http://i1065.photobucket.com/albums/...ps2whyu9dj.jpg
Printable View
டியர் செந்தில்வேல்
காலம் காலமாக தாங்கள் காத்து வரும் அபூர்வ ஆவணங்கள் அந்நாளைய நினைவுகளைத் தட்டி எழுப்புகின்றன. மக்கள் தலைவருடன் அந்நாளைய அகில இந்திய சிவாஜி மன்றத்தலைவர் சின்ன அண்ணாமலை காட்சி தரும் அபூர்வமான புகைப்படம். மிக்க நன்றி.
ஒரு வேண்டுகோள்.
தாங்கள் பதிவிடும் அபூர்வ ஆவணங்கள் நிழற்படங்கள் யாவற்றிலும் தங்களுடைய பெயர் அல்லது ஏதாவது watermark பொறித்து பதிவிடுமாறு வேண்டுகிறேன். ஏனென்றால் இப்படிப்பட்ட அபூர்வ ஆவணங்களை சிலர் பல்வேறு தளங்களில் மீள் பதிவு செய்யும் போது மறந்தும் கூட அதற்கு நன்றி கூறுவதில்லை, பெயர் கூட குறிப்பிடுவதில்லை. மாறாக தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சேகரித்து அளிப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்கவும் தயங்காத கலிகாலமிது,
தாங்கள் இதற்கு பெருந்தன்மையாக விட்டுக்கொடுப்பீர்கள் என்பது தெரியும் என்றாலும் என் மனது கேட்காத காரணத்தால் தங்களிடம் இக்கருத்தைக் கூற விரும்பினேன்.
சென்னை சாந்தி திரையரங்கில் இருக்கும் இப்படம் இரு பரிமாணங்களில் அந்தக் காலத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் இதற்காகவே தினமும் வந்து பார்த்து விட்டுப் போனதெல்லாம் மறக்க முடியாத தருணங்கள்.