பாடல்: உள்ளம் எல்லாம் தள்ளாடுதே
திரைப்படம்: தூரத்து இடி முழக்கம்
பாடியவர்கள்: S ஜானகி, K J யேசுதாஸ்
திரைக்கலைஞர்கள்: விஜயகாந்த், பூர்ணிமா
இசை: சலீல் சௌதுரி
வருடம்: 1980
http://www.youtube.com/watch?v=GzIrzj1X82w
Printable View
பாடல்: உள்ளம் எல்லாம் தள்ளாடுதே
திரைப்படம்: தூரத்து இடி முழக்கம்
பாடியவர்கள்: S ஜானகி, K J யேசுதாஸ்
திரைக்கலைஞர்கள்: விஜயகாந்த், பூர்ணிமா
இசை: சலீல் சௌதுரி
வருடம்: 1980
http://www.youtube.com/watch?v=GzIrzj1X82w
பாடல்: காலங்கள் மழைக்காலங்கள்
திரைப்படம்: இதயத்தில் ஓர் இடம்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், S ஜானகி
இசை: இளையராஜா
வருடம்: 1980
http://www.inbaminge.com/t/i/Ithayat...ankal.eng.html
திரைக்கலைஞர்கள் யாரென்று தெரியவில்லை.
பாடல்: சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா
திரைப்படம்: மலர்களே மலருங்கள்
பாடியவர்: P சுசீலா
பாடல் வரிகள்: பாரதியார்
திரைக்கலைஞர்கள்: சுதாகர், ராதிகா
இசை: கங்கை அமரன்
வருடம்: 1980
http://www.inbaminge.com/t/m/Malarga...namma.vid.html
பாடல்: கண்களால் நான் வரைந்தேன்
திரைப்படம்: மங்கள நாயகி
பாடியவர்கள்: P சுசீலா, K J ஜேசுதாஸ்
திரைக்கலைஞர்கள்: சரத் பாபு, K R விஜயா
இசை: V குமார்
வருடம்: 1980
பாடல் வரிகள்: வாலி
பாடலின் திரை வடிவம் கிடைக்கவில்லை.
http://www.inbaminge.com/t/m/Mangala...idhai.eng.html
ஜேசுதாஸ்:
கண்களால் நான் வரைந்தேன்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை
கண்களால் நான் வரைதேண்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை
மார்கழி மாதம் என்றால்
ஆஆஆஆஆஆ
மார்கழி மாதம் என்றால்
போர்வை போல் நானிருக்க
சித்திரை மாதம் என்றால்
வாடை போல் நீயிருக்க
நான் சூடும் மாலைகள் நீ கொண்ட கைகள்
நெய் கொண்ட தீபங்கள் மை கொண்ட கண்கள்
பூவும் பொட்டும் மேவும் பெண்மை
பூவைப் போலே நாளும் மென்மை
கண்களால் நான் வரைதேண்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை
உன் நலம் நினைப்பதெல்லாம் என் நலம் நானறியேன்
உன்னை நான் வாழ வைக்க என்னையே நான் கொடுப்பேன்
சொந்தங்கள் பந்தங்கள் உண்டான பின்பு
மென்மேலும் வளர்கின்ற நிலவாகும் அன்பு
உன்னைப் பாடும் எந்தன் உள்ளம்
என்றும் பொங்கும் கங்கை வெள்ளம்
சுசீலா:
கண்களால் நான் வரைந்தேன்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை
காலங்கள் கனியும் வரை கன்னி நான் காத்திருப்பேன்
கண்னனின் வரவுக்கென்றே கண் மலர் பூத்திருப்பேன்
கல்யாண வைபோகம் ஊர்கோலம் யாவும்
நன் நாளில் உன்னோடு நான் காண வேண்டும்
எண்ணம் எல்லாம் கண்ணில் மின்ன
சொல்லில் சொல்ல மிச்சம் என்ன
ஜேசுதாஸ்:
கண்களால் நான் வரைதேண்
அன்பெனும் ஓர் கவிதை
சுசீலா: தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை
இனிய பாடல் இசைரசிகன் அவர்களே !
இன்னொரு வெர்ஷன் இருக்கிறது என்று நினைக்கிறேன். ( சோகம் என்று நினைவு ).
பியானோவை உபயோகித்து அருமையான இசையைப் புனைவது குமாருக்கு கை
வந்த கலை. கொஞ்சம் உன்னிடம் மயங்குகிறேன் பாடலை நினைவு படுத்துவது போன்ற
மெட்டு என்றாலும் இதுவும் இனிமை....
மற்றொரு "version " இருக்கிறதா என்று தெரியவில்லை. நீங்கள் சொன்னது போலவே "உன்னிடம் மயங்குகிறேன்" பாடலை இந்த மெட்டு நினைவு படுத்துகிறது.
