-
மக்கள்திலகம் மேன்மைமிகு இத்திரியினில் பங்கு கொள்ளும் எல்லா தோழர்களும் பதியும் அருமையான நிழற்படங்கள், தகவல்கள், ஆவணங்கள் அனைத்தும் அட்டகாசம்... கடந்த 22-02-2015 தினமலர் -திருச்சி, வேலூர் பதிப்பு - வாரமலர் இணைப்பில் " திருப்பு முனை தந்த பாடல்கள் " தொடரில் என்றேண்டும் வெற்றி முகம் காணும் மகத்தான காவியமாம் " ஒளிவிளக்கு "- காவிய பாடலான "ஆண்டவனே உன் பாதங்களை " - பாடல் விவரங்கள் நன்று... ஆனால் கட்டுரையில் ஒளிவிளக்கு திரைப்படம் சூப்பர் ஹிட் அளவுக்கு இல்லை......என கட்டுரையாளர் எழுதியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது...திரையுலக வாழ்வில் ஒரு நடிகரின் 100 - வது திரைப்படம் வெளியான அன்று முதல் மறு, மறு, மறு,இன்றைய வெளியீடுகள் வரையில்லும் தொடர்ந்து சூப்பர் ஹிட் - ஆக நடைபெறுவதை கூட தெரிந்து கொள்ளாமல் ஒரு கட்டுரையாளர் எழதுவதை தினமலர் - நிர்வாகம் கவனிக்காதது முற்றிலும் தவறு...
-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
முகராசி படபூஜையின்போது எடுக்கப்பட்ட நமது திரியில் இதுவரை இடம் பெறாத மிகவும் அரிய புகைப்படத்தை பதிவிட்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. இடது ஓரமாக படத்தில் நடிக்காத நடிகர் பி.எஸ்.வீரப்பா அவர்களும் உள்ளார்.
தலைவர் பற்றி பத்திரிகைகளில் வெளியாகும் அற்புதமான செய்திகளை பதிவிடும் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும். துக்ளக் இதழில் வெளியான திமுக மூத்த தலைவர் திரு.துரைமுருகனின் பேட்டி அற்புதம். திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தாலும் தலைவரை என் மனம் கவர்ந்தவர் என்று அவர் துணிச்சலாக கூறியிருப்பது பாராட்டுக்குரியது.
திரு. வினோத் சாரின் மார்ச் மாத நினைவலைகள் தொகுப்பு அருமையாக உள்ளது. நன்றி.
திரு.முத்தையன் அவர்களின் ஸ்டில்ஸ் அணிவகுப்பு அபாரம். நுணுக்கமான உணர்வுகளை தலைவர் வெளிப்படுத்தும் காட்சிகளை பதிவிடும் அவருக்கு நன்றிகள்.
திரு.கலிய பெருமாள் அவர்கள் பதிவிட்ட அன்பே வா படக் காட்சிகள் கண்களுக்கு விருந்து. நன்றி சார்.
திரு.வி.பி.சத்யா அவர்கள் பதிவிட்ட ரசிகர்களின் புதுமையான முயற்சி வீடியோ காட்சிகள் பிரமாதம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்தாலும் அற்புதமான வீடியோ காட்சிகளை பதிவிட்ட திரு.ரூப் குமார் அவர்களுக்கு நன்றி.
தலைவரின் அரிய புகைப்படங்களை பதிவிடும் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு பாராட்டுக்கள்.
திரு.சைலேஷ் பாசு சார், அன்னை தெரசாவும் தலைவரும் எந்த பத்திரிகையால் எந்த ஆண்டு சிறந்த குடிமகன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்ற விவரம் நினைவில் இல்லை. மன்னிக்கவும். திரு.குமார் சார், திரு.எஸ்.வி. சார், திரு.செல்வகுமார் சார் போன்றோருக்கு இது குறித்து தெரிந்தால் விவரங்கள் பதிவிடுமாறு கோருகிறேன்.
திரு. சுஹராம் அவர்கள் இதேபோன்று அடிக்கடி பங்கேற்க வேண்டும். நல்ல கருத்தை கூறியுள்ளீர்கள். நன்றி.
திரு.ஜெய்சங்கர் சார் அவர்களும் நேரம் கிடைக்கும்போது பங்கேற்க வேண்டும் என்று தாழ்மையுடன் கோருகிறேன்.
எனது பதிவுகளை பாராட்டிய நல்லிதயங்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
-
-
-
-
-
-
-