தடையறத் தகவல்கள்
இடையூறின்றிப் பகிர்ந்து கொள்ள
கட்டபொம்மனின் கர்ஜனை
இப்புவியெங்கும் உரத்தொலிக்க..
காத்திருக்கும் புது இழை
கட்டபொம்மனுக்கான தகவல் பேழை
கர்ஜிக்கும் கட்டபொம்மன்.
Printable View
தடையறத் தகவல்கள்
இடையூறின்றிப் பகிர்ந்து கொள்ள
கட்டபொம்மனின் கர்ஜனை
இப்புவியெங்கும் உரத்தொலிக்க..
காத்திருக்கும் புது இழை
கட்டபொம்மனுக்கான தகவல் பேழை
கர்ஜிக்கும் கட்டபொம்மன்.
வீரபாண்டிய கட்டபொம்மன் ட்ரைலர் வெளியீட்டு விழா- Part II
ஒரு விஷயத்தை குறிப்பிட மறந்து விட்டேன். மேடையில் ஒரு நாற்காலி மட்டும் காலியாக விடப்பட்டு அங்கே நடிகர் திலகத்தின் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது. அவரின் அந்த இடத்தை நிரப்புவதற்கு யாருமே இல்லை என்பதனால் அப்படி அமைக்கப்பட்டிருப்பதாக மதுவந்தி குறிப்பிட்டார்.
இந்த படத்தை டிஜிட்டல் மெருகேற்றம் செய்வதில் முக்கிய பணியாற்றிய சித்ரா லட்சுமணன் அந்த முயற்ச்சியில் சந்திக்க நேர்ந்த இன்னல்களைப் பற்றி குறிப்பிட்டார். தாங்களுக்கு கிடைத்த எந்த பிரிண்டும் முழுமையாக இல்லை என்பதை சொன்ன அவர் லாப் வேலைகள் சிலவற்றை சென்னை பிரசாத் லாபிலும் சிலவ்ற்றை மும்பை ரிலையன்ஸ் லாபிலும் செய்ததாக சொன்ன அவர் அதன் பிறகும் ஒரு சில காட்சிகளை மேம்படுத்த வேண்டி பூனா பிலிம் இன்ஸ்டியுட்ல் இருக்கும் Archive -லிருந்து எடுத்தாக சொன்னார்.
சிவகுமார் இந்தப் படத்தின் முழு வசனங்களையும் சொல்வார் என்று குறிப்பிட்ட சித்ரா லட்சுமணன் இப்போது தாணு போட்டிக்கு வந்திருக்கிறார் என்று கிண்டலடித்தார்.
சிவாஜியின் நடிப்பைப் பற்றி பேசிய சித்ரா லட்சுமணன் அவர் தலை முதல் பாதம் வரை நடிக்கும் என்றார். எந்த நடிகரையும் சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் என்று கேட்டுக் கொண்ட லட்சுமணன் சிவாஜி மாதிரி நடிப்பதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். சிவாஜி மாதிரி நடக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். கட்டபொம்மன் தெருக்கூத்தை பார்த்துவிட்டுத்தான் நடிப்பு ஆசை நடிகர் திலகத்தின் மனதில் வேர்விட்டதை சொன்ன அவர் அதை சிவாஜி நாடக மன்றத்தின் சார்பில் நாடகமாக வெற்றிகரமாக நடத்தப்பட்டதை சொன்னார். அதன் பிறகு அவர் வந்திருந்த audience -ஐ பார்த்து " உங்களில் எத்தனை பேருக்கு இந்த விஷயம் தெரியும் என்பது எனக்கு தெரியாது. கட்டபொம்மன் நாடகம் சிவாஜி நாடக மன்றத்தால் 116 முறை நடத்தப்பட்டு அதன் மூலம் 30 லட்சம் ரூபாய் வசூலானது. அந்த தொகை மொத்தத்தையும் பல்வேறு பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கி விட்டார். அன்றைய நாளில் 30 லட்சம் என்றால் சவரன் 80 ரூபாய்க்கு விற்ற காலம், இன்றைய தேதியில் 75 கோடி ரூபாய் வரும். 100 ரூபாய் கொடுத்தால் அதை photographer வைத்து படம் எடுத்து விளம்பரப்படுத்திக் கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில் இவ்வளவு பெரிய தொகையை வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் கொடுத்த தர்மசீலன் சிவாஜி" என்று அவர் சொன்னபோது அரங்க கூரையே இடிந்து விழுவது போல் ஆரவாரம் அணை உடைந்து பாய்ந்தது.
