http://i66.tinypic.com/2q2r0uh.jpg
தகவல் உதவி :எம்.ஜி.ஆர். பக்தர் திரு.சைலேஷ் பாசு
Printable View
http://i66.tinypic.com/2q2r0uh.jpg
தகவல் உதவி :எம்.ஜி.ஆர். பக்தர் திரு.சைலேஷ் பாசு
ஓவியம் உதவி : திரு.சாமுவேல், சத்தியமங்கலம் .
http://i64.tinypic.com/35kq2a1.jpg
இன்று (25-4-2018)
இறைவனடி சேர்ந்த எம். எஸ். இராஜேஸ்வரி தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி .
-
வாழ்க்கைக் குறிப்பு
சிறுவயதில் இருந்தே பாடுவதில் ஆர்வமாயிருந்த இராஜேசுவரி, காரைக்குடியில் அப்போது இருந்த ஏவிஎம் கலையகத்தில் ஆர். சுதர்சனம் ராஜேஸ்வரியை மெய்யப்பச் செட்டியாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். செட்டியார் அவரை மாதச் சம்பளத்தில் தமது கலையகத்தில் சேர்த்துக் கொண்டார். இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ராமராஜ்யா திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். அதில் ராஜேஸ்வரி நான்கு பாடல்களைப் பாடினார்.[1]
ஏவிஎம் கலையகம் காரைக்குடியில் இருந்து சென்னைக்கு இடம் மாறிய போது ராஜேசுவரியும் சென்னை வந்தார். நாம் இருவர் திரைப்படத்தில் கருணாமூர்த்தி காந்தி மகாத்மா, மகான் காந்தி மகான் ஆகிய இரு பாடல்களை ராஜேசுவரி பாடினார். பாடல்களுக்காகவே இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. அடுத்து வேதாள உலகம் திரைப்படத்தில் எஸ். வி. வெங்கட்ராமன் இசையில் ஆகா ஆனந்தமானேன் என்ற பாடலைப் பாடினார். வாழ்க்கை படத்தில் உன் கண் உன்னை ஏமாற்றினால் என்ற பாடலை டி..ஆர். ராமச்சந்திரனுடன் இணைந்து பாடினார்.[1]
-
இவர் பாடிய சில திரைப்படப் பாடல்கள்
சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா... – டவுன் பஸ் (1955)
காக்கா, காக்கா மை கொண்டா... – மகாதேவி (1957)
சேவை செய்வதே... - மகாதேவி (1957)
சிங்காரப் புன்னகை... - மகாதேவி (1957)
ஆசைக் கல்யாணம், நல்ல அன்புக் கல்யாணம்... – முதலாளி (1957)
எங்கிருந்தோ வந்தார் இதயம் கவர்ந்தார்... – முதலாளி (1957)
மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா... - தை பிறந்தால் வழி பிறக்கும் (1958)
படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு... - படிக்காத மேதை (1960)
அம்மாவும் நீயே... – களத்தூர் கண்ணம்மா (1960)
சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் கல்யாணமாம்... – கைதி கண்ணாயிரம் (1960)
மியாவ், மியாவ் பூனைக்குட்டி, வீட்டை சுத்தும் பூனைக்குட்டி... - குமுதம் (1961)
பேசியது நானில்லை கண்கள்தானே, நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே... - செங்கமலத் தீவு (1962)
பூப் பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா... - திக்குத் தெரியாத காட்டில் (1972)
சின்னஞ்சிறு கண்ணன்... – மகாலட்சுமி (1979)
-
வாழ்க அவரது புகழ்
நண்பர்களே !
மக்கள் திலகத்தின்
சிறப்புக்களை
மட்டும்
இந்த திரியில்
பதிவு செய்யுங்கள்.
மாற்று திரியில்
பதியும்
தவறான
கருத்துக்களுக்கு
பதில்
சொல்ல
வேண்டியதில்லை.
ரவிச்சந்திரன்
நவரத்தினம் படம் நட்டம் என்று மாற்றுத் திரியில போடுகிறார்கள்.
நவரத்தினம் படம் நட்டம் இல்லை மதுரை தங்கம் தியெட்டரில் 63 நாள் ஓடியது. ஆசீயாவில் பெரிய தியெட்டர் அது.
சிவாஜி கணேசனை வைத்து பிராப்தம் படம் எடுத்த சாவித்திரி பிச்சை எடுத்து செத்தார் என்று நாம் சொல்லக் கூடாதா.
