-
https://encrypted-tbn0.gstatic.com/i...CvTJ4zky14pBXg
சபதம் படத்தில் டி கே பகவதி ருத்ராட்ச பூனை ஆச்சே நண்பா வாசு
எத்தனையோ படங்களில் நடித்து இருந்தாலும் இந்த படத்தில் வரும் பகவதி வில்லன் ரோல் மறக்க முடியாத ஒன்று. நெத்தியில் பட்டை நெஞ்சில் கொட்டை (ருத்ராட்சமப்பா ), செய்வது எல்லாம் சேட்டை
இந்த படம் வரும் போது ராசையா அதான் நம்ம மொட்டை இசை ஞானி ஜி கே வெங்கடேஷ் க்கு உதவியாளர் ஆக பணி புரிந்தார் என்று நினைவு
-
'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ' பாட்டின் நடுவே ரவி விசில் அடித்து கொண்டு தலையை துவட்டி கொண்டு லேசாக கண் சிமிட்டி விஜயாவை லுக் விடும் காட்சி ஒன்று போதுமே நண்பா
-
கண்ணா/கிருஷ்ணாஜி,
மம்மூட்டி நடித்த நிறக்கூட்டு என்ற மலையாளப் படம்தான் தமிழில் மனிதனின் மறுபக்கம் ஆக வெளிவந்தது. பாலு மகேந்திராவின் யாத்ரா படத்திற்காக மம்மூட்டி தலையை கிட்டத்தட்ட மொட்டையடிக்க அதே கெட்டப்பை இயக்குனர் ஜோஷி தன நிறக்கூட்டு படத்திலும் சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொண்டார். 1985 செப்டம்பரில் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த யாத்ராவும் சரி நிறக்கூட்டும் சரி மிகப் பெரிய வெற்றி பெற்றன.
அந்த வெற்றியைப் பார்த்துத்தான் சத்யஜோதி பிலிம்ஸ் தமிழில் சிவகுமாரை வைத்து தயாரித்தார்கள். மனிதனின் மறுபக்கம் சிவகுமாரின் 150-வது படமாக 1986-ல் [ஜூலை என்று நினைவு] வெளிவந்தது. மம்மூட்டியின் performance -ஐ வைத்துப் பார்க்கும்போது சிவகுமார் ரொம்பவே சுமார்தான். இது போன்றே மம்மூட்டி நடித்த மற்றொரு சூப்பர் ஹிட் படமான ஷ்யாமா தமிழில் சிவகுமார் நதியா நடித்து உனக்காகவே வாழ்கிறேன் என்ற பெயரில் வெளியானது. அதுவும் சொதப்பல் கேஸ்தான்.
அன்புடன்
-
அருமையான தகவல்களை தந்து சிறப்பு செய்து விட்டீர்கள் முரளி சார்
krishnaa
-
dear vaasu
இளையராஜா ஜி கே வெங்கடேஷ் பற்றி சொன்ன சில தகவல்கள்(நன்றி மாலைமலர்)
ஜி.கே.வெங்கடேஷ் மி யூசிக் கம்போஸ் செய்யும்போது ஓய்வு கிடைத்தால், பழைய பாடல்களின் உயர்தரமான அமைப்புகளை விளக்குவார்.
அவர் எஸ்.வி. வெங்கட்ராமனுக்கு வீணை வாசித்தவர். எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த "மீரா'' உள்பட பல படங்களுக்கு இசை அமைத்தவர், எஸ்.வி.வெங்கட்ராமன். மீரா படத்தில் ஒரு காட்சி. ஒட்டகத்தின் மீது போய்க்கொண்டே எம்.எஸ். ஒரு பாட்டு பாடுவார்.
இதற்கு இசை அமைக்கும் முன், உயிரியல் பூங்காவுக்கு ("ஜு'') வெங்கட்ராமன் சென்றார். அங்கு காசு கொடுத்து ஒரு ஒட்டகத்தின் மீது சவாரி செய்தார். ஒட்டகம் நடந்த நடையை தாள கதியாக வைத்து, மி யூசிக் கம்போஸ் செய்தார் என்று சொல்வார், ஜி.கே.வி.
