-
டியர் வாசுதேவன்,
இத்திரியில் தங்களின் பங்களிப்புகள் அனைத்தும் அருமை. அந்த வகையில் 'இரத்தத்திலகம்' மற்றும் 'தாவணிக்கனவுகள்' புகைப்பட ஆல்பம் மிகவும் அருமையாக வழங்கியுள்ளீர்கள்.
தாவணிக்கனவுகள் படத்தில் நடிகர்திலகம் அறிமுகமாகும் முதல் காட்சியான கொடியேற்றும் காட்சியில் துவங்கி, இறுதியில் நேதாஜியாக வந்து சொல்லும் வரை அனைத்து காட்சிகளையும் தனித்தனி புகைப்படமாகத் தந்துள்ளீர்கள். திரைப்படத்தில் பார்க்கும்போது கூட அவரது உணர்ச்சிபூர்வமான முகபாவங்களை இவ்வளவு நிறுத்தி, நிறுத்தி பார்க்க முடியாது. மிகவும் சிரமம் எடுத்துக்கொண்டு தொகுத்திருக்கிறீர்கள். கிட்டத்தட்ட நடிகர்திலகம் வரும் காட்சிகளை மட்டும் தனியே பார்த்தது போலிருக்கிறது.
இதேபோலத்தான் 'இரத்தத்திலகம்' புகைப்பட ஆல்பமும் மிக அருமையான தொகுப்பு. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டிய படம். தமிழர்களின் நாட்டுப்பற்றை மீறி, 'காங்கிரஸ்காரன் படம்' என்று துர்ப்பிரச்சாரம் செய்யப்பட்டதால் பெரிய அளவில் மக்களிடம் சென்றடையாத படம். (அப்போது திராவிட இயக்கம் காட்டுத்தனமாக வளர்ந்துகொண்டிருந்த நேரம்).
இப்படம் உருவானதும் கவிஞர் கண்ணதாசன், பெருந்தலைவரை அழைத்து (அப்போது முதலமைச்சராக இருந்தாரா அல்லது விலகிவிட்டாரா என்பது தெரியவில்லை, இந்திய சீனப்போர் நடைபெற்றபோது முதல்வராக இருந்தார்) இரத்தத்திலகம் படத்தை திரையிட்டுக்காட்டினார். படம் முடிந்ததும் கருத்து சொன்ன பெருந்தலைவர், 'போர்முனைக்காட்சிகளை நல்லா எடுத்திருக்கீங்க. ஆனா காலேஜ் காட்சிகள், இங்கிலீஷ் நாடகம் எல்லாம் ரொம்ப நீளமாக இருக்கிறது. கொஞ்சம் குறைங்க' என்று சொல்லி விட்டு, 'சிவாஜி நல்லா தேசப்பற்றை ஊட்டுகிற மாதிரி செஞ்சிருக்கார்' என்று பாராட்டினாராம். இதையும் சேர்த்து, பெருந்தலைவர் தன் வாழ்நாளிலேயே நான்கோ ஐந்தோ படங்கள்தான் பார்த்த்ருக்கிறார். அதில் ராஜபார்ட் ரங்கதுரையும் ஒன்று என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள் வாசுதேவன். உங்கள் கலக்கல்கள் தொடரட்டும்.
-
சாரதா மேடம், தங்களுடைய அன்பான வாழ்த்துக்கு என் இதயம் கனிந்த நன்றி.
தங்களைப்போன்ற, எண்ணற்ற ரசிகர்களின் இதயப்பூர்வமான வாழ்த்து மற்றும் விண்ணிலிருந்து நமது கலை தெய்வத்தின் பரிபூரண ஆசியால், இதயசுத்தியோடு நடைபெறும் நம்முடைய விழாக்கள் கண்டிப்பாக வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஏனென்றால், உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது என்று பாடியதுபோலவே வாழ்ந்து காட்டி மறைந்த நடிகர்திலகத்தின் வழியில் நாம் நடப்பதால்.
மீண்டும் நன்றி.
