-
ஆண்டனி, கோபால். (ஒரு ஒப்பீட்டுப் பார்வை).
http://i1098.photobucket.com/albums/...naOli00011.jpg http://i1.ytimg.com/vi/CJ0pm7hOJHI/hqdefault.jpg
ஒரு விஷயம் யோசித்துப் பார்த்தேன். 'ஞான ஒளி' ஆண்டனியையும் 'புதிய பறவை' கோபாலையும் கம்பேர் செய்து பார்த்தாலென்ன என்று.
புதிய பறவையின் நாயகன் கோபால் பற்றி நம் சூப்பர் ஸ்டார் கோபால் ஆய்வில் பிய்த்து உதறியிருந்தார். அதை இப்போது மனதில் கொள்க.
கோபால் என்ற அந்த இளைஞன் பெரும் தனவந்தன். ஆனால் நம் ஆண்டனியோ பரம ஏழை. ஆனால் பாருங்கள்... இருவருமே ஒரு வகையில் அனாதைகள்தான்.
குணத்தில் கோபால் ரொம்ப மிருதுவானவன். ஆனால் ஆண்டனியோ முரட்டுப் பயல் என்றே பட்டம் வாங்கியவன்.
கோபால் கொஞ்சம் reserved டைப். ஆண்டனியோ கலகல பேர்வழி. இருவருக்குமே மனைவி உண்டு.
கோபால் சற்று பால் கவர்ச்சியின்பால் மயங்கி மேல்நாட்டு நடன பாடகியை அவனுக்கேற்றவாறு இருப்பாள் என நம்பி, மணந்து கெட்டான். மகிழ்ச்சியை இழந்தான்.
ஆனால் ஆண்டனியோ விளையாட்டுத்தனமாய் காதலித்து தனக்கேற்ற குணம் கொண்ட பெண்ணை தேர்ந்தெடுத்து மனைவியாக்கிக் கொண்டான். மகிழ்ச்சியுடன் அவளுடன் வாழ்ந்தான்.
ஆண்டனி, கோபால் இருவருமே மனைவியை இழக்க நேரிட்டது.
ஆண்டனி மனைவியை அவளுடைய தலைப்பிரசவத்தில் இழந்தான். கோபாலோ தலைவிதியால் தன் மனைவியை அடித்துக் கொல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டான்.
கோபாலோ தனக்கு மீள்துணையாக லதாவை தேர்ந்த்தெடுத்து, அவளுடன் வாழத் துடித்தான். ஆண்டனியோ பாதிரியின் கனவுகளை நிறைவேற்றத் துடித்தான். மகளின் வாழ்வுக்காகவும் துடித்தான்.
இருவருமே சந்தர்ப்ப வசத்தால் குற்றவாளியாகி கொலைகாரர்கள் ஆனவர்கள். இருவருமே கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கமே இல்லாத நல்லவர்கள்.
மனைவியின் நடத்தை மோசமானதால் ஆத்திரம் கொண்டு கணவன் என்ற உரிமையில் கோபால் தன் மனைவியை அடித்தான்.
தன் அன்பு மகளின் வாழ்வுக்காக தந்தை என்ற ஸ்தானத்தில் அவளை உதாசீனம் செய்த அவள் காதலனை ஆத்திரத்தில் ஆண்டனி அடித்தான்.
இருவருமே கண்மூடிக் கண் திறப்பதற்குள் பொறுமை எல்லை மீற ஆத்திரத்தின் உச்சத்தைத் தொட்டவர்கள். இருவருமே உரிமையில் அடித்தவர்கள். மனைவி என்ற உரிமையில் முன்னவனும், பெண்ணின் காதலன் அல்லது மருமகன் என்ற உரிமையில் பின்னவனும். இருவருமே சொந்தங்களைக் காலி செய்தவர்கள்.
முக்கியமான ஒன்று. இருவருமே ஒரே ஒரு அடியில், ஒரே ஒரு நொடியில் உயிர்களைப் பறித்தவர்கள். அதனால் உயிர் போகும் என்று அறியாமல் செய்தவர்கள்.
