Originally Posted by
SUNDARAJAN
பேசுவது கிளியா - இல்லை
பெண்ணரசி மொழியா .......
அருமையான சாருகேசி ராகத்தில் அமைந்த மெலடி !
கவியரசரின் பாடலுக்கு இசை மெல்லிசை மன்னர்கள் ..
இடம் பெற்ற படம் , பணத்தோட்டம் ...
பாடலின் ஆரம்பமே அமர்க்களம் .ஏகாந்தமான அந்த காட்டில் ....கதையின் நாயகி சரோ , .அன்னம் போல அழகு நடை நடந்து ... தாமரை இலையில் நீரை எடுத்து .வந்து ..தன் கரிய , பெரிய விழிகளை சுற்றுமுற்றும் சுழல விட்டவாறே செய்வதறியாது நிற்க...
அப்போது சற்றும் எதிரபாராத விதமாக காரின் மேல் தளத்திலிருந்து மக்கள் திலகம் ,
' பேசுவது கிளியா ' என்று பாடியவாறே சரோவின் தலையில் செல்லமாக தாளமிட ....
அப்போது சரோ ' பயமும் , மருட்சியும் ' கலந்த ஒரு எக்ஸ்ப்ரஷன் கொடுப்பார் பாருங்கள் ......
அடடா ....பார்த்துக்கொண்டே இருக்கலாம் அதை ....
பின் அழகான பெரிய விழிகளை ஒயிலாக அசைத்து ...பொங்கும் அழகு புன்னகையுடன் அவரை பார்த்து
' பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா '
என்று பாடும் போது திரையில் அவரே பாடுவது போன்றதொரு தத்ரூபம் !......சுசீலாம்மாவின் தித்திக்கும் தேன் குரல் சரோவுக்கு அத்தனை கச்சிதமாக பொருத்தம் ....
அவருக்கு சற்றும் சளைக்காத மக்கள் திலகத்தின் நடிப்பு ....டி எம் எஸ் அவர்களின் கணீர் குரல் !
கவியரசரின் எளிய பாடல் வரிகள் .+..மெல்லிசை மன்னர்களின் இனிமையான இசை + சரோ , மக்கள் திலகத்தின் நடிப்பு + சுசீலாம்மா , டி எம் எஸ் இருவரின் குரலினிமை ...மற்றும் காட்சியமைப்பு
இப்படி எல்லாமுமாக சேர்ந்து ....ஐம்பது வருடங்கள் ஆனாலும் ...இந்த பாடலை காலத்தால் அழிக்க முடியாத பாடலாக மக்கள் மத்தியில் நிலை நிறுத்தி விட்டது !
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.