As papanasam and npno releasing on July 3 now big question is will vaalu release on July 3 as announced...?
Printable View
As papanasam and npno releasing on July 3 now big question is will vaalu release on July 3 as announced...?
ஜிகிர்தண்டாவுக்கு 7, கத்திக்கு 8, வேலையில்லா பட்டதாரிக்கு 9
வருடந்தோறும் தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்கு சைமா விருதுகள் வழங்கப்படும். சென்ற வருடம் இந்த விருது விழா மலேசியாவில் நடந்தது. இந்த வருடம் துபாயில்.
ஆகஸ்ட் 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெறும் இந்த விழாவில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழித் திரைப்படங்களுக்கும், கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
கார்த்திக் சுப்பராஜின் ஜிகிர்தண்டா 7 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கத்தி 8 பிரிவுகளில். சிறந்த நடிகர், நடிகை, இயக்கம், சிறந்த படம் உள்பட 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு பரிந்துரை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது வேலையில்லா பட்டாரி.
இதிலிருந்தே சைமா விருதின் தரத்தை நீங்கள் எடைபோட்டுக் கொள்ளலாம்.
விமரிசையாக நடந்த சினேகாவின் வளைகாப்பு
நடிகை சினேகாவின் வளைகாப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று விமரிசையாக நடந்தது.
சினேகாவும், பிரசன்னாவும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்துக்காக யுஎஸ் சென்ற போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. 2012 -இல் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது சினேகா கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு வளைகாப்பு சடங்கு நேற்று நடந்தது.
நாகராஜன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்துவரும் பிரசன்னா வளைகாப்புக்காக நேற்று சென்னை வந்திருந்தார். இந்த நிகழ்வில் இருவீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
ரஜினிமுருகன் படவெளியீடு தள்ளிப்போகிறதா?
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருக்கும் ரஜினிமுருகன் ஜூலை பதினேழாம்தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. அதன்பின்னர் அதேதேதியில் தனுஷ் நடித்திருக்கும் மாரி படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.
இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து சிம்பு நடித்த வாலு படமும் அதேநாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரேநாளில் இம்மூன்று படங்களும் வெளியாவதாகச் சொல்லப்பட்டதால் திரையுலகில் பரபரப்பு இருந்தது. மூன்றுபடங்களைத் தயாரித்திருப்பதும் பெரியநிறுவனங்கள் என்பதால், திரையரங்குகள் பிடிப்பது, விளம்பரம் செய்வது என்று எல்லாவற்றிலும் கடும்போட்டி இருக்கும் என்று சொல்லப்பட்டது.
இப்போது பார்த்தால் அந்தத்தேதியில் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் வருவது சந்தேகம் என்கிறார்கள். அந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் திருப்பதிபிரதர்ஸ்நிறுவனம் தயாரித்திருக்கும் இன்னொரு படமான இடம்பொருள்ஏவல் படம் ஜூலை வெளியீடு என்று விளம்பரம் செய்யப்படுகிறது. ரஜினிமுருகன் படம் எப்போது என்பது பற்றி எந்தத்தகவலும் இல்லை. இதுபற்றி விசாரித்தால், ரஜினிமுருகன் படத்தின் வேலைகளே இன்னும் முடிவடையவில்லை என்று சொல்கிறார்கள்.
பின்னணிஇசைச்சேர்ப்பு வேலைகளே இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் சொல்கிறார்கள். ஒருபடத்துக்குப் பின்னணிஇசைச்சேர்ப்பு மிகவேகமாகக்கூட நடந்துமுடிந்துவிடும் என்றாலும், இடம்பொருள்ஏவல் படஅறிவிப்பு மற்றும் ரஜினிமுருகனுக்குத் தேதி சொல்லாமல் விளம்பரம் வருவது ஆகியனவற்றைப் பார்க்கும்போது ஜூலை 17 அந்தப்படம் வெளியாவது சந்தேகமே என்கிறார்கள்.
கமல், ஷங்கர், மணிரத்னம் ஆகியோரின் நற்செயல்.
சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை கமல், மணிரத்னம், பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் வேண்டாம் என்று அறிவித்துள்ளனர்.
