எம்.ஜி.ஆரைப் பற்றி மேலும் சில சுவையான தகவல்கள்
0
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு குன்னக்குடி வைத்தியநாதனைத் தான் முதலில் இசையமைப்பளராக புக் செய்தாராம் எம்.ஜி.ஆர். உடனே எம்.ஜி.ஆரின் நண்பர்கள் " பாரின் போய் படம் எடுக்கப் போறேங்குற , பக்திப் படத்துக்கு இசையமைக்குறவறப் போயி ... " என்று கிலியூட்டியிருக்கிறார்கள் . அதன்பிறகு தான் எம்.எஸ்.வியைப் பிடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். இந்தப்படத்துப் பாடல்கள் சிறப்பாக வரவேண்டுமென பல மெட்டுக்கள் போட வைத்து எம்.எஸ்.வியை ரொம்ப வறுத்தெடுத்திருக்கிறார் எம்.ஜி.யார். 9 பாடல்கள் ..அனைத்தும் ஹிட். கட்டுக் கட்டாக பணத்தை அள்ளி எம்.எஸ்.விக்கு வாரியிறைத்திருக்கிறார் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை இழந்த குன்னக்குடிக்கு பின்னாளில் நவரத்னம் என்றொரு படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை வழங்கினார் எம்.ஜி.ஆர்.
0
கே.வி.மகாதேவன் அடிமைப் பெண் படத்திற்காக ஒரு பாடலுக்கு 52 விதமான மெட்டுகள் போட்டும் எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லையாம் , இறுதியாக அமைந்த 53 வது மெட்டு எம்.ஜி.ஆருக்கு பிடித்துப் போய்விட்டதாம். அது ஆலங்குடி-சோமு எழுதிய தாயில்லாமல் நானில்லை என்ற பாடலாம்
0
நீரும் நெருப்பும் பட சண்டைக் காட்சியின் சூட்டிங்கை நேரில் கண்டு ரசித்து விட்டு , பின்னர் எம்.ஜி,ஆர் பயன்படுத்திய வாளை தொட்டுப் பார்த்த இந்தி நடிகர் தர்மேந்திராவிற்கு ஆச்சர்யம் ! எம்.ஜி.ஆர் பயன்படுத்தியது உண்மையான வாள் !
0
சின்னப்பா தேவரின் படங்களில் நடிக்கும் பொழுது அசோகன் சூட்டிங்கிற்கு ஒரு மணி நேரம் முன்பே வந்துவிடுவாராம். எம்.ஜி.ஆர் தாமதாமாக வந்தால் , எம்.ஜி.ஆரைத் திட்டாமல் அசோகனைத் திட்டுவது போல் ஜாடை மாடையாக எம்.ஜி.ஆரைத் திட்டுவாராம் தேவர். அந்தத் திட்டு தனக்கு இல்லை எம்.ஜி.ஆருக்குத் தான் என அறிந்தும் எம்.ஜி.ஆருக்காக பொறுத்துக் கொள்வாராம் அசோகன். எம்.ஜி.ஆருடன் மட்டும் 88 படங்களில் சேர்ந்து நடித்தவர் அசோகன்.
0
சூலமங்கலம் சகோதரிகள் (ஜெயலட்சுமி & ராஜ லட்சுமி), தரிசனம் , டைகர் தாத்தாச்சாரி , கற்பூரம் , தேரோட்டம் , பிள்ளையார் ,மகிழம்பூ போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். சூலமங்கலம் சகோதரிகளின் திறமையைக்கண்ட எம்.ஜி.ஆர் அவர்கள் இசையில் ஒரு படம் நடிக்க வேண்டுமென ஆசைப்பட்டிருக்கிறார். அந்தப் படத்திற்கு உங்களுக்காக நான் என்ற பெயரும் வைக்கப்பட்டு மூன்று பாடல்களும் பதிவாகி விட்டது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் அரசியலில் குதித்து விட்டதால் அந்தப் படத்தில் அவரால் நடிக்கமுடியவில்லை
0
மிருதங்க சக்கரவர்த்தி படத்தைக் கண்ட எம்.ஜி.ஆர், சிவாஜி நடிப்பில் பிரமித்துப் போய் இருக்கையிலேயே சில நேரம் உறைந்துவிட்டு பக்கத்தில் அமர்ந்திருந்த இயக்குனர் கே.சங்கரிடம் " நடிகன்னு சொன்னா சிவாஜி ஒருத்தர்தான்யா" என உணர்ச்சி மேலிடக் கூறினாராம்.
0
சின்னப்பா தேவர் தயாரித்த ஒரு படத்திற்கு அதிசய ஆடு என்று பெயர் வைத்தார்கள் , இந்தப் பெயர் ஏனோ தேவருக்குப் பிடிக்க வில்லை. அந்நேரம் எம்.ஜி.ஆர் நடித்த மாட்டுக்கார வேலன் சுவரொட்டி ஒன்றைப் பார்த்தும் அதிசய ஆடு என்ற தலைப்பை நீக்கிவிட்டு ஆட்டுக்கார அலமேலு என்று வைத்தார். தொடர் தோல்வியை சந்தித்து வந்த தேவர் அவர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய வெற்றியை தேடி தந்த படம் "ஆட்டுக்கார அலமேலு " .
0
மாட்டுக்கார வேலன் படத்தில் வி.கே ராமசாமி எம்.ஜி.ஆருக்கு மாமானாராக நடித்திருப்பார், ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர் வி.கே ராமசாமியின் காலில் விழுவதைப் போல் நடிக்க வேண்டும் , எம்.ஜி.ஆர் என் காலில் விழுவதா ? ஊகூம் .. மாட்டேன்.. என்று அடம் பிடித்திருக்கிறார் வி.கே ராமசாமி .
எம்.ஜி.ஆரோ " கதைப்படி எனக்கு மாமனார் தானே சும்மா நடியுங்கள் " எனக் கூறி சம்மதிக்க வைத்திருக்கிறார். எனினும் எம்.ஜி.ஆர் , வி.கே ராமசாமியின் காலில் விழும் காட்சியின் சூட்டிங் நடந்த பொழுது வி.கே ராமசாமி சற்று தயக்கத்துடன் சாய்ந்தபடியே தான் நின்றாராம் !
0
புதிய பூமி படத்தில் பூவை செங்குட்டுவன் எழுதிய நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை பாடலைக் கேட்டுவிட்டு எம்.ஜி.ஆர் , பூவை செங்குட்டுவனை மிகவும் பாராட்டினார்.
0
மீனவ நண்பன் படக்காட்சிகள் முடிந்து விட்ட தருவாயில் முத்துலிங்கத்திற்கு இந்தப் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுக்கவில்லையே என்று எம்.ஜி.ஆர் வருத்தப்பட்டிருக்கிறார்.உடனே இயக்குநர் ஸ்ரீதரை அழைத்து முத்துலிங்கத்திற்கு இந்தப் படத்தில் ஒரு பாடல் கொடுங்கள் எனக் கூறியிருக்கிறார்.அதற்கு ஸ்ரீதரோ " எந்த சூழலில் அவருடைய பாடலைச் சேர்க்கமுடியும் ? " எனக் கேட்டிருக்கிறார். : உங்களுக்குத் தெரியாதா ஒரு கனவுப் பாட்டா சேர்த்துக்கோங்க " என்று எம்.ஜி.ஆர் கூறியிருக்கிறார். அந்தப் பாடல் தான் தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து பாடல்.