டியர் ராகவேந்திரன் சார்,
'சாந்தி'யில் "மன்னவன் வந்தானடி" : மிகுந்த மகிழ்ச்சிக்குரிய தகவல்.
ஜூன் 19 அன்று மீண்டும் ஒருமுறை ஒன்றுகூடிக் களிப்புறுவோம் !
தொடர்ந்து பைரவரும், பாரிஸ்டரும் பராக் ! பராக் !
அன்புடன்,
பம்மலார்.
Printable View
டியர் ராகவேந்திரன் சார்,
'சாந்தி'யில் "மன்னவன் வந்தானடி" : மிகுந்த மகிழ்ச்சிக்குரிய தகவல்.
ஜூன் 19 அன்று மீண்டும் ஒருமுறை ஒன்றுகூடிக் களிப்புறுவோம் !
தொடர்ந்து பைரவரும், பாரிஸ்டரும் பராக் ! பராக் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
ஆதியந்தம் காணமுடியா விண்ணுலக லிங்கோத்பவரைப் போற்றி ஆதியந்தமில்லா ஈடு-இணை-எல்லையற்ற கலையுலக லிங்கோத்பவர் "நானே ராஜா"வாகப் பாடும் 'ஆதியந்தமில்லா அருட்ஜோதியே' ஓர் அரிய, அருமையான, இனிமையான பாடல்.
இசையமைப்பாளர் டி.ஆர்.ராமநாதன் என்னே ஜீவனுள்ள ஒரு அருமையான ட்யூனை அமைத்திருக்கிறார். அதனை சௌந்தரராஜ பாகவதர் உள்வாங்கி வெண்கல நாதமாக வழங்கும் போது கைவசத்தில் பூலோக சொர்க்கம் !
நடிகர் திலகத்தின் தோற்றமும், உடையலங்காரமும் கனக்கச்சிதம் ! பக்திரசம் சொட்டும் நடிப்பைப் பற்றிச் சொல்லவா வேண்டும் ! அவரது Close-Ups Simply Superb !
1993-ம் ஆண்டு ஒரு ஞாயிறு மாலைத் திரைப்படமாக இக்காவியம் சென்னை தொலைக்காட்சியின் முதல் அலைவரிசையில் ஒளிபரப்பானது. இக்காவியத்தை அன்று முதன்முதலில் பார்த்த எனக்கு மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் இருந்தது. 'வில்லாளன்' என்கிற கதாநாயக-வில்லன் பாத்திரத்தில் வீரத்திலகம் பிரமாதப்படுத்தியிருப்பார். விரைவில் இக்காவியம் நெடுந்தகடு வடிவில் வந்தால் நன்றாக இருக்கும்.
இப்பாடலை இயற்றியவர் கவிஞர் கே.பி.காமாட்சிசுந்தரன். ['மந்தமாருதம் தவழும்' பாடலை இயற்றியவரும் இவரே].
"நீதிமுறை நாட்டில் நிறைந்தோங்கவே
நீ அருளே புரிவாய் எம்மானே", எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய ஏற்றமிகு வரிகள் !
திரு.காமாட்சிசுந்தரன் சிறந்த கவிஞர் மட்டுமன்றி நல்ல நடிகருமாயிற்றே ! "பராசக்தி"யில் பூசாரியாகப் பின்னியிருப்பார். அதோடு அக்காவியத்தில் நான்கு அருமையான பாடல்களையும் புனைந்திருக்கிறார். 'ஓ ரசிக்கும் சீமானே', 'புதுப்பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே', 'கொஞ்சு மொழி சொல்லும் கிளியே' மற்றும் 'பொருளே இல்லார்க்கு தொல்லையா' ஆகிய பாடல்கள் அவரது படைப்புகளே !
மொத்தத்தில், 'ஆதியந்த'த்தோடு துவங்கும் "பக்தித் திலகத்தின் தெய்வீக ராகங்கள்" ஒரு இதமான, பதமான ஆரம்பம் !
அன்புடன்,
பம்மலார்.
http://www.sivajitv.com/special/it00...0birthday1.jpg
1906ம் ஆண்டு வ.உ.சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடியிலிருந்து கொழும்பு நகருக்கு பாரத சரித்திரத்தில் முதல் முதலாக கப்பல் போக்குவரத்தைத் துவக்கி கப்பலோட்டிய தமிழன் என்ற பெருமையைப் பெற்றார்.
http://www.thehindu.com/multimedia/d...AN_306600e.jpg
இன்று 13.06.2011 மற்றொரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் மாண்புமிகு ஜி.கே. வாசன் அவர்கள் தூத்துக்குடிக்கும் கொழும்புவிற்கும் இடையே கப்பல் போக்குவரத்தினை மீண்டும் தவக்கி வைக்கிறார். அவர் துவக்கி வைக்கும் கப்பல் ஸ்காட்டியா பிரின்ஸ், பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.
http://blog.varunrayen.com/wp-conten..._Prince_04.jpg
கப்பலோட்டிய தமிழன் என்றதுமே சிதம்பரம் பிள்ளை மட்டுமல்ல நம்முடைய நடிகர் திலகமும் உடனே நினைவுக்கு வருமளவிற்கு அவரது பெருமையினைப் பாரறியச் செய்த நடிகர் திலகம் இன்று நம்முடன் இருந்தால் இன்றைய நாளைக் கொண்டாடியிருப்பார். அவருடைய ரசிகர்களாகிய நாம் ஜி.கே.வாசன் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வோம்.
