புரிகிறது ஜோ.
அனேகமாக பாசாங்கே மேலோங்கி நிற்பதைப் பார்த்ததால் எனக்கு சராசரிக்கு உயர்ந்த எதிர்பார்ப்புகள் இல்லை.
நியூஸ்வீக்கில் இரானிய மிதவாதிக்கும், இரானிய தீவிரவாதிக்கும் உள்ளம் வித்தியாசம் பற்றி ஒரு கார்ட்டூம் போட்டிருந்தார்கள் (முகமது கடாமி என்ற மிதவாதி ஆட்சியிலும் அராஜகங்கள் தொடர்வதைப் பற்றி). ஒரு கைதியின் கை பிணைக்கப்பட்டிருக்கும். அவர் கை நீட்டி உட்கார்ந்திருப்பார். கையை வெட்ட ஆயத்தமாக கோடாலியை உயர்த்திப் பிடித்து கீழ் இறக்கிக் கொண்டிருப்பார் தண்டனையை நிறைவேற்றுபவர். இரு கட்டங்களிலும் அதே படம் தான் இருக்கும். ஆனால் அவர்கள் உதிர்க்கும் வாசகங்கள் வெவ்வேறு.
தீவிரவாதி: கடவுளை பழிப்பவர்கள் கையை வெட்டுவோம்
மிதவாதி: இது உனக்கு எவ்வளவு வேதனை தருமோ அதே அளவு வேதனை தான் எனக்கும்
இருவரும் வெட்டத் தான் போகிறார்கள். அடிப்படையில் ஒரு பெரிய வித்தியாசமும் இல்லை. வித்தியாசம் இருப்பது போல தோற்றம் மட்டும் முன்வைக்கப்படுகிறது. அவ்வளவு தான்.
இரு கழகங்களைப் பற்றிய என் கருத்தும் கிட்டத்தட்ட இது தான். அதனால் தான் எனக்கு பெரிய ஆச்சர்யம் இல்லை.