https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...94&oe=5C675D26
Printable View
வணக்கம் திரு லோகநாதன் அவர்களே!Quote:
கடந்த ஆகஸ்ட் மாதம் 31ந்தேதி யன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின்
தீவிர பக்தரான திரு.கே.எஸ். மணி அவர்களின் புதல்வி ஸ்ரீமதியின் திருமணம்
சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது .
திருமண விழாவில் சிறப்பு விருந்தினராக திரு.சதானந்தன் (இலங்கையை சார்ந்தவர் -தற்போது கனடாவில் வசித்து வருகிறார் ) தனது நண்பர்களுடன்
கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் . திரு.சதானந்தன் , திரு.கே.எஸ். மணி அவர்களின் நீண்டகால நண்பர் . மாற்று முகாமில் பதிவிட்டு வரும் திரு.சிவாஎன்கிற சிவானந்தனின் சகோதரர் ஆவார் .மற்றும் உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு, திரு.எம்.எஸ். மணியன், திரு.ஆர். லோகநாதன் (ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி ), திரு.வி.ராஜா, நெல்லை திரு.தம்பாச்சாரி, திரு.ஜி.வெங்கடேச பெருமாள் ஆகியோர் திருமண நாளில் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தனர் .
முன்னதாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எண்ணற்ற எம். ஜி.ஆர். பக்தர்கள்
கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .
பின்னர் திரு.சதானந்தன் அவர்களுடன் இலங்கையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்பட வரலாற்று சாதனைகள், வரலாறு காணாத மக்கள் கூட்டம் மக்கள் திலகத்திற்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சிகள் போன்றவை பற்றி கேட்டு
தெரிந்து கொண்டேன் . .அவருடன் சுமார் ஒரு மணி நேரம் கலந்து உரையாடியதில் பல முக்கிய தகவல்களை தெரிவித்தார் . முக்கியமாக மாற்று முகாமில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றியும், அவரது திரைப்பட வசூல் சாதனைகள் பற்றிய பொய் செய்திகளையும் , அவதூறான பதிவுகளை பற்றியும் பல நண்பர்கள் தன்னிடம் புகார் அளித்ததாக தெரிவித்தார் . தனது சகோதரர் சிவானந்தனுடன் இதுபற்றி அவ்வப்போது வாக்கு வாதங்கள் நடைபெற்றதாகவும் (மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்பட துறையில் வலம் வந்தபோது ) ஒரு கட்டத்தில் அது பிரயோஜனம் இல்லை என்று முடிவுக்கு வந்ததாக தெரிவித்தார் . இலங்கையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்பட துறையில் இருந்தவரையில் அவர்தான் வசூல் சக்கரவர்த்தி என்றும் உறுதியாகவும்,ஆணித்தரமாகவும் பதிலளித்தார் . மேலும், மாற்று முகாமில் பதிவிடும் செய்திகளில் உண்மை இல்லை என்றும், அந்த செய்திகளை புறக்கணிக்குமாறும் கேட்டுக் கொண்டார் .திரு.சதானந்தன் தனது வாட்ஸ் அப் எண்ணை எனக்கு அளித்துள்ளார். அதில் மக்கள் தலைவர் .எம்.ஜி.ஆரின் அரசியல் மற்றும் திரைப்பட மறுவெளியீடு, டிஜிட்டல் வெளியீடு மற்றும் இதர செய்திகளை உடனுக்குடன் அனுப்புமாறும் கேட்டுக் கொண்டார் .
திரு.சதானந்தன் அவர்களின் வெளிநாட்டு பயணம் வெற்றியடையவும் , மீண்டும் இந்தியாவுக்கு வரும்போது சந்திப்போம் என்றும் வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றேன் .
செய்தி, மற்றும் புகைப்படங்கள் தாமதமாக பதிவிடுவதற்கு வருந்துகிறேன் .
திருமண விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
ஆர். லோகநாதன் .