புரட்சித் தலைவர் பற்றியும் அவர் ஆட்சி பற்றியும் மோசமாக விமர்சிக்கிறான்கள். அதுக்கு நாம்ப பதில் சொல்லக் கூடாதா? புரட்சித் தலைவி ஜெயலலிதா சிவாஜி கணேசன் உடைய சம்பந்தி. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு தனது மகள் சாந்தியின் மகளை சிவாஜி கணேசன் கல்யாணம் செஞ்சு வெச்சார். அந்த சுதாகரன் இப்ப சசிகலாவுடன் ஊழல் குற்றத்துக்காக பெங்களூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
ஊழல் கருணாநிதிக்கு 1980 ம் வருசம் தேர்தலில் சிவாஜி கணேசன் பிரசாரம் செய்தார். இதுதான் அவர் ஊழல் எதிர்ப்பின் லட்சணம் என்று பதிவு போட்டேன். அதைப் போய் நீக்கணுமா?
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை ஷா அரங்கில் , வெள்ளி முதல் (27/4/18)
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் :அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகள் -வேங்கையின் மீண்டும் வெற்றி விஜயம் .
http://i64.tinypic.com/2hro2km.jpg
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார் .
சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அரங்கில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i63.tinypic.com/332o2oj.jpg
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார் .
http://i64.tinypic.com/2s92c7p.jpg
வெள்ளி முதல் 27/4/18 கோவை ராயலில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். என்றுமே
"மன்னாதி மன்னன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.ராஜா .
நண்பர் லோகநாதன் அவர்களே, கடமை தவறாமல் பதிவு போடும் புரட்சித் தலைவர் பக்தரே, உங்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி. நன்றி. நன்றி.
உண்மையான தகவல். 1973-ல் 35 காசு இருந்த குறைஞ்ச பட்ச டிக்கட் விலை 1979-ல் 85 பைசா ஆனது.
1973-ல் சென்னை தவிர வெளியூர்களில் சின்ன ஊர்களில் சாதாரண தியேட்டரில் பஸ்ட் கிளாஸ் டிக்கட் அதிகபட்சம் 1.90 பைசா. 1979-ல் 2.90 பைசா ஆனது. பஸ்ட் கிளாஸ் டிக்கட் மட்டுமே ஒரு டிக்கட்டுக்கு ஒரு ரூபாய் கூடியது.
சென்னையைத் தவிர அப்போது பெரிய ஊர்களில் கூட ஏசி தியேட்டர் கிடையாது. சாதாரண தியேட்டரிலேயே ஒரு பஸ்ட் கிளாஸ் டிக்கட்டுக்கு ஒரு ரூபாய் கூடுதல் என்றால் சென்னையில் ஏசி தியேட்டர்களில் நிச்சயம் 1973ஐ விட 1979-ல் ஒரு டிக்கட்டுக்கு குறைஞ்சது சராசரியாக 3 ரூபாய் கூடுதலாக இருக்கும்.
அதனால், 1973-ம் வருசம் வந்த படங்களைவிட 1979-ம் வருசம் வந்த படங்கள் கூடுதலாக வசூல் இருக்கலாம். ஆனால் பழைய டிக்கட் தொகையுடன் ஒப்பிட்டு 1979ல் மதிப்பு போட்டால் மேலே உள்ள பட்டியல் கணக்கு சரியானது. கணக்கு போட தெரிந்தவர்கள் ஒப்பிட்டு பார்த்துக்கலாம்.
தியேட்டர் டிக்கட் விலையை ஏற்றியதும் 1977-ல் ஆட்சிக்கு வந்த முதல்வர் புரட்சித் தலைவர்தான்.
பதிவுக்கு நன்றி
ரவிச்சந்திரன்,
உங்க பதிலுக்கு நன்றி. நேத்து நான் போட்ட பதிவை நீக்கிவிட்டு அமைதியான வழியில் செல்வோம் என்று சொல்கிரீர்கள். சரி நீங்க சொல்றது மாதிரியே , சிவாஜி கணேசன் திரியில் புரட்சித் தலைவர் பற்றி வந்திருக்கும் மோசமான விமர்சனத்துக்கு அமைதியான வழியிலே பதில் சொல்லுகின்றேன்.
பாயிண்ட்டாகத்தான் சொல்லப்போகிறேன். யாரயும் தப்பாக விமர்சிக்கவில்லை.
புரட்சித் தலைவர் நடித்த நவரத்தினம் மாபெரும் தோல்விப் படம் என்று சிவாஜி கணேசன் திரி பாகம் 19 ,பக்கம் 223, பதிவு நம்பர் 2230-ல் வெளியாகி உள்ள பதிவுக்கும்
புரட்சித் தலைவர் பற்றியும் அவரது ஆட்சி பற்றியும் மோசமாக விமர்சித்து சிவாஜி கணேசன் திரி பாகம் 19, பக்கம் 224, பதிவு நம்பர் 2237-ல் வெளியாகி உள்ள பதிவுக்கும்
என்னோட அடுத்த அடுத்த பதிவுங்களில் பதில் சொல்லப் போகிறேன். புரட்சித் தலைவர் பற்றி முகநூலில் தப்பான தகவல் பரப்பி வரும் போறாமைக்காரங்களுக்குத்தான் இந்த பதில்.