"சிலையே நீ என்னுடன் பேசவில்லையோ?'' என்ற பாடலை ஜீ.கே.வி. பாடினால் மிக அழகாக இருக்கும்.
-
”இந்தக் கண்ணாப் பய இருக்கானே..ஒரு மோஸ்ஸமான பேர்வழி..அவன் கிட்ட என் மனசக் கொடுத்துட்டேன் அவன் கிட்ட என்னையே கொடுக்கலாம்னு இருக்கேன்.. அவன் என்னடான்னா ஒரு பேச்சு சொல்றானா எனக்கு” தலைவி உருகுகிறாள்.. கண்ணா..என்னடாப்பா எனக்கு இப்படித் துன்பம் மிகச் செய்யறே….
காண்கின்ற வழியெல்லாம் கண்ணாவுன் தோற்றமென
பூண்கின்ற நாணம் பொலிவிழக்க - நோன்பெனவே
வண்ண விழிகளால் வாடியே நிற்குமெனை
திண்ணமாய் தீண்டுதற்கு வா
தலைவின்னா தோழின்னு இருக்கணுமே.. இருக்கா..சொல்றா..
“இந்தப்பாரு.. நாம இருக்கறது வாஸ்ஸப் ஃபேஸ்புக் ட்விட்டர் யுகம்..இப்படி எக்ஸர்ஸைஸ்லாம் பண்ணாம சாப்பிடாம இளைச்சா ஒடம்பு என்னாறது..இப்படி வெறிச்சு வெறிச்சுப் பாக்கறதும் கண்ணா ந்னு மூச்சிழுத்து கண்ணான்னு மூச்சு விடறதும் பக்கத்துல இருக்கற எனக்குக் கேட்டா பரவாயில்லை.. தூரத்துல இருக்கற ஒங்க அம்மாக்கும் கேட்டுறப் போறது..ஸோ ஒன்னப் பத்தி வேணும்னா நான்
கண்ணாக் கிட்ட சொல்லிடட்டுமா”
பார்வை பொருளென்ன பக்குவமாய்ச் சொல்தோழி
ஆர்ப்பரிக்கும் நெஞ்சின் அலையோசை - கோர்வையாய்
காதுகளில் மோதியே கேட்கிறதே கண்ணனிடம்
தோதுபடச் சொல்லட்டு மா
“ஆமா.. நீ எல்லாம் இப்படித் தான்.. சமய சந்தர்ப்பம் பார்த்து நீ எங்கிட்டுப் போய் சொல்வே கண்ணா கிட்ட..அந்த மாயக்காரன் எங்க இருக்கானோ..எப்படி ஒளிஞ்சுக்கிட்டு இருக்கானோ.. சரி போடி..இதோ பாரு..வானில இருக்கே..என்னோட சோக நிலையைப் பார்த்தும் புரிஞ்சுக்காம சிரிச்சுண்டு இருக்குதே இந்த நிலா.. இதுக்கிட்ட சொல்றேன்.. அவனைப் பார்த்தா என்னோட ஸிச்சுவேஷன், தோற்றம் எல்லாம் சொல்லுன்னு” எனச் சொல்லிச் சொல்கிறாள்..
*
கண்ணனைக் காண்பாயா நிலவே என் மனம் சொல்வாயா
கண்ணிலே தலைவன் முகம் வந்து
நெஞ்சில் புகுந்து கலந்து குலாவுது
தூக்கம் பறக்கின்றதே தொடர்ந்து விரகம் நடக்கின்றதே
பெண்மை ஏக்கம் அறிவாயே நேற்றுச் சொன்ன
இன்பக் கதைகளில் துன்பம் பிறந்தது..
