-
மதுரை மாநகரில் மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி சாதனைகள்......*
1968 முதல் 1977 ஆம் ஆண்டு வரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்களின் வரலாறு....
1968 ...*
ஒளிவிளக்கு 147 நாட்கள் குடியிருந்த கோயில் 133 நாட்கள் ரகசியபோலிஸ்115... 92 நாட்கள்*
1969.....*
மாபெரும் சாதனை படைத்த அடிமைப்பெண் 176 நாட்கள் நம்நாடு 133 நாட்கள்.
1970......*
மாபெரும் சரித்திரம் படைத்த மாட்டுக்கார வேலன் 177 நாட்கள் என் அண்ணன் 105 நாட்கள்*
எங்கள் தங்கம் 109 நாட்கள்.
தேடி வந்த மாப்பிள்ளை 70 நாள்.
1971......*
மாபெரும் சரித்திரத்தை ஏற்படுத்தி வசூலில் புரட்சி கண்ட ரிக்க்ஷாக்காரன் 161 நாட்கள் குமரிக்கோட்டம் 105 நாட்கள்*
நீரும் நெருப்பும் 84 நாட்கள்.
1972......*
மாபெரும் வெற்றியில்...*
இரண்டு அரங்கில் வெளியீட்டு ஒன்றில் ......*
நல்லநேரம் 112 நாட்கள் இதயவீணை 110 நாட்கள்*
நான் ஏன் பிறந்தேன் 70 நாட்கள் ராமன் தேடிய சீதை 84 நாட்கள் சங்கே முழங்கு 70 நாட்கள்.
1973 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய சரித்திரத்தையும் வசூலையும் ஏற்படுத்திக் கொடுத்த உலகம் சுற்றும் வாலிபன்*
217 நாட்கள் ஓடி வெற்றியைப் படைத்தது.
பட்டிக்காட்டுப் பொன்னையா பதினோரு வாரங்கள் ஓடியது..........
-
நாஞ்சில் மாநகரமான நாகர்கோயில் நகரில்*
இதயவீணை முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை தொடர்ந்து வெளியான வண்ணக் காவியங்கள் படைத்த வெற்றி சாதனைகள் சில.
இதயவீணை 55 நாட்களும்*
1973 உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் 112 நாட்களும், பட்டிக்காட்டு பொன்னையா*
50 நாட்களும் ஒடியது.
1974 நேற்று இன்று நாளை*
77 நாட்களும்,**
உரிமைக்குரல் 83 நாட்களும்,*
சிரித்து வாழவேண்டும்*
50 நாட்களும் ஓடியது.
1975 நினைத்ததை முடிப்பவன்*
70நாட்களும், இதயக்கனி*
61 நாட்களும், பல்லாண்டு வாழ்க*
70 நாட்களும், நாளை நமதே*
40 நாட்களும் ஓடியது.
1976 நீதிக்கு தலைவணங்கு*
62 நாட்களும்,*
உழைக்கும் கரங்கள் 61 நாட்களும், ஊருக்கு உழைப்பவன்*
38 நாட்களும் ஒடியது.*
1977 நவரத்தினம் 35 நாட்களும், இன்று போல் என்றும் வாழ்க திரைப்படம் 60 நாட்களும்,*
மீனவ நண்பன் திரைப்படம்*
60 நாட்களை கடந்தும் ஒடியது.
1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் 62 நாட்களும்*
ஒடி சரித்திரம் படைத்தது.
நாகர்கோவில் மாநகரில் தொடர்ந்து இப்படி 50 நாட்களையும் 75 நாட்கள் , 100 நாட்களையும்* கடந்து அதிக வசூலைப் பெற்ற திரைப்படங்கள் மக்கள் திலகத்தின் திரைப்படங்களாக தொடர்ந்து சாதனை படைத்துள்ளது............
-
"கப்பலோட்டிய தமிழன்" "பலே பாண்டியா" "கர்ணன்" "முரடன் முத்து" போன்ற தொடர் தோல்விகளால் துவண்டு போன பந்துலு "ஆயிரத்தில் ஒருவன்" மூலம் மீண்டு கொண்டிருந்த கால கட்டத்தில் முழுமையாக மீள வேண்டி குறைந்த
செலவில் ஒரு படம் தயாரித்து அதன்மூலம் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள விரும்பினார்.
ஏனென்றால் அவர் மிகுந்த செலவில் தயாரித்த "கப்பலோட்டிய தமிழன்" "கர்ணன்" முதலான படங்களை செலவே இல்லாமல் தயாரித்த "தாய் சொல்லை தட்டாதே" "வேட்டைக்காரன்" போன்ற படங்களின் மூலம் நிர்மூலம் ஆக்கிய "ஆயிரத்தில் ஒருவன்" அருகிலேயே இருந்து கொண்டு அதைப் போலவே செலவே செய்யாமல் மிகக் குறைந்த பட்ஜெட்டில் ஒரு படம் தயாரிக்க விரும்பி பந்துலு தயாரித்த படம்தான் "நாடோடி".
படத்தில் எந்த விதமான ஆடம்பர காட்சிகளோ பெரிய செட்டிங்ஸ் போட வேண்டிய அவசியமோ இல்லாமல் எம்ஜிஆர் என்ற தனி முத்திரையை மட்டும் பயன்படுத்தி தான் எதன் மூலம் பணத்தை இழந்தோமோ அதன்மூலமே தன்னை மீட்க வேண்டி "நாடோடி" படத்தை தயாரித்து நினைத்தை முடித்தவர்தான் பந்துலு.
1966 ல் வெளியான படங்கள் மொத்தம் 9..எம்ஜிஆரின் திரையுலக வாழ்க்கையில் அதிக பட்சம் வெளியான படங்கள் வெளியான ஆண்டுகள் 1963 ம் 1966 ம். இரண்டு ஆண்டுகளிலும் தலா 9 படங்கள் வெளியானது. அதில் 1966 ம் ஆண்டு ஏப் 14 தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியான வெற்றிப் படம்தான் "நாடோடி". ஜன 14 பொங்கலன்று வெளியான "அன்பேவா" இன்னும் ஓடிக் கொண்டிருக்க அடுத்தடுத்து வெளியான 4 வது படம்தான் "நாடோடி".
இன்றும் நிலை பெற்றுக் கொண்டிருக்கும் அருமையான பாடல்கள் ஒன்றே போதும் வெற்றிக்கு என்று நினைத்து எடுத்த படம். காலத்தை வென்ற பாடல்கள் மூலம் காலத்தை வென்றவனின் துணை கொண்டு குபேரனின் பொக்கிஷத்தை கவர்ந்து தான் இழந்ததை மீட்ட படம்தான் "நாடோடி". "நாடோடி"யின் மூலம் பந்துலுவின் இந்த முயற்சி அவரை ''பலே பந்துலு'' என்று சொல்ல வைத்தது.
ஒரு தயாரிப்பாளர் தன்னிறைவு அடைய வேண்டும் என்றால் அவர் தயாரித்த படத்தை அவரே தியேட்டர் வாடகை கட்டி ஓட்டுவதை விட நான்கு வாரங்கள் கூட்டத்தோடு ஓடினால் போதுமானது என்பதை உணர்ந்து தயாரித்த
படமே "நாடோடி". அவர் நினைத்தை விட மிகப்பெரிய வெற்றியை தலைவரின் முகத்தை காட்டி வென்றார் "நாடோடி"யின் மூலம்.
ஒவ்வொரு தயாரிப்பிலும் அவர் பட்ட
பாடுகளை நினைத்தால் கை சிவந்து கொடுத்த "கர்ணன்" கூட கலங்கி விடுவான் அடுத்து கொடுக்க பணமில்லாமல். படம் தீண்டாமையை ஒழித்து வள்ளல்தன்மையாலும் நல்ல மனதாலும் மக்கள் உள்ளங்களை வென்ற கதை.
தீண்டாமை நல்லவனை(நம்பியார்) கூட கெட்டவனாக்கி விடும் என்பதையும் 'சங்கு சுட்டாலும் வெண்மை தரும்' என்பதை போல் நல்ல குணங்கள் தீண்டாமையை ஒழித்து கெட்டவரையும் நல்லவராக மாற்றும் என்பதையும் திரைக்கதை மூலம் எடுத்து சொன்ன விதம் அற்புதம். எம்ஜிஆர் இயல்புக்கு ஏற்ற அருமையான கதையம்சம் கொண்ட படம். நல்லவனை வில்லனாக காட்டியதால் அவர் செய்யும் வில்லத்தனம் எடுபடாமல் போனதில் ஆச்சரியமில்லை. படத்தின் வேகத்தை அது குறைப்பதோடு வில்லன் மீது பரிதாப உணர்வும் ஏற்பட செய்கிறது...
"ஆயிரத்தில் ஒருவனி"ல் ஆர்ப்பாட்டமான வசனத்தின் மூலம் புகழ் பெற்ற r.k.சண்முகம் நாடோடியில் ஆழமான வசனத்தின் மூலம் அதை தக்க வைத்துக் கொண்டார். திரையிட்ட இடங்களில் எல்லாம் முதல் 4 வாரங்கள் வெற்றி கொடி கட்டி பறந்தது.'உலகமெங்கும் ஒரே மொழி('ஒரே மனித ஜாதி) 'உள்ளம் பேசும் காதல் மொழி' என்று உடனே இரட்டுர மொழிதல் மூலம் தன்னுடைய கவித்துவத்தை பறை சாற்றும் விதம் கவிஞருக்கே உரிய தனித்துவம். எங்கு பார்த்தாலும் "நாடோடி"யின் பாடல்கள் காதுக்கு இனிமை சேர்த்ததோடு மக்களின் நாட்டுப் பற்றையும் வளர்த்தது.
'நாடு அதை நாடு' 'அன்றொரு நாள்' 'ரசிக்கத்தானே இந்த வயது" 'திரும்பி வா' போன்ற பாடல்கள் மக்களை தன் பக்கம் திரும்ப வைத்த படம்தான் "நாடோடி". முதல் பாடல் காட்சியை தவற விட்டவர்கள் மன்றலில் தென்றலை இழந்ததை போல உணர்வார்கள். அந்தப் பாடலுக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். பாடல் இனிமையிலும் இனிமை, அதனினும் இனிமை இசை, அதனினும் இனிமை எம்ஜிஆர் புதுமுகம் பாரதியின் இளமை தோற்றம். இப்படி. அடுக்கிக் கொண்டே போகலாம்.
"நாடோடி"யாய் மாறிய பந்துலுவை மீண்டும் நாடு போற்றும் செல்வந்தராக மாற்றிய படம்தான் "நாடோடி" என்று சொல்லலாம்.
சென்னை பிளாசா பிராட்வே உமாவில் 57 நாட்களை கடந்தது. தமிழகத்தில் மற்ற ஊர்களிலும் 50 நாட்களை எளிதில் கடந்து சாதனை செய்தது. . மதுரை திருச்சி கோவை சேலத்தில் 10 வாரங்கள் ஓடி வெற்றி கொடியை உயர்த்தி பிடித்தது.
'c' சென்ட்டரில் அடிக்கடி வெளியாகி வெற்றி பெற்ற உன்னதமான படம்தான் "நாடோடி"..........
-
#அதனால் #தான் #அவர் #கடவுள்
புரட்சித்தலைவரை ஒரு காலத்தில் தூற்றியவர்கள் இப்போது அவரது பெருமையை உணர்ந்து வாழ்த்துகிறார்கள். இந்த பெருமை எல்லாருக்கும் கிடைக்காது...
தர்மம் தலைகாக்கும் படத்தில் தர்மம் தலைகாக்கும்... என்ற பாடலில் ‘மலைபோலே வரும் சோதனை யாவும் பனி போல நீங்கிவிடும். நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்’ என்று புரட்சித் தலைவர் பாடுவார்.
அதுபோல புரட்சித் தலைவரை நல்லபடி வாழவிடாமல் செய்யும் முயற்சியில் (அப்போதே அதிலும் இவர்கள் தோல்விதான் கண்டார்கள்) இறங்கியவர்கள் இப்போதும் அவர் வாசலில் வணங்கி நிற்கிறார்கள். அதனால்தான் புரட்சித் தலைவர் சாதாரண மனிதர் இல்லை. மனித உருவத்தில் வந்த தெய்வமாக விளங்குகிறார்.
மனித வடிவில் வந்து வாழ்ந்து காட்டிய தெய்வம் புரட்சித் தலைவர், எதிரிகள் உட்பட எல்லாருக்கும் அருள்தருவார்.
"ஒருபுறம் பகுத்தறிவு பேசிக்கொண்டு, மறுபுறம் சமாதியில் பாலூற்றுபவர்களுக்குக்கூட ஆன்மசுகத்தை அருளுகிறார். அவர் எல்லாவற்றையும் கடந்தவர்... அதனால்தான் அவர் கடவுள்...".........
-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். செய்த சாதனைகள் எல்லாம் தெரியுமா?
எம்.ஜி.ஆர். என்றால் திரைப்பட நடிகர் மட்டுமல்ல, ஒரு நல்ல நிர்வாகியும்கூட. அவர் காலத்தில் என்னவெல்லாம் நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள ஆசையா..?
1972– ம் ஆண்டு அக்டோபர் 8 – ம் தேதியன்று. பழைய) செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் பின்வருமாறு பேசினார்;
”அறிஞர் அண்ணாவின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றி கலைஞரின் தலைமையில் செயல்படும் தி.மு.க. ஆட்சியில் இலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன எனப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இது நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட அறஞர் அண்ணாவுக்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகாது. லஞ்சத்தை ஊழலையும் ஒழித்துச் சுத்தமான நல்லாட்சியை நடத்துவதுதான் அண்ணாவுக்குச் செய்கிற நன்றியாகும்; பெருமை ஆகும்.*
கழகத் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கைப் பொதுமக்கள் முன்னால் சமர்பிக்க வேண்டும். கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது சொத்துக்கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு ஆரம்பபணியாய் இருக்கும்.*
இதையும் படிங்க
அறிஞர் அண்ணாவே கைவிடத் துணியாத மது விலக்குக் கொள்கையை கைவிட்டது, கலைஞர் அரசு அண்ணாவுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். அண்ணாவுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய துரோகமாகும்!” என்றுஎம்.ஜி.ஆர். முழக்கமிட்டார். லஞ்ச, ஊழல் இல்லாத ஆட்சி அமையவேண்டும் என்றஎம்.ஜி.ஆரின் எண்ணம்தான் அதிமுகவாக உருவெடுத்தது.*
அண்ணாசாலையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடையில்மக்களுக்கு முன் பதவியேற்பு வைபவத்தை நிகழ்த்திபுதுமை செய்தார்.தன் ஆட்சி லஞ்ச லாவண்மயற்ற ஊழலற்ற ஆட்சியாக மக்களாட்சி புரியும் என மக்களுக்கு உறுதியளித்தார். அதனைகடைசிவரை காப்பாற்றவும் செய்தார்.**
1977 முதல் 1987 வரைஎம்.ஜி.ஆர். ஆட்சி – மூன்று முறை வெற்றி.* அறம் சார்ந்த அரசியல்அரங்கேறியது. குடும்ப அரசியல்கிடையாது
கட்சிக்காரர்கள்,நிர்வாகிகள், அமைச்சர்கள் கண்காணிக்கப்பட்டதால் அச்சத்துடன் இருந்தனர். பதவிபறிக்கப்படலாம்,என்பதால் தவறு செய்யப் பயந்தனர்.