கோபால் படித்தவன். சமூக மான, அவமானங்களுக்கு பயந்து தான் செய்த கொலையை யாருக்கும் தெரியாமல் புத்திசாலித்தனமாக மறைத்தவன். தான் மாட்டிக் கொள்ளாத வகையில் திட்டம் தீட்டியவன்.
ஆண்டனிக்கு அப்போது அது தேவை இல்லை. தன் மகளின் வாழ்வை ஆத்திரத்தில் தானே கெடுத்தவன். தான் செய்தது கொலை என்று தெரியாமலேயே மற்றவர்கள் சொல்லித்தான் அது கொலை என்று தெரிந்து கொண்டவன். வகையாக மாட்டிக் கொண்டவன். போலீசிடம் மாட்டித் தப்பித்த பின் தான் மாட்டிக் கொள்ளாத வகையில் திட்டம் தீட்டியவன்.
குற்றம் புரிந்தும் போலீசிடம் சிக்காதவன் கோபால். ஆனால் கொலைக் குற்றவாளியாய் சிறைக்கதவுகளுக்குள் பூட்டப்பட்டவன் ஆண்டனி. பின் தப்பித்து போலீசிடம் சிக்கிக் கொள்ளாதவன் ஆண்டனி.
தான் சிக்கிக் கொள்ளாதிருக்க சில கபட நாடகங்கள் நடத்தியவன் கோபால். போலீசிடமிருந்து தப்பிய ஆண்டனி என்ற அருணோ படு புத்திசாலி. அவன் எந்த நாடகமும் நடத்தாமல் தன் சாமர்த்தியத்தால், திறமையால் தன்னையே காப்பாற்றிக் கொண்டு வருபவன்.
கோபாலுக்கு இரண்டாம் காதலில் வெற்றியடைய வேண்டும் என்ற ஒரே வெறி. ஆண்டனிக்கோ பாதிரியாரின் லட்சியங்களை நிறைவற்றிக் காட்ட வேண்டும் என்ற ஒரே வெறி.
தன்னை வட்டமிடும் கழுகாக சுற்றுபவன் தன் போலீஸ் நண்பன் என்பதை நன்கறிந்து அவனுக்கு தண்ணி காட்டியவன் ஆண்டனி.
தன்னைச் சுற்றியிருக்கும் காவல் கழுகுகள் யாரன்று தெரியாமலேயே அவர்கள் விரித்த வலையில் கொஞ்சம் கொஞ்சமாக மாட்டிய அப்பாவி துரதிருஷ்டசாலி கோபால்.
சட்டப் பேய்க்குப் பயந்து பாசத்தை மறைத்துக் கொண்டு உள்ளுக்குள் ஊமையாய் அழுதான் ஆண்டனி.
எந்த சூழ்நிலையையும் மறந்து காதலை பகிரங்கமாகக் காட்டினான் கோபால்.
ஆண்டனியைக் குறி வைத்தது ஒரே ஒரு காவலன்.
கோபாலைக் ஒரு காவல்துறை குழுவே கண்காணித்தது.
கோபால் அவசரக்காரன். காதல் அவன் கண்ணை மறைத்தது. அவன் காதலியிடம் தன்னை நல்லவன் என்று நிரூபிக்க போராட வேண்டியிருந்தது. தன்னிடம் வந்த பழைய பறவையை டூப்ளிகேட் என்று புதிய பறவையிடம் நிரூபிக்க அவன் அளித்த ஆதாரங்கள் ஆணித்தரமாய் இருந்த போதிலும் இறுதியில் அவை ஆட்டம் கண்டன.
ஆண்டனி எமகாதகன். அழுத்தக்காரன். அவன் போலீஸ் நண்பனை இல்லை இல்லை எதிரியைப் பொறுத்தவரை. தான்தான் ஆண்டனி என்ற தடயங்களையே விட்டு வைக்காதவன்.
ஆனால் கோபால், ஆண்டனி இருவருமே காவல் துறையை கசக்கிப் பிழிந்தவர்கள்.
