Re: The correct identification
பலமுறை படித்து விட்டேன் ஆனாலும் கிறுக்கு புத்திக்கு விளங்கவில்லை...
Quote:
கழுதையென அறிந்தார்க்கும் படமே போதும்;
கழுதையறி யார்க்குப்பேர் எழுத வேண்டும்!
கழுதை எதுவென தெரியாதவர்க்கு பேர் எழுதவேண்டும் என் கிறீர்கள்...சரியே...ஆனால் அடுத்த இருவரி
Quote:
எழுதி இது கழுதையென்று சொன்னால் கண்ணில்
பழுதிலார்க்கோ அவ்வறிக்கை தேவை இல்லை!
அறியாமையும் கண் தெரியாமையும் எப்படி ஒன்றாகும்...
கழுதையெனில் அதுகழுதை
ஆனால் எது கழுதை
என்று அறியா சிறார்க்கு
அறிவிப்பது தானே
பெயர் பட்டியல்
புரியாததால் புத்தி கெட்டு எழுதிவிட்டேன்
பழுது இருந்தால் மன்னிக்கவும்.
-
கிறுக்கன்
Re: The correct identification
Quote:
Originally Posted by kirukan
பலமுறை படித்து விட்டேன் ஆனாலும் கிறுக்கு புத்திக்கு விளங்கவில்லை...
Quote:
கழுதையென அறிந்தார்க்கும் படமே போதும்;
கழுதையறி யார்க்குப்பேர் எழுத வேண்டும்!
கழுதை எதுவென தெரியாதவர்க்கு பேர் எழுதவேண்டும் என் கிறீர்கள்...சரியே...ஆனால் அடுத்த இருவரி
Quote:
எழுதி இது கழுதையென்று சொன்னால் கண்ணில்
பழுதிலார்க்கோ அவ்வறிக்கை தேவை இல்லை!
அறியாமையும் கண் தெரியாமையும் எப்படி ஒன்றாகும்...
கழுதையெனில் அதுகழுதை
ஆனால் எது கழுதை
என்று அறியா சிறார்க்கு
அறிவிப்பது தானே
பெயர் பட்டியல்
புரியாததால் புத்தி கெட்டு எழுதிவிட்டேன்
பழுது இருந்தால் மன்னிக்கவும்.
-
கிறுக்கன்
உதாரண எளிமை
இந்தப் பாடல் முழுவதும் சிறுவரைப் பற்றியதன்று. சிறுவர் புத்தகத்தில் படமும் பேரும் இருக்கும் என்பதுடன், அதைப்பற்றி மேலே ஏதும் சொல்லவில்லை. அது ஒரு முன்னுதாரணமாகவே சொல்லப்பட்டுள்ளது. சிறுவருக்கு எழுதப்பட்டுள்ள நூல்கள்போலவே, மருத்துவ அறிவியல் கற்பாருக்குக்கூட படங்களுடன் கூடிய புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. பொறியியலிலும் வரைபடங்களுடன் கூடிய புத்தகங்கள் மிகவும் இயல்பானவையே! விளக்கப்படம், விளக்க அறிவிப்பு என்று வரும்போது, சிறுவர் நூல்கள் ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆகும். உதாரண எளிமைகருதி, சிறுவர்நூல் சுட்டப்பட்டது. நீங்கள் செய்யக்கடவது: நான் ஓர் எடுத்துக்காட்டு கூறியவுடன், மற்ற ஒன்பதையும் முன்கொணர்ந்து நிறுத்திக்கொள்ளுங்கள்.
படம் மட்டுமிருந்தாலும் அறிந்தவருக்கு அது போதும். அறியாதாருக்குப் பேர் எழுதவேண்டும். இதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள். எனவே இங்கு அறிந்தார் அறியாதவர் என்ற இரு பகுப்புகள் செய்யப்படுகின்றன. சிறுவர் என்போர் அறிந்தோர் என்ற பகுப்பிலும் இருப்பர், அறியார் என்ற பகுப்பிலும் இருப்பர். எல்லாச் சிறுவரும் அறியாரென்று நாம் முடிவு கட்டிவிடலாகாது. கழுதை வளர்க்கும் வீட்டிலிருந்து பள்ளிக்கு வரும் சிறுவனுக்கு அது கழுதை என்று தெரியும், ஆனால் அவனுக்கு அது ( கழுதை என்று)அறிவிக்கப் படமே போதும் என்றாலும், எழுத்துக்களை எப்படிக் கூட்டி எழுதுவது என்று அவனறிய வேண்டி இருப்பதால் அவனுக்கும் எழுத்துக்கள் தேவைப்படுகின்றன. அறிந்த பெரியவர், விளக்கக்குறிப்பு இல்லாமலே தெரிந்துகொள்வார். அறிந்தார் அறியாதார் என்ற பாகுபாட்டில் இதையும் கருதவேண்டும்.