சமையல் எரிவாயுவிற்கு மானியமாக 40 ஆயிரம் கோடியை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிவருகிறது. இந்த செலவு மத்திய அரசுக்கு பெரும் சுமையாகவே இருக்கிறது. எனவே வசதி படைத்தவர்கள் தங்களுக்கான மானியத்தை விட்டுத் தருமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
இதைத் தொடர்ந்து 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கான சமையல் எரிவாயு மானியம் வேண்டாம் என்று அறிவித்துள்ளனராம். இதைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலக நட்சத்திரங்களான கமல்ஹாசன், பிரபு, இயக்குநர் மணிரத்னம், சின்மயி, பாடகர் ஜேசுதாஸ், அவரது மகனாக விஜய் ஜேசுதாஸ், புனிதா பிரபு, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டவர்கள் தங்களுக்கு கேஸ் எரிவாயுவிற்கான மானியம் தேவையில்லை என்று அறிவித்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.
உடல் நிலையில் முன்னேற்றம் - விரைவில் வீடு திரும்புகிறார் எம்.எஸ்.விஸ்வநாதன்
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல்நிலை தேறி வருவதால் அவர் விரைவில் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.
இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு தற்போது 87 வயதாகிறது. சில ஆண்டுகள் முன் அவர் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இந்நிலையில் கடந்த 14 -ஆம் தேதி அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சில தினங்களில் அவர் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.
மெல்லிசை மன்னருக்கு நேற்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
manushan uyiroda irukkara varaikkum evanum oru manivizha, paaraatu vizha edukka maatanga. msv irandha piragu paarunga ellarum inna drama panna porangannu.
டி.ஆரின் பப்பரப்பா பாடல் - விழித்திரு
https://www.youtube.com/watch?v=5UstkXu6HZU
தமிழில் உருவாகும் ஷட்டர் ரீமேக் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டரான எடிட்டர் ஆண்டனி ஷட்டர் படத்தின் ரீமேக் மூலம் இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டன. தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.
த்ரில்லர் படமான இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். மேலும் அனுமோல், கல்யாணி நடராஜன்,தீட்சிதா கோத்தாரி, ஆகியோரும் நடிக்கிறார்கள். படத்தை தனது தின்க் பிக் ஸ்டூடியோஸ் மூலம் தயாரிக்கிறார் இயக்குநர் விஜய்.
எம்.எஸ்.பிரபு படத்திற்கு ஒளிப்பதிவு. படத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஷட்டர் மலையாளத்தில் 2012ம் ஆண்டு வெளியான த்ரில்லர் படம். ஜாய் மேத்யூ என்பவர் எழுதி இயக்கி தானே நடித்த ஹிட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சங்கத்தில் 60 கோடி ஊழல்! எஸ்.வி.சேகர் அதிரடி குற்றச்சாட்டு!
நடிகர் சங்க கட்டிடத்தில் 60 கோடிரூபாக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக எஸ்.வி.சேகர் கோபத்துடன் கூறியுள்ளார்.
மன்னார்குடி இயல் இசை நாடகம் மன்ற நிகழ்சிக்கு வந்திருந்த எஸ்.வி.சேகர் செய்தியாளர்களிடம் பேசும் போது, “ நடிகர் சங்க கட்டிடத்தை வாடகைக்கு விட்டதன் மூலமாக 60 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் போலி உறுப்பினர்களை அதிகமாக சங்கத்தில் சேர்த்துள்ளனர்.
எந்த ஒரு முடிவு என்றாலும் சரத்குமாரும், ராதா ரவியும் சேர்ந்து தனித்து முடிவுகளை எடுத்துள்ளனர். சங்கத்தில் 9 பேர் நிர்வாக குழுவில் இருக்கின்றனர் என்பதை அவர்கள் நினைத்துகூட பார்ப்பதில்லை.
எந்த ஒரு செயல்பாடையும் முறையாக வரைமுறைப்படுத்தப்படவில்லை. அத்தனை ஊழல்களையும் மறைப்பதற்காகவே மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டிபோடுகிறார்கள் என்று கூறினார் எஸ்.வி.சேகர்.