டியர் பம்மலார்,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
Printable View
டியர் பம்மலார்,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
அறிஞர் அண்ணாவின் கடைசி மேடை விழாவாக உயர்ந்த மனிதன் விழா அமைந்தது. பின்னர் அவர் இறுதியாகக் கலந்து கொண்ட விழா கலைவாணர் சிலை திறப்பு விழா, ஆனால் அன்று அவர் மேடையேற வில்லை.
உயர்ந்த மனிதன் விழாவில் உரையாற்றிய அப்போதைய மத்திய அமைச்சர் திரு ஒய்.பி.சவாண் அவர்களின் சென்னை நிகழ்ச்சிகளைப் பற்றி அப்போது ஆனந்த விகடன் வார இதழில் வெளி வந்த செய்தித் தொகுப்பு தங்கள் பார்வைக்கு.
பக்கம் 1
http://i872.photobucket.com/albums/a...ndec68p1fw.jpg
பக்கம் 2
http://i872.photobucket.com/albums/a...ndec68p2fw.jpg
அன்புடன்
டியர் பம்மலார்,
பூப்பறிக்க வருகிறோம் என்று சொல்லி விட்டுத் தான் மட்டும் தனியாக சென்று விட்ட நடிகர் திலகத்தின் இறுதித் திரைக்காவியத்தைப் பற்றிய விளம்பரம் மூலம் புதியதொரு அணிவகுப்பினைத் தொடங்கியுள்ளீர்கள். நன்றிகள் பல.
இத்திரைக்காவியத்தின் நெடுந்தகடு வெளியிடப் பட்டுள்ள விவரம் ஏற்கெனவே இங்கு தரப் பட்டுள்ளது. இருந்தாலும் தற்போது மீண்டும் அதன் நிழற்படங்கள் தரப்படுகிறது.
http://i872.photobucket.com/albums/a...overs/PPVF.jpg
http://i872.photobucket.com/albums/a...overs/PPVR.jpg
அன்புடன்
மதிப்பிற்குரிய சாரதா மேடம் அவர்களே,
தங்கள் ஆத்மார்த்தமான பாராட்டுதல்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். தங்களின் மனம் நிறைந்த பாசப் பாராட்டுதல்கள் நம் நடிப்புலக இறைவனாருக்கு தொண்டுகள் செய்ய மென்மேலும் ஊக்குவித்தலாய் அமைகின்றன. நன்றிகள் பல.
நீங்கள் குறிப்பிட்டது போல பெருந்தலைவர் அவர்கள் பார்த்து மகிழ்ந்த சிற்சிலபடங்களில் ஒன்று 'சினிமாப் பைத்தியம்'. வாஞ்சிநாதனாக அதில் இவர் வாழ்ந்து காட்டியதை காமராஜர் வெகுவாக ரசித்துப் பாராட்டினாராம்.
உங்கள் அன்புத்தோழி சகோதரி ஷக்திப்ரபா அவர்களிடம் உங்களுக்கு உள்ள உரிமையை நினைக்கும் போது மனம் பெருமகிழ்ச்சி அடைகிறது. ஜாலியாக நீங்கள் அவரை பதிவுகள் இடச்சொல்லி 'சிங்கார வேலனே தேவா' பாடலின் ஆரம்ப வசனம் போல ஒருமையில் அன்புக் கட்டளை பிறப்பித்திருக்கும் அழகு கொஞ்சும் சலங்கையாய் கொஞ்சி விளையாடுகிறது. மிகவும் ரசித்தேன்.ரசித்தோம். உங்கள் ஆழ்ந்த நட்பு நடிகர்திலகமும் நடிப்பும் போல பரிபூரணம் பெற்று நிலைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
பக்தியுடன்,
தங்கள் மாணவன்.