அதிகாரிகளுக்கு முழுஅதிகாரம் இருந்தது. எவரேனும் ஆளுமை செலுத்த முயன்றால் – கார்டனுக்கு சொல்லிவிடுவோம்– என்றனர்.
ஒரு தவறு செய்தால் அதைதெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விட மாட்டேன் என்று சொல்லியதைப் போலவே தவறுசெய்தவர்களை தண்டித்தார்., பதவிகளில் இருந்து தூக்கினார்.
எம்.ஜி.ஆர்.ஆட்சிக்குப் பிறகு லஞ்சத்தில் பேரம் பேசுவது, பங்கு போடுவது, எல்லை பிரிப்பதுபோன்ற முறைகேடுகள் நிகழ்ந்தது கண்கூடு.
மக்கள் நலன்
நாடோடி மன்னன்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்திய மக்களாட்சியை, தனது ஆட்சியில்கொடுத்தார். தேச நலனைவிட மக்கள் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.‘நானே போடப்போறேன் சட்டம், நன்மை பயக்கும் திட்டம்’ என்று சொன்னதைப் போலவே,ஒவ்வொரு திட்டத்திலும் மக்கள் நலன் முன்னிறுத்தப்பட்டது.
பசிப்பிணியைஉணர்ந்தவர் எம்.ஜி.ஆர். அதனால் குழந்தைகள் யாரும் பசியால் வாடக்கூடாது என்றுசத்துணவுத் திட்டம் கொண்டுவந்தார். இந்த திட்டம்தான் தமிழகத்தின் கல்வித்தகுதியைவானளவுக்கு உயர்த்தியுள்ளது.
சத்துணவுத்திட்டத்தில்10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயாக்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதனால்ஆயிரக்கணக்கான குடும்பத்தில் வறுமை விலகியது.
- ரேஷன்கடைகளில் அரிசி விற்பனையை சீர்படுத்தினார். அரிசி விலையை 1.75 ரூபாய்க்குகட்டுப்படுத்தினார். ரேசன் கடையில் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதை உணர்ந்தஎம்.ஜி.ஆர். தமிழ்நாடெங்கும் 20 ஆயிரம் ரேஷன் கடைகளைத் திறந்து 20,000 பேருக்குவேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். அதனால்தான் என்றென்றும் ஏழைகள் இதயத்தில் எம்.ஜி.ஆர்.வாழ்ந்தார்.
ஒரு விளக்குத் திட்டம்எம்.ஜி.ஆரால் கொண்டுவரப்பட்டது. குடிசையில் வாழும் மக்களும் மின்சாரம் பெறவேண்டும்என்பதற்காக ஒவ்வொரு குடிசைக்கும் ஒரு இலவச மின்சார விளக்கு பொருத்துவதைலட்சியமாகக் கொண்டு செயல்பட்டார். இதுவே பின்னர் இருவிளக்கு திட்டமாக மாற்றம்அடைந்தது.
பள்ளிமாணவர்களுக்கு படிப்பில் எந்த சிரமமும் ஏற்படக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர்.உறுதியாக இருந்தார். அதனால் இலவச சீருடை, இலவச பாடப்புத்தகம், இலவச காலனி,இலவசபற்பொடி என்று ஏகப்பட்ட உதவிகள் செய்து படிக்கவைப்பதில் அக்கறை செலுத்தினார்.
முதியோர் மீதுஎம்.ஜி.ஆருக்கு உள்ள அக்கறை அளப்பரியது. அதனால் முதியோருக்கு நாள்தோறும் மதியஉணவு, ஆண்டுக்கு இரண்டு முறை இலவச உடை, மாத உதவித்தொகை போன்றவற்றை வழங்கி, ஒவ்வொருவீட்டுக்கும் தலைமகனாக எம்.ஜி.ஆர். விளங்கினார்.
விவசாயிகள்,நெசவாளர்களுக்கு கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம், பயிர் பாதுகாப்பு, விதை மானியம்போன்றவையும் புரட்சித்தலைவரால் அறிமுகம் செய்யப்பட்டது.
படித்து வேலையில்லாதஇளைஞருக்கு ஊக்கத்தொகை எம்.ஜி.ஆர். காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. வீட்டுக்குஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்பதை எம்.ஜி.ஆர். லட்சியமாகக்கொண்டிருந்தார். இதற்காகவே மாதம் 9,000 வருமானத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்று சட்டம் போட்டார். ஆனால், இதற்கு கடுமையாக எதிர்ப்புதோன்றவே, மக்கள் உணர்வுகளுக்கு மதிப்புகொடுத்து சட்டத்தை வாபஸ் பெற்றார்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு31% என்ற அளவில் இருந்த இட ஒதுக்கீட்டை 50% என உயர்த்தியவர் புரட்சித்தலைவர். இடஒதுக்கீடு 50%க்குள் இருக்க வேண்டும் என்று வரையறை செய்திருந்தபோதும், மக்கள் தொகைகணக்கிட்டு 50% பிற்படுத்தப்பட்டோர், 18% தாழ்த்தப்பட்டோர் என 68% இட ஒதுக்கீடுகொண்டுவர காரணமாக இருந்தார். இதனை பின்னர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம்இயற்றி சட்டபூர்வமாகக் கொண்டுவந்தார்.
மக்கள் மனம் அறிந்தவர்
எம்.ஜி.ஆர். காலத்தில்41 கிளாஸ் என்ற சந்தேக கேஸ் போடும் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது. அதன்படி சைக்கிளில் டபுள்ஸ் செல்பவர்களை மடக்கி கை ரேகை பதிந்து, ரிமாண்ட் செய்துவந்தனர்.இதனால் கிராமத்து ஏழைகள்தான் பாதிக்கப்பட்டனர். கணவனுடன் மனைவி சைக்கிளில் செல்ல முடியவில்லை,அப்பாவுடன் மகன் சைக்கிளில் செல்ல முடியவில்லை. இந்த சட்டத்தை நீக்கினார்புரட்சித்தலைவர். இதனால் ஏழைகளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் வடிக்கவேமுடியாது.
* தமிழர்நலன் பாராட்டுவதில் எம்.ஜி.ஆரை எவரும் விஞ்சமுடியாது. ஈழத்தில் விடுதலைப்புலிகள்வலிமை பெறவும், வளர்ச்சி அடையவும் எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் ஏராளம். அதனால்தான்உலகமெங்கும் இருக்கும் ஈழத்தமிழர்கள் வீட்டில் இன்றும் எம்.ஜி.ஆர். படம்தொங்குகிறது. பிரபாகரனுக்குக் கொடுக்கும் மரியாதையை எம்.ஜி.ஆருக்குக் கொடுத்தனர்.தமிழ் ஈழம் உருவாகவேண்டும் என்பதற்காக எதையும் செய்துகொடுக்கும் துணிச்சல்காரராகஎம்.ஜி.ஆர். இருந்தார்.
காரியம் சாதிப்பதில் வல்லவர்
பல அரசுகளால்பேசப்பட்டுவந்த கிருஷ்ணா நதிநீர் இணைப்பை சாத்தியமாக்கியவர் எம்.ஜி.ஆர்.சாதுர்யமாக என்.டி.ராமாராவுடன் பேசி ஒப்பந்தம் போட்டு காரியம் சாதித்தார்.
ரேஷன் அரிசி தருவதில்மத்திய அரசு சுணக்கம் காட்டுவது தெரிந்ததும் 1983-ம் ஆண்டு மெரினா பீச்சில்உண்ணாவிரதம் இருந்து காரியத்தை சாதித்தார்.
விமர்சனங்களை மதிப்பவர்
மதுவை தமிழகத்தில்இருந்து ஒழித்துக்கட்ட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கடுமையான சட்டங்களைக்கொண்டுவந்தார் முதல் முறை மதுவிலக்கு சட்டத்தில் பிடிபட்டால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை… இரண்டாவது முறை பிடிபட்டால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, மூன்றாவது முறைபிடிபட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என்று அவசர சட்டம் கொண்டுவந்தார். ஆனால்மக்களும் எதிர்க்கட்சிகளும் இந்த சட்டத்தைக் கடுமையாக எதிர்த்ததால் மதுவிலக்கைரத்து செய்தார்.
தனியார்களுக்கு கல்லூரிவழங்கியபோது கடுமையான விமர்சனம் எழுந்தது. ஆனால் எதிர்காலத்தில் தமிழர் நலனுக்கு இதுதான் சரியான திட்டம் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் தீர்க்கதரிசனம் இன்றுஉண்மையாகிவிட்டது. உலகம் முழுவதும் ஐ.டி. துறையில் தமிழர்கள் சாதனை புரிந்துவெற்றிகரமாகத் திகழ்வதற்குக் காரணம் இந்த தனியார் பொறியியல் கல்லூரிகள்தான்.*.........
-
இலங்கை திருநாட்டில் மக்கள் திலகம் திரைப்படங்கள் படைத்த மகத்தான வெற்றிகளை பல விதமாக பிரிக்கலாம்.....* 1950 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களின் சாதனை ஒட்டம்....
இலங்கை நாட்டில் இரண்டு பிரிவுகளான கொழும்பு யாழ்ப்பாணம் மற்றும் பல பகுதிகளில் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் திரையிடப்பட்டு 95 சதவீதமான வெற்றிகளை 1977 ஆம் ஆண்டு மீனவ நண்பன் திரைப்படம் வரை பெற்றுள்ளார்.
பழைய திரைப்படங்களில் பல திரைப்படங்கள் 50 நாள்* 5 வாரம்*
6 வாரம் கடந்தும் 100 நாட்களை வெற்றிகொண்டும்....உள்ளது.
பல ஏரியாக்களில் மக்கள் திலகத்தின் திரைப்படங்களே அதிக அளவில் 100 நாட்கள் ஓடி இரண்டு திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடி சாதனை பெற்று சரித்திரம் படைத்துள்ளது.
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் மூன்று ஏரியாக்களில் வெவ்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. தலைநகர் கொழும்பில் உள்ள கேப்பிட்டல் உலகம் சுற்றும் வாலிபன் 203 நாட்களும், அதன் பின்பு விஜயா அரங்கில் 116 நாட்களும் ஒடியுள்ளது..
எந்த நடிகரின் நூறாவது திரைப்படமும் இங்கே 50 நாட்கள் கூட வெற்றி பெறவில்லை ஆனால் மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு திரைப்படம் இலங்கை கொழும்பில் 162 நாட்களும், யாழ்ப்பாணம் ராஜாவில்* 161 நாட்கள் ஓடி சாதனை பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல நான்காவது வெளியீட்டில் 1979 ல் இக்காவியம் 100 நாளை கடந்தது சாதனையை பெற்றுள்ளது...........
-
இப்படி இலங்கை நாட்டில் பல விதமான வெற்றிகளை மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் பெற்றுள்ளதை அடுத்து வரும் பதிவுகளில் விபரமாக பதிவிடுவோம்.*
நாட்டில் 100 நாட்களை உண்மையாக* வெற்றி கண்ட திரைப்படங்கள் பற்றிய பட்டியல்...
மந்திரிகுமாரி ,மர்மயோகி*
100 நாளை கடந்தது.
என் தங்கை 100 நாளை கடந்து ஓடியது.*
மலைக்கள்ளன் 100 நாட்களை கடந்து ஓடியது*
அலிபாபாவும் 40 திருடர்களும் மதுரை வீரன்
சக்கரவர்த்தி திருமகள்.
100 நாளை கடந்தது.
நாடோடி மன்னன்*
திரைப்படம் பல அரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது கிட்டத்தட்ட 15 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டு 5 திரையரங்குகளுக்கு மேல் 100 நாட்கள் ஓடியதாக தகவல்கள். இந்த தகவல்கள் கிடைத்தவுடன் பதிவிடப்படும்.
1961 ல் திருடாதே**
தாய் சொல்லை தட்டாதே 100 நாள்*
1965-ல் எங்க வீட்டு பிள்ளை* ஆயிரத்தில் ஒருவன்... 100 நாள்**
1967- ல் காவல்காரன் திரைப்படம் இரண்டு திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து சாதனை பெற்றது.
1968 ல் ஒளிவிளக்கு திரைப்படம் இரண்டு மிகப்பெரிய அரங்குகளில் 150 நாட்களை*
கடந்து சாதனை.*
1969 ல் அடிமைப்பெண், நம் நாடு* 1970 ல் மாட்டுக்கார வேலன்* இரண்டு திரையரங்குகளில்*
100 நாட்களை வெற்றி கொண்டது.
1972 ஆம் ஆண்டு மக்கள் திலகத்தின் மூன்று திரைப்படங்கள் 100 நாட்களை வெற்றி கொண்டு சாதனை படைத்துள்ளது*
நல்லநேரம் திரைப்படம்*
5 அரங்கில் 50 நாட்களை கடந்து 100 நாட்களை செல்லமகால் அரங்கில் ஓடி வெற்றி கொண்டது.*
அடுத்து ராமன் தேடிய சீதை திரைப்படம் கெப்பிட்டலில் 100 நாட்கள் ஓடி சரித்திரம் படைத்தது.*
இதயவீணை திரைப்படம் நவா திரையரங்கில் 100 நாள் ஓடியது..........
-
எம் ஜி ஆர் திமுக வில் இருந்து நீக்கப்படுகிறார். உலகம் சுற்றும் வாலிபன ரிலீசாக போகிறது. 1973ல் திமுக சார்பில் மதுரையில் மணிநகரம் பகுதியில் திமுக பொதுக்கூட்டத்தில் திராவிட இயக்க இரும்பு மனிதர் என அழைக்கப்படும் மதுரை முத்து அவர்களும், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ராஜாங்கமும், எஸ்எஸ்ஆரும்...ஆற்றிய உரை...
மதுரை முத்து: "அடேய் ராமச்சந்திரா... நீ சினிமாவுல தான் சண்ட போடுவ... ஆனா நா நிஜத்துல சண்டியர்... கலைஞரையா கணக்கு கேக்குற... உன்னை வாழவே விடமாட்டேன். உன் படம் ரிலீஸ் ஆனா நா சேலைய கட்டிக்குறேன்".
டேய் ரசிக குஞ்சுகளா. உங்காளு கையில வச்சு சண்ட போடுறது ஒரிஜினல் கத்தி இல்லடா. வெறும் அட்டக்கத்தி. இனியாவது திருந்துங்கடா.. "(எம் ஜி ஆர் கட்சியை விட்டு விலகும்போது திணமணி கார்ட்டூன்... எம் ஜி ஆர் அண்ணா படத்தை எடுத்துக்கொண்டு இனி இதற்கு இங்கு வேவையில்லை என்கிறார். கருணாநிதி பக்கத்தில் இருந்த மதுரை முத்துவை காட்டி"இந்த அண்ணா என்னை காப்பார் "என்பது போல இருந்தது. மதுரை முத்து அந்த அளவு செல்வாக்கானவர்)
எஸ்எஸ்ஆர்: "அன்றைய தினம் ராஜாதேசிங்கு படத்தில் பத்மினியுடன் நான் நெருங்கி நடிக்க கூடாது என எம்ஜிஆர் செய்த சூழ்ச்சிகளை நாடு மறக்குமா? "
(மறுநாள் #சோ தன் 'துக்ளக்' புத்தகத்தில் "எஸ்எஸ்ஆர் சார். நீங்களும் பத்மினியும் நெருங்கி நடிப்பதை எம்ஜிஆர் தடுத்தாரா? எப்பேர்ப்பட்ட துரோகம் இது. இதனால் இந்த நாட்டுக்கே பேராபத்து வந்துவிடுமே!! இதை இந்த நாடு மறந்தால் இந்த நாட்டுக்கு விமோச்சனம் ஏது?" என கிண்டலடித்தார்)
திண்டுக்கல் எம். பி. ராஜாங்கம் :" "எனதருமை நண்பர் எஸ்எஸ்ஆரை சினிமாவில் இருந்து விரட்டியதே இந்த எம்ஜிஆர் தான். எங்களை பகைத்துக் கொண்டதால் இனி எம்ஜிஆர் அரசியலில் மட்டும் அல்ல. சினிமாவிலும் வாழ முடியாது"...