கழுதையறியார் என்ற தொடருக்கு விளக்கம்: கழுதை என்ற விலங்கை அறியார், கழுதை என்று எழுத அறியார் (சிறுவர் அல்லது படிக்காத முதியவர்) என்று இரு பிரிவினரையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
அடுத்து நாம் பிறவியில் பார்வையற்றோரையும் சிந்திக்கவேண்டும். அவர்களுக்கு எழுதினால் மட்டும் போதாது. எழுதிப்பின் சொல்லவும் வேண்டும். பார்வையில் கோளாறில்லாதவருக்குப் படமும் எழுத்தும் போதுமானவையாம். சொல்ல வேண்டியதிருக்காது,( ஆனால் பள்ளிசிறுவருக்கு இது விதிவிலக்கு; "க-ழு-தை" என்று சொல்லவேண்டும். அது கற்பிக்கும் முறை ) ஆகவே, பெரும்பான்மை பற்றித் தேவை இல்லை என்று கூறப்பட்டது. இங்கு தேவைத்தன்மை விவாதம் எழுகிறது.( எது தேவை, எது தேவை இல்லை என்பது) A debate on necessity. எனவே கண்ணில் பழுதுள்ளவர்க்குச் சொல்வது தேவை என்பதை, எதிர்மறை நிலையில் பாடல் சொல்கிறது.
அறியாமை வேறு, கண்தெரியாமை வேறு. இரண்டும் ஒன்று என்று பாடல் சொல்லவில்லை.ஆனால் கண்தெரியாத பிறவிக் குருடர்க்கு உலகம் இருள் ஆதலினால், அதுவே அறியாமைக்கு விளைகளம் ஆகிவிடுகிறது. இவ்விரண்டு வரிகள் கண்தெரியாதவர்க்குத் தேவை எது என்பதை சுருங்க உரைக்கிறது. அறிந்தவர் அறியாதவர் என்ற முன் இரு வரிகளின் பகுப்பில், கண்தெரியாத குருடர், பெரும்பாலும் அறியாத நிலையிலேயே இருப்பார் ஆதலின் அவருக்கே நாம் நேரம் செலவழித்துச் சொல்லிக் கொடுக்கவேண்டும். மற்றவருக்கு அறிந்துகொள்ளும் வாய்ப்புகள் திறந்தே உள்ளன. அத்தகையோருக்குத் தேவையினடிப்படையில் சொல்வதா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டும்.
கழுதை என்றால் அது கழுதை! இது என்ன? எழுதப்பட்ட சித்திரம் உரிய திறனுள்ளவரால் உரிய முறையில் வரையப்பட்டிருப்பின், எழுத்தும் சொல்லுமாகிய விளக்கங்களில்லாமலே கூட, கழுதை என அறிதிறன் உடையார் அறிந்துகொள்ள இயலும்.
வரைதிறன்: சித்திரம் வரையும் திறனில்லார், ஏதோ ஒன்றை வரைந்து "கழுதை" என்றால், அதை நாம் எப்படி எடுத்துக்கொள்வது? சித்திரம் உண்மைக் கழுதைச் சித்திரம் என்றால் அதை ஏற்றுக்கொள்வதில் நமக்குத் தடை இருக்காது.அல்லாததைக் கழுதை என்று அவர் கூறினாலும் ஏற்றுகொள்ள முடியாது. அறிந்தவர், அறியாதவர், சிறுபிள்ளை, குருடர் என்ற நிலைகளெல்லாம் இங்கு எழவில்லை. சித்திரமே கோளாறு! யாருக்கும் தகுதி அற்றதாகிவிடுகிறது. ஆகவே அறிதிறன், அறியாமை எல்லாமொருபுறமிருக்க, வரைதிறன் பற்றிய கேள்வி எழுகிறது.
அன்றேல் அன்றாம்: சித்திரம் சரியில்லை என்றால், அதற்கு வரைந்தவர் என்ன பெயர் கொடுத்திருந்தாலும், நமது பார்வையில் அது எப்படித் தோன்றுகிறது என்பதைப் பொறுத்து, அது அவர் சொல்லும் பொருளன்று என்று நாம் முடிவு செய்வோம்.
அறிதிறன் பற்றிப் பேசினாலும் இது வரைதிறன்பற்றிய கவிதை. திறம்தெரி ஓவியத்திற்கு வேறு விளக்கம் தேவையாவது அரிதேயாம். ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்று கான்பூஷியஸ் சொல்லவில்லையா?
வரைதிறன் இல்லார் வரைந்த ஓவியத்திற்கு, அதாவது எண்ணிய உருவினை முன்னிறுத்தாத ஓவியத்திற்கு, பெயர்த்தரவினால் ஆனதொரு பயனில்லை. அறிந்தார், அறியார், கண்தெரியார் என எத்திறத்தார்க்கும் அஃது உதவாததே.
கண்ணிலும், அறிவுக்கண் (ஞானக்கண்), ஊனக்கண் என்றெல்லாம் பாகுபாடுண்டென்பர்.இங்கு கழுதையே எடுத்துக்காட்டாய் கொள்ளப்பட்டுள்ளது
அது நிற்க, நான் எதை நினைத்து எழுதினேன் என்பதை இன்னும் சொல்லவில்லை. இதுபோது அது மறைபொருளாகவே தொடரும்.