http://i66.tinypic.com/2ijj95j.jpg
Printable View
1961 தீபாவளி அன்று வெளிவந்த 2 படங்கள் பற்றி திரு விசு இயக்குனர் அளித்த ஒரு பேட்டியில்
சென்னை அண்ணா சாலையில் இருந்த பிளாசா திரை அரங்கில் எம்ஜிஆரின் தாய் சொல்லை தட்டாதே திரைப்படம் வெளிவந்தது .
பாரகன் திரை அரங்கில் சிவாஜியின் கப்பலோட்டிய தமிழன் வெளிவந்தது , முதல் நாள் காலை காட்சிக்கு விசுவும் அவரது நண்பர்களும் பாரகன் அரங்கிற்கு சென்றபோது கூட்டமே இல்லை என்றும் ரசிகர்கள் ஓரளவிற்கு இருந்தார்கள் என்பதை நேரில் பார்த்த பின் எம்ஜிஆரின் படம் வெளிவந்த பிளாசா அரங்கிற்கு சென்று பார்த்த போதுதான் அவர்களுக்கு உண்மை நிலவரம் புரிந்ததுள்ளது . கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டமும் பொதுமக்களும் திரண்டு திருவிழா போல் காட்சி தந்ததை கண்டுள்ளார்கள் . ஆச்சரியமும் வியப்பும் என்னவென்றால் அந்தகூட்டத்தில் வரிசையில் நின்றவர்கள் ஏராளமான கதர் ஆடை அணிந்த காங்கிரஸ் பக்தர்கள் .
இப்போது புரிகிறதா ...?
தாய் சொல்லை தட்டாதே பிரமாண்ட வெற்றி ..1961ல் வசூலில் சாதனை புரிந்த காவியம் .
[quote=masthaan saheb;1335636]இப்பவாவது ரோசம் வந்ததே
திரு மஸ்தான்
உங்கள் கவனத்தை ஆக்கபூர்வமாக பதிவிடுங்கள் . கிண்டலும் கேலியும் தேவை இல்லை ..மக்கள் திலகம் எம்ஜிஆர் எப்போதும் கண்ணியத்தை கடைபிடித்தார் . இனி மேல் தவறு செய்யாதீர்கள் .
வாழ்த்துக்கள் .
நன்றி எஸ்வி அய்யா. மக்கள் திலகத்தை தனிப்பட்ட முறையில் தாக்கி பதிவு போடுகிறார்கள் . ரத்தம் கொதிக்கிறது.
இதற்கு எல்லாம் இனி விளக்கம் சொல்லி பயான் இல்லை.
நாம்பளும் பதிவுகள் போடவேண்டிதான்.
ரவிசந்திரன் பதிவுகளை நீக்காததற்கு உங்களுக்கும் நன்றி. அங்கெ போயி பாருங்கள். அவர்கள் நீக்கினால் நாம்பளும் நீக்கலாம். அதுவரை இருக்கட்டும். அவர்கள் நெறியாளருக்கு என்ன விதியோ அதுவே தான் உங்களுக்கும் விதி. அவர்களுக்கு இல்லாத பெருந்தன்மை நம்பளுக்கு மட்டும் தேவை இல்லை. அவர்கள் புரட்சி தலைவரை தனிப்படட முறையில் தாக்கி உள்ள பதிவுகளை நீக்காத வரையில் தலைவரின் பக்தரான நீங்களும் நீக்காதீர்கள் ரவிச்சந்திரன். நீங்களும் உண்மையான புரட்சி தலைவர் பக்தர். நன்றி.