அடுத்து சிவகுமார் பேசுவதற்கு முன் தான் பேசி விடுவதாக சொல்லி பேசினார் பிரபு. பெங்களூரில் தாங்கள் படித்துக் கொண்டிருந்த அந்த சிறிய வயதில் இந்தப் படம் வெளிவந்ததாகவும் படத்தை தியேட்டரில் பார்த்த அனுபவம் அவ்வளவாக இல்லை என்றும் பின்னாட்களில் ராஜ் டிவி வெளியிட்ட VHS காசட்டில்தான் அதிக முறை பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார். ஜாக்சன் துரையாக நடித்த சி.ஆர். பார்த்திபன் விழாவிற்கு வந்திருப்பதை சுட்டிக் காட்டிய பிரபு அவர் தன்னுடனும் கோழி கூவுது படத்தில் நடித்ததை நினைவு கூர்ந்தார். அவர் பேசிய மற்றவை எல்லாம் வழக்கமான பேச்சுதான். மேடையில் இருந்த அண்ணன் சிவகுமார் அண்ணன் தாணு, அக்கா கமலா செல்வராஜ் ஆகியோரை சொன்ன அவர் வழக்கம் போல் அண்ணன் ரஜினி, அண்ணன் கமல் ஆகியோரையும் நினைவு கூர்ந்தார். பிறகு வழக்கம் போல் ரசிகர்களுக்கு நன்றி. அப்பா காலத்திலிருந்து நீங்கள்தான் எங்களுக்கு மிகப் பெரிய சப்போர்ட். உங்கள் ஆதரவு என்றும் வேண்டும் என்று சொல்லி முடித்தார்.
சிவகுமார் பேச வரும்போது பெரிய வரவேற்பு. என் கேள்விக்கென்ன பதில் என்று ஒரு ரசிகர் சத்தமாக கேட்க, சொல்கிறேன் என்றார். சித்ரா லட்சுமணன் சொன்ன கட்டபொம்மன் நாடகமாக நடத்தப்பட்டு அதற்கு கிடைத்த வசூல் நிதியாக வழங்கப்பட்டது எல்லாம் முழுக்க முழுக்க உண்மை என்று சொன்ன சிவகுமார் பலருக்கும் தெரியாத சில விஷயங்களை சொல்ல வேண்டும் என்றார் படம் கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியில் கலந்துக் கொண்டபோது அதில் பங்கெடுக்க சிவாஜி, பந்துலு, பத்மின, ராகினி ஆகியோர் சென்றிருந்தனர். அன்றைய நாட்களில் வெளிநாடு செல்பவர்கள் மருத்துவரிடம் தங்கள் உடலை பரிசோதனை செய்து மருத்துவ சான்றிதழ் பெற்று எந்த நாட்டிற்கு செல்கிறோமோ அந்த நாடு விமான நிலையத்தில் கொடுக்க வேண்டும். ஆனால் கிளம்பும் அவசரத்தில் பத்மினி அதை மறந்து விட்டாராம்..
பத்மினியை விமான நிலையத்திலேயே சிறை வைப்பது போல் வைத்து விட்டார்களாம். யார் சொல்லியும் விடவில்லையாம். அவரை எப்படியாவது விழாவில கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்று நினைத்த ராகினி அன்றைய தினம் பஞ்சாபி உடை அணிந்து விமான நிலையம் சென்று பத்மினியை தனியாக சந்தித்து சினிமாவில் வருவது போல் இருவரும் போட்டிருந்த உடையை மாற்றி ராகினி உள்ளே தங்க பத்மினி விழாவில் கலந்துக் கொண்டாராம்.