இது வெறும் பயணப் பாலமாக அமையாமல், இலங்கையில் மீதம் உள்ள தமிழர்கள் துயர் மறைந்து அனைவரும் ஒன்று என்கிற தத்துவத்தை நிலைநிறுத்தும் உறவுப் பாலமாகவும் அமைய வேண்டும் என்றும் அதற்கு மாண்பு மிகு மத்திய அமைச்சர் நிச்சயம் தன் பங்கை அளிப்பார் என்றும் நம்புவோம்.
அன்புடன்
மன்னவன் வந்தானடி நினைவுகள்
அந்த வானத்தை போல மனம் நிறைந்த மன்னவனை வரவேற்க உங்களை போல் நானும் காத்து இருக்கிறேன் . மன்னவன் வந்தானடி "காதல் ராஜ்யம் எனது அந்த காதல் ராஜ்யம் உனது " பாடல் மற்றும் "நான் நாட்டை திருத்த போறேன் " பாடல்
ஷூட்டிங் நெல்லை பாபநாசம் அருகில் மணிமுத்தாறு அணைக்கட்டு பகுதியில் படமாக்கப்பட்ட சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன .
அப்போது நெல்லை மாவட்ட சிவாஜி மன்ற தலைவராக திரு நவநீதன் அவர்கள் இருந்தார்கள் . அவருடைய தலைமையில் ஒரு வேன் ஏற்பாடு சென்ற நம் தலைவர் அவர்களை சந்தித்து பேசியது நினைவுக்கு வருகிறது . திருமதி மஞ்சுளா அவர்கள் நம்மவரோடு நடித்த முதல் படம் இதுவா அல்லது எங்கள் தங்க ராஜாவா என்று ஒரு சிறிய சந்தேகம் (எங்கள் தங்க ராஜா ரிலீஸ் 14.07.1973.) மன்னவன் வந்தானடி 02 August 1975 என்று நினவு. எதனால் இந்த சந்தேகம் மன்னவன் வந்தானடி நீண்ட நாள் படபிடிப்பில் இருந்ததாக கேள்வி
திரு முரளி ஸ்ரீநிவாஸ் மற்றும் நம் அன்பு நண்பர்களுக்கு
பொம்மை பேசும் படம் சித்ராலய மதிஒளி ஜெமினி சினிமா பிலிமலாயா போன்ற சில பழய மகசின் கிடைக்கும் கடைகள் அட்ரஸ் தெரிந்தால் தெரிவிக்கவும் .
என்றும் அன்புடன் கிருஷ்ணா க
நேற்று என் நண்பர் ஒருவருடன் குன்றத்தூர் முருகன் கோயில் மற்றும் அருகில் உள்ள ராகு பரிகார கோயில் நாகநாத சுவாமி கோயிலிக்கு சென்று இருந்தோம் . குன்றத்தூர் பெரிய புராணம் எழுதிய சேக்கிழார் பிறந்த ஊர் .
அவருக்கு ஒரு மணி மண்டபம் திரு பெரியகருப்பன் முன்னாள் ஹிந்து அறநிலைய துறை அமைசர் அவர்கள் முயற்ச்சியால்
உருவாக்கப்பட்டு உள்ளது அங்கு சென்றவுடன் ஒரு சிற்பத்தில் சேக்கிழார் பெருமான் அவர்களுக்கு அநபாய குலோதங்க சோழன் அவர்கள் சாமரம் வீசுவது போல் வடிக்கப்பட்டு உள்ளது அதை கண்டவுடன் நமக்கு திருவருட்செல்வர் நம்மவரும் கோபாலகிருஷ்ணன் அவர்களும் நினைவுக்கு வந்தனர். திருச்சிற்றம்பலம்
கதைக்களப் பாடல்களில் நடிகர் திலகம் - 03
தொடரும் பாடல் பெண்ணின் பெருமை திரைக்காவியத்தில் நடிகர் திலகம், எம்.என்.ராஜம், கே.எஸ்.அங்கமுத்து தோன்றும் பாடல் காட்சி. கதைப்படி ஒரு பாடலை இசைத்து கருத்துப் பரிமாற்றம் செய்யும் சூழல்.
http://www.youtube.com/watch?v=_JbAAtuLGJE&feature=player_embedded
இப்பாடலின் சிறப்பம்சம், டி.எம்.எஸ். மற்றும் பி.சுசீலா இணைந்து நடிகர் திலகத்தின் படத்திற்காக பாடிய முதல் பாடல் ஆகும். இசை பெண்டியாலா நாகேஸ்வரராவ்.
பாடலுக்கு நன்றி பேராசிரியர் கந்தசாமி, நமது ஹப்பர்.