நீரும் எனைச் சுடுதே விழியில்
கண்ணீர் மழை விழுதே
உன் கைதொட்டுப் பீரிந்ததனால் காணும் இந்த
மங்கை மலர்வனம் என்று மலர்வது…
கண்ணனைக் காண்பாயா நிலவே என் மனம் சொல்வாயா
**
பாடல் இடம்பெற்ற படம் மனிதனின் மறுபக்கம்..(ம்ம் அதே படம் தான்) பாடியவர் சித்ரா..
ஆடியோ லிங்க்..
http://www.inbaminge.com/t/m/Manitha...paaya.eng.html
-
http://i1170.photobucket.com/albums/...ps3e6e0a83.jpg
பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது....
இசையில் ஆர்வம் கொண்ட ஒரு இளம் பெண்...தன் சகோதரியோடு இணைந்து ஒரு பாடலை பாடி வெளியிட நினைத்து ..பல கிராமபோன் ரிகார்டு [ இசைத்தட்டு ] கம்பெனிகளை கேட்டுப் பார்த்தாராம்...ஆனால் இசைத்தட்டு கம்பெனிகள் இதற்கு மறுத்து விட்டார்களாம்....அவர்கள் சொன்ன ஒரே காரணம்...
‘‘ஓதுவார்கள் பலர் பாடியும் அது மக்களைச் சரியாக சென்றடையவில்லை...வேண்டாம் இந்த வீண்வேலை....விட்டு விடுங்கள்..’’
விடவில்லை அந்த சகோதரிகள் ...இசைத்தட்டு சுழல்வது போல் ..இசைத்தட்டு கம்பெனிகளை சுற்றி சுழன்று வந்து முயற்சித்தும் ..கீறல் விழுந்த இசைத்தட்டாக “முடியாது “ என்ற பதிலே திரும்ப திரும்ப வந்ததாம்...
ஆனாலும் மனம் தளராத அந்த சகோதரிகள் அந்தப் பாடலை பல ராகங்களில் டியூன் போட்டுப் பாடிப் பார்த்தார்களாம்...
முதலில் ‘ஆபேரி’ அடுத்து ‘சுப பந்துவராளி’. அதனைத் தொடர்ந்து ‘கல்யாணி’. இறுதியாக ‘தோடி’.. இப்படி நான்கு ராகத்தில் பாடினார்கள் இந்தப் பாடலை...!!!
ஒருவழியாக 1970 - ல் வெறும் 500 ரிகார்டுகள் மட்டுமே வெளியிட்டார்களாம்..
ஆனால்....
அந்த ரிக்கார்ட் பல ரிக்கார்டுகளை முறியடித்து வரலாற்று சாதனை படைத்தது ...
இப்படி அந்தக் காலத்தில் படாத பாடுபட்டு பாடி இந்த இசைத்தட்டை வெளியிட்ட சகோதரிகள் ...
சூலமங்கலம் சகோதரிகள் !!
அந்தப் பாடல்...
கந்த சஷ்டி கவசம்...
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்..
கந்தசஷ்டி கவசத்தை வேறு சிலரும் பாடியிருந்தாலும், சூலமங்கலம் சகோதரிகள் அளவுக்கு வேறு எதுவும் நம்மைக் கவரவில்லை...!
courtesy net
-
முள்ளும் மலரும் ...
இந்தப் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பாடலை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மகேந்திரன்...
இது தற்செயலாக நடந்ததா..அல்லது திட்டமிட்டு செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை...!!!
படா பட் ஜெயலட்சுமிக்கு ” நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா…”
ஷோபாவுக்கு “அடி பெண்ணே…. பொன்னூஞ்சல் ஆடும் இளமை….”
சரத்பாபுவுக்கு “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா…”.
ரஜினிக்கு “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே”
வேறு ஏதாவது படங்களில் இந்த மாதிரி முயற்சி எதுவும் நடந்ததா எனத் தெரியவில்லை...
முள்ளும் மலரும் படத்தில் இளையராஜா இசையில் தனி ராஜாங்கமே நடத்தி இருப்பார்..அது பற்றி சுருக்கமாக மகேந்திரன் சொன்னது ரசிக்கும்படி இருந்தது ...
