எதிராய்காணும் எண்ணமில்லாது எதிரணி சென்றால்
எளித்தாய்விளங்கும் இருபுற உண்மை .
-
கிறுக்கன்.
Printable View
எதிராய்காணும் எண்ணமில்லாது எதிரணி சென்றால்
எளித்தாய்விளங்கும் இருபுற உண்மை .
-
கிறுக்கன்.
விடையறியா விடயங்களுக்கு விடையில்லை எனல்
விழியில்லார் விடியலில்லை என்பதுபோல்.
-
கிறுக்கன்
:exactly:
வாழ்வில் வரும்வலி வலுவின் விளிவு
வீழாவன்மை வேதனையின் விடிவு.
விளிவு=கேடு
வீழா+வன்மை= தளரா வல்லமை
-
கிறுக்கன்
தடுமாறும் நிலையதில் தாங்கிட தோளில்லையெனில்
தன்கையே தனக்கு உதவி.
-
கிறுக்கன்
புகை புகைத்து உடற்பகை போற்றாது
புகை பகைத்து பழகு.
-
கிறுக்கன்
யாருக்கு என்னை
பிடித்ததோ இல்லையோ
உனக்கு என்னை
மிகவும் பிடித்துள்ளது
ஆகவே தான்
இரவும்பகலும் என்னை
அரவணைத்தே இருக்கிறாய்
பாவம் நீ
உன்னை விரும்புவோர்
யாரும் இல்லை
என் செய்வாய்
என்னருமை (உடற்)வலியே!!!
-
கிறுக்கன்
:)
:clap: good one!Quote:
Originally Posted by kirukan
அலர்தல் ஆவேசம் ஆத்திரம் இல்லா
ஆற்றலுள்ள அனுபவமே அறிவு.
அலர்தல் - புறங்கூறல்
-
கிறுக்கன்