https://s21.postimg.org/3rjhogvbr/ad...ha_5c95d0b.jpg
Printable View
பன்னீர் செல்வம் கோஸ்டியும் எடப்பாடி பழனிசாமி கோஸ்டியும் இணையப் போறாங்களாம். கட்சி பலமாக இருந்து ரெட்டை இலை கிடை்த்தால் சந்தோசம்தான். ஆனால், இவர்கள் ஈகோ இல்லாமல் எப்படி ஒற்றுமையாக இருப்பார்கள். ஏன் எ்ன்றால் பலமான தலைவர் யாரும் இல்லை. எல்லாருமே தலைவர்களாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள். நீ பெரியவனா? நான் பெரிவனா? போட்டி வரும்.
இணைப்பே சாத்தியாமாகுமா என்று தெரியவில்லை. கூத்தடிக்கிறார்கள்.
ஆனால், புரட்சித் தலைவர் நினைவு மண்டபம், நினைவுத்தூண் கண்காட்சி அமைக்கப்படும் என்று பன்னீர் செல்வம் சொல்லியிருப்பதை பாராட்டலாம். இப்பவாவது ஞாபகம் வந்ததே.
எடப்பாடி, பன்னீர் எல்லாம் மக்கள் திலகம் ரசிகராக இருந்து அவர் காலத்திலேயே கட்சிக்கு வந்தவர்கள்தான். பதவி, பணம் கண்ணை மறைக்கிறது.
உங்களை எல்லாம் உயர்த்திவிட்ட தலைவரை நினைங்கப்பா. நல்லா வருவீர்கள்.
புரட்சித் தலைவரை பாராட்டி என்ன்தை எழுதுவது என்று எனக்கும் தெரியவில்லை. மக்கள் திலகம் படம் போடலாம் என்றால் டைப்பிங் அடிக்கிறதை விட இன்னும் கொஞ்சம் கூடுதல் வேலை. அதோடு வாட்ஸாப், பேஸ்புக்கிலே பதிவு போடும்போது வாராத குற்ற உணர்ச்சி இங்கே டைப்பிங் செய்து போடும்போது வருகிறது.
நேர் வழியில் பதிவு போடலாம் என்றால் மையத் தளத்தை கிிளிக் செய்தால் தொலை தொடர்புத்துறை அறிவுரைப்படி இந்த தளம் ப்ளாக் செய்யப்பட்டிருக்கிறது என்று வருகிறது.
அப்படி ப் பார்த்தால் முடக்கப்பட்ட இணையதளத்தில் குறுக்கு வழியாக வந்து பதிவு போடுவது சட்டத்தை மீறிய செயல்தானே? இந்த வகையில் பதிவு போடுபவர்கள் எல்லாருமே சட்டத்தை மீறி இந்திய அரசால் முடக்கப்பட்ட தளத்தில் அதை மீறி, சட்ட விரோதமாக பதிவு போடுபவர்கள்தான். அதுவும் தப்புதானே?
எல்லாரையும் தான் சொல்றேன். நானும் சேர்த்துதான். இந்த சின்ன விதியை சடட்த்தை மதிக்காத நாமும் சரி, போட்டி திரி பதிவாளர்கள், மற்ற திரி பதிவாளர்கள் எல்லாருமே நாட்டில் மற்றவர்களின் சட்ட விரோதத்தை எ்ப்படி கண்டிக்க நியாயம் இருக்கிறது.
நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
இப்போதே திரி தொங்கிப் போய்விட்டது. நாளைடைவில் இன்னும் யாரும் வராமல் போய்விடும். இருந்தாலும் புரட்சித் தலைவர் பெயர்தான் நம்மளை ஈர்க்கிறது. அதோடு நாமும் அப்பப்ப வராவிட்டால் விசமிகள் ஆட்டம் ஆரம்பித்தால் என்ன செய்வது? அதற்காகவவது கண்காணி்க்க வேண்டியிரு்க்கிறது.என்ன ஒரு ஆறுதல். எல்லா திரியும் இதே லட்சணம்தான். தொங்கிப் போய்விடடது. அதுவரையில் சந்தோசம்.
கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை புரட்சித் தலைவர் புகழ் வாழ்க என்று போற்றுவோம்.
சன் லைப் சானலில் இன்று காலை 11 மணி முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "திருடாதே " ஒளிபரப்பாகியது
http://i63.tinypic.com/300e52t.jpg
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் சானலில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த
{ராஜராஜன் " திரைப்படம் ஒளிபரப்பாகியது
http://i67.tinypic.com/2ezo6z6.jpg