“காட்சிக்கும், அதை உயிரூட்டிய இசைக்கும் ஒரு தொடர்பு தமிழ் சினிமாவில் ஏற்பட ஆரம்பித்தது இளையராஜாவால் என்றால் அது மிகையாகாது... திரையில் ஒளியும்-ஒலியும் சிவ – சக்தி ஆயின...”
# ஆம்..சக்தி இல்லையேல் சிவம் இல்லை..
சிவம் இல்லையேல் சக்தி இல்லை...
ஏடாகூடமான பேச்சுக்கள் இல்லாமல் இளையராஜா இப்போது இருப்பதில்லை....!
.இளையராஜாவின் சமீபத்திய பேச்சு இது...
“ இந்த நாற்பது வருஷ இசை வந்து... நான் இல்லேன்னு வச்சுக்கங்க... எம்ப்டியா, ஒரு சூனியமா இருந்திருக்காது..? "
#இளையராஜா....
அவர் ஒரு முள்ளும் மலரும் ....!!!
courtesy net
-
சீர்காழி கோவிந்தராஜன் , சக பாடகர்களோடு இணைந்து பாடும்போது...இந்த மல்யுத்தம் ஏனோ நினைவுக்கு வருகிறது...
உடன் பாடும் பாடகர் எவராக இருந்தாலும் தன் வெண்கலக் குரலால் மூச்சுத் திணற அமுக்கி மூழ்கடித்து விடுகிறார் சீர்காழி..!
“ திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் ' பாட்டில் சீர்காழி குரல் , டிஎம் எஸ். குரலை கழுத்தில் அழுத்தி கடலுக்குள் தள்ளி விடுகிறது...!!
கர்ணன் படத்தில் “மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்.” .பாடலில் டி.எம்.எஸ். தனியாகப் பாடும்போது தெளிவாகத் தெரிகிறார்...பி.பி.ஸ்ரீநிவாஸ் சும் அப்படியே...
ஆனால் மூவரும் சேர்ந்து “ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!” என்று கோரஸ் பாடும்போது ,சீர்காழி குரல் முன் டி.எம்.எஸ்.சும் பி.பி.எஸ்.சும் எங்கோ காணாமல் போய் விடுகிறார்கள்...
சினிமாக்களில் இப்படி இருந்தாலும்...ஒவ்வொரு நாளிலும் ..ஒவ்வொரு ஊரிலும்... டி.எம்.எஸ்சும் , சீர்காழியும் பக்திப் பாடல்களால் ...இன்றும் ஒவ்வொருவர் நெஞ்சிலும் நிரந்தரமாக வாழ்ந்து வருகிறார்கள்...
ஒரு விசித்திர ஒற்றுமை...
மார்ச் 24 ....
இது டி.எம்.செளந்தரராஜன் பிறந்த தினம்
சீர்காழி கோவிந்தராஜன் நினைவு தினம்...
“உள்ளம் உருகுதய்யா....”
-
முரளி சார் மனிதனின் மறுபக்கம் கொஞ்சம் சிவகுமார் முயற்சித்திருப்பார் என்று தான் சொல்லவேண்டும்..அவருக்கு முரட்டு ரோல் வருவதுகொஞ்சம் கஷ்டம் தான்.. மம்முட்டி படம் நிறக்கூட்டு பார்க்கவில்லை. யாத்ரா பார்த்திருக்கிறேன்.. (மதுரை சக்தி).. ஜோஷி நியூடெல்லி டைரக்டர் தானே.. உனக்காகவே வாழ்கிறேன் சமீபத்தில் தான் பார்த்தேன்.. தகவலுக்கு நன்றி..
க்ருஷ்ணாஜி..ஊமை பாட்டை விட்ட சந்தோஷம் சந்தோஷம் என்னும் இன்னொரு பாட்டும் நன்றாக இருக்கும்..