தாங்கள் எனது சகோதரரை சந்தித்ததில் மகிழ்ச்சி
திரு மணி அவர்கள் எனக்கும் எனக்கும் நண்பர்
திருமண அழைப்பிதழ் எனக்கும் அனுப்பியிருந்தார்
திரு மணி அவர்களின் மகள் திருமணத்தில் நானும்
கலந்துகொள்வதாகத்தான் திட்டம் இருந்தது ஆனால்
மிகமுக்கிய அலுவல்காரணமாக இலங்கை செல்ல வேண்டி
இருந்ததால் அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமுடியவில்லை.
தாங்கள் திரு மணி அவர்களின் நண்பர் என்பதும்
அந்தத் திருமணத்துக்கு தாங்கள் வருவீர்கள் என்பதும் தெரியும்
அதன் காரணமாக தங்களை சந்தித்து உரையாடவும் தீர்மானித்திருந்தேன்
ஆனால் காலம் இடம் தரவில்லை .
நீங்கள் குறிப்பிட்ட ஏனைய விடயங்கள்பற்றி பின்னர்...
ஐயன் உயர்வானவர் என்பதற்கு மீண்டும் ஒரு சான்று
----------------------------------------------------------------------------------------------------
இலங்கை உயர்திரு. அப்துல் ஹமீத் யாரும் மறந்திருக்க மாட்டோம். மேன்மை மிகு ஹாமித் அவர்களுடன் இலங்கை சென்ற மாசிலா மாணிக்கம் நம் ஐயனுடன் நேருக்குநேர் நிகழ்ச்சி நடக்கின்றது. அந்த நிகழ்ச்சியில் ஐயனுடன் பல கேள்விகள் கேட்கப்படுகின்றது .
அதில் மிக முக்கியமான கேள்வி என்பது! தங்களுக்கு (நடிகர்திலகத்திற்கு ) எப்படி மன்னர்கள் வேடம் ஏற்று நடிக வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியது? அதற்கு அய்யன் கூறும் பதில், எவருக்கும் தோன்றிடாத , எவரும் எண்ணிப்பார்த்திடாத அற்புதமான, அதிசயமான பதில்.
எனக்கு தேவையான வசதிகள் ஓரளவு சேர்ந்த பிறகு, தேவையான செல்வங்கள் கிட்டிய பிறகு, (இங்குதான் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்) தேவையான வசதியும், செல்வங்களும் சேர்ந்த பிறகு மக்களுக்காக எதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்த போது, நாட்டிற்காக உழைத்த தலைவர்களை,உத்தமர்களை, சுதந்திரத்திற்காக போரிட்ட மன்னர்களை மக்களின் கண் முன்னால் கொண்டு செல்வோமே என்ற எண்ணம் என் மனதில் தோன்றியத்தின் காரணமே என்று பதில் சொல்வார்கள் நம் அய்யன்.
தனக்கு தேவையான வசதிகள் கிட்டிய பிறகு, இனி மக்களுக்காக என்ற புனிதமான, அந்த அதிசய எண்ணம் , மக்களை பற்றிய அந்த மாபெரும் அற்புத எண்ணம் எவருக்கய்யா தோன்றும்? இன்று மட்டுமல்ல , திரை உலகம் தோன்றிய காலம் முதல் நடிகர்கள் பணம் சேர்க்க வேண்டும், சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும், சமுதாயத்தில் நாமும் பணம் படைத்தவனாக உலா வர வேண்டும். முடிந்தவரை நடித்து பொன்னும்,பொருளும் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு வலம் வரும் திரை துறையில், தனக்கு தேவையான பொருள் சேர்ந்த பிறகு மக்களுக்காக இனி நம்மால் அனாதை செய்ய வேண்டும் என்ற அதிசய மந்திரம் ஐயனுக்கு மனதில் உதித்ததே . இதைத்தான் என்ன என்று சொல்வது?
தனது ஒவ்வொரு படத்திற்கும் சம்பளத்தை அதிகமாக கேட்க்கும் இந்த திரை உலகில், பாசிசம் நிறைந்த இந்த உல்லாச உலகில் எதனை படங்கள் நடித்தாலும், பொருள்கள் சேர்த்தாலும் அடங்கா மனதுடைய நடிகர்களின் மத்தியில் தன் தேவைக்கான செல்வம் சேர்த்தால் போதும் இனி என்னை நேசிக்கும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அந்த மாசற்ற உள்ளம் யாருக்கு வரும்?
