Originally Posted by
KALAIVENTHAN
அன்னையும் அண்ணலும்
....
இப்படித்தான் தமிழக மக்களுக்காக தான் உழைத்து சம்பாதித்து பணத்தில் அள்ளிக் கொடுத்த அண்ணலாம் நம் எட்டாவது வள்ளலையே கூட, ‘கறுப்பு பணத்தை கொடுத்தார், விளம்பரத்துக்காக உதவி செய்கிறார்’ என்றெல்லாம் நஞ்சு மனம் கொண்ட நல்லோர் கூறவில்லையா?
துக்ளக் சோ அவர்கள் கூறும் கருத்துக்கள் எல்லாவற்றையும் நான் ஏற்பவனல்ல. ஆனால், தலைவர் மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் தனது துக்ளக் இதழில் கூறினார். ‘‘அதற்காகவாவது (கறுப்பு பணம், விளம்பரத்துக்காக) மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? ’ என்று கேட்டார். மேலும், துணை நடிகர் ஒருவர் தன்னிடம் கூறியதாக சோ சொன்னார்... ‘அடுப்பில் உலையை வைத்து விட்டு சோறு சாப்பிட முடியும் என்ற நம்பிக்கையோடு ஒருவர் வீட்டுக்கு செல்லலாம் என்றால் அது எம்ஜிஆர் வீடுதான்’.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தலைவர் மீது சந்தேகப்படும் புத்தூர் நடராஜனையும் மற்றவர்களையும் பார்த்து நாகேஷ், தலைவரின் நற்பண்புகளை எடுத்துக் கூறி, ‘‘அந்த நல்லவரை பாராட்ட நாலு நல்ல வார்த்தை இல்லாமல் போச்சேடா....’’ என்பார்.
மக்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள், மக்களின் அன்பை பெறாதவர்கள்,(மோகன் பகவத் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்றால் அவர் போட்டியிடும் தொகுதியிலேயே தோற்பது உறுதி), மக்களின் நல்வாழ்வை பற்றி நினைக்காதவர்கள், மக்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் கூட, தொண்டு செய்த நல்லவர்களை பழிக்காமல் இருந்தால் அதுவே பெரிய தொண்டு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்