இதே ராஜாங்கம் அந்த கூட்டத்தை முடித்து திண்டுக்கல் திரும்பிப் செல்லும்போது தான் மாரடைப்பால் உயிரிழந்தார். அதனால் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிறது. அதிமுக மாயத்தேவரை நிறுத்தி மாபெரும் வெற்றி பெற்று திமுக வேட்பாளர் பொன்முத்துராமலிங்கத்தை (வேட்பாளர் தேர்ந்தெடுத்தது மதுரை முத்து) டெபாசிட் இழக்க செய்தது. எந்த ராஜாங்கம் எதிர்த்தாரோ அவரே எம்ஜிஆரின் முதல் வெற்றிக்கு பிள்ளையார் சுழி போடுகிறார்.
கருணாநிதி எம் ஜி ஆர் செல்வாக்கு காரணமாக அதிமுக வென்றது என்பதை மறைக்க "மதுரை மாவட்ட தலைமை வேட்பாளர் தேர்வில் தவறு செய்து விட்டது". என மேயர் முத்து மீது பழிபோடுகிறார். முத்துவுக்கு கோபம் வருகிறது. "தேர்ந்தெடுத்த போது மறுப்பு சொல்லாமல் தோற்றவுடன் என் மீது பழி போட்டால் என்ன நியாயம் என பகிரங்கமாக கேட்டார். உடனே கருணாநிதி மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் மேயர் சொல்வதை கேட்க வேண்டாம் என செக் வைக்க நொந்து போன மேயர் முத்து எம் ஜி ஆரிடமே சரணடைகிறார். தலைவரும் முத்துவை கட்டித் தழுவி வரவேற்கிறார். அதிமுகவிலும் மதுரை முத்துவே மேயரானார். எஸ்எஸ்ஆரும் தன் மனைவி விஷயத்தில் கருணா நடந்து கொண்டதை பார்த்து மனம் நொந்து எம் ஜி ஆர் இடம் சரணடைகிறார். 1977 கழகம் வெற்றி பெற அதே மதுரைமணிநகரத்தில் மேயர் முத்து தலைமையில் கூட்டம். மேயர் முத்துவே இந்த தகவல்களை எல்லாம் கூறி "சென்ற கூட்டத்தில் இதே இடத்தில் நாங்கள் மூவருமே(ராஜாங்கம்,முத்து,எஸ்எஸ்ஆர்) எம்ஜிஆரை வாழ விட மாட்டோம் என முழங்கினோம். காலத்தின் கட்டளை படி நாங்க மூணுபேருமே எம்ஜிஆரிடம் சரணடைந்தோம்"
தர்மம் தலைகாக்கும் படத்தில் "நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்துவிடும்"என்ற எம்ஜிஆர் வார்த்தை இப்படி பலித்தது.
படித்தேன். பகிர்ந்தேன்...........
-
#காட்டாற்று #வெள்ளத்திற்கு #மணலால் #அணைகட்டமுடியுமா???
ஒரு மனிதரைப் பற்றி ஒரு புத்தகம் எழுதவேண்டுமென்றால் ஏதோ அவரின் ஒரு குணத்தையோ, கண்டுபிடிப்பையோ, தேசப்பற்றையோ, கொடைத்தன்மையையோ, வீரத்தையோ, அரசியலையோ, கவித்தன்மையையோ, நடிப்புத்திறனையோ... Etc... இப்படி ஏதேனும் ஒரிரு குணங்களைப் பற்றித்தான் எழுதமுடியும்...
ஆனால் மேற்கூறிய அனைத்து நற்குணங்களைப் பற்றி தனித்தனியாக நூல்கள் எழுத இயலுமென்றால் அதை, உலகிலுள்ள ஒட்டுமொத்த நற்குணங்களின் பிறப்பிடமாகத் திகழ்ந்த நம்ம வாத்தியாரைப் பற்றி மட்டும் தான் எழுதமுடியும்...
வாத்தியாரைப் பற்றி 1000 புத்தகங்களோ, அல்லது அதற்கு மேற்பட்ட புத்தகங்களோ எழுதலாம் என்று வரையறுப்பதெல்லாம் காட்டாற்று வெள்ளத்துக்கு மணலால் அணை கட்டுவது போலாகும்.
பொன்மனச்செம்மலைப் பற்றி எழுத ஆரம்பித்தால் பல புத்தகங்களாக எழுதலாம். ஆராய்ச்சி செய்தால் பல முனைவர் பட்டங்கள் வெல்லலாம்!
‘#புரட்சித்தலைவர், #பொன்மனச்செம்மல், #மக்கள்திலகம்’, #வாத்தியார்'! என்ற இவருக்குரிய முக்கிய பட்டங்களிலேயே இவருடைய மொத்தப் புகழையும் வாழ்க்கையையும் அடக்கிவிடலாம்!
பாலசுப்பிரமணியன்,
சென்னை!............
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*22/08/20அன்று சொன்ன*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------
பழம்பெரும் நடிகர்கள் எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா போன்றவர்கள் திரையுலகில் புகழின் உச்சியில் இருந்தாலும் கூட , தங்களுக்கான மக்களின் ஆதரவை திரட்டிக் கொண்டோ, அந்த ஆதரவை தக்க வைத்து கொள்வதற்காக பலவித மான வியூகங்கள் எதுவும் வகுக்கவில்லை . அவர்களெல்லாம் நடிகர்கள் என்ற நிலையில் மட்டுமே* இருந்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். நடிகராக இருந்ததோடு மட்டுமல்லாமல் ,நடிப்பு என்பது ஒரு தொழில், அந்த தொழில் மூலம் பலரோடு அறியப்பட வேண்டும்* . பலபேர் நம்மை அறிந்து கொள்வதால் நம்மீது பாசம் கொள்கிறார்கள் . அந்த பாசத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நான் சம்பாதிக்க வேண்டும் .அந்த சம்பாதித்ததை யெல்லாம் பலருக்கு தானங்கள், தருமங்கள் செய்ய வேண்டும் என்கிற வள்ளல் தன்மையை* கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனிடம் தான் கற்று அறிந்ததாக பல மேடைகளில் பேசியுள்ளார் .*
எம்.ஜி.ஆர். அவர்கள்* ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் நன்கு அறிமுகம் ஆகி இருக்கும்போது வெளியூருக்கு ரயிலில் 3 வது வகுப்பில் பயணம் செய்யும் போது*தனது அடர்த்தியான பாகவதர் கிராப் வைத்த தலைமுடி மூலம் தன்னை யாரும் அறிந்து கொள்ளாத வகையில் தலையையும், முகத்தையும் மறைத்தவாறு துணியால் மூடிக்கொண்டு அடக்க ஒடுக்கமாக இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார் .செம்பை பாகவதர் அவர்கள் ஏன் ஒரு கலைஞன் தன் முகத்தை மூடி மறைத்து ஓடி ஒளிந்து* பயணிக்க வேண்டும் கலைஞன் என்பவன் மக்களுக்கான சொத்து .மக்களோடு பழகினால்தான அவர்களுடைய ரசனை தெரியும் மக்களுடைய ஆதரவை பெற முடியும் நீங்கள் இப்படி ஓடி ஒளிந்து கொள்ள கூடாது .முகத்தை மறைத்துள்ள* துண்டை எடுங்கள் . நன்றாக உட்காருங்கள்*,மக்களிடம் நன்றாக பேசுங்கள் .இங்குள்ளவர்களை நன்றாக பாருங்கள். நீங்கள் பார்ப்பதால் அவர்கள் உங்களை பார்ப்பார்கள், பேசுவார்கள் .அதனால் ஏற்படும் சந்தோசம் இருக்கிறதே ,அந்த சந்தோசம் மக்களுக்கு தருபவராக நீங்கள் இருப்பீர்கள் என்று கூறி மக்களுடன் சகஜமாக பழகுங்கள்*என்று அந்த தயக்கத்தில் இருந்து விலகி, வெளியே வருமாறு செய்தவர் செம்பை பாகவதர் .
பொதுவாக ஒரு படத்திற்கு பெயர், தலைப்பு வைப்பது, நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுப்பது, வசன ஆசிரியர், ஒளிப்பதிவாளர் , எடிட்டர் ,கவிஞர்கள், இசை அமைப்பாளர் ஆகியோர் தேர்வு செய்யும் ஒவ்வொரு விஷயங்களிலும் எம்.ஜி.ஆர். தலையிடுவதாக குற்றச்சாட்டு இருந்தது என்று சொல்வார்கள். எம்.ஜி.ஆர். தலையிட்டார் .காரணம் .இவ்வளவு பெரும் பொருட்செலவில் நாம் தயாரிக்கும் படம் மக்களுக்கு சென்றடையும் போது ,ஏதாவது ஒரு வகையில்*அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை தரக்கூடிய**நல்ல கருத்துக்கள், நல்ல பாடல்கள் ,, படிப்பினைகள்,*.செய்திகள் இடம் பெற்றிருக்க வேண்டும் . வெறும் பொழுது போக்கு அம்சங்கள் மட்டும் இருந்தால் போதாது என்பதில் தீர்மானமாக இருந்தார் .* அதனால்தான் அவரது ஒவ்வொரு படமும் ஒரு பாட புத்தகமாக திகழ்கிறது .ஒரு நோயாளி படுக்கையில் இருந்தால் கூட அவரது படத்தை பார்த்ததும் எழுந்து உற்சாகமாக நடமாட முடிகிறது .
முன்பெல்லாம் அரசு விழாக்கள், நிகழ்ச்சிகள் துவங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைத்தட்டில் இருந்து ஒலிக்கும் . ஆனால் எம்.ஜி.ஆர். முதல்வரான பின்னர்* பள்ளிகளுக்கோ, கல்லூரிகளுக்கோ செல்லும்போது இசைத்தட்டை போட வேண்டாம் . இங்குள்ள மாணவ மாணவியரை சொந்த குரலில் பாட சொல்லுங்கள் என்று கூறி* ரசிப்பார் .* அதாவது தமிழ்த்தாய் வாழ்த்து பொறுத்தவரையில் மாணவ பருவத்தில் அவர்கள் சொந்த குரலில் பாடும்போது அந்த வாழ்த்து செய்தி அவர்களின் மனதில் நன்றாக பதியும், என்று அந்த வாழ்த்து செய்திக்கு*மதிப்பு அளித்தவர் எம்.ஜி.ஆர்.*
எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அவர் மலையாளி என்று பேசப்பட்டது .அவர் தமிழ் நாட்டை* ஆள விடக்கூடாது .நாட்டை விட்டு விரட்ட வேண்டும்*என்று எதிர்க்கட்சியினர் பேசினர்* அந்த நேரத்தில்*பத்திரிகை நிருபர்களுக்கு எம்.ஜி.ஆர். அளித்த பேட்டியில் என்னை மலையாளி என்று சொல்கிறார்கள் .இதை கேட்ட எனக்கு சிரிப்புத்தான் வருகிறது .* பஞ்சாபில் வாங்கிய மாடு ஒன்று, இங்குள்ள தமிழர்கள் வீட்டில் வளரும்போது இங்குள்ள புல்லை தின்று வாழ்கிறது .பால் தருகிறது .அந்த பசு மாடு பஞ்சாபில் சென்றா பால் கறக்கிறது*அதுபோல தான் இந்த ராமச்சந்திரன் .தமிழர்களூக்கான பசும்பால் தருவதுபோல்*இங்கு வாழ்கிறேன் .* அப்படி தமிழர்களுக்கு பயன்படும் ஒரு கருவியாக* உதித்தவர் எம்.ஜி.ஆர்.*
எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கும் முன்பு* அவருக்கு கொள்கை இல்லை.கோட்பாடு இல்லை .கட்சி நடத்தும் நிர்வாக திறமை இல்லை .அதனால்தான் கட்சி தொடங்க தயக்கம் காட்டுகிறார் என்று புகார்கள் எழுந்தன .* கட்சி ஆரம்பித்த பின்னர் வெளியான நேற்று இன்று நாளை படத்தில் ஆளும் கட்சியை சாடியவாறு கடுமையான வசனங்கள், பாடல்கள் இருந்தன . நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து என்ற பாடலில் ,ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட்ட பணத்திலே, தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்துவிட்டார் நகரசபையிலே .மக்கள்* நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்* தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்*ஊருக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார் .தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார் இந்த படத்தின் வசனங்கள், பாடல்கள் , தி.மு,க. கட்சியை பாதிக்கும் என்பதால் அப்போதைய முதல்வர் கருணாநிதி படத்திற்கு பலவிதமான இடையூறுகள் ஏற்படுத்தினார் . சயானி அரங்கில் வெள்ளித்திரை கிழிக்கப்பட்டது அரங்குகளில்* *டிக்கட் வாங்க நிற்பவர்கள் மீது கண்மூடித்தனமாக காவல்துறை தடியடி நடத்தப்பட்டது .சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டன .அரங்குகளை மின் இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்பட்டது .ஜெனெரேட்டர் மூலம் படங்கள் ஓடின . இந்த படத்தை குறிப்பாக பொதுமக்கள் பார்க்க கூடாது என்பதில் அரசு இயந்திரம் பல வழிகளில் முடுக்கி விடப்பட்டது .அனைத்தையும் மீறி அட்வான்ஸ் புக்கிங்கில் அரங்குகளில் முதல் இரண்டு நாட்களில் இரண்டு வாரங்களுக்கான டிக்கட்டுகள் விற்று தீர்ந்தன . சென்னை பிளாசா, மகாராணி அரங்குகளில் 105 நாட்களும், மதுரை சிந்தாமணி , நெல்லை பார்வதி அரங்குகளில் 119 நாட்களும் ஓடின . சுமார் 35 அரங்குகளில் 50 நாட்களும், 10க்கு மேற்பட்ட அரங்குகளில் 75 நாட்களுக்கு மேலும் ஓடி வசூல் சாதனை படைத்தது .இந்த விஷயத்தில் ஆளும் தி.மு.க.விற்கு முற்றிலும் தோல்வி ஏற்பட்டதோடு, இந்த படத்தின் வசனங்கள் பாடல்களால் ஆளும் கட்சிக்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது .
நேற்று இன்று நாளை படத்திற்கு தி.மு.க.கட்சியும், மாநில அரசும் ஏற்படுத்திய இடையூறுகள், பொதுமக்கள், ரசிகர்களை தாக்கியது,காயப்படுத்தியது குறித்து எம்.ஜி.ஆர். மிகவும் வருந்தினார் .* ஆனாலும் மனம் தளராமல் ஆளும் கட்சிக்கு எதிராக தன் கட்சி தொண்டர்களுக்கு விரைவில் நல்ல ஒரு விடிவுகாலம் அமையும் .ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என்று* *பொது கூட்டங்களில் எம்.ஜி.ஆர். முழங்கினார் .அதற்கு பொதுமக்கள் கூடிய திரளான கூட்டமே சாட்சி .எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபிறகு பல கூட்டங்களுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு தரப்படவில்லை .தொண்டர்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டனர் .சிலர் கொல்லப்பட்டனர் . இந்த தியாகிகளுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் .என்னையே* நம்பி கட்சியில் ஈடுபட்டுள்ள இந்த மாதிரி தொண்டர்களின் நலத்திற்காகவும், ஊழலை ஒழிக்கவும், பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி வெகுவிரைவில் அமையும் என்று சூளுரைத்தார் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் தொடரும்*
---------------------------------------------------------------------------------------
1.மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றது -தாயை காத்த தனயன்*
2.நாலு பேருக்கு நன்றி - சங்கே முழங்கு*
3.முகத்தை காட்டி காட்டி மூடி கொண்டது நியாயமா - முகராசி*
4.ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் -குடியிருந்த கோயில்*
5.ஒரு தாய் மக்கள் நாமென்போம்* - ஆனந்த ஜோதி*
6.நீங்க நல்லா இருக்கோணும் இந்த நாடு முன்னேற -- இதயக்கனி*
7.தாய் மேல் ஆணை , தமிழ் மேல் ஆணை - நான் ஆணையிட்டால்*
8.அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்* *- ரிக்ஷாக்காரன்*
9.ஒன்றே குலம் என்று பாடுவோம் - பல்லாண்டு வாழ்க .
-
மக்கள் திலகம் !
புரட்சித் தலைவர் !!
மக்கள் முதல்வர் !!!
MGR சிலை திறப்பு ...
புரட்சித்தலைவி அம்மா
தலைமையில் ,
கம்யூட்டர் நாயகன் பிரதமர் ராஜிவ் காந்தி சிலை திறந்தார் ...
அன்று பத்திரிகையில் ஒரு செய்தி ,
சிலை திறப்பு விழாவில் மக்கள் கடல் ,
75 வயது பெரியவர் மக்கள் கூட்டத்தை பார்த்து பேட்டி கொடுக்கின்றார் !
Had seen nothing like it ,
My Fifty Five years Long Political Innings ,
என்னுடைய 55 ஆண்டு கால அரசியல் வரலாற்றில்
இப்படிபட்ட மக்கள் கூட்டத்தை நான் என் வாழ்நாளில் பார்க்கவில்லை !
அப்பொழுது சிறியவனாக மக்கள் கூட்டத்தோடு நானும் வருகின்றேன் ,
நடந்து வருகின்றோம் மறைமலை அடிகளார் பாலம் வந்து சேர்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆனது ,
சிலை திறப்பு இடம் ,
ஸ்பென்சர் கார்னர் பக்கம் வருவதற்கு எவ்வளவு நேரம் கடந்து இருக்கும் ,
அந்த கூட்டத்தில் நான் (24-11-1990 ) பார்த்த காட்சி ,
தலைவரிடம் பேசுகிறேன் !
மன்னாதி மன்னனே !
மவுண்ட் ரோடா அது
இல்லை ! மக்கள் கடல் !
மன்னாதி மன்னனே !
உன் திருவருவ சிலை திறப்பு விழாவின் போது ,
மவுண்ட் ரோடா அது ,
இல்லை மக்கள் கடலா !
என்று வியக்கும் அளவில் இருந்தது ,
நீ என்ன அதிசய தலைவனோ !
எங்கள் தலைவியை இயக்குகின்ற இந்திர தலைவனோ !!
வாழையடி வாழையாய்
புகழினை பெற்றவரே !
நீ தானே அண்ணாவுக்கு உண்மையான உலகறிந்த பாரத் ரத்னா தம்பி !
கழகத்தை ஒப்படைத்து விட்டார்கள் உன் இதயக்கனி " யை நம்பி !!
அதனால் வாழ்கின்றனர் தமிழ் நாட்டில் சிலர் மனம் வெம்பி !!!
அவர் பெற்ற வெற்றி மக்கள் பெற்றது அன்றோ !
கொதிக்கின்றது கொடியவர்கள் நெஞ்சம் !
ஏற்றுகின்றார்கள் மனதிலே வஞ்சம் !
அதற்கா எங்கள் தலைவி மனம் அஞ்சும் !!
படைக்கின்ற , இனிமேல் படைக்க போகின்ற வெற்றிகள் தானே மிஞ்சும் !
புரட்சிதலைவா உங்கள் புகழ் இருக்கிற வரையில் , இனிமேலும் வெற்றிக்கு ஏது பஞ்சம் !!
என்று கூறி எங்கள் கண்களில் உதிர்ந்த நீரால் வங்க கடல் தாலாட்ட தூங்குவாய் பல்லாண்டு !
உங்கள் இதயக்கனி யின் கீழ் உங்கள் புகழ்பாடுவதே எங்கள் எஞ்சிய ஆண்டு !!
உறங்கும் திசையை நோக்கி வணங்குகிறேன்,
எங்கள் தலைவியை ஆசிர்வதியுங்கள் ,
அன்று எழுதிய
11 கட்டுரை தொடரும்,
மலரும் நினைவுகள்.........
-
எம்ஜிஆரிடம் அதிசய, மாந்திரிக சக்திகள் இருப்பதாக நம்பியவர்கள் ஏராளம். 'ஐயா, நான் நிஜமாகவே அவரைச் சாட்டையால் அடிக்கவில்லை; இது பாவனைதான்' என்று பலமுறை நம்பியார் விளக்கமளித்த போதும் ரசிகர்கள் ஏற்கவேயில்லை.
காட்சிப் படிமங்களும் வசனம் அல்லது பாடல் வரிகளும் எம்ஜிஆரின் பிம்பத்தைக் காவிய நாயகனின் நிலைக்கு உயர்த்தியதற்கான ஆகச் சிறந்த உதாரணங்களாக ‘நாடோடி மன்னன்’ படத்தில் வரும் கொள்கை அறிவிப்புகளையும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் ‘நான் ஆணையிட்டால்’ பாடலையும் சொல்லலாம். இதே உத்தியை அல்லது பாணியை ஒரு கட்டத்துக்கு பிறகான எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் காணலாம். ஆனால் தனது திரை பிம்பத்தைத் தன் நிஜ பிம்பமாக மக்கள் கருதுகிறார்கள் என்பதை ஏதோ ஒரு தருணத்தில் துல்லியமாக உணர்ந்த எம்ஜிஆர் அந்தப் பிம்பத்தை வலுப்படுத்தும் முயற்சிக்காத் தன் கலை வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தார். ‘பெற்றால்தான் பிள்ளையா’ போன்ற படங்கள் காணாமல்போயின.
வேட்டைக்காரன், காவல்காரன், விவசாயி, தொழிலாளி, ரிக் ஷாக்காரன், ஊருக்கு உழைப்பவன் என்று அவர் படங்கள் திரை, நிஜ பிம்பங்களுக்கிடையிலான வித்தியாசங்களை அழிக்கும் வெளிப்பாடுகளாக மாறத் தொடங்கின.
இந்த முயற்சியில் காட்சிகளையும் வசனம் மற்றும் பாடல்களையும் பயன்படுத்தும் கலையில் தனிப்பெரும் திறன் வாய்ந்தவராக எம்ஜிஆர் உருவெடுத்தார். சிவாஜியின் பாடல்களில் நாம் கண்ணதாசனையோ, வாலியையோ உணர்வோம்.
எம்.ஜி.ஆரின் படல்களில் எல்லாமே எம்.ஜி.ஆராக மாறியிருக்கும். “குயில்கள் பாடும் கலைக்கூடம், கொண்டது எனது அரசாங்கம்” என்பது கவிஞனின் கனவு. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.
திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும் எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம். திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்ஜிஆரைச் சாகும்வரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது.
திரைப்படம் என்பது பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலை. பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக்கூடிய அதன் தன்மையை எம்ஜிஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை.
தமிழ் திரை ரசிகர்களை பொறுத்தவரை தங்கள் வாழ்வின் யதார்த்தத்தை வெளிப்படுத்திய நடிகனைவிட அந்த யதார்த்தத்தை மறக்கச் செய்யும் 'ஹீரோயிச' போதையை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆரையே அதிகம் விரும்பினர். அதனால்தான் அவர் பொதுவாழ்வில் நுழைந்த போது அவருக்கு அமோக ஆதரவு அளித்தனர். இன்றும் எம்.ஜி.ஆர். பாணியை பின்பற்றும் ரஜினி, விஜய் போன்ற ஆக் ஷன் ஹீரோக்களுக்கு அரசியலில் அதிக வாய்ப்பிருப்பதற்கும் சிவாஜியின் பாதையில் செல்லும் கமல் போன்றவர்களுக்கு ரசிகர்கள் அதிகமிருந்தும் அரசியலில் 'ஸ்கோப்' இல்லாமல் இருப்பதற்கும் இதுவே காரணம்.
ரசிகர் மன்றம்
முதல் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் தமிழ் பிராமணரான கல்யாண சுந்தரம் என்பவரால் 1954-ஆம் வருடம் துவக்கப்பட்டது.
தன்னுடைய வாழ்க்கையின் ஆரம்பத்தில் சினிமா பாடல் புத்தகங்களை திரையரங்குகளுக்கு முன்னால் விற்றுக் கொண்டு, சிறு, சிறு வேலைகளைச் செய்து வந்தவர் எம்ஜிஆர். பின்னர் 136 திரைப்படங்களில் நடித்து உலகத்தில் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களை பெற்றவர்களுள் ஒருவராக ஆனார். அகில உலக எம்ஜிஆர் ரசிகர் மன்றத்திற்கு 10,000 கிளைகள் தமிழகம் முழுவதிலுமாக இருந்து செயல்பட்டன. கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், செங்கோட்டையன், அண்ணா நம்பி, திருச்சி சௌந்தரராஜன் முதலிய அ.இ.அ.தி.மு.க தலைவர்கள் தங்களுக்கென அரசியல் முக்கியத்துவத்தை ரசிகர் மன்றம் மூலமே பெற்றார்கள். எம்.ஜி.ஆரே பொது வெளியில் தோன்றுகையில் “ரசிகர் மன்றங்களும் , கட்சியும் வேறு வேறு அல்ல! என்றார்
Courtesy
DINAMANI... Newspaper......
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*23/08/20 அன்று அளித்த தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சி இதுவரை எட்டு* திக்கிலும் இருந்து பாராட்டுக்களை கொண்டுவந்து குவித்து கொண்டிருக்கிறது .ஒவ்வொரு நாளும் ரசிக பெருமக்கள் தொலைபேசி ,குறுஞ்செய்திகள் மூலமாகவும், இவ்வளவு காலத்திற்கு பின்னால் கடிதங்கள் மூலமாகவும் தங்களுக்கு தெரிந்த பல்வேறு* தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகிறார்கள் .*
ஒரு மனிதன் உயிருடன் இருக்கும்போது அவனுடைய மன்றங்கள் மூலம் எப்படி, எவ்வளவு பாராட்டுக்கள் கிடைக்கும் என்பது பெரியதல்ல .ஒரு மனிதன் மறைந்த பிறகு* என்னையே நான் எடுத்துக் கொள்கிறேன் , நான் மறைந்த பிறகு ,எத்தனை அமைப்புகள், மன்றங்கள்,பொதுமக்கள்* என்னை பற்றி நினைக்கின்றன ,நற்பணிகள் செய்து கொண்டிருக்கின்றன* என்பதை பொறுத்து* தான் நான் வாழ்ந்ததற்கு ஏதாவது நியாயமான காரணம் இருந்திருக்கிறது என்று நினைப்பதற்கு அது உதவியாக இருக்கும் . -தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பேசிய கருத்துக்கள் .
திருச்சி மிளகு பாறையில் உள்ள திரு.மஜீத் அவர்கள் அதாவது* மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆர். அரே மஜீத் சாய் லாவோ என்று கூறுகிறாரே அந்த பெயரை கொண்ட மஜீத் அவர்கள் சகாப்தம் நிகழ்ச்சியின் 100 வது தொடர் அன்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருஉருவச்சிலைக்கு* மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார் .
கள்ளக்குறிச்சியில் இருந்து ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு.சங்கரன் ,எம்.ஏ.,பி.இ டி ., மற்றொரு ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்* திரு.சேரன் , எம்.ஏ. பி.இ டி ,**திரு.டி.கோபால் ,எம்.ஏ. ,திரு.ராமலிங்கம் எம்.ஏ. பி.இ டி.திரு.கோ.விஸ்வநாதன் மற்றும் எம்.ஜி.ஆர். பக்தர்கள் ,இந்த தபால் அட்டையை அனுப்பி உள்ளார்கள் .* நீண்ட காலத்திற்கு பிறகு இந்த தபால் அட்டையை காண்பது என்பது இந்த டிஜிட்டல் யுகத்தில் சந்தோசமான விஷயம் . அந்த அளவிற்கு எம்.ஜி ஆர் மீது அளவற்ற அன்பும், பாசமும், மதிப்பும், மரியாதையும் அவர்கள் வைத்துள்ளார்கள் என்பது தெரிகிறது .* *எம்.ஜி.ஆர். பாமரர்களின் கடவுள் என்றெல்லாம் பல வகைகளில்* விமர்சனம் தெரிவிக்கப்பட்டுள்ளது .. இவர்களெல்லாம் சாதாரண மக்கள் அல்ல. ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் .* இவர்கள் எத்தனை மாணவர்களை உருவாக்கி இருப்பார்கள் .அதில் எத்தனை மாணவர்கள் இன்றைக்கும் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொண்டிருப்பார்கள் என்பதற்கு இந்த கள்ளக்குறிச்சியில் உள்ள ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களே உதாரணம் .
