good night sir.
Printable View
good night sir.
வாசு சார்
ருஷ்யேந்திரமணி அவர்கள் பற்றி முத்திரை பதித்த நடிகைகள் என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை இதோ
முத்திரை பதித்த நடிகைகள் 10: ருஷ்யேந்திரமணி
பல கதாபாத்திரங்கள் நம் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடும் .. ஆம் படிக்காத மேதையில் ரங்காராவ் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அப்படி ஒரு பாத்திரம் தான் மாயா பஜாரில் அபிமன்யுயின் தாயாக நடித்த ருஷ்யேந்திரமணி அவர்களையும் மறக்க முடியாது.
1917'ல் விஜயவாடாவில் பிறந்த இவர் சிறு வயதுமுதலே தெலுங்கு நாடகங்களில் நடித்தார், பின் கண்ணாம்பாவின் நாடக குழுவில் சேர்ந்து நடித்தார்.
அதன்பிறகு சில படங்களில் நாயகியாக, இரண்டாம் நாயகியாக நடித்தார். பின் பல கதாபாத்திரங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல
மொழிகளில் நடித்து மக்களை கவர்ந்தார்.
அந்த காலத்தில் சில பட கம்பெனிகள் நடிகர்களை மாத சம்பளத்திற்கு வைத்திருந்தனர். குறிப்பாக விஜயா வாஹினி( நாகிரெட்டி சக்ரபாணி) பல நடிகர் நடிகைகளை
மாத சம்பளத்திற்கு வேலையில் வைத்திருந்தனர்.அவர்கள் தயாரிக்கும் படங்களில் நாயகன் நாயகி மாறுவர் ஆனால் இந்த நடிகர் நடிகையர் மாறுவதில்லை
ருஷ்யேந்திரமணி,சூரியபிரபா,சாரஙகபாணி,ரங்காராவ் .
ஆம் அப்படி விஜய வாஹினிபடங்களில் ஆஸ்தான நடிகையாக இருந்தார் ருஷ்யேந்திரமணி.
மாயாபஜாரில் கண்ணனின் தங்கை பாத்திரத்தில் நம்மை கவர்ந்தவர் இவர்.
மிஸ்ஸியம்மாவில் ரங்காராவின் மனைவியாக சாவித்திரியிடம் அன்பை பொழியும் தாயாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
அம்பிகாபதியில் குலோத்துங்க சோழனின் மனைவியாக தன் மகளின் காதலை எதிர்க்கும் தாயாக அருமையாக நடித்திருபார்.
எங்க வீட்டு பிள்ளையில் முரட்டு எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழை அழகாக உச்சரித்து நடிப்பதில் இவரும் கண்ணாம்பா சாவித்திரிக்கு சளைத்தவர் இல்லை.
தெலுங்கில் பல படத்தில் பல அருமையான கதாபாத்திரங்கள்,சொந்த குரலில் பாடுவதிலும் வல்லவராக திகழ்ந்தவர்.
தமிழில் குறைந்த படங்களே செய்தாலும் நான் பார்த்து மகிழ்ந்து வியந்த நடிகைகளில் இவரும் உண்டு.
150 படங்களுக்கு மேல் நடித்த இவர் முத்திரை பதித்த நடிகைகளில் இல்லாமல் இருப்பாரா என்ன.
இந்த தொடர் மூலம் இதுபோன்ற அருமையான நடிகைகளை நினைவு கூர்வதும் அவர்கள் திரையில் பதித்த முத்திரையையும்
முக நூலில் எடுத்து சொல்வதே என் நோக்கம்..
அதிசயமாக அல்லது அபூர்வமாக இணைய இணைப்பு இரவில் எப்போதாவது கிடைக்கிறது. விடலாமா...
வாசு சாருக்கு முதலில் கோடி நன்றிகள்.. உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் வரவில்லை உணர்ச்சிகரமான பதிவைப் பாராட்ட..
ஷ்யாம் மெல்லிசை மன்னரின் சிஷ்யரல்லவா... பாடல்களின் சிறப்பை சொல்லவும் வேண்டுமோ..
ராஜேஷ்
தங்களின் முகநூல் பதிவுகள் படிக்க மிகவும் சுவாரஸ்யமாகவும் பல புதிய தகவல்களைத் தருவதாகவும் உள்ளன. பாராட்டுக்கள்.