ஞாயமாகத்தான் எழுதி பதில் சொல்கிறேன். படிச்சு பாருங்கள். இதில் தப்பு எதுவும் இல்லை. அதனால், இதையும் நீக்காதீர்கள்.
புரட்சித் தலைவர் பற்றி மோசமாக வந்திருக்கும் பதிவுகளை சிவாஜி கணேசன் திரியில் அவர்கள் நீக்கினால், நீங்களும் அந்த விமர்சனத்துக்கான என் பதில் பதிவை நீக்குங்கள்.
அவர்கள் பதிவை நீக்காவிட்டால் நீங்களும் என் பதிவை நீக்காதீர்கள்.
இது எதிர்கால தலைமுறைக்கு புரட்சித் தலைவரின் பக்தராக நீங்கள் செய்கின்ற கடமை. நீங்களும் புரட்சித் தலைவரின் பக்தர் என்பதையும் அந்த மனிதப் புனிதரின் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்த அனுமதிக்கலாமா என்பதை தயவு செஞ்சு நினைச்சுப் பாருங்கள். நீங்களும் நானும் புரட்சித் தலைவரின் ஒரே ரத்தத்தின் ரத்தம்.
நீங்கள் சொன்னபடி அமைதியான வழியில் ஞாயமாக தவறான வார்த்தை இல்லாமல் என் பதிவு தொடரும். மறுபடியும் சொல்கிறேன். அவர்கள் பதிவை அந்த திரியில் நீக்கினால் தவிர என் பதிவை நீக்காதீர்கள்.
நவரத்தினம் படம் பற்றி சிவாஜி கணேசன் திரி பாகம் 19 பக்கம் 223, பதிவு 230ல் வந்துள்ள பதிவில் உள்ள பொய் பிரசாரத்துக்கு இந்த பதிவு பதில்.
புரட்சித் தலைவர் நடித்த எந்த படமும் நஸ்டம் கிடையாது. 100 நாள் ஓடாவிட்டாலும் கூட வசூல் வந்து லாபம் கிடைத்துவிடும். மறுவெளியீடுகளிலும் லாபம் கிடைக்கும்.
நவரத்தினம் படம் மதுரையில் தங்கம் தியேட்டரில் 63 நாள் ஓடியது. 50 வது நாளில் அதுவரை இடம் பெறாமல் இருந்த‘மானும் ஓடிவரலாம் மா நதியும் ஓடி வரலாம் மங்கை தனியே வரலாமா’ பாடல் காட்சியை சேர்த்தார்கள். நான் பார்த்திருக்கின்றேன். இப்போது அந்த பாடல் காட்சி கிடையாது/ ஆசியாவிலேயே பெரிய தியேட்டர் தங்கம் தியேட்டர். 2,500 சீட்டுக்கு மேல் உள்ள பெரிய தியேட்டராக இருந்தது. அந்த தியேட்டரில் 50 நாள் ஓடினாலே 100 நாள் ஓடியது மாதிரி. இந்த கணக்கை ஏற்கெனவே சில மதுரைக்காரர்கள் சொன்னதாக ஞாபகம். அந்த தியேட்டரில் நவரத்தினம் 63 நாள் ஓடியது. யாராவது மதுரைக்காரர்கள் இப்போது திரியில் இருந்தால், நான் சொல்றது பொய் என்று மறுக்க முடியுமா?
சென்னையில் நவரத்தினம் படம் 50 நாள் ஓடியது. 10 லட்சம் வசூல் ஆனது. (4 தியேட்டர் மொத்த வசூல்) இதை ஏற்கெனவே திரியில் நான் பதிவு போட்டிருக்கின்றேன்.
மறுவெளியீட்டிலும் பல முறை நவரத்தினம் வெளியாகியது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு ஊரில் மற்ற புரட்சித் தலைவர் படங்களைப் போல நவரத்தினமும் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறது. பெட்டிக்குள் போகவில்லை. இப்பயும் கோயம்புத்தூரில் நவரத்தினம் படம் ஓடுகிறது என்பதே ஆதாரம்.
மெகா டிவி, முரசு டிவியிலும் அடிக்கடி நவரத்தினம் படம் போடுகிறார்கள்.
படம் வெளியானபோது 100 நாள் ஓடாவிட்டாலும் நஸ்டம் கிடையாது. இருந்தாலும் படம் எதிர்பார்த்தபடி சரியாகப் போகவில்லை என்பதற்காக ஏபி. நாகராஜனுக்கு ‘அண்ணாவின் தம்பிகள்’ என்ற பெயரில் படம் நடித்துக் கொடுக்க புரட்சித் தலைவர் முடிவு செய்தார். விளம்பரமும் பத்திரிகையிலே வந்தது.