சில நடிகர்கள் திரைத்துறையில் தனது அழகு குலைந்தபின் பொது வீதிக்கு தனது பெயருக்காக வருகின்றார்கள். சில நடிகர்கள் பொது வேதி என்ற நோக்கிலே திரைத்துறையை சின்னாபின்னமாக சீரழிகின்றார்கள். சில நடிகர்கள் சரியான நேரத்தில் வருவேன் என்று சொல்லியே தனது படங்களுக்கு விளம்பரம் தேடுகின்றார்கள்.சில நடிகர்கள் தமிழ், தமிழ் என்று சொல்லியே காணாமல் போகின்றார்கள்.
ஆனால் அய்யன் அவர்கள் திரை துறையில் உச்சத்தில் இருந்தபோதும், திரை உலகத்தையே ஆட்சி செய்தபோதும் தனக்கு தேவை எதுவோ அது கிடைத்து விட்டது. இனி என் மக்களுக்காக எனக்கு தெரிந்ததை செய்வோம், செய்ய வேண்டும் என்ற அந்த அற்புதமான எண்ணம் தோன்றியதே, இந்த மனிதனை, மாசில்லை மாணிக்கத்தை என்ன சொல்லி பாராட்டுவது.
அந்த அற்புத எண்ணங்களின் பிறப்பே வீரபாண்டிய கட்டபோம்ம்மன, கப்பலோட்டிய தமிழன், கைகொடுத்த தெய்வத்தில் மகாகவி பாரதியின் சிந்து நதியின் என்ற பாடல். பல படங்களிலும் பலதரப்பட்ட ஓரங்க நாடகங்கள்.அடியார்களின் வரலாற்று படங்கள், தெய்வங்களின் வரலாற்று படங்கள், சான்றோர்களின் வரலாற்று படங்கள் இன்னும் பல,பல
ஏழ்மையில் பிறந்து செல்வம் கொட்டும் திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்தும் பொருள், செல்வம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல், நான், என்குடும்பம் செழிக்க வேண்டும் என்று மட்டும் எண்ணாமல் என் மக்களுக்காக செய்ய வேண்டும் என்று எண்ணம் அய்யன் அல்லது எவருக்கு வந்தது? காரணம் அய்யன் வணங்கியதும் , வழி நடந்ததும் , வழி தொடர்ந்ததும் தியாகச்சுடராம் அப்பாச்சியின் வழி அல்லவா !
அப்பச்சியின் வழி தொடர்ந்து , சுதந்திர போராடத்தில் சிறையில் அடைபட்ட தன்னை ஈன்ற தந்தையின் இரத்தமல்லவா ஐயனின் உடலில். அய்யன் பிறக்கும்போதே ஐயனின் இரத்தத்தில் தான் , நான் என்ற எண்ணம் நீங்கி, நாம் ,நாங்கள்,எங்கள் என்ற உயர்ந்த எண்ணம் அய்யனுடன் பிறந்தது விட்டது போலும்.
எண்ணங்கள் அனைவருக்கும் தோன்றும். அது நல்ல எண்ணங்களாக தோன்ற வேண்டும்? அந்த எங்களை செய்திட நல்ல மனம் அமைந்திட வேண்டும். செய்திட மனம் இருந்தாலும் செய்து முடிக்க வேண்டும். அது ஒரு வரமாகும். அந்த வரம் ஐயனுக்கு மட்டுமே கிடைத்தது என்பதே உண்மை. காரணம்.சுதந்திர போராட்டத்தில் சிறை சென்டர் ஒரு உத்தமரின் பிள்ளை. தியாக சுடர் அப்பச்சியின்அற்புத தொடர்பு . ஐயனே நீ நடிகன் மட்டுமல்ல. நீ ஒரு அற்புத பிறவியே. அப்பச்சியின் ஆன்ம என்றும் தங்களுடன். தங்களின் அடி தொட்டு வணங்கும் ஒருவன்.
http://oi66.tinypic.com/znl894.jpg
(Selvaraj Fernandez)
" வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு
வாழும் உயிர்கட் கெல்லாம் "
என்றான் பாரதி!