உரிமைக்குரல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள கோடீஸ்வரன் திரைக்காவியத்தின் நெடுந்தகடு -
முகப்பு
http://i872.photobucket.com/albums/a...oteeswaran.jpg
பின் அட்டை
http://i872.photobucket.com/albums/a...teeswaranR.jpg
எங்க ஊர் ராஜா - Part I
தயாரிப்பு: அருண் பிரசாத் மூவீஸ்
இயக்கம் : பி.மாதவன்
வெளியான நாள் : 21 -10 --1968
சிவலிங்கபுரம் என்ற ஊரில் பெறும் தனவந்தராக வாழ்ந்து வருபவர் விஜயரகுநாத சேதுபதி. ரகுபதி பவனம் என்ற மாளிகைக்கு சொந்தக்காரர். யார் வந்து கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் அள்ளிக் கொடுக்கும் வள்ளல். தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்று குடும்ப நண்பரின் அறிவுரைகளை கூட ஏற்க மறுத்து தன் வழியிலே செல்லும் தயாள மனமுடையவர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தன் ஊர் ஏழைகளுக்கு தன் சொந்த செலவில் அதுவும் மார்வாடியிடம் ஒரு லட்சம் கடன் வாங்கி வீடுகள் கட்டிக் கொடுக்கும் மனமுடையவர். தன்னை நம்பி வந்தவர்களை காப்பாற்றுவது தன் கடமை என நினைப்பவர். தன் மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகளோடு நிறைவான வாழ்க்கை வாழ்பவர். அவருக்கு கல்யாண வயதில் ஒரு தங்கை கௌரி.
சிவலிங்கபுரதிற்கு ஒரு வேலையாக வரும் காளையார்கோவில் ஜமின்தார் ராஜாங்கம் கோவிலில் வைத்து அந்த ஊரில் சேதுபதிக்கு இருக்கும் மதிப்பையும், அவர் பாட்டனார், தந்தையார் அனைவருமே பரம்பரை பரம்பரையாய் அந்த ஊரில் கொடி கட்டி பறந்தவர்கள் என்பதையும், சேதுபதி பெரும் சொத்துக்கு அதிபதி என்பதையும் தெரிந்துக் கொள்கிறார்.
ரகுபதி பவனதிற்கு வரும் ராஜாங்கம் சேதுபதியிடம் தன் மகனுக்கு அவரின் தங்கையை பெண் கேட்க சேதுபதியும் சம்மதிக்கிறார். நிச்சயதார்த்தம் நடக்கும் அன்று மணமகன் வீட்டார் அதிகப்படியாக சீர்வரிசை கேட்க சேதுபதியின் ஊர்கார்கள் சேதுபதியை பேச விடாமல் அவர்களே எல்லாவற்றிக்கும் சம்மதம் சொல்ல வேறு வழியின்றி சேதுபதியும் ஒத்துக் கொள்ள நேர்கிறது. கல்யாணத்தன்று தாலி கட்டி முடிந்ததும் ராஜாங்கத்தை தனியே அழைத்து பேசும் சேதுபதி சீர்வரிசை முழுவதும் செய்து விட்டதாகவும் ஆனால் ரொக்கப் பணம் ரூபாய் ஐம்பதினாயிரம் மட்டும் புரட்ட முடியவில்லை என்றும் அதற்கு பதிலாக தற்காலிகமாக தன் வீட்டு பத்திரத்தை வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறார். இதை ஏற்றுக் கொள்ளாமல் கோவப்படும் ராஜாங்கம் அவரை அனைவரின் முன்னிலும் அவமானப்படுத்தி விடுகிறார். அது மட்டுமல்ல "கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத உனக்கெல்லாம் எதுக்கையா வல்லவட்டி" [தோளில் போடும் பட்டு அங்கவஸ்திதரத்தை கிராமங்களில் இப்படி கூறுவர்] என்று கேட்டு விட நிலை குலைந்து போகிறார் சேதுபதி.
மீண்டும் சேட்டிடமே சென்று மேலும் ஐம்பதினாயிரம் ரூபாய் கடனாக வாங்கி தன் தங்கையை அவள் கணவன் வீட்டிற்கு அழைத்து சென்று பணத்தையும் கொடுத்து அவளையும் ஒப்படைக்கிறார். ஆனால் அப்போதும் ராஜாங்கம் மரியாதை குறைவாக பேசிவிட "உன்னை விட அந்தஸ்த்தில் உயர்ந்து மீண்டும் இழந்த என் செல்வத்தையெல்லாம் மீட்டு உன் முன்னால் வருவேன். அதுவரை இந்த வல்லவட்டியை போட மாட்டேன், அதையும் உன் கையாலே எனக்கு போட வைப்பேன் என்று சபதம் செய்கிறார் சேதுபதி. ஆனால் கொடுத்த ஒன்றரை லட்ச ரூபாய் கடனை கேட்டு சேட் வீட்டிற்கு வர சேதுபதி கோவப்படுகிறார். ஆனால் சேதுபதியின் மனைவி சிவகாமி வீட்டு பத்திரத்தை கொடுத்து விடுவதாக சொல்லி அனுப்புகிறாள். கணவன் மனதளவில் தளர்ந்திருப்பதை பார்த்துக் கொண்டே படி இறங்கும் சிவகாமி தலை சுற்றி விழுந்து விட மரணப் படுக்கையில் கிடக்கும் அவள் குழந்தைகளை சேதுபதியிடம் ஒப்படைத்துவிட்டு இறந்து விடுகிறாள். மனைவி இறந்து விட்டாள் என்ற செய்தியை சொல்லி தங்கையை அழைக்க செல்லும் சேதுபதியிடம் உங்கள் வீட்டிற்கு நான் வர மாட்டேன் என தங்கை சொல்லிவிட மனம் உடைந்த சேதுபதி, மனைவியின் இறுதி சடங்குகளை முடித்து விட்டு குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு ரயில் ஏறி சென்னை புறப்படுகிறார். சேதுபதி் எப்போது பணத்துடன் வந்தாலும் வீட்டை அவரிடம் ஒப்படைப்பதாக சொல்லி சேட் ரகுபதி பவனத்தை பூட்டி வைக்கிறார்.