ஆனால், நவரத்தினம் படம் மகா தோல்வி என்று சொல்லும் சிவாஜி கணேசன் ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் படங்களை மறந்துவிட்டார்கள்.
சிவாஜி கணேசனை வைத்து பிராப்தம் படம் எடுத்த சாவித்திரி நஸ்டப்பட்டு சொத்து, பணத்தை இழந்து போதைக்கி அடிமையாகி கடைசி காலத்தில் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகினார். நாம்ப இதை சொன்னால் பிராப்தம் படத்துக்கு லாபம் கிடைத்தது ஆனால், சாவித்திரியின் ஆடிட்டர் ஏமாற்றி விட்டார், லாபத்தை அமுக்கிவிட்டார் என்று கதை விடுவார்கள். சரி. பிராப்தம் வெற்றி படம் என்றே வெச்சுப்போம். ரிலீஸூக்கு அப்புறம் வரவே இல்லியே. பெட்டியிலேயே தூங்குகிறதே. டிவியிலும் போடுவது இல்லியே.
அப்பவும் சாவித்திரிக்கு புரட்சித் தலைவர்தான் பணமும் கொடுத்து வீட்டு வசதி வாரியம் மூலம் அப்போது அதன் தலைவராக இருந்த திருப்பூ்ர் மணிமாறன் மூலம் வீடும் கொடுத்தார். இதையும் ஏற்கெனவே பல முறை திரியில் போட்டிருக்கிறோம். புரட்சித் தலைவர் உதவி செய்ததை சாவித்திரி மகள் சாமுண்டிஸ்வரி புரட்சித் தலைவர் அபிமானிகள் 4 வருடம் முன்பு நடத்திய விழாவிலேயே சொல்லி இருக்கிறார். சாமுண்டீஸ்வரியின் படத்தோடு திரியில் செய்தி போட்டிருக்கிறோம்.
பிராப்தம் படம் மட்டுமே அவர்களுக்கு நஸ்டம் இல்லை. மேலும் பல சிவாஜி கணேசன் படங்கள் நஸ்டம் அடைந்திருக்கின்றன.
தர்மராஜா படம் எடுத்த சின்ன அண்ணாமலை நஸ்டம் அடைந்தார்.
இளையதலைமுறை என்ற படம் வந்தது சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கே நினைவில் இருக்காது.
இப்படி பல சிவாஜி கணேசன் படங்கள் நஸ்டம் அடைந்துவிட்டிருக்கின்றன.
இவர்கள்தான் நவரத்தினம் படம் மாபெரும் தோல்விப் படம் என்று கதைக்கின்றார்கள்.
http://i67.tinypic.com/29zx0jm.jpg
ரஜினியின் திடீர் எம்.ஜி.ஆர் பாசம்
ஆன்மீக அரசியலா? ஏமாற்று அரசியலா?
என்ற பெயரில் பேஸ்புக்கில் வந்த கட்டுரையை எடுத்து சிவாஜி கணேசன் திரியில் (பாகம் 19 பதிவு 2237) போட்டிருக்கார்கள். நாம்பளாக வம்பு இழுப்பது இல்லை. புரட்சித் தலைவரை பற்றி மோசமாக விமரிசித்து போட்டுள்ளார்கள். புரட்சித் தலைவர் பற்றி விமர்சித்து இருக்கும் பகுதிக்கு மட்டும் நம்பளுடைய பதில் தருகிறேன். எதிர்காலத்தில் படிக்கிறவங்க புரிஞ்சுக்கட்டும்.
சிவாஜி கணேசன் திரியில் (பாகம் 19, பதிவு 2237) உள்ளது:
நடிகர்திலகம் தனிக்கட்சி கண்டது, தான் முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதற்காக அல்ல, எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட ஆட்சி தொடரவேண்டும் என்பதற்காக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில்தான். 1989 தேர்தலில் தோற்றதும் கூட எம்.ஜி.ஆரின் மனைவி ஆட்சி தொடரவேண்டும் என்பதற்காகத்தான். அந்தத் தேர்தலில் தோற்றது சிவாஜி மட்டுமல்ல, எம்.ஜி.ஆரின் மனைவியும்தான். அதன்பிறகு தமிழக ஜனதா தளத்தின் தலைவராகவும் மதிப்புடனேயே திகழ்ந்தார் நடிகர்திலகம்.
நமது பதில்:
புரட்சித் தலைவர் தனது மனைவி ஜானகி அம்மாளை அரசியலுக்கு கொண்டுவரவில்லை. தனது வாரிசாக அறிவிக்கவில்லை. அதனால் மக்கள் ஜானகியை ஏற்றுக் கொள்ளவில்லை. புரட்சித் தலைவி ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்தார். கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கினார். எம்பி ஆக்கினார். 1986-ல் மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டில் ஜெயலலிதா கையால்தான் தங்க முலாம் பூசிய செங்கோலை புரட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார். அதனால் ஜெயலலிதாவை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். 1989 தேர்தலிலே ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.