இறைவா உன் மாளிகையில்
ஒரு மன்னரும் அவரது அமைச்சரும் நகர சோதனை நிமித்தம் செல்கையில் சற்றுத் தொலைவில் இறந்தவர் ஒருவரின் சடலம் இறுதிச் சடங்குக்காக எடுத்துச் செல்லப்படுவதைக் கண்டனர். மன்னர் அமைச்சரிடம் அங்கே சென்று விவரம் அறிந்துவரக் கூறினார். அமைச்சரும் அங்கு சென்று இறந்தவர் குறித்த விவரத்துடன் திரும்பினார். அவரிடம் மன்னர் கேட்டார், "இறந்தவர் எங்கே செல்கிறார்? சொர்க்கத்துக்கா நரகத்துக்கா?" என்று. அவர் சொர்க்கத்துக்குச் செல்வதாக அமைச்சர் கூறினாராம். "ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?" என்று மன்னர் கேட்டதற்கு அமைச்சர் கூறினாராம், "இறந்தவர் தாம் வாழ்ந்த காலம் முழுவதும் தன் உற்றார், உறவினர், சுற்றத்தார் மற்றும் ஊரார் யாவருக்கும் பேருதவி புரிந்து வந்தார். அவர் இழப்பினால் யாவரும் மிகவும் கவலை கொண்டுள்ளனர். இனி யார்
தங்களைத் துன்பங்களிலிருந்து காப்பார் என மன வருத்தம் அடைந்துள்ளனர்." என்றார்.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
http://www.thamizhisai.com/tamil-cin...avan/kan-pona-
pokkile.php
நம் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தம் வாழ்நாள் உள்ளளவும் மக்கள் நலமாக வாழ உண்மையாக உழைத்தவர். தன்னிடமுள்ள செல்வங்களனைத்தையும் பிறர் நலனுக்கென ஈந்தவர். அவர் சிறுநீரகக் கோளாறினால் அவதியுற்று சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவ மனையில் சில நாட்கள் சிகிச்சை பெற்ற பின் அப்பொழுதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அனைத்து மருத்துவ வசதிகளுடன் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்த ஒரு விமானத்தில் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள மருத்துவமனையொன்றில் சிறுநீரக அறுவை
சிகிச்சை பெற்றுவந்தார்.
அந்த சமயத்தில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சதாசர்வகாலமும் எம்ஜிஆர் நலம் பெற்றுத் திரும்ப வேண்டுமெனத் தொடர்ந்து பிரார்த்தனை செய்தனர். தெருவெங்கும் தினம்தோறும் இதுகுறித்த பிரார்த்தனைப் பாடல் தொடர்ந்து ஒலிபரப்பப் பட்டது. உலகிலேயே இன்றுவரை வேறு யாருக்காகவும் இத்தகைய ஒருமனதான பிரார்த்தனை நடந்ததில்லை எனக் கூறலாம். மக்களின் பிரார்த்தனையின் பலனாகவும், அவரது சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியின் மகள் தனது சிறுநீரகம் ஒன்றை அவருக்கு தானமாக அளித்ததாலும் எம்ஜிஆர் உடல் நலம் பெற்று மீண்டுவந்தார்.
இதற்கிடையே நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மருத்துவமனியில் இருந்தவாறே போட்டியிற்று வெற்றியும் பெற்ற அவர் தாயகம் திரும்பியதும் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுச் சில காலம் இருந்த பின்னர் காலமானார்.
உள்ளத்தை உருகச் செய்யும் அந்தப் பாடல் இதோ:
திரைப்படம்: ஓளி விளக்கு
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1968
இறைவா உன் மாளிகையில்
இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு
நம்பிக்கையின் ஒளிவிளக்கு
ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன் முருகையா
ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன்
பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணூலகம் என்னாகும்?
ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன் முருகையா
மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடிதுடிக்கும்
வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்
உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்
மன்னனுயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு
இறைவா நீ ஆணையிடு ஆணையிடு
COURTESY
Posted by A K Rajagopalan
போயும் போயும் மனிதனுக்கிந்த
இன்று தேதி 13. ஆங்கிலேயர்களின் நம்பிக்கைப்படி 13 ஒரு அதிர்ஷ்டமில்லாத எண் (அன்லக்கி நம்பர்). ஆனால் இதே எண் தமிழர்களுக்கு அதிர்ஷடத்தைக் கொண்டு வந்துள்ளதென எண்ணுமளவிற்கு இன்று வெளியிடப்பட்ட மாநிலத் தேர்தல் முடிவுகள் மக்கள் விரோதமான அரசியல்வாதிகளின்ன் போக்கிற்கு பதிலடி கொடுத்துள்ளதைக் காட்டுகின்றன.
சிலர் பிறரது தவறுகளால் விளையும் பலன்களைக் கண்டு தங்களைத் திருத்திக் கொள்வர். இன்னும் சிலம் தமது தவறுகளால் விளையும் பலன்களைக் கண்டு திருந்துவர். வேறு சிலர் எதனைக் கண்டும் திருந்த மாட்டார்கள். இத்தகைய திருந்தாத மனிதர்களையே திரும்பத் திரும்பத் தங்களது தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் இன்னமும் மாறியதாகத் தெரியவில்லை.