லட்சோபலட்சம் ரசிகர்களுள் ஒருவனாக,
-
டியர் பம்மலார்,
வழக்கம்போல நடிகர்திலகத்தின் திரைப்பட விளம்பர மழையினை அள்ளித்தருவதோடு அடிஷனலாகத் தரும் அந்நாளைய 'பேசும் படம்' இதழ்களின் புகைப்படத்தொகுப்புகளையும் தருவது மனதுக்கு இதமளிப்பதோடு பழைய இதழ்களில் வந்தவற்றைப்படித்த மலரும் நினைவுகளையும் தூண்டுவதாக அமைந்துள்ளது.
'செந்தாமரை' படத்தின் காணக்கிடைக்காத ஸ்டில்களூம், 'இரத்தத்திலகம்' காவியத்தின் பேசும்படம் புகைப்பட ஆல்பமும் மிகவும் அருமையாக உள்ளன. இரத்தத்திலகம் படத்தில் இடம்பெற்ற நடிகர்திலகத்தின் உணர்ச்சிப்பிழம்பான புகைப்படங்கள் காணக்காண திகட்டாதவை. அப்புகைப்படக்குறிப்பில் புஷ்பலதா பற்றிச் சொல்லியிருப்பது உண்மை. அக்காலத்தில் அவருடைய அடித்து நிறுத்தும் அழகுக்காகவே பலர் அவர்மீது பைத்தியமாக இருந்தார்களாம். 'தாழம்பூவே தங்க நிலாவே' பாடல் அவரும் நடிகர்திலகமும் பாடுவதாக புஷபலதாவின் கற்பனையில் தோன்றும் பாடல் என்று நினைக்கிறேன். ஈஸ்வரி பாடியிருப்பதால் அப்படி ஒரு எண்ணம் எனக்கு. அழகான அந்தப்பாடல் ஏனோ படத்தில் இடம்பெறவில்லை. ஆனால் இலங்கை வானொலி தயவால் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலித்த பாடல் அது. புஷ்பலதா நன்றாக வந்திருக்க வேண்டிய நடிகை. ஏனோ இரண்டாம் நிலைக் கதாநாயகியாகவே இருந்து, அப்புறம் அம்மா ரோல்களுக்குப் போய்விட்டார்.
நீங்கள் அள்ளித்தரும் விளம்பரங்களும், பொம்மை, பேசும் படம் இதழ்களின் தொகுப்புகளும் கிடைத்தற்கரிய பொக்கிஷங்கள். இன்னும் எவ்வளவு அள்ளித்தரப்போகிறீர்கள் என்று நினைக்கும்போதே ஆனந்தமாக இருக்கிறது.
தங்களுக்கு என் இதயம் நிறைந்த பாராட்டுக்களும், நன்றிகளும்.
-
டியர் ஷக்திப்ரபா,
What a surprise.... ரொம்ப நாளைக்குப்பிறகு உங்களுடைய அழகான, அருமையான விமர்சனம் கண்டேன். விமர்சனம் அருமை என்பதால் மட்டுமல்ல, மீண்டும் நடிகர்திலகத்தின் தளத்தில் உங்களைக் கண்டதும் மிக மிக ஆனந்தமாக இருக்கிறது. உங்கள் தொடர்ந்த பங்களிப்பை எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
(நமக்குள் போலி மரியாதை எல்லாம் போதும், வழக்கம்போல ஒருமையில் அழைப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன்).
"ஷக்தி, ஏன் பதிவை நிறுத்தி விட்டாய். உன் அற்புதமான எழுத்துக்களில் நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே ஷக்தி. உன் எழுத்தும் கற்பனையும் தேனோடு கலந்த தெள்ளமுது, தூய நிலவோடு சேர்ந்த குளிர்த்தென்றல். நமது நடிகர்திலகத்தின் சன்னதியில் உன் எழுத்தோவியங்களும் சேர்ந்து கலக்கட்டும்.... எழுது ஷக்தி... எழுது".