சென்னையில் ஒரு அச்சகத்தில் வேலைக்கு சேரும் சேதுபதி தன் இரண்டு மகன்களையும் வேலைக்கு அனுப்பிகிறார். மூத்த மகன் பூபதி ஒரு கட்டுமான நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்து அங்கே சூபர்வைசர் நிலைக்கு உயருகிறான். இளைய மகன் சக்ரவர்த்தி ரயில் நிலையத்தில் போர்ட்டராக சேர்ந்து Guide ஆக வேலை செய்கிறான். தங்கள் லட்சியத்தில் வெற்றி பெறும் வரை எந்த சுக போகத்திலும் ஈடுபடுவதில்லை என மூவரும் உறுதி எடுத்துக் கொள்கின்றனர்.
பூபதி வேலை பார்க்கும் கட்டுமான நிறுவனத்தின் முதலாளியின் மகள் கீதா. அவளுக்கும் பூபதிக்கும் ஏற்படும் ஈகோ மோதல் பின் காதலில் முடிகிறது. Guide வேலை செய்யும் சக்ரவர்த்தி ரயில் நிலையத்தில் வைத்து சந்தித்த விஜயபுரம் ராணியை லாட்ஜில் தங்க வைத்து பணிவிடை செய்கிறான். அவளிடம் தங்கள் மாளிகையை மீட்க பணம் கேட்க அவளும் தருவதாக சொல்கிறாள்.
இதற்கு நடுவே ஊரில் சேதுபதியின் தங்கையின் கணவர் இறந்து விட தன் மகனுடனும் மாமனார் ராஜங்கத்துடனும் வாழ்ந்து வரும் கௌரி தன் மகனை தன் அண்ணன் மகளுக்கு மனம் முடிக்க வேண்டும் என விரும்புகிறாள். ராஜாங்கம் அதை எதிர்த்தாலும் கூட விடாமல் சேதுபதிக்கு கடிதம் போடுகிறாள்.கடிதம் ஒவ்வொரு முறையும் பூபதி கையில் கிடைக்க தன் தாயின் சாவிற்கு வராத அத்தை மேல் ஆத்திரமாக இருக்கும் பூபதி அதை கிழித்து எறிந்து விடுகிறான். ஒரு முறை அவன் கிழிக்க முற்படும்போது சேதுபதி பார்த்து விட அதை வாங்கி படித்து பார்க்க தன் மகனுக்கு அண்ணன் மகள் விஜயாவை பெண் கேட்டு கௌரி எழுதியிருப்பதை படித்துவிட்டு சிறிது சஞ்சலம் அடைய பூபதியின் கோவம் மற்றும் வற்புறுத்தல் காரணமாக ஏற்கனவே பொருத்தம் பார்த்திருந்த பையன் வீட்டாரை வர சொல்கிறார். இந்த பெண் பார்க்கும் விஷயம் கௌரிக்கு மொட்டை கடுதாசியாக போக அதே நாளில் அவள் சென்னைக்கு கிளம்பி வருகிறாள்.
பெண் பார்க்கும் படலத்திற்கு பூபதி வீட்டிற்கு வரும் கீதா, மணப்பெண் விஜயா தன் அத்தை மகனை மணக்க விரும்புகிறாள் என்பதை தெரிந்துக் கொள்கிறாள். பையன் வீட்டார் வந்து அமர்ந்திருக்க அப்போது அங்கே வரும் கௌரி தன் மகன்தான் முறை மாப்பிளை ஆகவே அவனுக்குத்தான் கல்யாணம் செய்துக் கொடுக்க வேண்டும் என சொல்ல பையன் வீட்டார் வெளியேறுகின்றனர். இதை கண்டு கோபமடையும் பூபதி எங்க அம்மா இறப்பிற்கு வராத நீங்க இப்போ எப்படி சம்பந்தம் பேச வரலாம் என்று கேள்வி கேட்க அன்று நடந்தவற்றை கௌரி வெளியில் சொல்கிறாள். அன்று அண்ணியின் இறப்பிற்கு சென்றால் இனி திரும்பி வரவே வேண்டாம் என்று தன் மாமனார் ராஜாங்கம் மிரட்டியதை சொல்கிறாள். அதனால்தான் அன்று வர மறுத்ததாகவும் கூறுகிறாள். இதை கேட்டு சேதுபதி சமாதானம் அடைந்தாலும் பூபதியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிறிது அவகசாம் வேண்டும் என்றும் அதன் பிறகு இந்த கல்யாணத்தைப் பற்றி பேசலாம் என்று சேதுபதி சொல்லி விடவே கௌரி திரும்பி செல்கிறாள்.
கீதா பூபதியோடு சுற்றுவதை கண்டிக்கிறார் கீதாவின் தந்தை. அவரை எதிர்த்துக் கொண்டு கீதா வீட்டை விட்டு வெளியேறி பூபதியுடன் அவன் வீட்டிற்கு செல்கிறாள். சேதுபதி முதலில் தயங்கினாலும் பின் கீதா தங்குவதற்கு ஒப்புக் கொள்கிறார்.
