ரணத்தடச்சுவடு.
"ஃநெர்ட்யுஇஒபச்ட்fக்ஹ்ஜ்க்ல்ழ்xச்வ்ப்ன்ம்
- ஒன்றும் புரியவில்லையா?qwertyuiopasdfghjklzxcvbnm:கீபோர்டின ் வரிசையை தமிழில் அடித்தால் இப்படித்தான் இருக்கும்."
அவ்வப்போது இப்படி ஈ-மெயில்கள் generate செய்வதுண்டு,அளவுக்கதிகமாக வெட்டியாக இருக்கையில்.
ஆரம்பித்த இடத்திலிருந்து மீண்டும் தொடங்கவேண்டியிருக்கிறது.
பள்ளிவாழ்வின் கடைசி ஆண்டு முடிந்த பொழுது மீண்டும் ஒருமுறை 1st standard class-u எந்த பக்கம் அண்ணா? என்று கேட்டதும்,அன்று மதியம் அம்மா ஊட்டிவிட்ட தேங்காய்சாதத்தின் ருசியும் அடிநாவில்.எதைப் பார்த்தாலும் ஒரு மிரட்சியும்,காரணமற்ற வெறுப்பும் சூழ்கிறது.என்ன என விளங்காத விந்தையும்,தினம் தினம் ஊர்சுற்றிக்கொண்டிருக்கும் பரதேசி வாழ்க்கையும் அலுப்பு தட்டுகிறது.நண்பர்களின் முகங்களும் இறுக்கமும்,பிரிவின் வலியையும் சுமந்தபடி கானல்நீரின் தித்திப்பை பருகவைக்கிறது.நுழைவுத்தேர்வுகளின் பளு வேறு திசையில் இழுக்கிறது.வாழ்க்கையே முடிந்துவிட்டதைப் போல் வெறுமை கனக்கிறது.ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத சொற்கள் நாவிலிருந்து குதிக்கிறது.இந்திய கிரிக்கெட் அணி எரிகிற கொள்ளியில் நெய் ஊறுகிறது.சிவாஜியின் சுமாரான பாடல்கள் திரைப்படங்களின் மேல் வெறுப்பை ஏற்படுத்துகிறது.நாள்காட்டியின் தாள்கள் வேலையே செய்யாமல் சாகின்றது.இந்தத் தருணத்தில் ஒரு நாள்.....
கிளம்புவது என முடிவு செய்து வீட்டினருக்கு சொல்லிக்கொண்டு மிதிவண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.மனோஜ் வீட்டிற்கு சுமார் 6 கீ.மி சைக்கிளை மிதித்து சென்றேன்.அவனும் வர,வண்டியை எடுத்துக்கொண்டு பாலா வீட்டிற்கு சென்றோம்.கொஞ்ச நேரம் கண்ணீரை அடக்கிக்கொண்டு,சந்தோஷ கணங்களை நினைவுகூர்ந்தபடி மௌனங்கள் உடைத்து புதிய செல்போன்களைப் பற்றி பேசிக்கொண்டு,எண்களையும் குறித்துக்கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம்.கொஞ்சம் கொஞ்சமாக மனதில் ஒரு மாதம் வாடகையின்றி தங்கியிருந்த சாத்தானை சாமன்களோடு வெளியேற்றினேன்.வீட்டினுள் அமர்ந்து ஊரே கேட்கிறபடி இசையை அலறவிட்டு வெறிபிடித்தாற் போல கேட்டுக்கொண்டும்,பாடிக்கொண்டும்...பாலா வீட்டில் மதியம் 2 மணி வாக்கில் கிரிக்கெட் விளையாடினோம்.நெகிழ்ச்சியான தருணங்களை,நாங்க்லள் அடிக்க முயன்ற ஓணானை,நகைச்சுவையை செல்போனுக்குள் அடைத்தோம்.அங்கிருந்து கிளம்பி மதிய உணவை இளையராஜா துணையுடன் முடித்துவுட்டு ராமநாதனுக்கு தொலைபேசியில் விவரம் தெரிவித்துவிட்டு நாகராஜ் வீட்டிற்கு சென்றோம்.அங்கு எல்லா நண்பர்களையும் வரச்சொல்லிவிட்டு,அனைவருடனும் மனம்விட்டுப் பேசி சிரித்து நொறுக்குத்தீனி உண்டு,மைதானத்திற்கு கிளம்பினோம்.அங்கு ராமநாதன் வந்து செர்ந்தான்.அனைவரும் கடைசி பள்ளி தினத்தன்று எஉத்த வீடியோக்களைபோட்டு பார்த்தோம்.நண்பர்கள் சில நகைச்சுவையான விசயங்களை விவாதித்தது,விளையாடியது,வகுப்புகள் கட் அடித்தது,விவகாரங்கள் ஆனது,நாடகம் பொட்டது,கவிதை எழுதியது,ஊர் சுற்றியது,பிரியாணி தின்றது,கும்மாளம் அடித்தௌ,சுற்றுலா சென்றது,அழகிகள் ரசித்தது,திட்டு வாங்கியது எல்லாம் எல்லாம்.எங்கள் ஆசிரியைகள் சிலர் போல நண்பர்கள் நடித்து காட்ட,கிரிக்கெட் விளையாடுகயில் சிலர் பல்பு வாங்க என அத்தனை அட்டகாசத்திற்குப் பிறகு கௌஷிக் வீட்டிற்கு சென்றோம்.அவனோடு கொஞ்சம் பேசிவிட்டு,பிரசன்னாவோடு அவன் வீட்டு மொட்டைமாடியில்,கடைசி பெஞ்சில் அமர்ந்து செய்த ரகளைகளைப் பற்றி அசைபோட்டு நான் வீட்டிற்கு வந்து,எல்லோரும் ஒரு கான்பரன்ஸ் கால் பேசினோம்.மறுநாள் எல்லோரும் கடற்கரை போகலாம் என்று முடிவு செய்து பிரிந்தோம்.என் வீட்டிற்கு கொஞ்சம் பேர் வந்தனர்.தொலைக்காட்சியும்,சினிமாவும் அளவளாவிவிட்டு அரட்டைகளை முடித்துக்கொண்டு சாப்பிட்டோம்.மனோஜ் வீட்டில்ருந்து பத்து பேர் கடற்கரைக்கு சென்று மாலையெல்லாம் விளையாடிவிட்டு,கடலில் நீராடி பேருந்தில் பேசிக்கொண்டெ வந்தோம்.அத்தனை துயரமும் கடலில் கலந்த களிமண்ணாய் விலக மீண்டும் என் வானில் சூரிய ஒளி.மகிழ்ச்சியோடு மீண்டும் மலர்ந்த முகத்துடன் உலவ ஆரம்பித்தேன்.பழயபடி எல்லாம் சமநிலைக்கு வர,இப்போதெல்லாம் தினம் எங்காவதொரு தெருமுனையில் சைக்கிள்களில் பேசிக்கொண்டு பொழுதுகள் சர்க்கரையாகப் பூக்கின்றன.