1970களின் பிற்பகுதி தமிழ்த் திரையுலக இசை வரலாற்றில் குறிப்பிடத் தக்கதாகும். பல புதிய இசையமைப்பாளர்கள் வந்த நேரம். அனைவருமே சிறப்பான பாடல்களைத் தந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இவர்களில் தலையாயதாய் நின்று இன்று வரலாற்றில் தனக்கெனத் தனி இடம் பிடித்தது இளையாராஜாவின் வருகை. 1976 முதல் 1980 வரை வேறு எந்த இசையமைப்பாளர் பக்கமும் மக்கள் திரும்பாத அளவிற்கு மிகவும் பிரபலமாக விளங்கினார். அவருக்கென அன்று உருவான ரசிகர்களின் எண்ணிக்கை இன்று கோடிக்கணக்காய் நிலைத்திருப்பது பெரும் மகிழ்வூட்டும் விஷயம். பத்ரகாளி உறவாடும் நெஞ்சம் அவர் எனக்கே சொந்தம் நதியைத் தேடி வந்த கடல், லட்சுமி, பஞ்சமி பாடல்கள் இவரைப் புகழின் உச்சாணிக் கொம்பில் கொண்டு போய் நிரந்தரமாக வைத்து விட்டன.
அப்படிப்பட்ட காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்து சரத்பாபு ஜெயலலிதா நடித்த நதியைத் தேடி வந்த கடல் படத்திலிருந்து இந்தப் பாடலைப் பார்க்கவும் கேட்கவும் தவித்தது துடித்தது நெஞ்சம். இப்போது அந்த ஆசை நிறைவேறி விட்டது.
http://youtu.be/k8iyDV3Tk1M
இனிமை இதோ இதோ எனக் கூவி அழைக்கும் பாடல்.... கேட்டுக் கொண்டே இருக்கலாம். இளையராஜாவின் புகழுக்கு சான்றான இன்னொரு பாடல்.
அள்ளி வெச்ச மல்லிகையே..
http://youtu.be/hYIz6g1YCIg
நடிகை வனிதாவின் கணவர் கிருஷ்ணசந்திரனுடன் பி.சுசீலா பாடிய பாடல்
ஜெயச்சந்திரனின் இனிமையான குரலில் காலத்தால் அழிக்க முடியாத பாடல்.... இது முடிவல்ல... ஆரம்பம் தான்... இளையராஜாவின் புகழ்க் கிரீடத்தில் இன்னொரு வைரம்..
பாடி வா தென்றலே... ஒரு பூவைத் தாலாட்டவே...
http://youtu.be/F-MUX5i-rV8
இளையராஜாவின் குரலைப் பற்றி சிலருக்கு வேறு விதமான கருத்து இருந்திருக்கலாம்.. ஆனால் அதைப் போக்கும் இந்தப் பாடல்.. ஆரம்ப ஹம்மிங்கே நெஞ்சைத் தொடும் இனிய பாடல்...
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்...
உறங்காத நினைவுகள் படத்தில் இப்பாடல் நம் நெஞ்சை ஊடுருவிச் செல்லும்
http://youtu.be/fuA11g8UnDI
வித்தியாசமான தாளக் கட்டுக்களில் நம்மை அசத்துவதில் சக்கரவர்த்தி மெல்லிசை மன்னர் விஸ்வநாதன். அவருக்கு அடுத்து இந்த மாதிரியான பரீட்சார்த்தமான முயற்சிகளில் வெற்றி கண்டவர் இளையராஜா. அதில் இனிமையும் உணர்ச்சியும் கலந்து தருவதிலும் அவர் வல்லவராய் விளங்கினார். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்தப் பாடல். உறங்காத நினைவுகள் படம் இளையராஜாவின் சிறந்த படைப்புகளில் ஒன்று. அதற்கு கட்டியம் கூறுவது இந்த பாடல்... நறுமண மலர்களின் சுயம்வரமோ... பாடலின் இடையில் வரும் சோலோ வயலின் நம்மை என்னவோ செய்யும்... எஜ்.ஜானகியின் இசைப்புலமைக்கும் இப்பாடல் ஒரு சான்று.
http://youtu.be/SpDMsSMlYRE