இந்நிலையில் சேதுபதியின் பழைய வேலையாள் ஒருவன் சேதுபதியை தேடி வர அவனிடம் தன் மகள் என்று கீதாவை சேதுபதி அறிமுகப்படுத்த அவனோ அந்த என்ன எஜமான் உங்க தங்கச்சி மகளை உங்க மகள்னு சொல்றீங்களே என கேட்டு விட அனைவருக்கும் அதிர்ச்சி. அப்போதுதான் தெரிய வருகிறது கீதா சேதுபதியின் தங்கை கௌரி நாச்சியார் மகள் என்பதும் பூபதி வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளி கீதாவின் தந்தை அல்ல, பெரிய தந்தை என்பதும் இங்கே நடக்கும் விஷயங்களை எல்லாவற்றையும் கீதா மொட்டை கடுதாசி மூலமாக தன் தாயாருக்கு தெரிவித்திருக்கிறாள் என்பதும் தெரிய வருகிறது. கீதா அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
இதற்கிடையில் விஜயபுரம் ராணி என தான் கூட்டி வந்த பெண் ராணி அல்ல என்று சக்ரவர்த்தி நம்பும் சூழ்நிலை ஏற்படுகிறது. அவன் அவளை ஒரு குடிசையில் தங்க வைக்க அங்கே அவளை தேடி வரும் ஒருவர் சக்ரவர்த்தி மூலமாக அவள் இருக்குமிடத்தை அடைகிறார். அவள் உண்மையிலே விஜயபுரம் ராணி என்பதையும் அவளின் சொத்துகளை வைத்து அனுபவித்துக் கொண்டிருந்த அவள் மாமனுக்கு அந்த சொத்தில் உரிமையில்லை என நீதிமன்ற தீர்ப்பு வந்து விட்டதையும் தெரிவிக்கவே வந்ததாக கூறுகிறார். ரகுபதி பவனத்தை மீட்பதற்கு தேவையான பணத்தை தான் தருவதாக கூறுகிறாள்.
இவை எல்லாம் ஒருபுறம் நடந்துக் கொண்டிருக்க சேதுபதியின் மனமெல்லாம் ரகுபதி பவனத்தை மீட்பதிலேயே இருக்கிறது. பழைய சேட் சேதுபதிக்கு ஒரு கடிதம் அனுப்புகிறான். தன் இத்தனை வருடங்கள் சேதுபதிக்காக காத்திருந்ததாகவும் ஆனால் பல வருடங்கள் ஆகி விட்டபடியால் அந்த மாதம் குறிப்பட்ட தேதி மற்றும் நேரத்துக்குள் பணத்தை கொண்டு காட்ட வேண்டும் என நோட்டீஸ் அனுப்புகிறான். அந்த நேரம் அவர் வேலை செய்யும் அச்சகத்தில் தனது ஊரை சேர்ந்த ஒரு இளைஞனை சந்திக்கிறார். அவன் சொத்தின் பேரில் கடன் வாங்கி தரும் தொழிலை செய்துக் கொண்டிருப்பதை அறிந்த சேதுபதி தனது வீட்டை மீட்பதற்கு அவனிடம் ரூபாய் ஐம்பதினாயிரம் வாங்கி தருமாறும் நம்பிக்கைக்கு தான் சேர்த்து வைத்திருக்கின்ற ஒருள் லட்ச ரூபாயை காண்பிப்பதாகவும் சொல்ல, அந்த நபர் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு தன் முதலாளியை சந்திக்க ஒரு பங்களாவிற்கு மாலையில் வருமாறு சொல்லி விட்டு சொல்கிறான். அதன்படி அங்கே செல்லும் சேதுபதியை ஒரு முதலாளி சந்திக்கிறார். பணத்தையும் கைமாற்றாக கொடுக்கிறார்.
வீட்டிற்கு சந்தோஷத்துடன் வரும் சேதுபதி மகன்கள் இருவரிடமும் விஷயத்தை சொல்கிறார். பெட்டியை ஆவலுடன் திறந்து பார்த்தால் நோட்டுக் கற்றைகளில் மேலேயும் கிழேயும் மட்டும் பண தாள்கள், மற்றவை அனைத்தும் வெள்ளை தாள்கள். ஏமாந்து விட்டோம் என அறியும் சேதுபதியின் மனம் நொறுங்க அதற்கு மேலும் ஒரு அடியாக இத்தனை நாள் சேமித்த பணம் போய்விட்டதே என்கின்ற கோவத்தில் தந்தையை மகன்கள் இருவரும் கடிந்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
தன் மகள் மட்டும் போதும் என சொல்லும் சேதுபதி சேட் குறிப்பிட்ட தேதிக்கு முன் சிவலிங்கபுரதிற்கு சென்று சேர வேண்டுமே என்று ஓடோடி செல்கிறார். வழியில் பல தடைகளையும் கடக்கும் அவர் சேட்டிடம் பணத்தை கொடுத்து சாவியை பெற்றுக் கொண்டு ரகுபதி பவனம் செல்கிறார். அங்கே தன் பழைய மாளிகைக்குள் நுழைந்து பழைய கம்பீரத்தோடு வளைய வரும் நேரத்தில் அவரின் மனசாட்சி அவரை குத்துகிறது. நீ ஏமாந்தது போல் சேட்டையும் பணம் என்ற பெயரில் வெள்ளை தாள்களை கொடுத்து ஏமாற்றி விட்டாயே என சத்தம் போடும் மனசாட்சிக்கு பதில் சொல்ல முடியாமல் அவர் தடுமாற அந்த நேரத்தில் அங்கே சேட்டும் வந்து விடுகிறார். சேதுபதி சேட்டிடம் பணம் என்று சொல்லி உன்னை வெள்ளை தாள்கள் கொடுத்து ஏமாற்றி விட்டேன் என்று சொல்ல, சேட்டோ புரியாமல் இல்லையே எல்லாம் உண்மையான நோட்டுகள்தானே இருந்தது என்று பதிலளிக்க சேதுபதி அதிர்ச்சி அடைகிறார். அந்நேரம் அங்கே வரும் அவரின் மூத்த மகன் பூபதி அவரை ஏமாற்றியவனை தான் கண்டு பிடித்ததையும் உண்மையான பணத்தை திருப்பி வாங்கியதையும் அதை தன் தங்கை மூலமாக பெட்டியில் வைத்ததையும் ஆக சேதுபதி கொடுத்த பணம் அவர் பணம்தான் என்ற உண்மையை சொல்ல அது மட்டுமல்ல ஆளை அனுப்பி சேதுபதியை ஏமாற்றியது ராஜாங்கம்தான் என்ற உண்மையையும் வெளிப்படுத்துகிறான்.