மோட்டார் சுந்தரம் பிள்ளை முதல் பசும்பொன் வரை .15 படங்களில் நடிகர் திலகத்துடன் நடித்திருப்பதை குறிப்பிட்ட சிவகுமார் நடிகர்களில் தன்னளவிற்கு அவருடன் நெருங்கி பழகியவர்கள் யாரும் இல்லை என்பதை பெருமையுடன் சொல்வதாக் சொன்னார். அவரின் மகன் போலவே தன்னை நடத்தியதை நினைவு கூர்ந்தார். எந்த இடத்திலும் உணர்ச்சிவசப்படாத சிவாஜி கெய்ரோ விழாவில் விருது வாங்கும் போது தலை சற்றே கிறுகிறுத்தையும் பத்மினி அவரை சட்டேன்று பிடித்துக் கொண்டதையும் சொன்னார். எகிப்து அதிபர் நாசர் சென்னைக்கு வந்தபோது அவருக்கு நடிகர் திலகம் பாலர் அரங்கில் அளித்த வரவேற்பில் தானும் கலந்துக் கொண்டதை சொன்னார்.
அதன் பிறகு கட்டபொம்மன் வசனங்கள். பற்றி பேசிய அவர் ஜாக்சன் துரையிடம் பேசுவது, இறுதிக் காட்சியில் எட்டப்பனுடன் பேசும் வசனங்களை அதே ஏற்ற இறக்கதோடு பேசி கைதட்டலை அள்ளிய அவர் அடுத்து கந்தன் கருணை பற்றி சொல்ல ஆரம்பித்தார். முதன் முதலில் சிவாஜியுடன் தூய தமிழ் வசனங்களை பேசிய அந்த படத்தைக் குறிப்பிட்டு அதில் சூரபத்மனுக்கும் வீரபாகுவிற்கும் நடக்கும் வாக்குவாதக் காட்சி படமாக்கப்ப்படும்போது தன்னை ஷூட்டிங்கிற்கு ஏபிஎன் வரச் சொன்னதையும் தான் சென்று பார்த்ததையும் நினைவு கூர்ந்த அவர் நடிகர் திலகத்திற்கும் அசோகனுக்கும் நடக்கும் அந்த வாக்குவாதத்தை அப்படியே அதே modulation-ல் பேச பேச அரங்கமே அதிர்ந்தது. அவ்வளவாக பேசப்படாத ஆனால் ஏபிஎன்னின் அற்புதமான அடுக்கு மொழி வசனங்களை அதன் சுவை குன்றாமல் வழங்கிய சிவகுமார் தமிழ் உள்ளவரை என் தலைவன் பெயர் நிலைக்கும் என்று சொல்லி பட வெளியிட்டளார்களை வாழ்த்தி விடை பெற்றார்
விழாவிற்கு தாமதமாக வந்த கவிபேரரசு வைரமுத்து இறுதியாக உரையாற்ற எழுந்தார். அது
(தொடரும்)
. .
அன்புடன்
http://i.ytimg.com/vi/XDd1VqMcRsw/hqdefault.jpg
சென்னை மகாலட்சுமியில் தினசரி நண்பகல் காட்சியாக தற்பொழுது
நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியம்
இரு துருவம்
தகவல் உறுதிப்படுத்தப் படவேண்டும்
kaட்டபொம்மன் கன்னத்தில் அறைந்து சொல்லும் உண்மை - வைரமுத்து பேச்சு
சிவாஜி கணேசன் நடித்து, பி.ஆர்.பந்துலு டைரக்டு செய்து 1959-ம் வருடம் வெளிவந்த வரலாற்று சிறப்பு மிகுந்த படம் வீரபாண்டிய கட்டபொம்மன். 56 வருடங்களுக்குப்பின் இந்த படம் சினிமாஸ்கோப்பில் புதிய தொழில்நுட்பங்களுடன் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.
இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசியதாவது்-
வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற வரலாற்று கலைப்படத்தின் பெருமையை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நிகழ்கால திரையுலகம் குறித்த தகவல் அறிவு வாய்த்திருக்க வேண்டும். இன்று வெள்ளிக்கிழமை வெளியாகும் ஒரு திரைப்படம் மூன்றாம் காட்சியில் நிலைத்திருந்தால், ஆஹா என்கிறார்கள். சனி, ஞாயிறு நீடித்தால், அபாரம் என்கிறார்கள். திங்கட்கிழமையும் மாற்றப்படாமல் இருந்தால், வெற்றிப்படம் என்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு திரைச்சூழலில் ஒரு படம், 56 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தொழில்நுட்பத்தோடு தமிழர் வீட்டு கதவுகளை மீண்டும் தட்டுகிறதென்றால், வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழையும், சிவாஜி கணேசனின் பெருமையையும் உணர்ந்து கொள்ளலாம்.
