இந்த நூற்றாண்டின் தலைசிறந்த படங்களில் ஒன்றான முதல் மரியாதையில் வரும் அத்தனை பாடல்களும் காதில் தேன் வந்து பாயும் கீதங்கள்.
1) பூங்காற்று திரும்புமா பாடல்
சிவாஜி, ராதா ஏற்றிருக்கும் பாத்திரங்களின் மன உணர்ச்சிகளை அப்படியே வார்த்தைகளால் வடித்திருக்கும் விதம் பாராட்டுதலுக்குரியது. ராஜாவின் டூயட் பாடல்களில் ஆண் குரல், பெண் குரல் அடிக்கடி மாறி மாறி வலம் வரும். ஒவ்வொரு குரலிலும் பாடப் படும் இரண்டடி வார்த்தைகளில் கிராமிய மணத்தோடு, தனது ஆளுமையையும் நிலை நாட்டவேண்டும். கிரிக்கட்டில் வரும் பந்துகளையெல்லாம் நான்குக்கும், ஆறுக்கும் விளாசுவதுபோல கவிஞர் தனது திறமையை சரிவர பயன்படுத்தியிருப்பார்.
பல்லவியில்
சிவாஜி பாடும் வரிகளில்..
பாராட்ட, மடியில் வச்சி தாலாட்ட
எனக்கொரு தாய்மடி கிடைக்குமா!
ராதா பாடும் வரிகளில் ஆறுதல் வார்த்தைகள்..
ஆகாயம் சுருங்குமா!
ஏங்காதே ! அதை உலகம் தாங்காதே!
அடுக்குமா ! சூரியன் கருக்குமா !
முதல் சரணத்தில்
----------------------
சிவாஜி :
என்ன சொல்லுவேன் ! என் உள்ளம் தாங்கல !
மெத்தை வாங்குனேன் தூக்கத்தை வாங்கல !
ராதா
இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
உன்னை மீறவே ஊருக்குள் ஆளில்ல!
இரண்டாவது சரணத்தில் :
---------------------------
உள்ள அழுகுறேன் வெளியே சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
ராதா :
உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறனும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்!
அதுவரைக்கும் யார் தனக்கு எசப்பாட்டு பாடுகிறார் என ஆவலுடன் தேடி வந்து கடைசியில் ராதா எனத் உணர்ந்து மகிழ்ச்சி ரேகைகள் ஓடும்போது, "பாராட்ட, மடியில் வச்சித் தாலாட்ட எனக்கொரு தாய்மடி கிடைக்குமா!" என்ற அதே சோகமான பல்லவி வரிகளை கவிஞர் பொருத்தமாக மாற்றியிருப்பார்.
ஆத்தாடி, மனசுக்குள்ள காத்தாடி!
பறந்ததே ! உலகமே மறந்ததே !