பொதுவாக மேடைகளில் பேசுபவர்கள் எதுகை, மோனையிலும் ,அடுக்கு மொழியிலும் பேசுவார்கள் .ஆனால் எம்.ஜி.ஆர். அப்படி எந்த திட்டமுமில்லாமல்*தனக்கு அந்த நேரத்தில் தோன்றியதை பேசுவார் .* அப்படியான உண்மை என்பது மக்களை சென்றடைந்தது என்பது 1973ல் திண்டுக்கல் தேர்தலில் அவர் மேற்கொண்ட பிரச்சாரமே சாட்சி .அந்த ஒளிப்பதிவு இன்றைக்கு கூட சமூக வலை தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது .* இன்றைக்கும் எம்.ஜி.ஆர். பேசப்பட்டு வருகிறார் என்பது அந்த சாதனை வாழ்க்கைக்கு சாட்சியாக உள்ளது .**
பேரறிஞர் அண்ணா அவர்கள் தம்பி வா, தலைமை ஏற்க வா என்று நாவலரை அழைத்தது போல அழைக்க* முடியாவிட்டாலும் , நண்பரே வா, என் உறவே வா, என் ரத்தத்தின் ரத்தமே வா என்று நான் அழைக்க தயங்க மாட்டேன் . நான் நிச்சயமாக சொல்லுவேன் . நாங்கள் தனித்தன்மையாக தேர்தலில் போட்டியிட்டு* மக்களின் பேராதரவை பெற்று நாங்கள் சுயமாக அமைச்சரவை அமைக்க கூடிய அளவிற்கு நாங்கள் பெரும்பான்மை பலத்தை பெறுவதற்கு யார் ஒத்துழைப்பு தருகின்றார்களோ .அந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்து கொள்வேனே தவிர, நிச்சயமாக எங்கள் உரிமையை நாங்கள் விட்டு கொடுக்க மாட்டோம் பிறர்க்கு சந்தேகம் வருகிறது . பேசிக் கொள்கிறார்கள் எம்.ஜி.ஆர். ஒருவேளை வீட்டுக் கொடுத்திருப்பார் . அதனால் கூட்டு சேருகிறார்கள் என்று. அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன் .பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு பிள்ளையாகிய நான்*விவரம் அறியாதவன் அல்ல. அண்ணா தி.மு.க.வை அரியணை ஏற்றியபிறகு தான் நான் ஒய்வு பெறுவேனே* தவிர, அதுவரையில் எனக்கு ஒய்வு என்பது இல்லை .அண்ணா தி.மு.க ஆட்சியின் மூலம் அண்ணாவின், லட்சியங்களை, கொள்கைகளை நிறைவேற்றுவதில்தான் நான் சந்தோசம் அடைவேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் . சிலர் நினைக்கின்றார்கள் எம்.ஜி.ஆரை ஒழித்துவிட்டால் அண்ணா தி.மு.க. இருக்காது .அவர்கள் பைத்தியக்காரர்கள். இந்த ராமச்சந்திரன் இறந்த பிறகும் ஆயிரம் ஆண்டு காலம்*அண்ணா தி.மு.க. உயிர்ப்புடன் இருக்கும் அண்ணாவின் உருவம் ,அந்த கருப்பு சிவப்பு கலந்த கொடியின் மத்தியில் வெள்ளை நிறத்தில் பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கும் . எங்களுக்கு வாய்த்த தொண்டர்கள் அப்படிப்பட்டவர்கள்*--எம்.ஜி.ஆர். பொது கூட்டத்தில் பேசிய கருத்துக்கள் ..
எம்.ஜி.ஆர். திரைப்பட துறையில் மிக பிரபலமாக இருந்த நேரம் . மதுரையில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பி வரும்போது செங்கல்பட்டில்** ஒரு பேருந்து நிறுத்தம் அருகில் ஒரு காவலர் நின்று கொண்டிருக்கிறார் .எம்.ஜி.ஆர் காரை நிறுத்த சொல்லி , அந்த காவலரை காரில்* ஏறிக் கொள்ளுங்கள் .உங்கள் இருப்பிடம் அருகில் இறக்கிவிடுகிறேன் என்றார் . வேண்டாம் ஐயா ,நான் பேருந்தில் சொல்கிறேன் என்று காவலர் கூற, பரவாயில்லை .நீங்கள் வாருங்கள் என்று சொல்லி காரில் ஏற்றிக்* கொள்கிறார் . சிறிது தூரம் சென்றதும்,*எம்.ஜி.ஆர். கேட்கிறார் காவலரிடம் ,நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா என்று . தெரியவில்லை என்கிறார் காவலர் . நீங்கள் எங்கு வேலை பார்க்கிறீர்கள் என்று எம்.ஜி.ஆர். கேட்க, செங்கல்பட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிகிறேன் என்றார் .அப்படி என்றால் ஏன் நீங்கள் சொந்தமாக வாகனம் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை .என்று கேட்க ,நான் ஒரு சைக்கிள் வைத்துள்ளேன் .இன்று அது பஞ்சர் ஆகிவிட்டது .வேறு வழியில்லாமல் வேறு வாகனத்தை பிடித்து பணிக்கு சென்று திரும்புகிறேன் .என்றார் காவலர் .அதற்குள் அவரது இருப்பிடம் வந்துவிடுகிறது . நான் இறங்கி கொள்கிறேன் என்கிறார் காவலர் . ஆனால் எம்.ஜி.ஆர். பொறுங்கள் ,உங்கள் வீட்டுக்கு அருகில் விட்டுவிடுகிறேன் என்கிறார் . ஆனால் காவலர் அதை மறுத்து, வேண்டாம் ஐயா ,இந்த ஊரில் உள்ளவர்கள் பார்த்தால் என்னை தவறாக நினைப்பார்கள் நான் யாருடைய காரிலும், யார் வாகனத்திலும் பயணிப்பதில்லை .காவல்துறையில் உள்ள என்னை பற்றி தவறான அபிப்பிராயம் வந்து விட கூடாது .நான் இங்கேயே இறங்கி கொள்கிறேன் . நன்றி ஐயா என்று சொல்லி இறங்கிவிடுகிறார் .இந்த காலத்திலும் இப்படி ஒரு காவலரா என்று ஒரு கணம் யோசித்து எம்.ஜி.ஆர். புறப்பட்டு சென்னை வந்து சேருகிறார் . இந்த சம்பவத்தால் எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சியும் இல்லை மகிழ்ச்சியும் ஏற்படவில்லை . மறுநாள் செங்கல்பட்டு காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த காவலர் பற்றி* பெயரை சொல்லி*விசாரிக்கிறார் .அவர் இங்குதான் பணிபுரிகிறார் என்றவுடன் .நான் ராமாவரம் தோட்டத்தில் இருந்து எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன் .அவரை என் வீட்டில் வந்து சந்திக்க சொல்லுங்கள் என்கிறார் .* காவல் நிலையத்தில் உள்ளவர்கள் பரவசம் அடைந்து , அந்த காவலரிடம் விஷயத்தை சொல்லி ,அவசியம் ராமாவரம் தோட்டம் சென்று முதலில் எம்.ஜி.ஆர். அவர்களை பார்த்துவிட்டு வா என்று சொல்லி அனுப்புகிறார்கள் .காவலரும் வந்து சந்திக்கிறார் .இந்த காலத்தில் இப்படியும் ஒரு காவலரா எனக்கு ஆச்சர்யமாக* உள்ளது .உங்களுக்கு என்ன உதவி தேவை,சொல்லுங்கள் செய்கிறேன் என்றார் எம்.ஜி.ஆர். ஆனால் காவலர் எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் அழைத்தீர்கள் என்பதற்காகத்தான் வந்தேன் .அது மட்டுமல்ல , நீங்கள் ஒரு நடிகர் ,சட்டமன்ற உறுப்பினர் , ஆளும் கட்சியின் மிக முக்கிய பிரமுகர் என்று .சொன்னார்கள் அதனால் மரியாதை நிமித்தம் வந்து சந்தித்தேன் .நன்றி என்று சொல்லி புறப்பட்டு சென்றார் . இந்த சம்பவத்தை மனதில் வைத்து தான் எம்.ஜி.ஆர். முதல்வராகியதும் காவலர் வீட்டு வசதி வாரியத்தை உருவாக்கினார் .
எம்.ஜி.ஆர். தனது கட்சி வேட்பாளர் ஒருவரின் வேட்பு மனுவை வாபஸ் பெற செய்வித்தவர் எதற்காக, யாருக்காக என்றால் .1967ல்* பேரறிஞர்*அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சிபீடத்தில் அமர்ந்தபோது அண்ணாவுக்கு முதல்வராக பதவி ஏற்க பதவிப்பிரமாணம் செய்து வைத்தவர் பார்வார்டு பிளாக் கட்சி தலைவர் மூக்கையா தேவர் . 1957 முதல் 1977 வரை தொடர்ந்து உசிலம்பட்டி சட்ட மன்ற தொகுதியில் வெற்றி பெற்றவர் மூக்கையா தேவர் .1977ல் உசிலம்பட்டி தொகுதியில் அண்ணா தி.மு.க. சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் . அந்த தொகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக வெற்றி பெற்று வந்தவர் மூக்கையா தேவர் என்பது மட்டுமின்றி, நான் யார் பெயரில் கட்சி நடத்துகிறேனோ, கட்சி கொடியில் அவரது உருவத்தை* வைத்துள்ளேனோ, அந்த அண்ணாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தவர் மூக்கையாத்தேவர் .எனவே இந்த தொகுதியில் அவருக்கு எதிராக* அ.தி.மு.க போட்டியிடுவது சரியல்ல என்று அரசியலில் ஒரு நிலைஎடுத்து* ஆரம்பித்து வைத்தவர் எம்.ஜி.ஆர்.*
பாண்டிச்சேரி அஜந்தா அரங்கு அருகில் உள்ள பஜார் தெருவில் கடைகளுக்கு அருகே கூட்டி பெருக்கி சுத்தம் செய்து கோலமிடும் பணியை செய்து வந்தார் ஒரு வயதான மூதாட்டி .நான் வறுமையில் உள்ளேன் . வாழ்க்கையை நடத்துவது கஷ்டமாக உள்ளது . எனக்கு குழந்தைகள் கிடையாது என்று ஒரு கடிதம் எழுதுகிறார் எம்.ஜி.ஆருக்கு .இதை அறிந்த எம்.ஜி.ஆர். தன் உதவியாளர் மூலம்*மாதாமாதம் ரூ.100/- உதவித்தொகை அனுப்பி வந்தார் . இதை அந்த மூதாட்டி*தான் பணிபுரியும் கடைகளில் சொல்லி மகிழ்ந்தார் .* அது முதல் அந்த பகுதியில் அந்த மூதாட்டி எம்.ஜி.ஆர். அம்மா என்று அழைக்கப்பட்டு பிரபலமானார் .பாண்டி அஜந்தா அரங்கில் எம்.ஜி.ஆர். நடித்த படத்தின் 100 வது நாள் விழா நடக்கிறது .இதை அறிந்த அந்த மூதாட்டி தனக்கு எம்.ஜி.ஆர். அனுப்பும் மணி ஆர்டர் ரசீதை காட்டி ,என்னை எப்படியாவது எம்.ஜி.ஆர். வரும்போது தயவுசெய்து அறிமுகம் செய்து வைய்யுங்கள் . நான் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று அரங்கு மேலாளரை கேட்டு கொள்கிறார் .விழா நாளன்று*அரங்கு மேலாளர் எம்.ஜி.ஆரிடம் நீங்கள் மாதாமாதம் அனுப்பும் பணம் பெறும் மூதாட்டி ஒருவர் உங்களை காண விருப்பப்படுகிறார் என்று சொன்னதும் எம்.ஜி.ஆர். வர சொல்கிறார் . அந்த மூதாட்டி தான் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தில் இருந்து ஒரு பெரிய மாலை வாங்கி வந்து எம்.ஜி.ஆர். கழுத்தில் அணிவித்து மகனே என்று உருகி போனார் .* பாண்டிச்சேரியில் மட்டுமல்ல .தமிழ்நாட்டில் பல நகரங்களில், கிராமங்களில் பல எம்.ஜி.ஆர். அம்மாக்கள் அந்த காலத்தில் உருவாகி*இருந்ததாக தகவல்கள் சொல்லப்படுகிறது .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.ஒன்றும் அறியாத பெண்ணோ* - இதயக்கனி*
2.எம்.ஜி.ஆர்.-சிறுவன் கமல்ஹாசன் உரையாடல் - ஆனந்த ஜோதி*
3.போலீஸ் அதிகாரியாக* எம்.ஜி.ஆர். -என்கடமை*
4.சிறை* துறை அதிகாரியாக எம்.ஜி.ஆர்.- பல்லாண்டு வாழ்க*
5.எம்.ஜி.ஆர். - தங்கவேலு உரையாடல்* - நம் நாடு*
6.நான் உங்கள் வீட்டு பிள்ளை - புதிய பூமி*
7.தாயில்லாமல் நானில்லை - அடிமைப்பெண்*
-
இலங்கை நாட்டில் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் தான் அதிக அளவில் 100 நாட்களை கடந்து சாதனையை பெற்றுள்ளது ஆனால் மற்ற நடிகர்களின் திரைப்படங்கள் அப்படி ஓடிய வரலாறுகள் கிடையாது. 1950 முதல் 1977 வரை மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் தான் அதிகமாக கிட்டத்தட்ட 35 திரைப் படங்கள் 100 நாட்களை கடந்து சாதனையை பெற்றுள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் திரைப்படங்கள் பெரும்பாலும்*
1967 வரை எந்தப் படம் எப்படி ஓடியது என்பது எந்த ஒரு விபரமும் விளம்பரமும் சாதனையும் இல்லை என்பது முக்கியமானதாகும்.
குறைந்த வசூலை காண்பித்து அதன் மூலம் ஓடிய திரைப்படங்களை 100 நாள், 200 நாள் என மார்தட்டி தம்பட்டம் அடிக்கிறார்கள்.
*உலகம் சுற்றும் வாலிபன் ஏற்படுத்திய வசூலை எந்த சிவாஜி கணேசனின் திரைப்படமும் வென்றதாக சரித்திரமில்லை.*
தில்லானா, சிவந்தமண், சவாலே சமாளி, வசந்த மாளிகை, பட்டணமா, ராஜா, எ.தங்க ராஜா,* தங்கப்பதக்கம், அவன் தான் மனிதன், உத்தமன், தீபம்,*
அ.ஒரு கோயில்* உட்பட
12 படங்கள் தான்*
1977 வரை ஒடியுள்ளது.
ஆனால் மக்கள் திலகத்தின் திரைப்பட வரிசையில்*
1965 முதல் 1977 வரை கிட்டத்தட்ட*
16 திரைப்படங்கள் 100 நாட்களை கடந்து சாதனையை பெற்றுள்ளது.*
எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், காவல்காரன், ஒளிவிளக்கு, அடிமைப்பெண், நம்நாடு, மாட்டுக்கார வேலன்,*
நல்ல நேரம், இதயவீணை, ராமன் தேடிய சீதை, உலகம் சுற்றும் வாலிபன், இதயக்கனி, நாளை நமதே, நீதிக்கு தலைவணங்கு, ஊருக்கு உழைப்பவன், மீனவ நண்பன் ஆகிய* படங்கள் 100 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் பல படங்கள் ஓடியதாக அவர்களே விளம்பரத்தை தயார் செய்து போலியாக வெளியிடுகிறார்கள் திரிசூலம் படம் இலங்கையில் திரையிடவே இல்லை. அந்தப் படம் வெள்ளிவிழா கூறியதாக தகவல் கொடுக்கிறார்கள். இப்படி பல படங்களை கோல்மால் வித்தை காண்பித்து பொய் சொல்லி பதிவிடுகிறார்கள்....
இலங்கையில் திரையிடாத திரிசூலம் இரண்டு தியேட்டரில் வெள்ளிவிழா ஒடியதாக தகவல் போட்ட கணேசன் ரசிகனின் ஜகதால வித்தைகள்.....
இப்படியெல்லாம் பொய்யை போட்டு. ... மாற்று நடிகர் ... ...ன் க்கு என்ன மோசடியான புகழ் சேர்க்க போகிறார்கள்?!..
இலங்கை திரைப்பட மோசடி மகா ஊழல்கள்* ஆகும்.............
-
இலங்கை புரட்சித்தலைவரின்
உலகம் சுற்றும் வாலிபன் படைத்த வசூல்கள்..... வெல்ல முடியாத ஒரே காவியமாக திகழ்ந்தது......
