Originally Posted by
barani
20.07.1958 ஆனந்தவிகடன் விமர்சனம்
சினிமா விமர்சனம்: அன்னையின் ஆணை
சேகர்: போலீசாரால் சுடப் பட்டு இறந்துவிடுகிறான். அந்த இடத்தில் கணேசனின் நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது!
சந்தர்: என்னது... வந்த உடனேயே இறந்துவிடுகிற வேஷமா அவருக்கு?
சேகர்: முழுக்கக் கேளேன்... இறந்தது தந்தை கணேஷ்! பிறகுதான் மைந்தன் கணேஷ் வருகிறார்.
சந்தர்: ஒரே கல்லில் இரண்டு மாங்காயா? டபிள் ரோலா?
சேகர்: டபிள் மட்டும் இல்லை இன்னும் அநேக ரோல்கள்!
கல்லூரி மாணவனாக கலாட்டா செய்யும் போதும், சாம்ராட் அசோ கனாக நடிக்கும்போதும், பரோபகாரத்தைப் பழி வாங்கும்போதும் அவருடைய நடிப்பில் எவ்வளவு முகபாவங்கள், எவ்வளவு உணர்ச்சிகள், உள்ளப் போராட்டங்கள்! அநேக இடங்களில் இங்கிலீஷிலேயே வெளுத்துவாங்குகிறார்.
லவர்ஸ் அறிமுகமே பிரமாதம்! 'பூப்பறிக்கக் கூடாது என்ற போர்டு கண்ணுக்குத் தெரியவில்லையா?' என்று சாவித்திரியைப் பார்த்துக் கேட்கிற தோரணையே ஜோர்! அப்புறம் 'வெரி மிஸ்ச்சிவஸ் கேர்ள்'னு அலட்சியமாக...
நாராயண மூர்த்தியின் டைரக்ஷனும், மாறனின் வசனங்களும் பிரமாதம். எல்லாவற்றையும்விட சிவாஜி நடிப்புதான்...
சந்தர்: சிகரமா..?
சேகர்: சாதாரண சிகரமல்ல; எவரெஸ்ட்!