-
புரட்சி தலைவரின் அன்பு இளவள்
திரு எஸ். எஸ் .ராஜேந்திரன் மறைந்தார்
லட்சிய நடிகர் எனப் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் (எஸ்எஸ்ஆர்) சென்னையில் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86.
எஸ். எஸ். ராஜேந்திரன் என அழைக்கப்படும் சேடப்பட்டி சூரியநாராயண தேவர் ராஜேந்திரன் 1928ல் உசிலம்பட்டியில் பிறந்தார்.மேடை நாடகங்களில் நடித்து வந்த எஸ்எஸ்ஆர், 1947 ஆம் ஆண்டில் பைத்தியக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார். தமிழ் சினிமாவின் ஜாம்பவான் எம்ஜிஆர்யுடன் நெருக்கமானார். திராவிட இயக்கத்தின் கொள்கைகளை திரையில் முழங்கியவர்களில் இவருக்கும் முக்கிய இடமுண்டு.1950கள், 60களில் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்று விளங்கினார். இவர் நடித்த பூம்புகார், மறக்க முடியுமா போன்ற திரைப்படங்கள் காலத்தால் அழியாதவையாகும்.பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர் சிறு பாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த முதலாளி திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமாக திகழ்ந்தார் எஸ்எஸ்ஆர். எம்.ஜி.ஆர். இரண்டு வேடங்களில் தோன்றி நடித்த ராஜா தேசிங்கு (1960) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். 1960 ஆம் ஆண்டில் இவர் தங்கரத்தினம் என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கி நடித்திருந்தார். பார் மகளே பார், குங்குமம், பச்சைவிளக்கு, கைகொடுத்த தெய்வம், சாரதா போன்ற படங்களில் இவருடன் இணைந்து நடித்த விஜயகுமாரியைத் திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே திருமணமாகியுள்ள நிலையில் விஜயகுமாரியை மறுமணம் செய்த எஸ்.எஸ்.ஆருக்கு அவர் மூலமாக ஆண் குழந்தையொன்று பிறந்த நிலையில் அவரை விட்டுப் பிரிந்தார். பின்னர் இருவரும் தனித்தனியாக வசித்தாலும், மணமுறிவு ஏற்படவில்லை. பின்னர் இருவரும் இணைந்துவிட்டதாக பேட்டி கொடுத்தனர். 1962இல் தேனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க.வின் சார்பில் 1970 முதல் 1976 ஏப்ரல் 02 நாள் வரை பணியாற்றினார். எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கியதும், அதில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். 1980இல் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அ.தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் எஸ் திருநாவுக்கரசு தனிக் கட்சி ஆரம்பித்தபோது, அதில் சேர்ந்தார். அவர் கட்சியைக் கலைத்ததும் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பினார். மார்புச் சளி, மூச்சடைப்பால் சிரமப்பட்ட எஸ்எஸ்ஆர் உடல்நிலை நேற்று கவலைக் கிடமானது. இன்று காலை வரை உயிருக்குப் போராடிய அவர், சிகிச்சைப் பலனின்று காலை 11 மணிக்கு மரணமடைந்தார்.
-
கண்ணதாசன் கொடுத்த வாத்தியார் விளக்கம்
ஒருமுறை உதவியாளர் கண்ணதாசரிடம் எம்ஜிஆரைவாத்தியார் என்கிறாகளே ஏன்என்றா ராம் கண்ணதாசன் அதற்க்கு என்பாடலையே திருத்துபவர்அல்லவா
என்றாராம்
-
இன்று பிறந்த நாள் காணும் இனிய சகோதரர் திரு. வினோத் அவர்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் நீடூழி வாழ்ந்து, புரட்சித்தலைவரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்ர்க்க அன்புடன் வாழ்த்துகிறேன் !
