களில் மட்டுமே 3டி படத்தைத் திரையிட வசதி உள்ளது. அதை அதிகரிக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். கேரளாவில் சில மாதங்கள் தள்ளி வெளியிடப்படுகிறது. 3டியில் பெரிய அனுகூலம் என்னவென்றால் படம் பார்க்க தியேட்டருக்குத்தான் வரவேண்டியிருக்கும். திருட்டு விசிடியில் பார்த்து ரசிக்க முடியாது. என்றார் குகன்.
ஏவி.எம். எடுத்த மற்றொரு படத்தை 3டியாக மாற்ற வேண்டுமென்றால் உங்கள் சாய்ஸ் ? என்று சரவணனிடம் கேட்ட போது சட்டென்று அவர் சொன்ன பதில் அன்பேவா16-12-12 கல்கி வாரஇதழில் இருந்து.
சாதி கலவரங்களை சாதுரியமாக சமாளித்த சரித்திர நாயகர் புரட்சி தலைவர்.
http://i50.tinypic.com/np57bt.jpg
http://i45.tinypic.com/30x8oys.jpg
தமிழக அரசியல் இதழில் வெளி வந்த கட்டுரை. இதை அனுப்பிய பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
திருநெல்வேலி கணேஷ் திரை அரங்கில் தற்பொழுது மக்கள் திலகத்தின் 100 வது திரை காவியம் ஒளி விளக்கு.