ஆனால், சிவாஜி கணேசன் நிலைமை என்ன? 1989 தேர்தலில் திருவையாறு தொகுதியில் 10 ஆயிரம் ஓட்டுக்கும் மேற்பட்ட ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப் போனார். சிவாஜி கணேசனோடு கூட்டணி சேர்ந்தது எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பிடிக்காததால்தான் ஜானகி அம்மாளும் ஆண்டிப்பட்டியில் தோற்றுப் போனார். இல்லாவிட்டால் அவராவது நின்ற இடத்தில் ஜெயிச்சிருப்பார். தமிழக ஜனதா தள தலைவராக மதிப்புடன் இருந்தால் ஏன் அந்தக் கட்சியை விட்டும் அரசியலை விட்டும் சிவாஜி கணேசன் விலகினார். காமராஜே சிவாஜி கணேசனை மதித்தது இல்லை. காமராஜ் காலத்திலே சிவாஜி கணேசன் காங்கிரஸில் என்ன பதவியில் இருந்தார் சொல்லுங்கள்.
மாற்றுத் திரியில் உள்ளது:
திரையில் நடித்த தமக்கு அரசியல் மேடையில் நடிக்கமுடியாது என்பதற்காக, தானாகத்தான் விலகினாரே ஒழிய மக்கள் வெறுத்து ஒதுக்கவில்லை.
நமது பதில்:
மக்கள் வெறுத்து ஒதுக்கவில்லை என்றால் 1989- தேர்தலில் திருவையாறு தொகுதியில் சிவாஜி கணேசன் ஏன் தோற்றுப் போனார்? மக்கள் ஆதரவு இருந்தால் அமோக வெற்றி பெற்றிருக்க வேண்டுமே. அரசியலில் சிவாஜி கணேசனுக்கு நடிக்கத் தெரியாது அதனால்தான் தோற்றுப் போனார் என்றால் காமராஜ் எப்படி ஜெயிச்சார். அவர் அரசியலில் நடிச்சார் என்று ஒப்புக் கொள்றீங்களா.
மாற்றுத் திரியில் உள்ளது:
ஆனால், எம்.ஜி.ஆரை எடுத்துக்கொண்டால், அவர் பெயரைச் சொன்னால்தான் அரசியலில் உயரமுடியும் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். இறுதிக் காலத்தில்கூட சாவும், நோவும்தான் எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் காப்பாற்றியது என்பது பலருக்குத் தெரிந்திருந்தும் சொல்லுவதில்லை. இல்லையென்றால், எம்.ஜி.ஆரும் இறுதியில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்திருப்பார்.
நமது பதில்:
புத்திசாலிங்களா.. நீங்க சொல்கிற மாதிரி உன் திருப்திப்படியே ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் புரட்சித் தலைவர் எதிர்க்கட்சி வரிசையிலாவது இருந்திருப்பார். திருவையாறு தொகுதியில் தோற்றுப் போய் எம்எல்ஏ கூட ஆக முடியாத சிவாஜி கணேசன் கடைசியில் மக்களால் ஒதுக்கப்பட்டார் என்பதை மறந்து பேசாதீர்கள். கடைசி வரை சிவாஜி கணேசனால் ஒரு கவுன்சிலராகக் கூட முடியவில்லை. அறிவிலிகளே, நீங்களா புரட்சித் தலைவர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்திருப்பார் என்று சொல்வது.
மாற்றுத் திரியில் உள்ளது:
அ.தி.மு.க கட்சியைக் கைப்பற்றுவதற்காக எம்.ஜி.ஆர் பெயரை உச்சரித்த ஜெயலலிதாகூட அதன் பின்னர், தன்னுடைய ஆட்சி, அம்மா ஆட்சி என்றுதான் சொன்னாரே தவிர எம்.ஜி.ஆர் ஆட்சி என்று சொல்லவில்லை. எம்.ஜி.ஆர் பெயரில் கட்சி தொடங்கிய லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் காணாமல் போனார். எம்.ஜி.ஆராலேயே தன் கலை வாரிசு என்று அறிவிக்கப்பட்ட பாக்யராஜ். எம்.ஜி.ஆர் பெயரில் கட்சி ஆரம்பித்து காணாமல் போனார். கடைசியில் வந்த கருப்பு எம்.ஜி.ஆரின் கதிதான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதுமாதிரி எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி கட்சி ஆரம்பித்தவர்கள் வளர்ந்ததாக வரலாறு இல்லை.
நமது பதில்:
2014-ல் ஆயிரத்தில் ஒருவன் வெள்ளிவிழாவின் போது திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கத்துக்கு புரட்சித் தலைவி ஜெயலலிதா வெளியிட்ட வாழ்த்து செய்தியில் என்னை அரசியலுக்கு அழைத்துவந்தவர் ஆசான் புரட்சித் தலைவர் என்று சொன்னார். அந்த செய்தி பத்திரிகைகளிலும் வந்தது. புரட்சித் தலைவி மேடையில் தனது பேச்சை ஆரம்பிக்கும்போதும் முடிக்கும்போதும் புரட்சித் தலைவர் பெயரை சொல்லுவார்.
