நன்றி சகல.
சிறுபயணங்கள் தவிர, வருஷா வருஷம் ஒரு ஒருவாரம் எங்கயாவது அப்பா அம்மாவோட போயிருவேன்.
2008ல சிங்கப்பூர், மலேசியா (கொலா லம்பூர், பெனாங்) - அப்பொ தான் நம்ம nov, ஜோ -வையெல்லாம் சந்திச்சேன்.
2009ல மைசூர், ஶ்ரீரங்கப்பட்ணா, மேலுகோட்டை, ஹாஸன், ஹளேபிடு, பேளூர், பெளவாடி, ஸ்ரவணபெலகோலா போயிருந்தோம்.
2010ல உதைபூர், ஜோத்பூர், ஜெய்ஸால்மெர், ஜெய்ப்பூர்.
2011ல தான் இன்னும் திட்டமே போடலை - ஆபீஸ் நண்பர்களோட இலங்கைல பென்டோட்டா போயிருந்தேன், அப்புறம் கர்நாடகால ரெண்டொரு இடங்கள், சமீபத்துல நெல்லை பக்கம். எல்லாம் நீட்டப்பட்ட (!) வாரயிறுதி பயணங்கள் தான்.
ஹம்பி போனதில்லை. சென்னைலேர்ந்து ஹொஸ்பெட் போகிறதுக்கு பெங்களூர்ல ரயில் மாரணும். சரியான நேரத்துல கனெக்டிங் இல்லைன்னு நினைக்கிறேன். ஹொஸ்பெட்லேர்ந்து ஹம்பி போற வழியில ஒரு 'ஜங்கிள் லாட்ஜ்' இருக்கு. மைண்ட்ல வச்சிருக்கேன் :-)
யாராவது ஒரிஸா போயிருக்கீங்களா? புபனேஷ்வர், கொனார்க், பூரி, ச்சிலிகா ஏரி...முடிஞ்சா பிஹார்ல புத்த கயா, சார்நாத் போகலாம்னு ஒரு திட்டம். அந்த அளவுக்கு நல்லா இருக்குமா?