all the best shekar
Printable View
all the best shekar
வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.வாசுதேவன் சார் & திரு. குமரேஷ்.
பாசமிகு பம்மலார் சார்,
'செந்தாமரை' பேசும் படம் இதழின் அரிய,அற்புதக் காவியக் காட்சிப் பகுதிகளைப் பதிவிட்டு நெஞ்சை கபளீகரம் செய்து விட்டீர்கள். இதுவரை நான் பார்த்திராத ஸ்டில்கள். படத்தின் cd,dvd க்கள் கூட இன்னும் கிடைக்க வில்லை. படம் பார்க்காத குறை மனதை வாட்டிக் கொண்டிருந்தாலும் தாங்கள் பதிவிட்ட ஸ்டில்ஸ் மூலம் அக்குறை ஓரளவிற்கு தீர்ந்தது. அதற்காக என் ஸ்பெஷல் நன்றிகள்.
நடிகர் திலகத்தின் "இரத்தத்திலகம்" காவியத்தின் பேசும் படம் இதழின் காவியக் காட்சிகள் அனைத்தும் காந்தங்கள். எத்தனை விதமான ஸ்டில்கள்! அதி அற்புதம். தேசியக் கொடியை ஒரு கையிலும், துப்பாக்கியை ஒரு கையிலுமாக 'சிக்' கென்ற ராணுவப் போர் உடையில் நம் இதயவேந்தர் வீரத்துடன் நிற்கும் அந்த நிழற் பட போஸ் கோடிப் பொன் கொட்டிக் கொடுத்தாலும் ஈடு இணை ஆகாதது. ஆஹா!.. வைத்த கண் வாங்காமல், இமை கொட்டாமல் வாழ்நாள் முழுதும் பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம். அதை அள்ளி வழங்கிய உங்களுக்கு காலம் முழுதும் நன்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். நன்றி! நன்றி!நன்றி!
'இரு மேதைகள்' பொம்மை ஆவணப் பொக்கிஷம் அருமை. அயன்புரம் சத்திய நாராயணன் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் அளித்திருக்கும் (நான் பார்த்த படம்) இருமேதைகள் விமர்சனம் நடுநிலையானது. இந்தியன் எக்ஸ்பிரஸ் 'தாவணிக் கனவுகள்' முதல் வெளியீட்டு விளம்பரம்,தினத்தந்தி 101வது நாள் விளம்பரம் அனைத்தும் அருமை. ஆதாரங்களை அற்புதமாய் அள்ளித் தரும் அருமைச் சகோதரரே! நீவிர் ஆல் போல் தழைத்து வாழ்க! வாழ்க!
அன்புடன் வாழ்த்தும்,
வாசுதேவன்.
vasudevan sir
waiting for some more mails
regards
kumareshanprabhu
அன்புள்ள பம்மலார், கிடைத்தற்கரிய ரத்தத்திலகம் பொக்கிஷங்களை வாரி வழங்கிய உங்களுக்கு பாராட்டுக்கள், நன்றிகள் பல.
kumaresan sir,
definitely. which date vasantha maligai releasing on ? very eager to know about it.
vasudevan.
அன்பு ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்பு உள்ளத்தித்திற்கும்,பாசப் பாராட்டுக்களுக்கும் பணிவான நன்றிகள் சார்.
இருமேதைகள் collage வடிவிலான நிழற்படம் நெஞ்சில் நிழலாடுகிறது. thank you sir!
உங்கள்
வாசுதேவன்.
டியர் சந்திரசேகர்,
நடிகர்திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில், மலைக்கோட்டை மாநகரில் நடைபெற இருக்கும் 'நடிகர்திலகம் பிறந்தநாள் விழா மற்றும் மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா' பரிபூரண வெற்றியடைய இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
எண்ணத்தாலும் செயலாலும் நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் நீங்கள் மேற்கொள்ளும் இதுபோன்ற நற்காரியங்கள் அனைத்துக்கும் இறைவனின் அருளும் ஆசியும் பேருதவியும் கிடைக்கப் பிரார்த்திக்கிறோம்.
Dear Vasudevan sir
i will defentely tell u the date
thank u kumaresan sir.