தமிழ் திரை வரலாற்றின் நெடுங்கணக்கில் எத்தனையோ கதாநாயகர்கள் வந்து போயிருக்கிறார்கள். ஆனால், ஆண்மையை ஆர்ப்பரிக்கும் தமிழ் குரல் சிவாஜி கணேசனைப்போல் வேறு எவருக்கும் வாய்த்ததில்லை. அவரை, சிம்மக்குரலோன் என்று அழைத்தார்கள். சிங்கத்தின் கர்ஜனைக்கு கூட ஒரே தொனிதான் உண்டு. ஆனால், நூறு குரலில் பேசிய சிம்மம், சிவாஜி கணேசன்.
மறைந்த பிறகும் ஒளியாக, ஒலியாக, உருவமாக, அசைவாக வாழ்ந்து கொண்டே இருப்பதால் நடிகர்கள் சாகா வரம் பெற்றவர்கள். பொதுவாக நடிகர்கள் ஒப்பனையை அணிந்து கொண்டு நடிப்பார்கள். ஆனால், சிவாஜியோ ஒப்பனையை அணிந்து கொண்ட பிறகு பாத்திரத்துக்குள் புகுந்து கொண்டு நடித்தவர்.
இந்த வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவில் இளைய நடிகர்களுக்கும், இந்தியாவுக்கும் ஒரு சேதி இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட்டுப் பார்ப்பதற்கு இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும்? என்ற கேள்வியை வீரபாண்டிய கட்டபொம்மன் எழுப்புகிறது.
அன்னிய முதலீடுகள் எந்த நாளும் இந்தியாவுக்கு ஆபத்து என்பதைத்தான் கட்டபொம்மன் வரலாறு நமக்கு போதிக்கிறது. இன்னொரு சுதந்திர போருக்கு இந்தியா தள்ளப்பட்டு விடக்கூடாது. இதைத்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் நிகழ்காலத்தின் கன்னத்தில் அறைந்து சொல்கிறான்.
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.
விழாவில் நடிகர்கள் சிவகுமார், ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, பட அதிபர் சித்ராலட்சுமணன், ராஜ் டி.வி. ராஜேந்திரன், டாக்டர் கமலா செல்வராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்
Courtesy :Webdunia Tamil
VEERAPANDIYA KATTABOMMAN TRAILER & SONGS RE-RELEASE LAUNCH FUNCTION @ SATHYAM on 20th March.
KALAIPULI THAANU's HEART FELT SPEECH !!!!
https://www.youtube.com/watch?v=_ikrdSo2Gzc
VAIRAMUTHU's HEART FELT HONEST OPINION ABOUT THE MANLY VOICE AND MANLY HERO NADIGAR THILAGAM SIVAJI GANESAN. WATCH FROM 3.18 onwards.....
https://www.youtube.com/watch?v=X97vFCHeHY0
HONEST & TRUE HEART FELT SPEECHES OF Mr. SIVAKUMAR, Mr. RAMKUMAR, Mr. CHITRA LAKSHMANAN etc., during the launch of VEERA PANDIYA KATTABOMMAN - DIGITAL ROARING OF A LION !
https://www.youtube.com/watch?v=ZaeJfeN_OeQ
As Patriotism is the crux of this movie, tax free edition of VPKB possible? Also, educational institutions shall have to be approached and apprised of the freedom struggle as a nostalgia to rope in the student community thronging the theatres to pay respect to such sacrifices made by our ancestors!
If tax exemption is given it will be branded as it ran for low rates.
If screened in multiplexes with high ticket rates, then it will be said as it collected high amount only because of high rates and not no. of people.
In every angle some lame excuses will be spread to demean the box office records created by NT.
I think now the entertainment tax is exempted for all Tamil films with Tamil titles. I don't know the full details. If some body can clarify it would be better.
IRUVAR ULLAM Film Advertisement - Not sure, if we have seen this.
http://i501.photobucket.com/albums/e...pswhjk1oha.jpg
COURTESY - NANJIL INBA's WEBSITE thalaivansivaji.com
I think Mr. SUNDERRAJAN our fellow hubber designed the image. Looking Lovely and getting that Divine Feel.
http://i501.photobucket.com/albums/e...pscuah1mjv.jpg
நீண்ட நாட்களுக்குப் பிறகு...