எம்.ஜி.ஆர். பெயரை சொல்லி கட்சி ஆரம்பிச்சவர்கள் வளர்ந்ததாக வரலாறு இல்லை என்று சொல்கிறாயே. சிவாஜி கணேசன் பெயர் சொல்லி கூட இல்லை, சிவாஜி கணேசனே அரசியலில் வளர்ந்த வரலாறு இல்லியே.
மாற்றுத் திரியில் உள்ளது:
இதே எம்.ஜி.ஆரால் ஒரு கட்டத்தில் விரட்டி விரட்டி பழிவாங்கப்பட்டபோது நடிகர்திலகம்தான் பலநேரங்களில் காப்பாற்றினார் என்பது ரஜினியின் மனசாட்சிக்குத் தெரியும்.
நமது பதில்:
அதே ஏசி சண்முகம் கல்லூரியில் புரட்சித் தலைவர் சிலை திறப்பு விழாவில் ரஜினி பேசும்போது ராகவேந்திரா மண்டபம் கட்ட எம்ஜிஆர்தான் உதவினார் என்று பேசினார். பத்திரிகையில் வந்து நம் திரியிலும் பதிவிடப்பட்டுள்ளது. இதை மறுக்க முடியுமா? ரஜினியை எம்ஜிஆர் என்ன பழிவாங்கினார். சிவாஜி கணேசன் அப்படி என்ன அவரை காப்பாற்றினார். 1980கள் ஆரம்பத்தில் சிவாஜி கணேசன் மகன் நடிகர் பிரபு மீது அவர் வீட்டில் இருந்தபோது துப்பாக்கி தோட்டா பாய்ந்ததே. துப்பாக்கி துடைக்கும்போது பிரபு மீது குண்டு பாய்ந்தது என்று பத்திரிகையில் செய்தி வந்தது. பின்னணி என்ன என்று சொல்ல முடியுமா? உங்கள் மானத்தை அப்போது முதல்வராக இருந்த புரட்சித் தலைவர்தான் காப்பாற்றினார். மல்லாந்து படுத்து எச்சி துப்பாதீர்கள்.
மாற்றுத் திரியில் உள்ளது:
சரி, அப்படி எம்.ஜி.ஆர் ஆட்சியை அமைப்பேன் என்று கூறும் அளவுக்கு எம்.ஜி.ஆர் தூய்மையான ஆட்சியைத் தந்தாரா என்றால் அதுவும் கேள்விக்குறியே? சாராயக் கடையைத் திறக்கமாட்டேன் என்று தாய்க்குலத்தின் மீது சத்தியம் செய்து வாக்குகளைப் பெற்ற எம்.ஜி.ஆர், ஆட்சிக்கு வந்தவுடன் தன்னுடன் இருப்பவர்களுக்கு சாராய ஆலை உரிமையை அளித்து தெருவெங்கும் சாராயக் கடைகளைத் திறந்தார். சாராய ஆலை அதிபர்களை, கல்வி வள்ளல்களாக ஆக்கி அழகுபார்த்தார். இறுதியில் அவருடைய அமைச்சரவையில் இருந்த எஸ்.டி.எஸ்ஸே, எம்.ஜி.ஆர் அரசு மீது ஊழல் பட்டியலை கவர்னரிடம் அளித்தார்.
நமது பதில்:
சில நடிகர்கள் மதுவிலக்கு இருந்த காலத்தில் அரசிடம் மது குடிக்க பர்மிட் பெற்ற நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஏழைங்கள் கள்ளச்சாராயம் குடிச்சு செத்தார்கள். அதுக்காகத்தான் புரட்சித் தலைவர் வேற வழி யி்ல்லாமல் சாராயக் கடை திறந்தார்.
ஒரு முறை தேர்தல் பிரசாரத்தில் சிவாஜி கணேசன், ‘அப்பனுக்கு சாராயம் பிள்ளைக்கு சத்துணவா’ என்று புரட்சித் தலைவரை கேள்வி கேட்டார். அதற்கு, ‘தன்னிடம் உள்ள மது பர்மிட்டை அரசிடம் ஒப்படைச்ச பிறகு சிவாஜி கணேசன் இதை சொல்லட்டும்’ என்று புரட்சித் தலைவர் பதில் அடி கொடுத்தார். சிவாஜி கணேசன் வாயே திறக்கவில்லை.
புரட்சித் தலைவர் அரசு மீது ஊழல் புகார் கொடுத்து நமது கழகம் என்று தனிக்கட்சி ஆரம்பிச்ச எஸ்டிஎஸ் பிறகு மறுபடியும் புரட்சித்தலைவர் கிட்டயே வந்து சேர்ந்தார்.