இருவருமே தங்களின் மீது, தங்கள் திறமைகள் மீது அசாத்திய நம்பிக்கை கொண்டவர்கள். இருவருமே உணர்ச்சி வசப்பட்ட கேஸ்கள். கோபால் பப்ளிக்காகவே உணர்ச்சிவசப்படக் கூடியவன். ஆண்டனியிடம் இது கொஞ்சம் வித்தியாசம். போலீஸ் நண்பன் முன்னால் மட்டும் உணர்சிவசப்படவே மாட்டான்.
கோபால் தன்னை மறந்து தன் வாயாலேயே தன்னை குற்றவாளி என்று சொல்ல வைக்கப்படும் நிலைக்கு ஆளாக்கப்பட்டவன்.
ஆண்டனியும் தன்னை மறந்து கோபத்தில் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டவன்.
இருவருமே தங்கள் வாயால் வாக்குமூலம் கொடுத்து, அல்லது கொடுக்க வைக்கப்பட்டு அதன் மூலம் மட்டுமே சிக்கியவர்கள்.
மகள் பாசம் என்ற பிரம்மாஸ்திரத்தில் வீழ்ந்தான் ஆண்டனி.
லதா காதல் என்ற பிரம்மாஸ்திரத்தில் வீழ்ந்தான் கோபால்.
கோபாலுக்கும், ஆண்டனிக்கும் நிறைய அடிப்படை ஒற்றுமைகளும் உண்டு. சில வேற்றுமைகளும் உண்டு.
ஆனால் இருவருமே பாவப்பட்டவர்கள். பரிதாபத்துக்குரியவர்கள்.
அதையெல்லாம் மீறி அன்பு உள்ளங்கள் அனைத்திலும் ஆட்சி செலுத்திக் கொண்டிருப்பவர்கள்.
-
Mr Neyveliar Sir,
Your analysis of Mr Antony & Mr Gopal is excellent. We can do this analysis with
NT only.
-
ஆண்டனி மற்றும் கோபால், மிக அற்புதமான ஒப்பீடு நன்றி திரு. வாசுதேவன் சார் . நான் முதலில் நம்ம கோபாலை தான் ஒப்பீடு செய்ய போவதாக நினைத்து படிக்க ஆரம்பித்தேன்.
-
திரு.வாசுதேவன் சார்,
தங்களுடைய ஆண்டனி, கோபால் - ஒப்பீட்டுப் பார்வை அருமை. இப்படியெல்லாம்கூட ஒப்பீடு செய்யமுடியுமா? அற்புதம்.
புதிய பறவை கோபாலையும், ஞான ஒளி ஆண்டனியையும் சேர்த்துவைத்த கலவையாக இருப்பவர் இங்குள்ள நம்ம வியட்நாம் கோபால் சார்???
-
vasu sir brilliant
வாசு சார்
நேர்த்தியான ஒப்பீடு
நடிகர் திலகத்தின் வேடங்களை இப்படி கூட ஒப்பீடு செய்ய முடியுமா எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை
Gk
-
படிக்காத மேதை ரங்கன்
பராசக்தி குணசேகரன்
படித்தால் மட்டும் போதுமா ராஜு
தெய்வமகன் சங்கர் கண்ணன் மற்றும் விஜய்
கலாட்ட கல்யாணம் மதன்
sumathi என் sundari மது
விஎட்னம் வீடு பத்மநாபா ஐயர்
கெளரவம் பர்ரிச்ட்டர் ரஜினிகாந்த்
தங்க சுரங்கம் ராஜன்
பரத விலாஸ் கோபால்
புதிய பறவை கோபால்
வசந்த மளிகை ஆனந்த்
உத்தமன் கோபி
தங்க பதக்கம் சௌத்ரி
உயர்ந்த மனிதன் ராஜு
ஞான ஒளி அந்தோனி அருண்
மேலை குறிப்பிட்ட
சில வேடங்களை நினவு கூர்ந்து பார்கிறேன் .வேடங்கள் நினைவுக்கு வருகிறதா சிவாஜி நினைவிற்கு வருகிறாரா
-
அன்புள்ள வாசுதேவன் சார்,
புதிய பறவை கோபால், ஞானஒளி ஆண்டனி ஒப்பீடு மிக மிக அருமை. இப்படியெல்லாம் கூட ஆய்வு செய்ய முடியும் என்று எப்படி உங்களுக்குத் தோன்றுகிறது என்பதே முதல் ஆச்சரியம். அதை ஒவ்வொரு படியாக நீங்கள் ஒப்பிட்டுக் கொண்டே செல்லச் செல்ல ஆச்சரியம் பன்மடங்காகிறது.