அன்பு ராகவேந்திரன் சார்,
சகல இசைக்கருவிகளிலும் தலைவர் புகுந்து விளையாடும் நிழற்படங்கள் தூக்கலோ தூக்கல்.கலக்கல். தூள் கிளப்பி விட்டீர்கள்.அத்தனை வாத்தியக் கருவிகளுக்கும் பெருமை சேர்த்த அந்த மகானுக்கு அந்த இசைக் கருவிகள் மூலமாகவே புதுமை முறையில் தாங்கள் பெருமை சேர்த்து விடீர்கள். இசைக்கருவிகளின் வேந்தருக்கு எங்கள் 'ரசிக வேந்தர்' அளித்த அற்புதமான இசை அஞ்சலி. நன்றிகள் சார். உயர்ந்த மனிதன் விழா பற்றி ஆனந்த விகடன் வார இதழில் வெளி வந்த செய்தித் தொகுப்பு ஒர் அரிய புதையல். அளித்தமைக்கு அன்பார்ந்த நன்றி.
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் சதீஷ் சார்,
தங்கள் உயர்ந்த பாராட்டுதல்களுக்கு அன்பான நன்றிகள். தலைவருக்கு சேவை செய்வது நமது தலையாய கடமை ஆயிற்றே! அதில் கிடைக்கும் ஆத்ம திருப்தி வேறு எதிலும் கிடைக்காது.
மதுரையில் தலைவருடைய படங்களின் cd,dvd- க்கள் விற்பனையில் முதலிடம் வகிக்கின்றன என்ற தங்களுடய செய்தி காதில் தேனாகப் பாய்கிறது. வித்தைகள் புரிந்த வித்தகரின் காவியங்களை ரசிக்காதவரும் உண்டோ? தங்கள் அன்புக்குத் தலைவணங்கும்
அன்பு வாசுதேவன்.
Rare interview with NT
http://www.youtube.com/watch?v=c8xZ1...eature=related
http://www.nadigarthilagam.com/paper...runningad2.jpg
அம்பத்தூர் க. வெங்கடேசன் என்ற ரசிகர், அம்பத்தூரில் செவாலியே சிவாஜி கணேசன் பிறந்த நாள் நினைவு நிழற்குடை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கென பிரத்யேகமாக 01.10.2011 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் உள்ள எம்.எம்.தியேட்டரில் நடிகர் திலகத்தின் வெற்றிச் சித்திரமான என்னைப் போல் ஒருவன் சிறப்புக் காட்சியாக திரையிடப் படுகிறது. நுழைவுச் சீட்டு தேவைப் படுவோர் திரு அம்பத்தூர் வெங்கடேசன் அவர்களை 9790844116 என்கிற கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்க.
அன்புடன்
டியர் சதீஷ்,
தங்களின் பாரத வருகை மகிழ்வூட்டுகிறது. தங்களை நேரில் சந்திக்க அனைவரும் ஆவலாயுள்ளோம். தாங்கள் சென்னை வரும் வாய்ப்புள்ளதா. அவ்வாறாயின் தங்களை நேரில் கண்டு கலந்துரையாடலாலமா, விவரம் தெரிவிக்கவும்.
அன்புடன்
உயர்ந்த மனிதன் படவிழா பொம்மை தொகுப்பு மிகவும் அருமை. பேரறிஞர் அண்ணா அவர்களின் உரையில் - நடிகர்திலகம் பராசதியில் அறிமுகமாகியிராவிட்டால் என்னவாகியிருக்கும் என்ற கேள்வியை எழுப்பி - அவரே பதில் கூறுகிறார் "ஒளி வீசும் வைரம் நீண்டநாள் சுரங்கத்திலேயே தங்கமுடியாது, தங்கவைக்கவும் முடியாது" என்று. 125 -வது பட விழாவில் அண்ணா பேசியதன்பின்னால், நடிகர்திலகம் 300 படங்கள் நடித்து, மறைந்து இன்று 10 ஆண்டுகள் ஆகியும் அவருடைய புகழ் ஒளி வீசுகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மங்காப் புகழ் பெற்று ஒளிவீசும் என்பது திண்ணம்.
அவ்விழாவில் நடிகர்திலகத்தைப்பற்றிப் பேசிய ஒவ்வொருவருடைய கருத்தும் இன்று படித்தாலும், மேடைக்காக பேசவில்லை - எவ்வளவு சத்தியமான உண்மை என்பது புரியும்.
அருமையான ஒரு வரலாற்று ஆவணத்தை வழங்கிய நம்முடைய திரியின் பொக்கிஷம் பம்மலார் அவர்களுக்கு - பாராட்டுக்கள் - நன்றிகள்.