இயற்கை நடிப்பென்றால் என்ன என்று தன் முதுமையிலும் நடிகர் திலகம் நிரூபித்துக் கொடி நாட்டிய உன்னதத் திரைப்படம்
நாங்கள்...
நடிகர் திலகத்தின் Natural Acting காட்சிகளைப் பற்றிய ஆய்வு விரைவில்..
உதாரணமாக இந்தப் பாடல் காட்சி..
இசைஞானி இளையராஜாவின் இனிமையான பாடல்கள் இப்படத்திற்கு கூடுதல் பலம்.
மகேந்திரனின் உரையாடல் இப்படத்திற்கு மற்றுமோர் சிறப்பு.
ஸ்வர்ணலதாவின் குரலில் நம்மை மெய்மறக்கச் செய்யும் இனிமையான பாடல்..
தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை இப்பாடலிலேயே தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் திலகம்.
நான் வணங்கும் இறைவன்
தந்தை வடிவம் எடுத்தான்
தான் சுமந்த மகளாய்
தழுவித் தழுவி அணைத்தான்..
இப்படத்தின் முழுக்கதையும் இந்த வரிகளில்..
இதோ பாடலைப் பார்ப்போம்..
https://www.youtube.com/watch?v=hswHF_1dMgY
Vintage Heritage - an association for Vintage Classic films is screening NT's masterpiece
http://i1146.photobucket.com/albums/...ps6ac8c9da.jpg
ETHIRPARADADHU
on Saturday, 28th March 2015, 7 pm at the Vivekanandar Hall, P.S. Higher Secondary School, Ramakrishna Mutt Road, Mylapore, Chennai-600004.
A not to be missed film.
For more details contact Mr. K. Sundar at 9444047714
Filmography of this film
VPKB Wave
Alongside the trailer of VPKB, any chance of incorporating the AFRO-ASEAN footage of our NT being conferred with the best asean actor award for VPKB? The followed up greetings to him when he landed back to TN too?
கோவைசண்முகா தியேட்டர்
புதியபறவை சென்ற 6 மாதங்களுக்குள் ராயலில் திரையிடப்பட்ட போதிலும் சுமார் 300 நபர்களுக்கு மேல்வருகை தந்திருந்தனர்.அடுத்த வீதியில் அமைந்துள்ள இரு தியேட்டர்கள் உள்ள காம்ப்ளக்ஸ் தியேட்டர்களில்புதிய படங்கள்ரிலீஸ் செய்யப்பட்டு இரு தினங்களே ஆன நிலையில் இரு அரங்குககளிலும்சேர்த்து மொத்தம் 200 நபர்களுக்கு மேல் இல்லை..6 மாதங்களுக்குள் 2 வது முறை தற்போது திரையிட்ட போதும் ரசிகர்களின் கரகோஷம் இம்முறைஅதிகம்.கட்டபொம்மனுக்கு ரசிகர்கள் அளிக்கப்போகும் ஆரவாரம் இப்போதே தொடங்கி விட்டது
. http://i1065.photobucket.com/albums/...psedtulsjr.jpg
http://i1065.photobucket.com/albums/...psvrxwia2x.jpg
நமது திரிக்கு சம்பந்தம் இல்லாதிருக்கலாம்.
ஆனால்... ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியின் தலைப்பைப் போல்...
Daddy... எனக்கொரு டவுட்டு..
மாடரேட்டர் என யாரும் இருப்பதாகத் தெரியவில்லை...
ஆனால் ஒரு சில பதிவுகள் தோன்றிய சில நேரத்திலேயே மறைந்து விடுகின்றனவே...
பதிவிட்டவரும் எடுத்ததாகத் தெரியவில்லை...
இதைத் தெரிந்து கொள்ள ரகசியமாய் போலீஸைக் கூப்பிட வேண்டுமோ...
முரளி சார்... நம்முடைய திரிக்கு மாடரேட்டர் என்ற முறையில் இதன் நடைமுறைகள் தெரிந்தவராயிருக்கலாம்..
அவர் தான் விளக்க வேண்டும்...