இருவரும் காவல் துறையால் குறிவைக்கப்பட்ட அப்பாவிகள். (திட்டமிட்டு கொலை செய்யாமல் உணர்ச்சி வசப்பட்டு அடித்த அடியில் எதிராளி உயிர் போக, அதனால் கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட அப்பாவிகள்).
பெரிய வித்தியாசம், இன்ஸ்பெக்டர் லாரான்சைப் பார்த்ததுமே அருணாக இருக்கும் ஆண்டனி உஷாராகிறார். தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறார். சாத்துக்குடி பிழிவதாகட்டும், சிலவர் டம்ப்ளர் வசனத்தைச்சொல்லி கையுறையை கழட்டுவதாகட்டும், தப்பாக கையெழுத்திட்ட செக்கைக் கிழித்து தன பாக்கெட்டிலேயே போட்டுக்கொள்வதாகட்டும், எங்கும் கவனம், எதிலும் கவனம், 'எதிரே இருப்பவன் என்னைப்பிடிக்க அலையும் போலீஸ்' என்ற எச்சரிக்கையுணர்வு.
ஆனால் அப்பாவி கோபால் நிலை அப்படியல்ல. கடைசிக்காட்சி வரை தன்னைச்சுற்றி இருப்பவர்கள் அனைவரும் (தன போலீஸ் நண்பன் குமார் உள்பட) அபிமன்யுவை வீழ்த்த சுற்றி வளைத்த கௌரவர் கூட்டம் என்பது தெரியவே தெரியாது. தன்னைப்பிடிக்க விரித்து வைக்கப்பட்ட வலையினுள்ளேயே இத்தனை நாள் வளைய வந்திருக்கிறோம் என்று அறியும்போது அடையும் அதிர்ச்சி, அது ஆண்டனிக்கு நேராத ஒன்று. அதனால்தான் "என்னை வீழ்த்த வேறு எந்த வேஷத்தையாவது போட்டிருக்க கூடாதா?" என்று அந்த அப்பாவி, அப்பாவித்தனமாகக் கேட்கும்போது நம் மனம் பதை பதைக்கும். அடப்பாவிகளா, எங்க அபிமன்யுவை இப்படி வேஷம் போட்டே வீழ்த்திட்டிங்களடா என்று கதறும்.
இருவரும் இறுதியில் சிறைக்குச்செல்கின்றனர். அதிலும் வித்தியாசம்..
தன மகளின் கற்பின்மீது சுமத்தப்பட்ட களங்கத்தை துடைத்து அவளை புனிதமாக்கிவிட்டோம் என்ற பெருமிதத்தோடு சிறைக்குச்செல்லும் தந்தை ஆண்டனி...
காதலி வேஷம் போட்டவளிடம் ஏமாந்து மாட்டிக்கொண்டோமே என்ற விரக்தியில் நடந்து போகும் காதலன்(?) கோபால்....
-
Dear Vasu Sir
The comparison between Puthiya paravai Gopal and Gnana oli Antony is unimaginable. Really you are man of imagination
C.Ramachandran
-
Dear Gopal,
I hope you understand the context and my stance regarding your subject of posting. I do not want my post and never had intention to hurt any body any time any how which includes you too.
Pls continue your in-valuable postings here.
Don't bother about other threads.
Raghavendran.
P.S. தங்கள் ஆய்வுக்கேற்ற தீனி வர உள்ளது. தயாராகுங்கள்.
-
டியர் வாசு சார்
தங்களுடைய உடல் நலம், பல்வேறு அலுவல்களுக்கிடையிலும் சிரமங்களுக்கிடையிலும் மீண்டும் இங்கே அந்தோணி மூலம் வருகை தந்து, மிகச் சிறப்பான ஆய்வை வழங்கியுள்ளீர்கள். தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.