http://i59.tinypic.com/2vneuzq.jpg
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
-
சென்னை: லட்சிய நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் எஸ்.எஸ்.ஆர். அறிமுகமான படம் பராசக்தி தான் எனப் பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது உண்மையில்லை, பராசக்திக்கு முன்பே பைத்தியக்காரன் என்ற படத்தின் மூலம் தான் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். தமிழ்த் திரையுலகில் நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமையாளராக விளங்கியவர் எஸ்.எஸ்.ஆர் என அழைக்கப் படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இவர் பழம் பெரும் நடிகராக மட்டுமின்றி, நீண்ட அரசியல் வரலாறு கொண்ட அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். சமீபகாலமாக உடல்நலக் கோளாறால் அவதிப் பட்டு வந்த எஸ்.எஸ்.ஆர். இன்று காலமானார். அவருக்கு வயது 86.
Read more at: http://tamil.filmibeat.com/news/s-s-...lm-031436.html
-
இலட்சிய நடிகர் எஸ் எஸ் இராஜேந்திரன் மறைவு....
===============================================
ஆழ்ந்த இரங்கல்...
.
வசனங்களை மிகத் தெளிவாகவும், இனிமையும் அழகும் கலந்த கம்பீரத்துடனும், ஏற்ற இறக்கத்துடனும் உச்சரிக்கக்கூடியவர்.
.
பேறிஞர் அண்ணாவின் இதயத்தில் தனி இடம் பிடித்தவர் .
"அரைக்கால் சட்டை போட்ட காலைத்திலேயே , என் கரம் பற்றி
அரசியலுக்கு வந்தவன் தம்பி ராஜு " என்று அண்ணாவால்
புகழப்பட்டவர். அண்ணாவின் வெளியூர்ப் பயணம் என்றாலே ,
அண்ணா கேட்காமலேயே இவர் பிளைமவுத் கார் அண்ணாவின் வீட்டு
வாசலில் நிற்கும் . சென்னை எல்டாம்ஸ் சாலையில் தான்
கட்டிய புது வீட்டுக்கு ' அண்ணா இல்லம் ' என்று பெயர் சூட்டி ,
அண்ணாவையே அந்த இல்லத்தைத் திறக்கச் செய்தார். நாடக உலகிலிருந்து , தன்னை ஆளாக்கிய கலைவாணரின் படத்தையும் அந்த இல்லத்தில் அண்ணாவைக் கொண்டே திறக்கச் செய்தார் .
,
தமது தேனாம்பேட்டை இல்லத் திறப்பு விழாவுடன், பேரறிஞர் அண்ணாவின் 50ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினைப் பொன் விழாவாகக் கொண்டாடினார். அண்ணாவுக்குப் பட்டு வேட்டி, பட்டுச் சட்டையுடன் 50 பவுன் தங்கச் சங்கிலி அணிவித்தார்.
.
புராணப் படங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்தார். சம்பூர்ண ராமாயணம் படத்தில் பரதன் வேடத்தில் நடிக்க அழைத்தும் மறுத்தவர்.
அதன் காரணமாகவே ' இலட்சிய நடிகர் ' என்று அண்ணா உட்பட அனைவராலும் போற்றப்பட்டவர்.
.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமாக திகழ்ந்தார் எஸ்எஸ்ஆர். புரட்சித்தலைவர் எம்ஜியார் தொடங்கிய அண்ணா திமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். 1980இல் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அ.தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
.
பிரதமர் நேருவுக்கு கறுப்புக்கொடி காட்டிய அன்றைய திமுகவில் இருந்தபோது தன் வீட்டு மாடியில் கறுப்பு பிளாங்கெட் போர்வைவைக் கட்டிவிட்டு,வாசலில் துப்பாக்கியுடன் அமர்ந்து கொண்டிருந்த கொள்கைப்பிடிப்புள்ள துணிச்சல்காரர்.
.
எல்டாம்ஸ் சாலை வீட்டிற்கு முன்று வாசல்கள் (compound Gates )ஒவ்வொன்றிலும் அவர் எழுதியிருந்த வாசகம்
1.அன்னை இல்லம்
2.அண்ணா இல்லம்
3.கலைவாணர் இல்லம் ...
-
-
-
-