கொழும்பு - கெப்பிட்டல்
203 நாள் : 9,84,588.75
கிங்ஸிலி 40 நாள்
வசூல் : 2,03,545.50
ட்ரியோ 35 நாள்
வசூல் : 1,69,185.75
கொழும்பில் மட்டும் முதல் ரவுண்டில் பெற்ற
278 நாள் ஒடி முடிய வசூல் :13,57,289.75
அடுத்து.....
யாழ் நகரில்
மனோகரா 80 நாள்
வசூல் : 3,01,351.75
ஸ்ரீதர் 48 நாள்
வசூல் : 1,56,281.70
யாழ் நகரில் பெற்ற
128 நாள் : 4,57,633.45
அடுத்து...
மட்டுநகர் விஜயா
116 நாள் ஒடி சாதனை.
திருமலை - சரஸ்வதி
72 நாட்கள் ஒடியது.
கட்டுகஸ்தோட்டா
நியூசிகீரி - 63 நாள்
வவுனியா
ராயல் - 57 நாள்
அக்கரைபற்று
சாரதா - 50 நாள்
கல்முனை
தாஜ்மகால் 43 நாள்
தெகிவளை
ரீயோ ...36 நாள்
மாணிப்பாய்
வெஸ்லி ....31
சங்காளை
சாந்தி....40 நாள்
சாவகச்சேரி
வேல்......23 நாள்
உலகம் சுற்றும் வாலிபன் இலங்கையில் முதல் ரவுண்டில் மட்டும்
25 லட்சத்தை கடந்து வசூலில் ...... சாதனை
நன்றி : திரு டேவிட்
யாழ் - பிரான்ஸ்
உரிமைக்குரல் மலர்
(1976 - 1977)
தகவல் பதிவு
UR.
உங்கள் பார்வைக்கு..
வ.மாளிகை
கொழும்பு - 250 நாள்
கெப்பிட்டல் : 6,56,858.00
பிளாசா 75 நாள்
வசூல் : 2,89,058.00
யாழ்நகர்
வெலிங்டன் 78 நாள்
லிடோ 28 நாள்
மொத்தம் 116 நாள்
இதை தான் அந்த ரசிகனுங்க பொய்யாக
பிளாசா 175
வெலிங்டன் 200
லிடோ 100 என போடுகிறாங்க....
நம்பர் ஒன் பிராட் (fraud) க......ரசிகன்
கனடா ..என்ற சி....ன் ஆகும்.....
-
புரட்சித் தலைவர் நடித்து முதலில் ‘லலிதாங்கி’ என்ற படத்தை கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் தயாரித்தார். ஆனால், பெண்கள் எல்லாரும் விபச்சாரிகள் என்று கதாநாயகன் சொல்வது போல கதை அமைப்பு இருந்ததால் அதில் நடிக்க புரட்சித் தலைவர் மறுத்துவிட்டார். இதை புரட்சித் தலைவர் பேட்டியில் தெரிவித்துள்ளார். உடனே, அந்தப் படத்தை ராணி லலிதாங்கி என்று பெயரை மாற்றி சிவாஜி கணேசனை நடிக்க வைத்து வெளியிட்டனர். சிவாஜி கணேசனுக்கு பணம்தான் முக்கியம், வேறு எந்தக் கொள்கையும் கிடையாது என்பது தெரிந்ததே. புரட்சித் தலைவர் நடித்த படத்தில் தான் நடிக்கிறோமே? நீங்கள் நடித்து பாதியில் நிற்கும் படத்தில் நான் நடிக்கலாமா? என்று மரியாதைக்குக் கூட தலைவரிடம் அவர் அனுமதி கேட்கவில்லை. படம் வந்தால் போதும், பணம் வந்தால் போதும் என்ற கொள்கையின்படி ராணி லலிதாங்கி படத்தில் சிவாஜி கணேசன் நடித்தார். பெண்களை விபச்சாரிகள் என்றும் வசனம் பேசுவார். கடைசியில் அந்தப் படமும் ஊத்திக் கொண்டது.
சிவாஜி கணேசன் மாதிரி கொள்கைகளை விட்டுக் கொடுத்து பணத்துக்காக புரட்சித் தலைவர் நடித்திருந்தால் பன்றி குட்டி போடுவது போல 300 படங்கள், 400 படங்களில் நடித்திருப்பார். ஆனால், கொண்ட கொள்கைக்காக படம் போனாலும் பரவாயில்லை வருமானம் வராவிட்டாலும் பரவாயில்லை என்று இதுபோன்ற படங்களை தவிர்த்தார். நடிப்பது தொழிலாக இருந்தாலும் பணத்துக்காக கண்டபடி நடிக்காமல், தன் படங்களில் நல்ல கொள்கைகளை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று செயல்பட்ட கொள்கைக் குன்று புரட்சித் தலைவர்..........
-
#இவர்கள் #எதிர்காலத்தூண்கள்
தமிழக முதல்வர் மக்கள்திலகம் கோட்டைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்...
போகும் வழியில் ராணி மேரிக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவியர் கூட்டம்...
டிரைவரிடம் சொல்லி தனது காரை அவர்களருகே நிறுத்துகிறார்... மாணவிகளும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் இன்பஅதிர்ச்சியில் உறையும் போதே...!
'என்ன கூட்டம் இங்கே? 'என முதல்வர் கேட்க...அங்கிருந்த மாணவிகள்...
'ரொம்ப நேரமா பஸ்ஸே வரலை சார்' எனச்சொல்ல...
உடனே முதல்வர், தனது உதவியாளரை அழைத்து, 'இப்ப உடனே இங்க வந்தாகணும்' னு சொல்ல, உதவியாளர் பல்லவன் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரை வாக்கிடாக்கியில் தொடர்பு கொண்டு விஷயத்தைக் கூறுகிறார்.
பேருந்து வரும் வரை மாணவிகளுடன் ரோட்டிலேயே நின்று கொண்டு உரையாற்றிக்கொண்டிருந்தார் நம்ம வாத்தியார்...
அடுத்த பத்து நிமிடங்களிலேயே மூன்று பஸ்கள் ஒன்றாக வந்ததும்... மாணவரியரும், பொதுமக்களும் வாத்தியாருக்கு நன்றி சொல்லியும் விசிலடித்தும் தங்களின் நன்றிகளைத் தெரிவித்தனர்...
முதல்வரின் கார் கிளம்பியது...உதவியாளர் தயங்கித் தயங்கி எம்ஜிஆரிடம் கேட்டார்...'ஐயா! நீங்க காரிலேயே உட்கார்ந்திருக்கலாமே! வெயிலில் நின்று அம்மாணவியருடன் பேசிக்கொண்டிருந்தீர்களே...ஏன் ? ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா ???
அதற்கு புரட்சித்தலைவர், ' இவர்கள் தான் நாட்டின் எதிர்காலத்தூண்கள்... நாளை இவர்களில் பலர் உயரதிகாரிகளாக ஆகலாம்...ஒரு பிரச்சனை வரும்போது தானே அதை முன்னின்று அதை சமாளிக்கணும்...அதற்கு நாம் தான் உதாரணமாக இருக்கவேண்டும்...
மேலும் நான் அவர்களில் ஒருவராக நின்று பேசும்போது மக்களுக்கும், முதல்வருக்குமுள்ள இடைவெளி அகலும்...பிரச்சனகளை நேரடியாக அறிந்துகொள்ள எனக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும்...என்றார்...
வாத்தியாரின் பதிலில் உறைந்தது அந்த உதவியாளர் மட்டுமல்ல...நாமும் தான்............
-
1963 மே 10 ந்தேதி வெளியான வெற்றிப் படம்தான் r r பிக்சர்ஸ் தயாரிப்பான "பெரிய இடத்துப் பெண்'. அந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகமான வசூலை குவித்த படம் இதுதான். . அருமையான கிராமிய கதையும் மேல் நாட்டுப் பாணியையும் சரியான அளவில் கலந்து அதற்கு அருமையான வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுத ராமண்ணாவின் சிறப்பான நேர்த்தியான இயக்கத்தில் வெளிவந்து 100 நாட்கள் ஓடி வெற்றி கண்ட படம்.
கோயிலில் சம உரிமையை நிலை நாட்ட தலைவர் பேசும் வசனம் ஏழை மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது.
சரோஜாதேவியின் கோபமான வசனங்கள் கோபத்தை உண்டு பண்ணினாலும் பின்னர் அவரை அடக்கும் விதம் மக்களை வெகுவாக கவர்ந்தது. M.r.ராதா திமிர், ஜாதி வெறி பிடித்த பணக்காரனாக வருவார். அவர் வசனத்தை
டெலிவரி செய்யும் விதம் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்.
பாடல்களை பொறுத்தவரை ராமண்ணா படங்களுக்கு மெல்லிசை இரட்டையர்கள் போடும் மெட்டு காலத்தை கடந்தும் கதை பேசுகிறது.
நாகேஷின், படத்தை ஒட்டிய காமெடி
ரசிக்கும்படி அமைவதுடன் படத்தின் முக்கியமான திருப்பத்திற்கும் காரணமாக இருப்பது சிறப்பானது.
'அன்று வந்ததும் அதே நிலா' பாடலுக்கு எம்ஜிஆர் ஆடும் நடனம் மேல் நாட்டு கலைஞர்களையும் மிரள வைக்கும். தியேட்டரில் கரகோஷம் அடங்க நெடுநேரம் ஆகும். 'பாரப்பா பழனியப்பா' பாடலுக்கு எம்ஜிஆர் மாட்டுவண்டி ஓட்டும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். 'கட்டோட குழலாட' பாடலுக்கு கிராமத்து பெண்களின் கனவுகளையும் அவர்கள் அத்தை மகன் மீது வைத்திருக்கும் அன்பையும் அத்தான் அவர்களிடம் உரிமையோடு சொல்லாடும் விதமும் அருமையிலும் அருமை. 'அவனுக்கென்ன தூங்கி விட்டான்' போன்ற தத்துவப் பாடல்கள் புண்பட்ட மனதிற்கு இதமாக ஒத்தடம் கொடுப்பது போல இருக்கும்.
வண்டி மாடுகளை தலைவர் குளிப்பாட்டும் விதம் ஆகா என்ன அருமையான காட்சி அதை காண இரண்டு கண்கள் போதாது. எடுத்த
சபதத்தை முடிக்கும் பாங்கு வெகு நேர்த்தியானது. T r. ராஜகுமாரி
தலைவருக்கு அக்காவாக தலைவருடன் நடித்த கடைசி படம்.
சிலம்பு சண்டை காட்சிகள் நேரிலே நடப்பதை போல பார்த்து நாமே உணர்ச்சி வசப்பட்டு விடுவோம். அசோகனுக்கு அருமையான வேடம். வெளுத்து வாங்குவார். பிற்காலத்தில் இதே கதையை உல்ட்டா பண்ணி அளவுக்கு அதிகமான மசாலாவை ஆபாசத்தோடு தூவி எடுக்கப்பட்ட 'சகல கலா வல்லவன்' வெள்ளி விழா ஓடியது குறிப்பிட தக்கது.
சென்னையில் சித்ரா கிரவுன் மகாலட்சுமியில் வெளியாகி சித்ரா கிரவுனில் 102 நாட்களும் மகாலட்சுமியில் 71 நாட்களும் ஓடி மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
8 வாரங்களில் அடுத்து வந்த 'ஆனந்த ஜோதி'யை தாண்டி வெற்றியை பதிவு செய்தது குறிப்பிட தக்கது. மதுரை திருச்சி கோவை சேலம் ஆகிய ஊர்களில் 92 நாட்கள் ஓடியது.
தமிழகத்தில் சுமார் 33 சென்ட்டரில் 50 நாட்களை கடந்து ஓடி வெற்றியை பதிவு செய்தது. தூத்துக்குடி சார்லஸில் வெளியாகி 50 நாட்களை கடந்து வெற்றி பெற்ற படம். மறுவெளியீட்டில்
நெருங்க முடியாத அளவு வெற்றியை பதிவு செய்தது என்பது குறிப்பிட தக்கது..........
-
தமிழ் திரைப்பட உலகில் மக்கள் திலகத்தின் காவியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சாதனைகளை பலவிதமான அரங்குகளில் படைத்துள்ளது. அதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மிகப் பெரிய வெற்றிப்படங்கள் ஆனாலும் சரி.... சாதாரண கருப்பு-வெள்ளை படங்கள் ஆனாலும் சரி மக்கள் திலகத்தின் திரைக்காவியங்கள் மிகுந்த வசூலையும் மிகுந்த சாதனையையும் படைத்துள்ளது என்பது முக்கியமான ஒன்றாகும்.
1965 ஆம் ஆண்டு இந்திய திரைப்பட உலகை மகிழ்வித்த... தென்னிந்திய திரை உலகை சிறப்பித்த... தமிழ் பட உலகை வாழவைத்த....*
எங்க வீட்டுப் பிள்ளை*
இமாலய சாதனையை படைத்தது.
அதே ஆண்டில் மற்றொரு சரித்திரப் படமான ....
ஆயிரத்தில் ஒருவன் அதுவும் ஒரு மிகப்பெரிய மகுடத்தை சூட்டியது தமிழ் படவுலகில்......
இன்று... "கன்னிதாய்" 10-09-1965 ---10-09-2020 வெளியான திருநாள்... குறைந்த நாட்களிலேயே அதிகளவில் வசூல் வேட்டை புரிந்த காவியம்...
இந்த இரண்டு மிகப்பெரிய காவியங்களுக்கு மத்தியில் கருப்பு வெள்ளை திரைப்படமான "கன்னித்தாய் "திரைப்படம் 18 நாட்களில் தயாரிக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை தமிழகத்தில் ஏற்படுத்தியது.*
கன்னித்தாய் திரைப்படம் வெளியான நாள் தான் இன்று*
(10.09.1965. - 10.09.2020 ) அதே நாளில் அந்தக் காவியத்தை நினைவு கூறும் சில நிகழ்ச்சிகள் மட்டும்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் கன்னித்தாய் திரைக்காவியம் சென்னை மாநகரில் 4 காட்சிகள் திரையிடப்பட்டு சரித்திரத்தை உருவாகிய முதல் காவியம்.*
முதல் வார வசூல் எந்தப் படமும் நெருங்க முடியாத சாதனையில் சபையர் திரையரங்கில்*
4 காட்சியில் அத்தனை காட்சியும் அரங்கு நிறைந்து வசூல் கொடுத்த தொகை மிகப்பெரிய வசூல் ஆகும். வெற்றியாகும்.
7 நாள் : 49 ஆயிரத்தை கடந்தது.
சென்னை நகரில் சபையர்*
அசோக் பிரைட்டன் சயானி திரையரங்குகளில் திரையிடப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிக் குவித்தது. திருச்சி மாநகரில் 11 வாரங்கள் ஓடி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது அதேபோல பெரிய ஊர்களிலும் 50 நாட்கள்.........
-
எம்.ஜி.ஆரை தொட முயன்று அடித்து வீசப்பட்டேன் - ஜேப்பியார்.