அங்கே வரும் ராஜாங்கம் தன் தவறுகளை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோர, சேதுபதியிடம் தான் தோற்றதை ஒப்புக் கொண்டு தன் கையாலே வல்லவட்டியை சேதுபதியின் தோளுக்கு சூட எல்லாம் நலமாய் முடிகிறது.
அன்புடன்
எங்க ஊர் ராஜா - Part II
தமிழ் திரையுலக இயக்குனர்கள் வரிசையில் பி.மாதவனுக்கு ஒரு தனியிடம் உண்டு. இயக்குனர் T.R. ராம்நாத் அவர்களிடமும் பின்பு ஸ்ரீதரிடமும் உதவியாளாராக இருந்து மணி ஓசை மூலம் இயக்குனரானவர் மாதவன். அந்த படம் சரியாக போகவில்லை என்ற நிலையில் சற்று சோர்ந்து போயிருந்த போது அவரை அழைத்து அன்னை இல்லம் படத்தை டைரக்ட் செய்ய சொன்னார் நடிகர் திலகம். அந்த படம் 100 நாட்கள் ஓடி பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்த படத்திற்காக மாற்று முகாமிற்கு மாதவன் சென்றாலும் அங்கே உறவு நீடிக்கவில்லை. மீண்டும் நீலவானம் மூலமாக நடிகர் திலகம் காம்பிற்கே திரும்பி வந்தார். அதன் பிறகு ஜெய்சங்கரை வைத்து சில படங்கள் இயக்கினார்.
அந்த நேரத்தில் சொந்தமாக படம் தயாரிக்க வேண்டும் என்று விரும்பி அவர் ஆரம்பித்த நிறுவனம்தான் அருண் பிரசாத் மூவீஸ். நடிகர் திலகத்திடம் கால் ஷீட் வாங்கி தானே தயாரிப்பளார் இயக்குனர் வேலைகளை ஏற்றுக் கொண்டு அவர் செய்த படம்தான் எங்க ஊர் ராஜா. மாதவனின் ஆஸ்தான கதை வசனகர்த்தா பாலமுருகன். நடிகர் திலகம் பி மாதவன் பாலமுருகன் கூட்டணி பல வெற்றிப்படங்களை தந்துள்ளது, அந்த கூட்டணியின் முதல் படம் எங்க ஊர் ராஜா.
நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை சேதுபதி, பூபதி என்ற இரண்டு வேடங்கள் என்றபோதிலும் சேதுபதிதான் எல்லோர் மனங்களிலும் இடம் பிடிப்பவர். இதில் சேதுபதி ரோலில் இரண்டு கெட் அப். முதலில் நடுத்தர வயதை தொட்டுக் கொண்டிருக்கும் இளமை பின் வயது வந்த மூன்று பிள்ளைகளுக்கு தந்தை என்ற முதுமை.[படம் வெளி வருவதற்கு முன் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் மூன்று கெட்-அப்களில் நடிகர் திலகத்தை சித்தரிக்கப்பட்டிருந்தார். எனவே படத்தில் நடிகர் திலகம் மூன்று வேடங்களை ஏற்கிறாரோ என்று வரை ஒரு சந்தேகம் ரசிகர்களிடையே இருந்தது].