பட்டிக்காடா பட்டணமா படத்தில் தலைவர் கேட்கும் கேள்வி தான் ஞாபகத்திற்கு வருகிறது...
அதெப்படி....
தன் வாழ்க்கையையே நடிகர் திலகத்தின் புகழ்ப்பணிக்காக அர்ப்பணித்து ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் அன்புச் சகோதரி சிவாஜி கிரிஜா அவர்ளுக்கு நம் இதயபூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்து மேலும் சிறப்புற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
https://www.youtube.com/watch?v=1cn-w7Cw_m4
அன்பைத் தேடி பாட்டும் பரதமும் மற்றும் அவன் தான் மனிதன் பாடல்களைப் பற்றி வாணி ஜெயராம் கூறும் காணொளி...
புதிய பறவை
நடிகர்திலகத்தின் நவரச நடிப்பின் Bench Mark
இப்படத்தில் இரு பாடல்கள் மகிழ்ச்சியான தருணங்களிலும் குழப்பமான தருணங்களிலும் ஒலிக்கும் வித்தியாசமான காட்சியமைப்புக்கள்
சோக சூழலில் இப்பாடல் காட்சிகளில் நடிகர் திலகத்தின் காந்தமென கவரும் நடிப்புத் துகள்கள்
உன்னை ஒன்று கேட்பேன்
https://www.youtube.com/watch?v=ZArZcZFx8Lw
பார்த்த ஞாபகம் இல்லையோ
https://www.youtube.com/watch?v=0SdHvU6_6LE
https://www.youtube.com/watch?v=pcuCC1GiAGs
சிங்கம் என்றால் அது எம் சிங்கம் தான்... சரியான பொருத்தமான வரிகள்.. இதோ என் ஆசை ராசா அதை நிரூபிக்கிறார் பாருங்கள்...
Composed performance, subtle acting, blended with soothing voice of the singer, lilting melody, takes your soul in this song..
மிகவும் பொருத்தமான தேவையான அளவில் அமைந்த ஒளிப்பதிவும் சேர்ந்து இப்பாடலை உயரத்திற்கு இட்டுச் செல்கின்றன.
தேனிசை தென்றல் தேவாவின் இசையில்...தெக்கு தெசை காத்து... நம்மை வருடிச் செல்கிறது..
தலைவரின் அமைதியான நடிப்பு... உட்கார்ந்த இடத்திலேயே தன் முகத்தில் அவர் கொண்டு வரும் அந்த உணர்வு...
ஃபிரெஞ்சுக்காரன் சும்மாவா தந்தான் செவாலியே..
கெய்ரோவில் சும்மாவா தந்தார்கள் சிறந்த நடிகர் விருதை..
http://mimg.sulekha.com/t-rajendar/i...n-stills01.jpg
TO MARK THE BIRTH DAY OF T.M.S.
https://www.youtube.com/watch?v=j8FLrNk-Gak
செலுலாய்ட் சோழன்
(From Mr.Sudhangans Facebook page)
ஜி.என். வேலுமணி தன்னுடைய `பாகப்பிரிவினை கதையை யாருக்கோ விற்றார். அந்தத் தயாரிப்பாளர் லாபமடைந்தார். இப்போது `ஆலயமணி கதை ஏன் இன்னொருவருக்கு கொடுக்க வேண்டும் நாமே எடுத்தால் என்ன? ஆசை பி.எஸ். வீரப்பாவின் மனதில் அலை புரண்டது!
தானே இந்தியிலும் எடுக்க முடிவு செய்தார்! அப்போது இந்தியின் நட்சத்திர நடிகர் தீலிப்குமார்! அவர் தான் கதாநாயகன் என்று முடிவாகி, தமிழில் கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட படம் இந்தியின் வண்ணப்படமானது! படத்திற்கு தலைப்பு `ஆத்மி படத்தை எடுக்க ஆரம்பித்தவுடனேயே ஏன் காலை வவத்தோம்! என்கிற மாதிரி ஆனது!
எப்போது இந்திப் படத்தில் நடிகர்கள் குறிப்பிட்ட நேரத்திறு வரமாட்டார்கள். அதனால் ஏற்பட்ட கால விரயம்! அதிகமான பணச் செலவு, அதையும் மீறி படம் வெளி வந்த போது படம் படுதோல்வி!