(என் கிண்டலை நீ ரசிக்கிறாயோ இல்லையோ, ஸ்ரீதர் அண்ணாவும் வைஷுவும் நிச்சயம் ரசிப்பார்கள்).
-
Naan rasithen Saradhaa......
-
வயலின்
புல்லாங்குழல்
சாக்ஸபோன்
ட்ரம்பெட்
டிரம்ஸ்
யாழ்
சிதார்
மிருதங்கம்
கொன்னக்கோல்
ஜதி
பியானோ
நாதஸ்வரம்
மத்தளம்
மேன்டலின்
கிடார்
தபேலா
ஹார்மோனியம்
இத்யாதி... இத்யாதி
இவற்றை இங்கே கூறக் காரணம்...
இல்லாமலா....
தன்னுடைய 300க்கும் மேற்பட்ட திரைக்காவியங்களில் ஏராளமான இசைக் கருவிகளை நடிகர் திலகம் வாசிப்பினை நடித்துக் காட்டியுள்ளார். எந்த இசைக் கருவியானாலும் அவற்றைத் தத்ரூபமாக வாசிப்பதாக நடித்துள்ளவர் நடிகர் திலகம். அப்படிப்பட்ட காட்சிகளில் சிலவற்றை நிழற்படமாகத் தொகுத்து இங்கே வழங்குவதில் மிகவும் பெருமையடைகிறேன். இதில் நிச்சயமாக விட்டுப் போனவை இருக்கக் கூடும். விடுபட்டவற்றை நண்பர்கள் நினைவு கூர்ந்து இங்கு தகவலைப் பகிரந்து கொண்டு உலகத்தில் இந்த அளவிற்கு மிக அதிகமான இசைக்கருவிகளை வாசிக்கும் கலைஞராக நடித்தவர் நடிகர் திலகம் மட்டுமே என்பதிலும் அவர் படைத்த சாதனையை பறை சாற்றுவோம்.
இதோ உங்கள் பார்வைக்கு அந்த நிழற் படம்
http://i872.photobucket.com/albums/a...trumentsfw.jpg
அன்புடன்
-
VEENAI
Ithyaadhi ithyaadhi
-
டியர் ராகவேந்தர் சார் - இசையின் நாயகனாக நம் நடிகர்திலகத்தை காண வைத்த உங்களுக்கு நன்றி. மிகவும் அருமையான தொகுப்பு.
-
பேரறிஞருடன் நடிகர் திலகம்
[சென்னையில் 15.12.1968 ஞாயிறன்று மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் 125வது படவிழாவில் ("உயர்ந்த மனிதன்" படவிழாவில்) முதலமைச்சர் அண்ணா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து தனது பேரன்பிற்குரிய சிவாஜியை மனதாரப் பாராட்டி வாழ்த்தினார். அந்த விழாவில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் உங்கள் பார்வைக்கு:]
http://i1094.photobucket.com/albums/...alar/Anna1.jpg
இன்று 15.9.2011 முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 103வது பிறந்ததினம்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
டியர் பம்மலார்,
திராவிட இயக்கங்களின் தளகர்த்தா பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து அவருடைய படத்தையும் இங்கே பதிவேற்றி, அமர்க்களமாகக் கொண்டாடி விட்டீர்கள். இதை மேலும் சிறப்பிக்கும் வண்ணம், பேரறிஞர் அண்ணாவின் கதைக்கு கலைஞர் வசனம் எழுத, நடிகர் திலகத்தின் ஒப்பற்ற நடிப்பில், பானுமதிக்கு நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர் என்று அண்ணா பட்டம் சூட்டக் காரணமாயிருந்த ரங்கோன் ராதா திரைக்காவியத்திலிருந்து ஒரு இனிமையான பாடல் காட்சி. காற்றில் ஆடும் முல்லைக் கொடியே என்ற அந்த இனிமையான பாடலை பானுமதியே பாடியிருக்கிறார். இசை டிஆர்.பாப்பா.
http://www.youtube.com/watch?v=5wOM8...v&feature=uenh
அன்புடன்