அந்த தேசியக்கவியின் வாக்குக்கேற்ப பேரிடர் காலங்களிலும், நல்நற்பணி நேரங்களிலும் விளம்பரமில்லாது உதவியவர் அய்யன் நடிகர்திலகம்.
அப்பெருந்தகையின் நிழலாய் திகழ்கின்ற அவரின் அன்புச் செல்வங்களான ரசிக நெஞ்சங்களும், அவர் காட்டிய வழியிலேயே இன்றும் பயணிக்கின்றனர் என்பது மகிழ்வான சேதி....
ஆம்.
நடிகர்திலகத்தின் 90 வது பிறந்தநாளையொட்டி வருடத்தின் 52 வாரங்களும் அவர் பெயரால் அன்னதானம் செய்ய முடிவெடுத்து களத்தில் இறங்கியது குரூப்ஸ் ஆஃப் கர்ணன்.
அக்குழுவின் செயல்வீரரான திரு.பி.கணேசன் அவர்களின் தனிநபர் முயற்சியினால் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி, சில வாரங்களுக்குள்ளே
உலகெங்கும் பரவிக் கிடக்கும் அய்யனின் அன்பு ரசிகர்களின் அரவணைப்பினால், ஆதரவினால் 52 வாரங்களுக்கும் முன்பதிவு செய்யப்பட்டு, தற்போது இரண்டாம் ஆண்டின் பதிவுக்காகக் காத்திருப்பது அய்யனின் செயலன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே!
இத்தொடர் அன்னதானத்தின் ஒன்பதாம் வார நிகழ்ச்சி இன்று இனிதே நடந்தேறியது என்பதற்கான சான்றுகளே கீழ்க்காணும் நிழற்படங்கள்.
இன்றைய அன்னதானத்தின் உபயதாரர் புதுக்கோட்டையைச் சேர்ந்த திரு. சண்முகசுந்தரம் அவர்கள்.
இன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்னதானத்தைத் துவக்கி வைத்தவர் தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஐயா. திரு. நடராசன் அவர்கள். வருகைபுரிந்த ஐயாவுக்கு திரு. சண்முகசுந்தரம் அவர்கள் பொன்னாடைப் போர்த்திச் சிறப்பு செய்தார்.
வேளச்சேரியைச் சேர்ந்த திரு. சந்தான ராமகிருஷ்ணன் அவர்கள் இவ்வாரத்திற்கான நினைவுக் குறிப்பேட்டினை புதுக்கோட்டை திரு. சண்முக சுந்தரம் அவர்களுக்கு வழங்க, இதயவேந்தன் சிவாஜி மன்றத்து செயல்வீரர் திரு. RS. சிவா அவர்கள் பொன்னாடைப் போர்த்திச் சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு நைஜீரியா நாட்டில் பணியாற்றி, விடுப்பில் தாயகம் திரும்பியிருக்கும் திரு. சிவகுமார் அவர்கள் வந்து பங்கேற்றுக் கொண்டது மகிழ்வான நிகழ்வு.
அய்யனின் அன்பு இதயம் திரு. ML. கான் அவர்களின் பங்களிப்பு அளவிடற்கரியது. மேலும் நம் முயற்சிக்கு கரம் கோர்க்கும், திரு. ராகவேந்திரா, திரு. கீழவீதி ரவி, திரு. விருகை பாலசந்திரன், திரு. மிட்லண்ட் சங்கர், திரு. பாண்டியன், திரு. ஏழுமலை, திரு. அம்பத்தூர் சுப்ரமணியன், திரு. KS. நரசிம்மன், திரு. சூளைமேடு நந்தகுமார், திரு. ராமசாமி GH, திரு. ஆல்ஃபா, திரு. பெரம்பூர் மணி, திரு. ஞானவேல் உள்ளிட்ட ஏராளமான ரசிக இதயங்களின் வருகையுடன் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்க சிறப்புற நடந்தது அன்னதான நிகழ்ச்சி.
மகிழ்ச்சியின் திளைப்பில்....
வான்நிலா விஜயகுமாரன்
http://oi65.tinypic.com/2dair6x.jpg