உடனே தான் கதை எழுதி நடித்து வெற்றி கண்ட இந்திப் படமான கங்கா ஜமுனா கதையை தமிழில் எடுக்கும் உரிமையை வீரப்பாவிற்கு கொடுத்தார் தீலிப் குமார்.
அதை தமிழில் சிவாஜி, பத்மினியை வைத்து ` இரு துருவங்கள் என்கிற பெயரில் தமிழில் வண்ணபடமாக எடுத்தார் வீரப்பா அதுவும் தோல்வி!
சரி தமிழில் வெற்றி `ஆலயமணி ஏன் இந்தியில் எடுபடவில்லை!
அப்போது விமர்சகர்கள் சொன்னது! சிவாஜி,எஸ்.எஸ்.ஆர் கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, கூடவே இங்கே திரைக் கதைக்கு ஜாவர் சீதாராமன்! அங்கே இந்த காம்பினேஷன் எங்கேயிருந்து? என்று திரை விமர்சகர்கள் கேட்டார்கள்! அது ஒரு வகையில் உண்மைதான்! இயல், இசை நாடகம் என்கிற முப்பரிமாணமும் கொண்ட படம் ஆலயமணி! ஆமாம்! பாடல்கள் ஆலயமணிக்கு ஒரு பெரிய பலம்! `மானாட்டம் தங்க மயிலாட்டம் ` தூக்கம் உன் கண்களை தழவட்டுமே ` கண்ணான கண்ணனுக்கு அவசரமா பொன்னை விரும்பு பூமியிலே என்னை விரும்பு ஒருயிரே
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா ` சட்டி சுட்டதடா கைவிட்டதடா என்று எல்லா பாடல்களுமே அற்புதமான ஹிட்! சிவாஜி ஒரு முறை என்னுடம் பேசும்போது சொன்னார், ` காதலும், கவிதையும், வாழ்க்கைத் தத்துவமும் இணைந்த பாடல்கள் கொண்ட படம் ஆலயமணி!. எல்லா பாட்டும் ஹிட்டானாலும், எனக்கு அந்த படத்தில் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த பாடல் ` சட்டி சுட்டதடா கைவிட்டதடா~! புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா பாடலுக்காகவே பல முறை படம் பார்த்தவர்கள் உண்டு!.
ஆட்டம் போட்ட அடங்கிய மனிதர்களின் குரலாகவே அந்த சட்டி சுட்டதடா பாட்டை பார்த்தார்கள்! வாழ்க்கையில் ஆட்டம் போட்ட அடங்கிய பல பெரிய மனிதர்கள் தங்களின் இன்றைய நிலையை வெளியே சொல்ல முடியாமல் எனக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
ஒரு முறை நான் பொள்ளாச்சிக்கு ஒரு படப்பிடிப்புக்கு போயிருந்தேன். தொலைவில் ஒரு பெரியவர் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். அவர் படப்பிடிப்பிற்கு உதவுகிறார் என்பதையும், அந்த ஊரில் முக்கிய புள்ளி என்பதையும் புரிந்து கொண்டேன். ஆனால் அவர் முகம் மட்டும் எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. அவரை அருகில் அழைத்து பேசியபோதுதான் தெரிந்தது. அப்போது அவர் சொன்னார், `ஆலயமணியில வர்ற உங்க கதாபாத்திரம் தாங்க நான்! தோல்வியே வரக்கூடாதுன்னு நினைத்த ஒரு பொறாமைக்காரன்! அதனால் பணத்தையும் சொத்தையும் இழந்தேன். இப்போது என் நிலைமை நீங்க பாடின ஆலயமணி பாட்டு மாதிரிதாப் ` எலும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா என் உள்ளத்த்தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா என்றார். அதுதான் அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றார் சிவாஜி!