அதே புரட்சித் தலைவரை ஆதரிச்சுத்தான் அதிமுக காங்கிஸ் கூட்டணி இருந்தபோது 1977 பார்லெமெண்டு தேர்தல், 1984 சட்டசபைத் தேர்தலில் சிவாஜி கணேசன் பிரசாரம் செய்தார். நடுப்பற 1980-ல் காங்கிரஸ் - திமுக கூட்டணி இருந்தபோது ஊழல்வாதி கருணாநிதி முதல்வராக சிவாஜி கணேசன் பிரசாரம் செய்தார். இவர்கள் எல்லாம் ஊழல்வாதிகள் என்று அப்ப தெரியாதா? காங்கிரஸ் மேல்மட்டம் சொன்னதால் கூட்டணிக்கு கட்சிக்கு கட்டுப்பட்டு சிவாஜி கணேசன் பிரசாரம் செய்தார் என்றால் காங்கிரஸ் என்ன சொன்னாலும் கேட்பாரா? ஊழல் பற்றி கவலை இல்லியா? காங்கிரசே ஊழல் கட்சிதானே அதில் ஏன் சிவாஜி கணேசன் இருந்தார்.
புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு தனது மகள் சாந்தியின் மகளை சிவாஜி கணேசன் திருமணம் செய்து வைத்தார். திருமணம் அன்று ஜெயலலிதா பக்கத்திலேயே சிவாஜி கணேசன் நின்று கொண்டிருந்தார். ஜெயலலிதா ஊழல்வாதி என்று சிவாஜி கணேசனுக்கு தெரியாதா. சிவாஜி கணேசன் பேத்தியின் மாப்பிள்ளை சுதாகரன் இப்ப ஜெயலலிதா தோழி சசிகலாவுடன் ஊழலுக்காக பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவிச்சுக் கொண்டிருக்கிறார்.
இதுதான் சிவாஜியின் ஊழலற்ற தனம். அதோடு, ஊழல் செய்யாமல் இருக்க அவர் என்ன பதவியில் இருந்து நேர்மையாக நிர்வாகம் நடத்தினார். கவுன்சிலர் கூட ஆகவில்லையே. இருந்தாலும் கருப்புப் பணம் வைத்திருக்காத நடிகன் உண்டா? ஒவ்வொரு படத்துக்கும் நான் இவ்வளவு சம்பளம் வாங்கறேன் என்றோ தன் சொத்து இவ்வளவு என்றோ சொல்லி வெளிப்படையாக அறிவிச்சு தேர்தலில் சிவாஜி கணேசன் நின்றாரா?
சிவாஜி கணேசன் ரசிகர்களே, விசயம் தெரியாமல் பேஸ்புக்கில் பதிவிடாதீர்கள். நாங்கள் எவ்வளவோ விமர்சனங்களை பார்த்தவர்கள்.
ஆனால், சினிமா, நாடகம், நடிப்பு, அரசியல், பொது வாழ்வு, குடும்ப வாழ்வு, குளிக்கும்போது, பாத்ரூம் போகும்போது உலகத்திலய நேர்மையானவர்கள் ஒருவர் மட்டுமே என்று தம்பட்டம் அடிக்கிறீர்களே. பழசை நோண்டினால் அசிங்கப்பட்டு விடுவீர்கள்.
இனிமேலாவது யாரோடும் ஒப்பிட முடியாத தெய்வமாக இருக்கும் புரட்சித் தலைவர் மீது போறாமைப் படுவதைவிட்டு திருந்துங்கள்.
சென்னை - மகாலட்சுமி dts வெற்றி முரசு கொட்டும் அபாரமான 2 வது வாரமாக வசூல் சக்ரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் "அடிமைப்பெண்" நடைபெறும்போது ஸ்ரீநிவாசா dts அரங்கிலும் இன்று 27-04-2018 முதல் "அடிமைப்பெண்" அதிரடியாக வெளி வருவது இன்றும் மக்கள் திலகம் அவர்களுக்கு போட்டி மக்கள் திலகம் தான் ... என உணர வைக்கிறார்...
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 2018ல் மீண்டும் புதிய சாதனை .டிஜிட்டலில் பழைய படங்கள் பல , சென்னை மகாலட்சுமி அரங்கில் திரையிடப்பட்டாலும் ,டிஜிட்டல் அடிமைப்பெண் வசூலிலும் சாதனை புரிந்து , வெற்றிகரமாக 2 வது வாரமாக ,தினசரி 3காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/nete6s.jpg
கோவை மாவட்டம் அவினாசி சிந்தாமணியில் இன்று முதல் (27/4/18) தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது .
தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி.ராஜா .
http://i63.tinypic.com/v8lvg9.jpg
ரவிச்சந்திரன்,
நன்றி நன்றி நன்றி.