தற்போதைய ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்ததவர்கள் சுமார் 45% வாக்காளர்களே. 40% வாக்காளர்கள் பழைய ஆட்சியே தொடர்வதற்கே வாக்களித்துள்ளனர். இந்த நிலை மிகவும் தெளிவாக உணர்த்துவது என்னவெனில் மக்களில் ஒரு சாரார் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கையில் அவரை நல்லவர் என்று கண்மூடித் தனமாக நம்புவதும், ஒரு சாரார் அனைவருமே தவறு செய்பவர்களே என்று அலட்சிய மனப் பான்மையுடன் வாக்களிக்காதிருப்பதும், ஒரு சாரார் நேர்மையைக் கடைபிடிக்காமல் கையூட்டும் இலவசப் பரிசுகளையும் பெற்றுக்கொண்டு தங்களுக்கு சாதகமாக செயல்படும் தலைவர்களை மட்டுமே தேர்ந்துடுப்பதும், ஒரு சாரார் நாட்டு நடப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளாது தெளிவில்லாத மன நிலையில் யாரோ ஒருவருக்கு வாக்களிப்பதும், பலர் வாக்களிக்காதிருப்பதுமே ஆகும்.
மக்களில் பலர் சமுதாய உணர்வின்றி வாழ்ந்து வருவது இதன் மூலம் தெளிவாகிறது. தன் வாழ்நாள் முழுவதும் பொய்மையே பேசிப் பிறரை என்றும் ஏமாற்றியே வாழ்ந்து வரும் சிலர் அவர்களது குற்றங்கள் ஆதாரபூர்வமாகப் பலரும் அறியும் வண்ணம் வெளீயான பின்னரும் தங்களைக் குற்றமற்றவர்களென்று கூறிக்கொண்டு மீண்டும் மீண்டும் மக்களின் அறியாமையைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து தன் சுயநலனை மட்டுமே பேணி வாழ இடமளிக்கும் இத்தகைய பகுத்தறிவற்ற சமுதாய நிலை மாறி உண்மையைத் தெளிவாக அறிந்து அதன் அடிப்படையில் தம்மை ஆள்வோரைத் தேர்ந்தெடுக்கும் அறிவுபூர்வமான சமுதாய நிலை என்று நம் நாட்டில் மலர்கிறதோ அன்றே மக்கள் நல்வாழ்வு வாழ வழிபிறக்கலாகும். அதுவரை தற்போது நிகழ்ந்துள்ளது போன்ற மாற்றங்கள் எவையும் நிரந்தரமான நற்பலனை ஏற்படுத்துவது நிச்சயமல்ல.
மனிதனை மனிதன் மதிப்பது மட்டுமின்றி மனித மனத்தின் தன்மையை அறிந்து அவ்வறிவின் மூலம் தெளிவான முடிவுகளை மேற்கொள்ளும் தகுதியை என்று மக்கள் அடைகின்றனரோ அன்றே சமுதாயம் வளம் பெறும். பொய் முகங்களை அணிந்து மெய்யன்பர்கள் போல் நாடகமாடும் போலிகளை அடையாளம் காண்பதே மெய்யான பகுத்தறிவாகும்.
போயும் போயும் மனிதனுக்கிந்த
திரைப்படம்: தாய் சொல்லைத் தட்டாதே
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே இறைவன்
புத்தியைக் கொடுத்தானே அதில்
பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே மனிதன்
பூமியைக் கெடுத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
கண்களிரண்டில் அருளிருக்கும் சொல்லும்
கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்
கண்களிரண்டில் அருளிருக்கும் சொல்லும்
கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் அது
உடன் பிறந்தோரையும் கருவறுக்கும்
பாயும் புலியின் கொடுமையை இறைவன்
பார்வையில் வைத்தானே புலியின்
பார்வையில் வைத்தானே இந்தப்
பாழும் மனிதன் குணங்களை மட்டும்
போர்வையில் மறைத்தானே இதயப்
போர்வையில் மறைத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
கைகளைத் தோளில் போடுகிறான் அதைக்
கருணை என்றவன் கூறுகிறான்
கைகளைத் தோளில் போடுகிறான் அதைக்
கருணை என்றவன் கூறுகிறான்
பைகளில் எதையோ தேடுகிறான் கையில்
பட்டதை எடுத்து ஓடுகிறான்
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே இறைவன்
புத்தியைக் கொடுத்தானே அதில்
பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே மனிதன்
பூமியைக் கெடுத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
COURTESY
Posted by A K Rajagopalan