http://i63.tinypic.com/4qivec.jpg
http://i63.tinypic.com/a3mjah.jpg
http://i64.tinypic.com/2r4pi79.jpg
Printable View
மக்கள் திலகம் எம்ஜிஆரை தரம் தாழ்த்தி வெளியிடப்பட்ட நோட்டீஸ் பலவற்றை சிவாஜியின் திரியில் பதிவிட்டு வரும் திரு சிவா அவர்கள் சிவாஜியின் ரசிகனின் தரமற்ற அநாகரீக செயலை படம் பிடித்து காட்டியுள்ளார் . அதற்கு பதில் தரும் வகையில் நம்முடைய திரியில் நண்பர்கள் சிவாஜியை பற்றி பதிவிடுவது வருந்த தக்கது . அவர்கள் செய்யும் மாபெரும் தவறை நாமும் செய்வது மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு பெருமை சேர்க்காது .
மக்கள் திலகத்தின் பெயரும் புகழும் செல்வாக்கும் நாளுக்கு நாள் உயர்ந்தது கொண்டு வருவது உலக வரலாற்றில் யாருக்கும் கிடைக்காத சிறப்பாகும் . இந்த பெருமை ஒன்று நமக்கு போதும் .
நினைத்ததை முடித்தவன் எம்ஜிஆர் .
ஆச்சரியமாக உள்ளது இல்லயா ?
************************************************** **********
எம்ஜிஆர் தன்னுடைய இளம் வயதில் ஆங்கில திரைப்படங்களை பார்த்ததின் விளைவுதான்
நாடோடி மன்னன் படம் எடுக்க தூண்டியது . ஏராளமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு
1958ல் திரைக்கு வந்து நாடு முழுவதும் ரசிகர்களால் மக்களால் ஏராளமான பாராட்டுக்களை பெற்று
சரித்திர சாதனை புரிந்தது .
எம்ஜிஆர் வெற்றி பெற்று நினைத்ததை முடித்தார் .
1967 தேர்தலில் தமிழகத்தில் பேரறிஞர் அண்ணாவின் தலைமயில் திமுக ஆட்சி அமைந்திட நினைத்தார் . அதற்க்காக உயிர் தியாகம் வரை சென்று உழைத்து தானும் வெற்றி பெற்று தன்னுடைய இயக்கத்தையும் வெற்றி பெற செய்து தன்னுடைய தலைவர் பேரறிஞர் அண்ணா தமிழக முதல்வராக பதவி அமரவைத்த எம்ஜிஆர் நினைத்ததை முடித்தார் .
1972ல் எம்ஜிஆரையே அழிக்க நினைத்த திமுகவின் கனவை 1973 திண்டுக்கல்தேர்தல் துவங்கி 1987 வரை அரசியல் எதிரிகள் அனைவரையும் எதிர்த்து வெற்றி மேல் வெற்றி பெற்று தான் நினைத்ததை முடித்தார்
.
சினிமாவில் எம்ஜிஆரின் சரித்திரம் முடிந்துவிட்டது என்று 1959, 1967, 1972 கால கட்டங்களில் நடந்த சோதனைகளை தவிடு பொடியாக்கி எம்ஜிஆர் உருவாக்கிய திரை உலக சாதனைகள் வெற்றிகள் குவித்ததின் மூலம் தான் நினைத்ததை முடித்தார் .
1977 வரை எம்ஜிஆர் திரை உலகை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து திரை உலக வசூல் சக்ரவர்த்தி யாக திகழ்ந்தார் என்று திமுக தலைவர் திரு கருணாநிதி 1987 எம்ஜிஆர் மறைவு தினத்தன்று கூறியது நினைவிற்கு வருகிறது .
நினைத்ததை முடிப்பவன் - 1975ல் வெளியானது , தலைப்பிற்கு ஏற்ப எம்ஜிஆர் தான் வாழ்ந்த காலத்திலும் நினைத்ததை முடிப்பவன்
என்று சாதித்து காட்டினார்.
மறைந்த பின்னரும் 30 ஆண்டுகளாக அரசியலிலும் சினிமா மறு வெளியீடுகளில் , புது தொழில் நுட்ப
மறு வெளியீடுகளிலும் எம்ஜிஆர் என்ற தனி
மனிதரின் வெற்றிகள் சரித்திர சாதனையை நினைத்ததை முடிப்பவன் எம்ஜிஆர் ரசிகர்களாகிய நாங்கள் எப்போதும் பெருமை கொள்கிறோம் .
