ஒவ்வொரு நாளும் ஒருவெண்பா பாடினார்பால்
செவ்விய பாத்திறனும் சேர்ந்திடுமே -- கவ்விக்
கடிக்கக் கடிக்கவே ் கெட்டியுண்டை நெல்லும்
இடிக்க இடிக்கவே தூள்..
Printable View
ஒவ்வொரு நாளும் ஒருவெண்பா பாடினார்பால்
செவ்விய பாத்திறனும் சேர்ந்திடுமே -- கவ்விக்
கடிக்கக் கடிக்கவே ் கெட்டியுண்டை நெல்லும்
இடிக்க இடிக்கவே தூள்..
எழுதுங்கால் போஒய்ப் பழுதாகும் ஒற்றால்
முழுதும் கவனிக்க முந்தி -- உழுதிடும்
நல்லுழவர் போலவே நாமும்நம் நேரத்தைச்
செல்லவிட்டோம் செந்தமிழுக் கே. ்
போனார் திரும்புவதும் புண்ணியமே; சொல்மதியைப்
பேணார் திருந்தவரும் கண்ணியமே; -- நாணிலாராம்
பெண்டிரும் மாறிடிலோ பேறுகளில் மேல்கண்ணாற்
கண்டுரைப் பாரே கரி.
கொழும்புக்கோ சென்றார் குழவிப்பால் ஊட்ட?
அழும்பிள்ளை விட்டே அகலல் --- பெரும்பிழையே!
வந்தால் வணங்கி வரவேற்கும் நாள்நோக்கி
எந்தாய்த் தமிழால் இசை.
இது ஒரு ஈழ நண்பர் - திடீரென்று காணாமற் போய்விட்டது பற்றிய பாடல். இதை : "வரவேற்கும் நாள்வரைக்கும் " என்று எழுதியிருந்தேன். இப்போது, நாள்நோக்கி என்று மாற்றினால், பொருள் மன நிறைவு தருவதுபோல் தோன்றுகிறது.
வந்தால் வணங்கி வரவேற்போம்; நன்றென்றே...
என்றெழுதினால்--?
வடித்தவெண் பாக்கள் படித்தவுடன் தானும்
துடித்தொன் றியற்றிக் கொடுத்து --- முடித்திடவும்
யAரையும் காணவில்லை பாரில்வெண் பாட்டெழுத
ஊறுமோ பற்றும் இனி.
Server rejects efforts to edit.
Reader please read intended amendments into the text. (as indicated)
Will attempt later.
வடிப்பதோ வெண்பா வளைவு நெளிவாய்'
அடித்துச் செதுக்குவதும் ஆமோ--- படிப்பறிவு
மிக்கோரே மீதுவக்கும் வெண்பாவை நாட்டிலுயர்்
மக்காள்நீர் கொள்வீரோ மேல்.
இதனை ஆய்வு செய்க.
இராஜராஜன் புகழ் வாழ்க.
தஞ்சைப் பெருவுடையார் அருள் பொழிக.
ஆயிரம் ஆண்டுகள் ஆகி அணிபெற்ற
கோயிலாம் தஞ்சைப் பெருவுடையார் --- கோயிலைக்
கட்டிய ராஜராஜன் மட்டிலாச் சீர்த்திதன்னைச்
சுட்டுங்கால் சோர்விலோம் நாம்.
அறியாரோ இப்போ தறியேன்நான் என்றே
குறியாது கோலெடுத் தாட்டி ---சிறியோன்போல்
நேராய் மிரட்டுகிறார் , தீரா அறியாமை
பாரோர் அறியாப் படிக்கு.
இந்து சமயம் தழைத்த பெருநாடாய்
இந்துத் திருநேய இந்துநேசி யாவிருந்தே
எந்தவோர் காரணத்தால் இன்றிங்ஙன் மாறிற்றோ?
சொந்தமாய்ச் சிந்திப்போம் நாம்!