மாற்றுத் திரிக்கி பதில் அளிக்கும் பதிவில், அமைதியான வழியில் நடப்போம் என்று நீங்கள் கேட்டுக் கொண்ட மாதிரி நான் கடுமையான வார்த்தைகளை நீக்கி விட்டு நேற்று மீண்டும் பதிவு போட்டேன்.
மாற்றுத் திரியிிலே புரட்சித் தலைவர் பற்றின அவதூறு பதிவை நீக்கினால் தவிர என் பதிவை நீக்காதீர்கள் என்று நான் கேட்டுக் கொண்ட மாதிரி நீங்களும் என் பதிவை நீக்கவில்லை.
எனக்குப் புரியுது. நீங்களும் புரட்சித் தலைவர் பக்தர்தான். இருந்தாலும் நான் கொஞ்சம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி மாற்றுத் திரிக்கி பதில் போட்டதால் முந்தா நேத்து என் பதிவ நீக்கிவிட்டீர்கள். நேற்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருந்ததால் நேற்று என் பதிவை நீக்கவில்லை. புரியுது. என்ன செய்யறது. எனக்கு மட்டும் சண்டை போட ஆசையா? ஒரு பெரிய போஸ்ட் அடிக்க ரொம்ப நேரம் ஆகின்றது. ஆபிசு வேலை வேற இருக்கின்றது. இருந்தாலும் புரட்சித் தலைவர் போன்ற ஒரு நல்ல மனிதரை ஏன் இப்படி விமர்சனம் செய்கின்றார்கள் என்பதைப் பார்த்தால் கோவமாக வருகின்றது.
நீங்கள் சொல்கிறபடி புரட்சித்தலைவர் காட்டிய வழியில் நாகரீகமாக பதிவு போடறேன்.
என் பதிவ நீக்காமல் இருந்ததற்கு மறுபடியும் நன்றி .... நன்றி... நன்றி..
மக்கள் திலகம் பக்தனா இருப்பவன் எவனும் அவருக்கு கலங்கம் ஏற்பட விடமாட்டான்.
மனிதனாக வந்த தெய்வம் புரட்சித் தலவர் வாழ்க.
புரட்சித் தலைவர் பக்தர்கள் ரத்தத்தின் ரத்தங்கள் வாழ்க.
வண்ண காவியங்களிலும் வசூல் சக்ரவர்த்தி, கருப்பு வெள்ளை காவியங்களிலும் வசூல் சக்ரவர்த்தி ஆக என்றென்றும் திகழும் நம் மக்கள் திலகம் வாழும் "தர்மம் தலை காக்கும்" டிஜிட்டல் திருச்சி - பேலஸ் dts தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை போடுகிறது...
எம்ஜிஆருக்கு* கிடைத்த புகழ் போல்* வேறு எந்த நடிகருக்கோ* அரசியல் தலைவருக்கோ* *இது வரை*கிடைத்ததில்லை .இனி* மேலும்* கிடைக்கப்போவதில்லை .சினிமா* மற்றும் அரசியல்* இரண்டிலும்* மாபெரும்* புரட்சிகளை* செய்து* மக்கள்* மனங்களில்* நிரந்தரமாக* குடியேறிவிட்டார்* எம்ஜிஆர் . எதிரிகளும்* கூட* காலப்போக்கில்* எம்ஜிஆரை* புகழ்ந்தது எம்ஜிஆரின் கண்ணியமான* அணுகுமுறைதான்* காரணம் . ஒரு சில* நடிகரின்* ரசிகர்கள் இன்று வயதாகிவிட்டாலும்* எம்ஜிஆரின்* வெற்றிகளை* புகழை ஏற்று கொள்ள இயலாதவர்கள் தங்கள்* தொடர் தோல்விகளை* மறைக்க கடினமாக* பாடுபட்டு பதிவிட்டு வருவதால்* வெற்றி இலக்கை* எட்ட முடியுமா ?
எம்ஜிஆர்* சிறந்த நடிகர்*
எம்ஜிஆர்* சிறந்த முதல்வர்*
எம்ஜிஆர்* சிறந்த* மனித நேய தலைவர்
அனைவரும்* அறிந்த உண்மை .
எம்ஜிஆர்* எதிர்ப்பு* நண்பர்களின் உள்ளங்களை பற்றி**
கண்ணதாசனின்* பாடல் வரிகள்* நினைவிற்கு* வருகிறது .
*சிறிய காயம் ...*பெரிய துன்பம்*
ஆறும்* முன்னே* அடுத்த காயம்
உள்ளம்* பாவம் என்ன செய்யும்?*😢😊☺
"நாடோடி மன்னன்" விரைவில் மெருக்கேற்றப்பட்ட புது பொலிவுடன் திரை களம் காணவிருப்பதாக தகவல்...