நன்றி டி ஜி ராமமூர்த்தி
மலைக்கள்ளன்
மக்கள் விரும்பும் நடிகராக இருந்த எம்ஜிஆரை திரைக்கு வெளியேயும் மக்களின் நாயகனாக நிலை நிறுத்திய முதல் படம் என்று மலைக்கள்ளனை சொல்லலாம். ஐரோப்பிய நாடுகளில் அடித்துத் தேய்த்த ராபின்ஹூட் கதைதான் என்றாலும் 1954ல் தமிழக மக்களுக்குப் புதிது. கோவையைச் சேர்ந்த பட்சி ராஜா ஸ்டுடியோ தயாரித்த இந்தப் படத்துக்கு கருணாநிதி வசனம். மலைக்கள்ளன் என்ற நாவலை அப்படியே படமாக்கியதாலோ என்னவோ வில்லன்களை போலீஸ் கைது செய்த பிறகும் முக்கால் மணி நேரம் படம் ஓடிக் கொண்டே இருக்கும்.
“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற சூப்பர் டூப்பர் ஹிட் பாடலைத் தொடர்ந்து டிஎம்எஸ் எம்ஜிஆரின் குரலாகிப் போனார். இந்தப் படத்தில் எம்ஜிஆர் கிட்டத்தட்ட ஒரு சூப்பர் மேனாகவே வருவார். ஒரு வடநாட்டு இஸ்லாமியர் வேடத்தில் வந்து “அரே ஜல்தி ஆவோ” “நிம்பள்கி நம்பள்கி” என்று பேசி போலீஸ், காதலி என்று அனைவரையும் ஜாலியாக ஏமாற்றுவார். அவர் திட்டமிட்டது அனைத்தும் எந்தப் பிறழ்வும் இல்லாமல் சரியாக நடக்கும். கதாநாயகி மட்டும் நாயகன் தனது அத்தான் என்று தெரியும்வரை கடுகடுவென்றே இருப்பார். அவர் எத்தனை நல்லது அல்லது கெட்டது செய்திருந்தாலும் அவரும் முதலியார் என்று தெரிந்த பிறகுதான் பெண்ணைத் தர சம்மதிப்பார்கள். தமிழ் பண்பாடு.
படத்தைத் தூக்கிச் செல்வது மாம்பழ நாயுடு என்ற போலீஸ் வேடம். அதை டி.எஸ்.துரைராஜ் செய்திருப்பார். உண்மையில் எம்ஜிஆரை விட அவருக்குத்தான் அதிக வசனம் இருக்கும். எம்ஜிஆரின் அண்ணன் சக்ரபாணிதான் சப் இன்ஸ்பெக்டர். கடைசி வரை முகவாயைத் தேய்த்துக் கொண்டிருந்துவிட்டு எம்ஜிஆர் கை காட்டியவர்களை எல்லாம் பிடித்து பிரமோஷன் வாங்கிக்கொள்ளும் வேடம்தான்.
படத்தில் சிறுத்தை-காட்டுப்பன்றி சண்டையெல்லாம் உண்டு. எம்ஜிஆரின் இடத்துக்கு செல்ல பிரைவேட்டாக ஒரு விஞ்ச் வசதி இருக்கும். அந்த சக்கரத்தை சுற்ற முழுநேர பணியாளர்கள் சாப்பிட்டு உடற்பயிற்சி செய்து தயாராக இருப்பார்கள். எம்ஜிஆர் வாரத்துக்கு ஒருமுறை வந்து செல்வார் என்று வைத்துக் கொண்டால் அவர்களின் வேலைப்பளு சில அரசு அலுவலகங்களை நினைவூட்டுகிறது. கதையில் யாருக்காவது பொழுது போகவில்லை என்றால் பானுமதியைக் கூப்பிட்டு நடனமாடச் சொல்லி விடுகிறார்கள்.
முதன் முதலாக குடியரசுத் தலைவர் விருது பெற்ற தமிழ்படம், சிங்களம் உட்பட ஆறு மொழிகளில் மீளுருவாக்கம் செய்யப்பட்ட முதல் படம் (இந்தியில் திலீப் குமார்) என்று பல பெருமைகளைப் பெற்றது மலைக் கள்ளன்.