மற்றொரு அதிகம் கேட்டிராத பாடல்:
பாடல்: நினைத்திருந்தது நடந்து விட்டது
திரைப்படம்: மற்றவை நேரில்
பாடியவர்கள்: SPB , கௌசல்யா
திரைக்கலைஞர்கள்: விஜயன், ஜெயதேவி
இசை: ஷ்யாம்
வருடம்: 1980
http://www.inbaminge.com/t/m/Matrava...tathu.vid.html
நினைத்திருந்த்து பாடல் அருமை.. தாங்க்ஸ் rd !! இந்த பாட்டெல்லாம் அந்த காலகட்டத்தில் ஒரு கிரேஸ்... இதே திரைப்படத்தில் ஜானகி பாடிய "ராதா கிருஷ்ணா" என்று இன்னொரு பாடல் உண்டு. அது எங்கு தேடியும் அகப்படவில்லை. உங்களுக்கு கிடைத்தால் பகிரவும். நன்றி.
மது, பாடலின் ஒலி, ஒளி வடிவம் கிடைக்கவில்லை. ஆனால் வரிகள் இதோ:
ராதாகிருஷ்ணா
விழிகளின் ஆனந்தம் நீயல்லவா
ராதாகிருஷ்ணா
விழிகளின் ஆனந்தம் நீயல்லவா
ராகங்களில் பாவங்களில்
உனதொரு துணை நானல்லவா
ராதாகிருஷ்ணா
விழிகளின் ஆனந்தம் நீயல்லவா
ராகங்களில் பாவங்களில்
உனதொரு துணை நானல்லவா
ராதா கிருஷ்ணா
உன்னைத்தேடி அலைந்தேன் உரைத்தேன் இல்லை
உன்னைத்தேடி அலைந்தேன் உரைத்தேன் இல்லை
கன்னி உள்ளம் ஊமையன்றோ
கன்னி உள்ளம் ஊமையன்றோ
நீயே கொஞ்சம் சொன்னால் ஆகாதா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
நெஞ்சில் துள்ளும் தாகம் தீராதா
பல வண்ணங்கள் இவள் எண்ணங்கள்
எழுதிய கதை நீயல்லவா ராதாகிருஷ்ணா
இன்று தானே வசந்தம் வருவாய் கண்ணா
இன்று தானே வசந்தம் வருவாய் கண்ணா
பெண் என்பதே நாணமன்றோ
பெண் என்பதே நாணமன்றோ
மங்கை உள்ளம் உன்னை வெல்லாதோ
கங்கை வெள்ளம் தூது சொல்லாதோ
இது நானல்ல அது நீயல்ல
இருவரும் ஒரு நிலை அல்லவா
ராதாகிருஷ்ணா
விழிகளின் ஆனந்தம் நீயல்லவா
ராகங்களில் பாவங்களில்
உனதொரு துணை நானல்லவா
ராதா கிருஷ்ணா
பாடல்: காதல் கவிஞன் நான்
திரைப்படம்: முயலுக்கு மூணு கால்
பாடியவர்கள்: SPB, TMS, ஜென்சி, சந்திரபோஸ்
திரைக்கலைஞர்கள்: விஜயபாபு, சத்யப்ரியா, பானுசந்தர்
இசை: சந்திரபோஸ்
வருடம்: 1980
பாடல் வரிகள்: வாலி
ஒளி வடிவம்:
திரைவடிவம் இரண்டு பகுதியாக இருக்கிறது. SPB பாடுவது முதல் பகுதியிலும், TMS குரல் அடுத்த பகுதியிலும் இருக்கிறது. ஒரே காட்சியாக கிடைக்கவில்லை.
http://www.youtube.com/watch?v=lOxZuEg9_dE
http://www.youtube.com/watch?v=kC6jXAndwLw
ஒலி வடிவம்:
http://www.inbaminge.com/t/m/Muyaluk...0Naan.vid.html
ராதா கிருஷ்ணா பாடல் வரிகளுக்கு நன்றி ir..
மீண்டும் மறந்த வார்த்தைகளை நினைவுபடுத்த உதவியது..
ஒரு விண்ணப்பம்.
பி.சுசீலா பாடிய "சந்திர குலத்தவன் சிந்தையில் கலந்திட மங்கையென இங்கு வந்தேன்" என்று ஒரு பாடல் உண்டு. படம் சரியாக நினைவில்லை. ஏதோ முயலுக்கு மூணு கால் ஹீரோயின் நிஷா நடித்த படம் என்று நினைவு. ( தவறாகவும் இருக்கலாம் ). ஏதாவது விவரம் தெரிநதால் சொல்லுங்க.