" 1954 ஆம் ஆண்டில் நான் S S L C படித்து முடித்திருந்தேன்.பெண்களை தொட்டுப் பார்க்க துடிக்கும் வயது அது. ஆனால் நான் தொட்டுப் பார்க்க விரும்பியதோ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை. அப்படி ஒரு அழகு, தேஜஸ் அவரிடம். 'இன்பக்கனவு' நாடகம் நடந்தபோது மேடைக்கே போய் விட்டேன். நடித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். அருகில் போய்விடலாம் என்று முயன்றால் அடித்து தொலைதூரம் வீசப்பட்டேன்.அப்படி யொரு அடியை அதற்கு முன் நான் வாழ்வில் பெற்றதில்லை. அடிக்கு பயந்து எம்.ஜி.ஆரைத் தொடும் ஆசையை விட்டுவிடவில்லை.'நாடோடி மன்னன்' வெற்றி விழாவிலும் எம்.ஜி.ஆரைத் தொட முயன்று முன்பைவிட வலுவான அடி, உதை கிடைத்தது.
1962ல் எனக்குத் திருமணமாகி பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு எம். ஜி.ஆரைக் காண பாலர் அரங்கம் (கலைவாணர் அரங்கம்) சென்றேன். குழந்தையோடிருந்தால் எப்படியும் அங்கு நடைபெறும் விழாவுக்கு வரும் அவரை நெருங்கிவிடமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு. அது வீண் போகவில்லை. என்னைப் பார்த்ததும் அருகில் வரச் சொன்ன எம்.ஜி.ஆர். 'உன் குழந்தைக்கு பெயர் சூட்டத்தானே கொண்டு வந்திருக்கிறாய் ? ' என்று கேட்டார். நானும் ஆமாம் என்று தலையாட்டினேன். "என்ன பெயர் வைக்க முடிவு செய்திருக்கிறாய் ? " என்று கேட்டார். "நீங்களே ஒரு பெயர் சூட்டிவிடுங்கள் " என்றேன். "இல்லை பெற்றோர் கருத்து தெரிந்து தான் சொல்வேன்" என்றார். விடாமல் நானும் "ராஜேஸ்வரி" என்ற பெயரைச் சொன்னேன். "விஜய ராஜேஸ்வரி" என்று பெயர் சூட்டினார். அதற்கு பின் எம்.ஜி.ஆரிடம் வந்துவிட்டேன். எனது வாழ்க்கையே அவரோடுதான் என்றானது" - AVM நினைவு அறக்கட்டளை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி சொற்பொழிவில் 'சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் பேசியதிலிருந்து - "
'#இதயக்கனி' ஆகஸ்ட் 2008 இதழிலிருந்து .
18 -06 -2020 திரு ஜேப்பியாரின்
4 ம் ஆண்டு நினைவு நாள்.
Ithayakkani S Vijayan.........
-
MGR News with Unseen Images
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பார்வைத் திறன், செவித் திறன் இழந்தோர் பள்ளி ஒன்றின் விழாவில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடப்பட்டது. அதை ஏற்று அந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். இந்த விழாவில் ‘கர்நாடக எம்.ஜி.ஆர்.’ என்று அழைக்கப்படும் பெருமை பெற்ற நடிகர் ராஜ்குமாரும் கலந்துகொண்டார்.
விழாவில் எம்.ஜி.ஆர். பேச ஆரம்பித் ததும் அவரது பொன்மனம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது. அந்தப் பள்ளியின் வளர்ச்சிக் காக ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார். விழி இழந்தவர்கள் பார்க்க முடியாவிட்டாலும் அவர் அறிவிப்பைக் கேட்டு கரவொலி எழுப்பினர். இதைப் பார்த்து காது கேளாதோரும் கைதட்டினர்.
உணர்ச்சிமயமான இந்தச் சூழலில் எம்.ஜி.ஆர். பேசியது மேலும் உள்ளத்தை நெகிழ வைத்தது. அந்த பள்ளிக்கு, தான் நிதி வழங்குவதற்கான காரணம் என்ன என்பதை எம்.ஜி.ஆர். தனது பேச்சில் குறிப்பிட்டார். ‘நாடோடி மன்னன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு எம்.ஜி.ஆருக்கு கண் திருஷ்டி போல, சீர்காழியில் ‘இன்பக் கனவு’ என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது கால் முறிந்துபோனது.
நாடகத்தில் பெண்ணை ஒருவன் மான பங்கம் செய்வது போல ஒரு காட்சி. அந்தக் காட்சியில் நடித்தவர் நடிகர் குண்டுமணி. பெயருக்கேற்றபடி சிறு குன்று போலவே இருப்பார். பெண்ணைக் காப்பாற்ற குண்டுமணியுடன் எம்.ஜி.ஆர். சண்டையிடும் காட்சிதான் அவரது அறிமுகக் காட்சி.
மக்களின் ஆரவாரத்துக்கிடையே குண்டு மணியை எம்.ஜி.ஆர். தனது வலிமையான கரங்களால் ‘அலாக்’காக தலைக்கு மேல் தூக்குவார். அன்று அந்தக் காட்சியில் நடிக் கும்போது சமநிலை தவறி எம்.ஜி.ஆருக்கு கால் முறிந்துவிட்டது. சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர். 6 மாதங்கள் சிகிச்சை காரண மாக ஓய்வில் இருக்க வேண்டிய நிலை.
சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரை சந்திக்க பார்வையற்றவர்கள் இரண்டு பேர் வந்தனர். அவர்களை உள்ளே அனுமதிக்கச் சொன்ன எம்.ஜி.ஆர். ‘‘எதற்காக இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்தீர்கள்?’’ என்று பரிவுடன் கேட்டார்.
‘‘உங்களைப் பார்க்கத்தான் வந்தோம்’’ என்று பதில் வந்தது.
‘‘என்னைப் பார்க்கவா?’’ பரிதாபத்தோ டும் வியப்போடும் எம்.ஜி.ஆர்.கேட்டார்.
‘‘ஆமாம். உங்களைப் பார்ப்பதற்குதான் வந்தோம். பார்வை இழந்த நாங்கள் எப்படி உங்களைப் பார்க்க முடியும் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? எல்லாரையும் போல உங்களை பார்ப்பதற்கு எங்களுக்கு புறக் கண்கள் இல்லையே தவிர, எங்கள் அகக் கண்களில் நீங்கள் ஆழமாக பதிந்திருக்கிறீர்கள். உங்களை எங்கள் கரங்களால் தொட்டு, ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டுப் போகலாம் என்று வந்தோம்’’ என்று அவர்கள் சொன்னபோது அவர்களது அன்பில் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.
இந்த சம்பவத்தை மேடையில் விவரித்து விட்டு தொடர்ந்து பேசும்போது எம்.ஜி.ஆர். கூறினார்... ‘‘இதுபோன்று என் மீது அன்பு செலுத்துவதற்கு லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்ற எண்ணமே எனக்கு அதிக தன்னம்பிக்கையை கொடுத்ததோடு, நான் விரைவில் குணமடையவும் உறுதுணை யாக இருந்தது. கண்களை இழந்த அவர்கள் என் மீது காட்டிய அன்பு எனது வாழ்நாளில் மறக்க முடியாததாக அமைந்துவிட்டது. அவர்களுக்கெல்லாம் என் வாழ்நாளில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று சிறிய உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்.’’
எம்.ஜி.ஆர். இதை சொன்னபோது உணர்ச்சி மேலிட கலங்கிய கண்களுடன் கூட்டத்தினர் எழுப்பிய கரவொலி பெங்களூர் முழுவதும் எதிரொலித்தது.
- தி இந்து ..........
-
30.11.1968 ‘தீர்ப்பு நாடகப் பொன்விழாவில்...
நான் ஒரு நாத்திகனா? இல்லவே இல்லை. என்னைப் பற்றி பலர் தவறாக இப்படி புரிந்து கொண்டு தவறாகவும் எழுதி வருகிறார்கள்.
உண்மையாக நான் நாத்திகன் அல்ல. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ‘ஒருவனே தேவன்’ என்ற கொள்கையை உடையவன் நான். நம் சக்தியை எல்லாம் மீறிய ஒரு சக்தி இருக்கிறது. அதைத் தான் நாம் கடவுள் என்று சொல்கிறோம். வழிபடுகிறோம்.
பலர் இந்தச் சக்திக்கு பல உருவம் கொடுத்துப் பெயர்கள் கொடுத்து கடவுளாக வணங்கி வழிபடுகிறார்கள். நான் என் தாயின் உருவத்தில் அந்தச் சக்தியை இப்போது வழிபட்டு வருகிறேன். அப்படியானால் நான் கோவிலுக்கு போனது கிடையாதா? போயிருக்கிறேன். ’மர்மயோகி’ படம் கோவை சென்ரலில் நடைபெற்ற போது நான் பழனி மலைக்குப் போய் முருகனை தரிசித்து வந்திருக்கிறேன்..........எம்.ஜி.ஆர்.,........ .
-
மக்கள் திலகம் "ராஜகுமாரி" திரைப்படம் பின்னாளில் மகத்தான பல வெற்றிகளை படைத்துள்ளது. 1950 ஆம் ஆண்டுக்குப் பின் இக்காவியம் பல ஊர்களில் 4 வாரங்கள் 5 வாரங்கள் ஓடி பல சிறப்புகளைப் பெற்றுள்ளது.
1995 ஆம் ஆண்டு வரை இத் திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்டு வந்துள்ளது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கின்றோம்.
புரட்சி நடிகர் நடித்த முதல் படமான ராஜகுமாரி பல ஊர்களில் நூறு நாட்களைக் கடந்து ஓடியது போல் எந்த நடிகரின் படமும் இது போன்று ஒடியதில்லை.எந்த முதல் கதாநாயகனின் வெற்றியும்* இது* போன்று சாதனையை பெற்றது இல்லை.. தொட்டதில்லை.
1991...1992...
சென்னையில் திரையிட்ட அரங்குகள்!
1991 ல் மதுரை சி.டி.சினிமாவில் ராஜகுமாரி 21 நாள் ஒடியது.
சென்னை ...1991
பிளாசா 7 நாள் : 57,980.55
பிராட்வே 7 நாள் : 20,761.00
(பகல் காட்சி ஆகும்)
காமதேனு 7 நாள் 40,940.80
1992. ல் முருகன் 7 நாள் ஒடியது.
மற்றும்...
பழனியப்பா, தங்கம்,*
சரவனா, நேஷனல் (3 காட்சி)*
லிபர்ட்டி ,ஜெயராஜ்...பகல் காட்சி....
பிரிண்ட் சரியில்லை பல கலாட்டாக்கள் திரையரங்குகளில் நடந்தது.
ஆனால் ஒரு நடிகரின் முதல் படம் இன்று வரை புத்தம் புதிய பிரிண்டு
மற்றும் டிஜிபீட்டா ஏவி.எம்மில்*உரிமை உள்ளது. அதை வாங்கி சென்னையில் திரையிட 1980 முதல் (40 ஆண்டுகள் மட்டுமின்றி) 2020 வரை ஆள் இல்லை...
தொடரும் ....
Ur.........
*
-
தலைவரின் திரைஉலக வாழ்வில் சரித்திரம் & சாதனை திருப்புமுனை படைத்த காவல்காரன் திரைக்காவியம்
சுடப்பட்ட எம்ஜிஆரின் குரல் மாறி வந்த முதல் படம் ‘காவல்காரன்’; அழுது அழுது, திரும்பத் திரும்ப பார்த்த எம்ஜிஆர் ரசிகர்கள் - ‘காவல்காரன்’ வெளியாகி 53 ஆண்டுகள்
1967ம் ஆண்டு, தமிழக அரசியலிலும் தமிழ்த் திரையுலகிலும் மறக்கமுடியாத ஆண்டாக, பரபரப்பான ஆண்டாக அமைந்தது. திரையுலகையே பதறவைத்த ஆண்டாகவும் அமைந்தது. அரசியலில், திமுகவின் ஆட்சி அந்த வருடம்தான் அமைந்தது. அண்ணா முதல்வரானார். திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்த எம்ஜிஆரை, வருடத்தின் தொடக்கத்தில், ஜனவரி 12ம் தேதி எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார். 13ம் தேதி ‘தாய்க்கு தலைமகன்’ வெளியானது. ஆனாலும் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பொங்கல் இனிக்கவில்லை. சுடப்பட்டு எட்டு மாதங்கள் கழித்து, ‘காவல்காரன்’ வெளியானது. துக்கமும் அழுகையுமாக வந்து படம் பார்த்தார்கள். எதிர்பார்த்த வெற்றியை விட, இரண்டு மூன்று மடங்கு வெற்றியைத் தந்தார்கள். அதுதான் எம்ஜிஆர் மேஜிக்.
67ம் ஆண்டு ‘தாய்க்கு தலைமகன்’ வந்தது. மே மாதம் 19ம் தேதி ‘அரசகட்டளை’ வந்தது. அது தேவர்பிலிம்ஸ். இந்தப் படத்தை இயக்கியவர் எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி. இந்தப் படங்களெல்லாம் 66ம் ஆண்டிலேயே வேலை தொடங்கி, 95 சதவிகிதம் முடித்துக் கொடுக்கப்பட்டது. அதாவது எம்ஜிஆர் சுடப்படுவதற்கு முன்பே நடித்துக் கொடுத்திருந்தார். மீதமுள்ள ஐந்து சதவிகிதம் ‘அரசகட்டளை’யில் குரல் மாறிய நிலையில் டப்பிங் செய்யப்பட்டது. ஆனாலும் அவ்வளவாகத் தெரியவில்லை. இதுவும் எம்ஜிஆரின் மேஜிக்தான்.
ஆனால், 67ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி எம்ஜிஆர் சுடப்பட்டு, அதன் பின்னர், நடிக்கப்பட்டு, டப்பிங் பதிவு செய்யப்பட்டு முழுமையாக குரல் மாறிய நிலையில் வந்த முதல் படம்... ‘காவல்காரன்’. சத்யா மூவீஸ் ஆர்.எம்.வீரப்பன் தயாரிக்க, ப.நீலகண்டன் இயக்க, ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார், அசோகன், பண்டரிபாய், மனோகர், சிவகுமார் முதலானோர் நடித்திருந்தனர்.
67ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி வெளியானது. முதல்நாள் படம் பார்த்துவிட்டு, அழுதுகொண்டே வந்தார்கள். கதறி கண்ணீர்விட்டபடியே வந்தார்கள். ‘வாத்தியார் குரலே மாறிப்போச்சே’ என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு, அடுத்த காட்சிக்கு அப்படியே நின்றார்கள். முதல் ஷோ பார்த்துவிட்டு, இரண்டாவது ஷோவும் பார்த்தார்கள். எம்ஜிஆரின் குரல் மாறியிருக்கும் விஷயம், தமிழகம் முழுவதும் தீயாய்ப் பரவியது. கூட்டம்கூட்டமாக வந்து பார்த்தார்கள். குடும்பம் குடும்பமாக வந்து பார்த்தார்கள். பார்த்தவர்கள் எல்லோரும் அழுதுகொண்டே பார்த்தார்கள். சுடப்பட்டு குரலே மாறிப் போய்விட்ட எம்ஜிஆர், வசனம் பேசப்பேச, ‘தலைவா தலைவா’ என்கிற கோஷங்கள், எம்ஜிஆரின் லாயிட்ஸ் சாலை வீட்டிலும் தி.நகர் வீட்டிலுமாக எதிரொலித்துக் கதறியது.
