Thanks Annadurai Sir.
https://scontent.fbom1-2.fna.fbcdn.n...08&oe=57766A20
Printable View
Thanks Annadurai Sir.
https://scontent.fbom1-2.fna.fbcdn.n...08&oe=57766A20
Kudos to Mr Neyveliar. NT = Amudha Surabhi.
Thanks for your Pondy Analysis of Karnan.
ஞாயிறு ஆல்பர்ட் 'கர்ண'னின் அமர்க்களம்.
https://www.facebook.com/kouwshik.ra...6586903053354/
'திவ்யா பிலிம்ஸ்' சொக்கலிங்கம் அவர்களின் பேட்டி.
https://youtu.be/-pCa0MhWojA
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...607467c68fe81f
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
Nadigar Thilagam won Best Actor Award at Afro-Asian film festival.
Here he is showing it proudly to his proud mother. I'm happy to share with you this picture taken from my old collections.
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...31&oe=57BEF629
(முகநூலில் இருந்து)
http://i1028.photobucket.com/albums/...psx57g2yyg.jpg
பணியும்
மனிதத் தலைகளின் மீது
மெல்லிய பூப்பந்து
வைத்தாற்போல்
எத்தனையெத்தனை
ஆசிகள்..?
மெத்தென்று தலை வீழும்
அந்த நீள் துதிக்கை வழியே
நாமுணர்வதற்கு
எத்தனையெத்தனை
பரவசங்கள்..?
பிரம்மாண்ட உருவம் பார்த்து
பிரமித்து மகிழ்வதற்கு
ஆண்டாண்டு காலமாய்
எத்தனையெத்தனை
குழந்தைகள்...?
அய்யா..!
கோயிலுக்குக் கோயில்
யானைகளைத்
தானம் தந்த
உங்கள் மனசு...
யானையைக் காட்டிலும்
பெரிது.
நிச்சயம் இது பட விமர்சனம் அல்ல. ஏனெனில் 1974ல் வெளியான ‘சிவகாமியின் செல்வன்‘ குறித்து் அனைவருக்குமே தெரியும். இப்படம் ராஜேஷ் கண்ணா நடிப்பில் மாபெரும் வெற்றிப் பெற்ற ‘ஆராதனா‘ இந்திப் படத்தின் ரீமேக் என்பது உட்பட.
சொல்ல வந்தது வேறு ஒன்று.
சமீபத்தில் இப்படம் ரீ ரிலீஸ் ஆனது. சென்றோம். ஆச்சர்யப்பட்டோம்.
காரணம், படம் வெளியாகி நான்கு நாட்கள் கழித்தே நாங்கள் திரையரங்கு சென்றோம். அப்படியும் 30% நிரம்பியிருந்தது.
நம்ப முடியவில்லை. முந்தைய நாள்தான் புதுப் படம் ஒன்றுக்கு சென்றிருந்தோம். மொத்தம் ஏழே பேர்தான். திரையிடுவதா வேண்டாமா என பல கட்ட ஆலோசனைகள் நடந்து கொண்டிருக்கும்போதே -
qube ஒளிர்ந்தது.
எனவே 50 பேர் ‘சி செ‘ பார்க்க வந்திருந்தது புருவத்தை உயர வைத்தது.
அதை அதிசயமாக மாற்றியது பார்வையாளர்களின் வயது.
எங்கள் இருவரை தவிர்த்து வந்திருந்தவர்களுக்கு குறைந்தது 60, 70 வயதிருக்கும்.
ஒவ்வொரு காட்சிக்கும், வசனத்துக்கும் இளவட்டங்கள் போல் கைதட்டி ஆராவாரம் செய்தார்கள். பாடல் காட்சிகளின்போது உடன் சேர்ந்து உதட்டை அசைத்தார்கள்.
இடைவேளை சமயத்தில் மூன்று ஜோடிகளை பார்த்தோம். ஆறு பேருமே பேரன், பேத்தி எடுத்தவர்கள். இயற்கை உபாதைகளை வெளியேற்றக் கூட அவர்கள் எழுந்திருக்கவில்லை.
கைகளை கோர்த்தபடி, ஓரக் கண்ணால் ஒருவரையொருவர் பார்த்தபடி அருகருகில் அப்படியே அமர்ந்திருந்தார்கள்.
உதட்டோரம் கசிந்த வெட்கமும், கண்களில் வழிந்த காதலும் இருக்கிறதே... ஏ... அப்பா...
அவர்களை கடந்து செல்ல முடியவில்லை.
அந்தளவுக்கு காதலால் கனிந்த ஜோடிகளை இதற்கு முன் பார்க்காதது காரணமாக இருக்கலாம்.
உண்மைதான்.
சினிமா என்பது தமிழகத்தில் வெறும் பொழுதுபோக்கு ஊடகம் மட்டுமே அல்ல.
அது பல நினைவுகளை, உணர்வுகளை, காதலை, ஏக்கங்களை, லட்சியங்களை அவரவர் மனதில் அடைகாத்து வரும் கருவியும் கூட...
(கே.என்.சிவராமன் - முகநூலில்)
http://i1028.photobucket.com/albums/...pschjnwkzn.jpg
அய்யா..!
உங்களை வைத்திருக்கிறோம்..
இல்லத்தில்
படமாக.
உள்ளத்தில்
பாடமாக.
Whats up images http://i1039.photobucket.com/albums/...psl6919sxa.jpg
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...7c&oe=57BF9038
தமிழில் நடிப்புக்கென வெளிவரும் முதல் இதழ் என இப்பருவ இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலாண்டிதழாக வெளிவரும் இதன் இரண்டாம் இதழின் அட்டையில் நடிகர் திலகத்தின் நிழற்படம் மிகவும் அற்புதமாகவும் அதே சமயம் அர்த்தமுள்ளதாகவும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. திரு சோழன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இப்பத்திரிகையின் இந்த இரண்டாம் இதழ் "சிவாஜி சிறப்பிதழாக" மலர்ந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் சார்பில் நமது உளமார்ந்த நன்றி. இவ்விதழில் கீழ்க்காணும் தலைப்பில் நடிகர் திலகத்தின் சிறப்பைக் கூறும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிப்புக் கோட்பாடுகளும் - பாலசிங்கம் சுகுமார்
சிவாஜி எனும் புதுமுகம் - பிருந்தா சாரதி
நடிகர் திலகம் ஈடு இணையற்ற அற்புதம் - இயக்குநர் மகேந்திரன்
சிவாஜி கணேசன் உடலால் பேசி வசனத்தால் நடித்தவர் - மதியழகன் சுப்பையா
சிவாஜியும் நானும் - யதார்த்தன் இளஞ்சேரன்
இந்த இதழ் தனிச்சுற்றுக்கு மட்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அங்காடிகளில் கிடைக்குமா எனத் தெரியவில்லை.
இருந்தாலும் தொடர்பு முகவரி தொலைபேசி எண் தரப்பட்டுள்ளது. அதில் தொடர்பு கொண்டு மேற்கொண்டு தகவல் பெறலாம்.
நடிப்பு
1/547, ராஜ ராஜன் நகர் 4வது தெரு,
மௌலிவாக்கம்,
(போரூர் பாய் கடை சிக்னல் அருகில்),
சென்னை-600125.
பேச - 8754714692
இலங்கையில் வீரபாண்டிய கட்டபொம்மன்
100 நாட்கள் ஓடியதற்கான ஆதாரப் பதிவு
(நன்றி செந்தில்வேல்)
http://i63.tinypic.com/14v63cw.jpg
RAJARANI STILLS
http://i63.tinypic.com/1687bpe.jpg