அதே போல் சிவாஜிக்கு தன் படத்தில் எஸ்.எஸ். ஆர் இருக்க வேண்டும் என்று நினைப்பார்! சிவாஜி எஸ்.எஸ். ஆர் இணைந்து நடித்த பல படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. ` தெய்வப் பிறவி `கைகொடுத்த தெய்வம் படங்களைச் சொல்லலாம்! எஸ்.எஸ். ஆர். முதல் முறையா ராஜ்ய சபா எம்.பியானார். அப்போது சிவாஜி எஸ்.எஸ். ஆர் வீட்டிற்கே போய் முதலில் வாழ்த்தினார். பிறகு எஸ்,எஸ், ஆர் டெல்லி போவதில் தனக்கு விருப்பமில்லை என்பதையும் தெரிவித்தார் சிவாஜி. அதற்கு சிவாஜி சொன்ன காரணம், ` என் நடிப்புக்கு பெருமையே உன்னாலதான்!. நீ என் படத்தில் இருந்தா நான் இன்னும் எச்சரிக்கையாக நடிப்பேன்.நீ என்னோடு நடிக்கும்போது நீ நடிகனாகவே எனக்குத் தெரிய மாட்டே அந்த கதாபாத்திரமாகத்தான் தெரிவே என்றாராம் சிவாஜி!
இதை எஸ்.எஸ். ஆர் தன் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்!
சினிமாவில் வெற்றி என்பது நிரந்தரமல்ல என்பதை உணர்ந்தவர்கள் தான் அன்றைய திரைக் கலைஞர்கள்! அதற்குக் காரணம் இருந்தது!
1962ம் வருடம் `ஆலயமணி மிகப்பெரிய வெற்றி கண்ட அதே ஆண்டு, சிவாஜி, பத்மினி, நடித்த செந்தாமரை படம் வெளியானது.
இந்த படத்தை தயாரித்தவர் கண்ணதாசனின் மூத்த சகோதரர் ஏ.எல்.சீனுவாசன். அப்போது அவர் பெரிய தயாரிப்பாள்ர்!
படத்திற்கு இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி! படத்தை இயக்கியவர் ஏ.பீம்சிங்!
ஏனோ படம் நீண்ட நாள் தயாரிப்பாக போனது! வெகு நாள் கழித்து படம் வெளியானது! அந்த படத்தில் தான் பத்மினி ஆண்டாளாக தோன்றி ` வாரணமாயிரம் சூழ வலம் வந்து பாட்டாய் பாடியிருப்பார்.
அதில் வரும் திருப்பாவை பாடலுக்கு குரல் கொடுத்திருந்தவர் எம்.எல் வசந்தகுமாரி! சிவாஜி தன் பட வரிசையில் ` செந்தாமரை படமும் உண்டு என்று சொன்னாலே லேசாக முகத்தைச் சுளிப்பார்!
அப்படி ஒரு தோல்வி கண்ட படம் `செந்தாமரை ஒரே காம்பினேஷனின் முதல் படம் வெற்றி கண்டவர்கள் அடுத்த படத்திலேயே தோல்வியையும் கொடுத்தார்கள். சினிமாவின் போக்கே அலாதியானது என்பதை 1962ம் வருட சிவாஜி படங்களை வைத்தே சொல்லலாம்!
அந்த வருடத்தின் ஆரம்பத்தில் அவருக்கு வெற்றியை கொடுத்த படம் ` பார்த்தால் பசி தீரும்
அதற்கடுத்த பெரும் வெற்றியை தந்தது ` பலே பாண்டியா பதினைந்தே நாளில் எடுக்கப்பட்ட படம் படத்தின் தயாரிப்பாளர் பி.ஆர் பந்துலு!
அந்த படத்தில் பல சிறப்பம்சங்கள் இருந்தன! சிவாஜிக்கு மூன்று வேடங்கள்! சிவாஜியை வைத்து ஒரு முழு நீள நகைச்சுவை படம் எடுக்க முடியுமா? என்கிற பிரமிப்பில் பலரை ஆழ்த்திய படம்
இந்தப் படத்திற்கு பின் சிவாஜியை வைத்து பல விதங்களில் கதைகளை யோசிக்க ஆரம்பித்தார்கள்
மக்கள் தலைவர், வசூல் சக்கரவர்த்தி நடிகர்திலகத்தின் டிஜிட்டல் மிரட்டல் மீண்டும்.
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...79368121_o.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...9a54ae3914cfee
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
https://scontent.xx.fbcdn.net/hphoto...9f&oe=55B3A4C2
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
https://scontent.xx.fbcdn.net/hphoto...4c&oe=5570E7DC
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
https://scontent.xx.fbcdn.net/hphoto...e7&oe=557A21C5
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...2d506f1a2ebbd8
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.