முதல் காட்சியில் பூஜையறையில் தெய்வத்தை வழிப்படும் சேதுபதி முதல் இறுதிக்காட்சியில் தன் லட்சியத்தில் வெற்றிக் கொண்டு ஆர்ப்பரிக்கும் சேதுபதி வரை நடிகர் திலகம் பிச்சு உதறியிருப்பார். முதலில் அவருக்கே உரித்தான அந்த மிடுக்கு, ஊர் மக்களிடம் காட்டும் அன்பு, கல்யாண நிச்சயத்தின்போது தன் நிலை தெரியாமல் ஊர்காரர்கள் வரதட்சனை வாக்குறுதிகளை அள்ளி வீச அதை தடுக்க முடியாமலும் அதே நேரத்தில் தன் ஜமீனின் அந்தஸ்து மற்றவர்கள் முன்னில் குறைந்து போய் விடக்கூடாது என்ற தவிப்பும் கல்யாணத்தன்று சொன்ன ரொக்க பணம் தரவில்லையென்று தன்னை அவமானப்படுத்தும் நம்பியாரிடம் தன் நிலைமையை சொல்லும் போது கூட ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை தாழ்த்திக் கொள்ளாமல் பேசும் அந்த தோரணை, ஊர் தெருக்களில் மதிப்போடு சாரட் வண்டியில் வந்த போது தன்னை கைகுவித்து வணங்கிய மக்கள் கல்யாணத்தன்று நடந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதே தெருவில் தன்னை பரிகாசம் செய்யும் போது மனதுக்குள் மருகும் அந்த பார்வை, அந்த கஷ்டத்தோடு அருமை மனைவி இறந்து போகும் போது காட்டும் அந்த முகபாவம் [அதிகப்படியாக செய்வார் சிவாஜி என்பது எப்படி காலம் காலமாக பரப்பப்பட்டு வந்த அவதூறு என்பது இந்த காட்சியை பார்பவர்களுக்கு புரியும்], தன் மனைவி இறந்ததை தங்கையிடம் சொல்ல போக அவள் உங்கள் வீட்டிற்கு வர மாட்டேன் என சொல்லிவிட அந்த பதிலால் தளர்ந்து போய் திரும்புவது, சென்னைக்கு வந்து அச்சகத்தில் வேலை செய்யும் போது அந்த உடல் மொழியை அப்படியே பவ்யமாக மாற்றுவது, சம்பள பணம் மொத்ததையும் புதிய உடை வாங்குவதற்கு செலவழித்து விட்டான் மகன் என்றதும் வரும் கோபம், அப்பாவின் திட்டை கேட்டு மகன் முகம் வாடி உள்ளே போக தனக்கு தானே பேசிக் கொள்ளும் அந்த உணர்வுகள் [சின்ன பையன், நீ அவனுக்கு டிரஸ் வாங்கி தரணும் ஆன நீ செய்யலை, சரி அவனே வாங்கிகிட்டான்.அதிலே என்ன தப்பு?], தன் பிள்ளைகள் தன் 60 வது பிறந்த நாளை கொண்டாட அதில் மீசையை முறுக்கியபடி அமர்ந்திருக்கும் கம்பீரம், கிழவன் என்று மகன் சொன்னதும் பீறிட்டு வரும் கோபம், பழைய வேலைக்காரன் தன் வெள்ளிப்பூண் கைதடியை கொண்டுவர அதை ஆசையோடு தடவிப் பார்க்கும் அந்த குழந்தைத்தனம், அச்சகத்தில் தன்னை தற்செயலாக பார்க்கும் நம்பியார் தன் சவாலை குறிப்பிட்டு கேலி செய்ய பதில் சொல்லாமல் காறி உமிழும் அந்த உக்கிரம், பணம் கைக்கு வரப்போகிறது என்றதும் வரும் அந்த பரபரப்பு, பணம் தருவதாக சொல்லி தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று தெரிந்தவுடன் வரும் அந்த இயலாமை கலந்த கோபம், மகன்கள் தன்னை விட்டுப் போகிறார்கள் என்றதும் வரும் விரக்தி, பணத்தை குறிப்பிட்ட காலத்திற்கு முன் கொண்டு சேர்க்க அவர் காட்டும் அந்த வேகம், சேட்டை ஏமாற்றி விட்டோம் என்ற குற்ற உணர்வு மனதை உறுத்த, சேட்டிடம் தயக்கதோடு பேசும் அந்த முகம், தான் தவறு செய்யவில்லை என்றதும் வரும் அந்த வெற்றிக் களிப்பு, இப்படி காட்சிவாரியாக சொல்லிக் கொண்டே போகலாம்! அப்படி ஒரு பவர்புல் performance படம் முழுக்க பார்க்கலாம் நடிகர் திலகத்திடம்.
படத்தின் முத்தாய்ப்பான காட்சி. மகன்கள் இருவரும் கோபித்துக் கொண்டு சென்று விட இரண்டு கை தட்டினா சத்தம்னு சொன்னேன். ஆனா இப்போ சொல்றேன் ஒரு கை தட்டினாலும் சத்தம் வரும் என்று சொல்லி விட்டு ஒரு கையால் மற்றொரு கையை தட்டுவது, தொடையை தட்டுவது, தோளை தட்டுவது என்று தன் மன உறுதியை வலிமையை வெளிக்காட்டும் அந்த காட்சி, எந்த சூழ்நிலையிலும் தன் லட்சியத்தை அடைய வேறு யார் தயவும் தேவையில்லை என்பதை பொங்கி வரும் வெள்ளமாக யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்று சீறி பாய்வாரே அது படத்திற்கே சிகரமான காட்சி.
