http://i1028.photobucket.com/albums/...psj1dkffuu.jpg
Printable View
http://i1028.photobucket.com/albums/...psxlnogfho.jpg
நீங்கள்-
ஓட்டுநருக்கே இடமில்லாத
நெரிசல் பேருந்தில்
அமர்வதற்குக் கிடைத்த
இருக்கை போல்
ஒரு ஆச்சரியம்.
நீங்கள்-
கால் அழுத்தி நிற்கையிலே
காலின் கீழ் மணல் உருவும்
கடலலை தருகிற
ஆனந்தம்.
நீங்கள்-
பசிப் பொழுதில்
கிடைத்த நல்லுணவு.
நீங்கள்-
வேறெந்த உணவுக்கும்
அடங்காத பசி.
http://i1028.photobucket.com/albums/...psjxngaceo.jpg
குடம் குடமாய்
குளிர்பானம் குடித்தாலும்,
இளநீர் உறிஞ்சி
உதடுகள் ஓய்ந்தாலும்,
'அடங்குவேனா?' என்று
ஆர்ப்பரிக்கிற தாகத்தை,
ஒரு குவளைத் தண்ணீர்
ஓட ஓட விரட்டும்.
குளிர்பானத்திற்கும்,
இளநீருக்கும்
அடங்காத தாகம்-
எங்கள் ரசனை.
நீங்கள்-
தண்ணீர்.