இப்படிப்பட்ட சேதுபதி பாத்திரத்திற்கு முன்பு பூபதி எடுபடுவது கடினமான காரியம்தான். ஆனால் அதுவும் நடிகர் திலகம் ஆயிற்றே! விட்டுக் கொடுத்து விடுவாரா என்ன? இளமை ததும்பும் அந்த பாத்திரத்தை நளினமாக கையாண்டிருப்பார். இந்த பாத்திரப் படைப்பு இந்த படம் வெளி வந்த ஒரு வருடத்திற்கு பின் வெளி வந்து சரித்திரம் படைத்த தெய்வ மகன் விஜய் பாத்திரத்திற்கு ஒரு ஒத்திகை என்றே சொல்லலாம். அதிலும் சிவாஜி-ஜெயலலிதா சம்பந்தப்பட்ட காட்சிகள் அந்த எண்ணத்தை வலுப்படுத்தும். இந்த பாத்திரத்தில் அவர் ஸ்கோர் செய்யும் நான்கு காட்சிகளை குறிப்பிட வேண்டும். ஜெஜெ வீட்டில் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது உங்க அப்பா இப்போ வரமாட்டாரே இப்போ வரமாட்டாரே என்று சொல்லிக் கொண்டே நெருங்கி சென்று விட்டு காப்பி கிடைக்குமா என்று வழிவது, கோட் சூட் உடைக்காக சம்பள பணத்தை செலவு செய்ததை தந்தை கண்டித்தவுடன் உடையை கழட்டி கையில் எடுத்துக் கொண்டு திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்று மன்னிப்பு கேட்பது, தந்தையின் 60-வது பிறந்த நாளன்று கிராமிய பாணியில் வேட்டி கட்டிக் கொண்டு கழுத்தில் புலி நக செயினை அணிந்துக் கொண்டு ஆடுவது [அந்தக் காட்சியில் அவ்வளவு handsome -ஆக இருப்பார்], தந்தை ஏமாந்து விட்டாரே என்ற கோபத்தில் கிழவன் என்ற வார்த்தையை சொல்லுவது, இவை அந்த பாத்திரத்திற்கு வலு சேர்க்கும். அதை தவிர ராணியின் சொத்து வரப் போகிறது என்று கனவு காணும் நாகேஷிடம் டி.கே.பட்டம்மாள் பாட்டு ஒண்ணு இருக்கு தெரியுமா என்று அவருக்கே உரித்தான subtle நகைச்சுவையை வெளிப்படுத்துவது, கிளைமாக்ஸ்-ல் நம்பியாரிடம் எங்க அப்பா கிட்டே உனக்கெல்லாம் எதுக்கு வல்லவெட்டி-னு கேட்டீங்களாமே என்று சீறுவது, இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
படத்தில் ஒரு சிவாஜி இருந்தாலே மற்றவர்கள் பாடு திண்டாட்டம். இங்கே இரண்டு சிவாஜி. அனைவருமே also ran வகைதான். இதில் சற்று வித்தியாசம் காட்டுபவர் நம்பியார் மட்டுமே. சாதாரணமாக வரும் கையை பிசையும் முகத்தை உருட்டும் மானரிசங்கள் இல்லாமல் செய்திருப்பார். சவால் காட்சியில் கூட இயல்பான தன்மை இருக்கும் ["இந்த வீராப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. வாக்கு மாற மாட்டான் இந்த சேதுபதி-னு சொன்னியேயா"].
அந்தக் காலக் கட்டத்தில் ஜெயலலிதா நடித்த படங்களை பார்த்தோம் என்றால் பெரும்பாலான படங்களில் அவர் பணக்கார வீட்டு பெண்ணாக, திமிர் பிடித்தவராக ஆண்களை மட்டம் தட்டுபவராகவே சித்தரிக்கப்பட்டிருப்பார். ஆரம்பக் கட்டங்களில் இந்த படத்திலும் அப்படித்தான் என்ற போதிலும் சேதுபதியின் தங்கை மகள்தான் அவர் என்ற ட்விஸ்ட் வந்ததும் பாத்திர தன்மை மாறும். ஆனால் அதற்கு பின் படத்தில் அவருக்கு வாய்ப்பு குறைந்து விடும்.
நாகேஷ் மனோரமா காமடி படத்திற்கு எந்த வகையிலும் உதவி செய்யாதது மட்டுமல்ல சில காட்சிகள் படத்திற்கு ஒரு சின்ன தொய்வை ஏற்படுத்தி விடும். ரகுபதி பவனத்தை மீட்க பணம் கேட்கும் நாகேஷிடம் தருகிறேன் என்பதை கை அசைவிலேயே மனோரமா ஒத்துக் கொள்ள பின்னர் அவர் ராணி அல்ல என்று சூழல் வந்தவுடன் நாகேஷ் புலம்பும் ஒரு காட்சி மட்டுமே சற்று ஆறுதல் [பணம் வேணும்னு கேட்டதற்கு எப்படி கையை அசைச்சே? பெரிய சிவாஜி கணேசன்-னு நினைப்பு]. சிறப்பு தோற்றமாக இருந்தாலும் சௌகார் படம் முழுக்க வருவது போல ஒரே பீலிங். காரணம் அவரின் போட்டோ அநேகமாக அனைத்துக் காட்சிகளிலும் பிரேமில் இடம் பெறுவதால் இருக்கலாம். இரவும் பகலும் வசந்தா சேதுபதியின் தங்கை கௌரி நாச்சியாராக மெயின் ரோலில் வருகிறார்.
முதலில் சொன்னது போல் கதை வசனம் பாலமுருகன். கிராமத்து பின்னணியில் திரைக்கதை அமைப்பதில்தான் தன் பலம் அடங்கியிருக்கிறது என்பதை தெரிந்து வைத்திருந்த பாலமுருகன் அந்த பார்முலாவை இங்கே நன்றாக பயன்படுத்தியிருப்பார். அது போல உணர்ச்சிமிக்க கதை சந்தர்ப்பங்களை உருவாக்கி அதை கிளைமாக்ஸ்-ல் உணர்ச்சி குவியலாக முடிப்பதன் மூலமாக மக்களை கவர முடியும் என்பதனை நடிகர் திலகத்தை வைத்து இதற்கு முன்னால் எடுத்த அன்னை இல்லம், நீலவானம் படங்களின் மூலமாக தெரிந்துக் கொண்ட மாதவன் இந்தப்படத்திலும் அதையே கையாண்டிருந்தார். படத்தை நடிகர் திலகம் single handed ஆக முன்னெடுத்து செல்ல மாதவனின் வேலை எளிதானது.
அன்புடன்
(தொடரும்)