எம்ஜிஆர் போலீஸ் அதிகாரி. நம்பியார் வில்லன். அவரின் மகள் ஜெயலலிதா. அங்கே ஒரு பங்களாவில் நடக்கும் கொலை குறித்து துப்பறிய எம்ஜிஆர், நம்பியார் வீட்டு கார் டிரைவராக வருவார். அவர் போலீஸ் என்பது அம்மாவுக்கு கூட தெரியாது. கொலை செய்தது யார், நம்பியார், அசோகன், மனோகரின் வேலைகள் என்னென்ன என்பதையெல்லாம் எப்படிக் கண்டறிந்தார் என்கிற முழுக்க முழுக்க எம்ஜிஆர் ஃபார்முலா கதைதான் ‘காவல்காரன்’. அதை தனக்கே உரிய பாணியில், எம்ஜிஆரின் மனமறிந்து இயக்கி அசத்தினார் ப.நீலகண்டன்.
எம்ஜிஆருக்கு தேவர் பிலிம்ஸும் சத்யா மூவீஸும் ரொம்பவே ஸ்பெஷல். 67ம் ஆண்டில் சுடப்பட்ட சம்பவம் நடந்த மறுநாள் தேவர் பிலிம்ஸ் படம் வெளியானது. சுடப்பட்டதால் குரல் மாறிய நிலையில் வெளியானது சத்யா மூவீஸின் ‘காவல்காரன்’. நடுவே, எம்ஜிஆரின் அண்ணன் சக்ரபாணி இயக்கிய ‘அரசகட்டளை’ வெளியானது. ‘தாய்க்கு தலைமகன்’ படத்தில் நடித்த சரோஜாதேவியும் ‘காவல்காரன்’ படத்தில் நடித்த ஜெயலலிதாவும் ‘அரசகட்டளை’யில் நடித்திருந்தார்கள்.
’கட்டழகு தங்கமகள்’ என்றொரு பாடல். ‘மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ’ என்றொரு பாடல். ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ என்றொரு பாடல். ‘அடங்கொப்புரானே சத்தியமா நான் காவல்காரன்’ என்றொரு பாடல். ‘காது கொடுத்து கேட்டேன் குவாகுவா சத்தம்’ என்றொரு பாடல். எல்லாப் பாட்டுகளும் செம ஹிட்டு. என்றாலும் ‘காது கொடுத்து கேட்டேன்’ பாடலும், ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ பாடலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. வாலியின் பாடல்கள். எம்.எஸ்.வி.யின் இசை. அட்டகாச கூட்டணியில் அற்புதப் பாடல்கள்.
இப்போது மூடப்பட்டுள்ள அகஸ்தியா, குளோப், மேகலா, நூர்ஜஹான் முதலான திரையரங்கிலும் தமிழகத்திலும் வெளியாகி சக்கைப்போடு போட்டான் ‘காவல்காரன்’. எம்ஜிஆரின் முகமும் எம்ஜிஆரின் படமும் எம்ஜிஆர் பட பாடல்களும் மிகப்பெரிய எனர்ஜியைத் தரவல்லவை; ஊக்கத்தைக் கொடுக்கக்கூடியவை; உற்சாகத்தை வழங்குபவை; உத்வேகத்தை ஊட்டுபவை என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தன. இன்றைக்கும் அவையெல்லாம் நிஜம். ஆனால், ‘காவல்காரன்’ படம், அழுதுகொண்டே ரசிகர்கள் பார்த்த படம். பெண்கள் வீட்டிலிருந்து கிளம்பும்போதே அழுதபடியே வந்தார்கள். படம் பார்த்தார்கள். இன்னும் வெடித்து அழுதார்கள்.
சென்னை குளோப் தியேட்டரில், பெண்களுக்காகவே தனிக்காட்சி திரையிட்டதெல்லாம் உலக சாதனை. இலங்கையில் இந்தப் படம் 170 நாட்களைக் கடந்து ஓடியது. மிகப்பெரிய வசூலை பெற்றுத்தந்தது.
67ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி, வெளியானது ‘காவல்காரன்’. எம்ஜிஆரின் குரலே மாறிப்போயிருந்த நிலையில் வந்த முதல் படம். ஆனாலும் தன் பலவீனத்தையே பலமாக்கிக் காட்டினார் எம்ஜிஆர். அப்படி பலமாக்கிக் காட்டினார்கள் எம்ஜிஆரின் ரசிகர்கள். இதுவும் எம்ஜிஆர் மேஜிக் தான்!
படம் வெளியாகி, 53 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும் எம்ஜிஆர் சுடப்பட்ட வரலாறுடன், "காவல்காரன்" படமும் இணைந்துகொண்டது. சகாப்தமாகிவிட்டது.........
-
"இதயக்கனி*" காவியம்...
மருதானை மனோகரா
136 நாள்* : 3,98,105.00
யாழ்நகர்* சென்ட்ரல்
102 நாள் : 4,30,024.75
மட்டு நகர் ரீகல்*
70 நாள் : 1,15,701.70
பாமன் கடை ஈரோஸ்
50* நாள் : 2,04,341.50
வவுனியா முருகன்
54 நாட்கள்....
நெல்லியடி லஷ்மி 44 நாள்
கல்முனை ராஜ்* 41 நாள்
திருமலை சரஸ்வதி 45 நாள்
மற்றும் 10 இடங்களுக்கு மேல் 4,5,வாரங்களை கடந்து சாதனை.
நாளை நமதே
கொழும்பு.... சமந்தா
140 நாள் : 5,06,955.50
யாழ்நகர் ராணி
102 நாள்* : 4,05,786.75
பாமன்கடை ஈரோஸ்
88 நாள் : 3,43,310.50
கல்முனை ராஜ்*
61 நாள் : 1,67,089.90
நெல்லியடி லஷ்மி 52 நாள்
மற்றும் சந்திரா 47 நாள்,
இந்திரா 40 நாள்...
பல இடங்களில்
நாளைநமதே 5,6,வாரங்களை கடந்து சாதனையாகும்....
"நினைத்ததை முடிப்பவன்" காவியம்...
யாழ் வின்சர் 80 நாள்
வசூல் : 2,82,945.00
கொழும்பு சென்ட்ரல்
75 நாள் : 3,01,398.60
மட்டு நகர் விஜயா 56 நாள்
மற்றும் பல இடங்களில்*
சாதனைகள்....
"பல்லாண்டு வாழ்க" காவியம்...
யாழ்நகர் 84 நாள் ஒடியது...
கொழும்பு நிலவரம் கிடைத்தவுடன் பதிவிடுகிறோம் ...
இலங்கையில் என்றுமே
நிரந்த வசூல் பேரரசர் என்றால்
மக்கள் திலகம் என்ற மாணிக்கச்சுடர்
எம்.ஜி.ஆர். ஒருவரே!*
நம் பதிவில் என்றும் பொய்யும் பித்தலாட்டமும் கிடையாது... அதற்கு எந்தவித அவசியமுமில்லை...
நன்றி!
திரு. ராஜசிங்கம்
திரு. டேவிட்
திரு. சதானந்தன் இலங்கை... கனடா...
யாழ்நகர் - பிரான்ஸ்
தொடரும் .....
*
இலங்கை திருநாட்டில் 1975 ல் புரட்சித்தலைவரின் மகத்தான காவியங்கள் படைத்த சாதனைகளின் வரலாறு.....
"இதயக்கனி", " நாளை நமதே" இரண்டு திரைப்படங்கள் இரண்டு திரையரங்குகளில் ஓடி மொத்தம் நான்கு திரையரங்குகளில்*
100 நாட்களை வெற்றிகொண்ட ஆண்டாக 1975 ஆம் ஆண்டு மக்கள் திலகத்திற்கு அமைந்தது ஆகும்.
இதயக்கனி திரைக்காவியம் மனோகரா திரையரங்கில் 132 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அதன் பின் சென்ட்ரல் திரையரங்கில் 105 நாட்கள் ஓடி வெற்றி சாதனை புரிந்தது.
நாளை நமதே திரைக்காவியம் சமந்தாஅரங்கில் 140 நாட்களும், ராணி அரங்கில் 102 நாட்களும் ஈராஸ் திரையரங்கில் அடுத்து வெளியீடாக 88 நாட்களும் ஓடி வசூலில் மிகப்பெரிய சரித்திரத்தை ஏற்படுத்தியது.
மற்றும் அதே ஆண்டில் வெளியான நினைத்ததை முடிப்பவன்*
வின்ஸர் அரங்கில் 80 நாட்களை கடந்தும்.... பல்லாண்டு வாழ்க* செல்லமகாலில் 12 வாரங்கள் ஓடி மிகப்பெரிய தாக்கத்தை வசூலை ஏற்படுத்தி.... மிகப்பெரிய வெற்றியையும் படைத்தது.........
*
-
மதுரையில் அதிசயம்...
4 வாரங்களில் 1 லட்சத்தை வசூலில் கடந்த காவியங்களில்...
1968 வரை.... 15 படங்கள்.... அதில்..
கலையுலக சக்கரவர்த்தின் காவியங்கள்
மட்டும் -11 ஆகும்.....
நாடோடி மன்னன்
தங்கம் : 1,37,530.95
காவல்காரன்
சிந்தாமணி : 1,25,316.25
ரகசிய போலிஸ்115
சிந்தாமணி : 1,24,326.46
குடியிருந்த கோயில்
நீயு சினிமா : 1,16,081.15
ஆயிரத்தில் ஒருவன்
சென்ட்ரல் : 1,12,232.53
ஆசைமுகம்
தங்கம் :.1,08,453.72
அன்பே வா
சிந்தாமணி : 1,06,357.44
எங்க வீட்டுப்பிள்ளை
சென்ட்ரல் : 1,05,832.51
மற்றும்
மதுரைவீரன்
பறக்கும் பாவை
ஒளி விளக்கு....
1968 வரை மக்கள்திலகத்தின் சாதனையே அனைவரும் போற்றும் படி முதன்மை ஆகும்.
தொடரும்...ur.,.........
-
#தமிழ்_சினிமாவில் #எம்ஜிஆர்_செய்த #முதல்_சாதனைகள்!.........
தமிழ் சினிமாவில் பல முதன்மைகளை, புதுமைகளை நிகழ்த்தியவை எம்ஜிஆர் படங்கள்.
* எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் ஆங்கிலத்தில் டைட்டில் கார்டு காட்டப்பபட்ட முதல் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்'.
* எம்.ஜி.ஆர். நடித்து தரக்குறைவான பத்திகைகளின் போக்குக்கு எதிர்த்து எடுக்கப்பட்டு வெளி வந்தப் படம் சரவணா பிலிம்ஸ் 'சந்திரோதயம்'. அன்றைய சூழலில் ஒரு முன்னணிப் பத்திரிகையை முற்றாக எதிர்த்து நடித்தார் எம்ஜிஆர்
* எம்.ஜி.ஆர். நடித்து காளைமாட்டுடன் மோதும் (ஜல்லிக்கட்டு) காட்சியை முதன்முதலாக தமிழ் சினிமாவில் காட்டிய படம் 'தாய்க்குப்பின் தாரம்'.
* எம்.ஜி.ஆர். நடித்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெருமையை திரைப்படம் மூலம் உலகுக்கு தெரிவித்த படம் கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த 'மதுரை வீரன்'.
* எம்.ஜி.ஆர். நடித்து புலியுடன் மோதும் சண்டைக் காட்சியை முதன்முதலாக திரைப்படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி'.
* எம்.ஜி.ஆர். நடித்து சண்டைக் காட்சியின்போது 350 பவுண்ட் எடைக்கொண்ட சண்டை நடிகரை அலக்காக தூக்கி நிறுத்தி சண்டை காட்சியில் சாதனைப் புரிந்த படம் ஏவிஎம்மின் 'அன்பேவா'.
* எம்.ஜி.ஆர். நடித்து கிராமங்களில் நடக்கும் மாட்டு வண்டிபோட்டியை முதன் முதலில் திரைப்படத்தில் காட்டிய படம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ தயாரித்த 'பெரிய இடத்துப் பெண்'.
* எம்.ஜி.ஆர். நடித்து முதன்முறையாக யோகா பயிற்சியை படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சி இடம்பெற்ற படம், தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'தலைவன்'.
* எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்து உடல் வளர்ச்சிக்கு தேவையான அணுகு முறையை மாணவர்களுக்கு சொல்லித் தரும் காட்சியை முதன் முதலாக படமாக்கப்பப்பட்ட படம் 'ஆனந்தஜோதி', 'பணம் படைத்தவன்'.
எம்.ஜி.ஆர். நடித்து முதன்முதலாக கிராமத்து காட்சியும், நகரத்து காட்சியையும் இணைத்து கதை அமைத்து திரைப்படமாக வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் 'பெரிய இடத்துப் பெண்'.
எம்.ஜி.ஆர். நடித்து பேருந்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம் தேவர் பிலிம்ஸ் 'தொழிலாளி'.
எம்.ஜி.ஆர். நடித்து மீனவ மக்களின் போராட்ட வாழ்க்கையை முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்து வெற்றிப்பெற்ற படம் சரவணா பிலிம்ஸ் 'படகோட்டி'.
எம்.ஜி.ஆர். நடித்து ஓய்வில்லாத ஒரு பிரபலமான தொழிலதிபரின் காதல் கதையை முழுமையாக முதன்முறையாக படமாக்கப்பட்ட படம் ஏவிஎமின் 'அன்பே வா'.
எம்.ஜி.ஆர். நடித்து பம்பாய் நகரில் முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ராகவன் புரொடக்ஷன்ஸ் 'சபாஷ் மாப்பிள்ளே'
எம்.ஜி.ஆர். நடித்து ரிக்க்ஷாவில் அமர்ந்தபடியே சிலம்பு சண்டை போடும் காட்சியை தமிழ், இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக எடுக்கப்பட்ட படம் 'ரிக்க்ஷாக்காரன்'. இந்தப் படத்துக்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து "பாரத்" இந்தியாவின் சிறந்த நடிகர் பட்டத்தைப் பெற்றார்.
எம்.ஜி.ஆர். படத்தில்தான் நடிகர் முத்துராமன் அறிமுகமானார். படம் 'அரசிளங்குமரி'.
எம்.ஜி.ஆர். படத்தில் அறிமுகமான இன்னொரு முக்கிய நடிகர் அசோகன். படம் 'பாக்தாத் திருடன்'.
எம்.ஜி.ஆர். நடித்து அண்ணன், தங்கை பாசத்தை முழுமையாக சினிமாவில் காட்டப்பட்டப்படம் முதல்படம் 'என் தங்கை'. எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக நாட்கள் (352) ஒடிய படமும் 'என் தங்கை' தான்.
எம்.ஜி.ஆர். நடித்து நல்ல கருத்துகளை வலியுறுத்தும் தலைப்பில் வெளிவந்த படங்கள்: 'நல்லவன் வாழ்வான்', 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தர்மம் தலைக்காக்கும்', 'பெற்றால் தான் பிள்ளையா', 'சிரித்து வாழ வேண்டும்', 'நீதிக்குத் தலைவணங்கு'.
எம்.ஜி.ஆருடன் இணைந்து 9 கதாநாயகிகள் நடித்த படம் 'நவரத்தினம்'. தமிழில் இதுவும் ஒரு 'முதல்முதலாக'தான்.
எம்.ஜி.ஆர். நடித்து கிழக்கு ஜெர்மன், எகிப்து, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் 'நாடோடி மன்னன்' (1958). இந்தப் படம் வெளிவந்த போது ரிசர்வேஷனிலும் சாதனைப் புரிந்தது.
எம்.ஜி.ஆர். நடித்து, ஈரான் நாட்டு படவிழா, மாஸ்கோ படவிழா, சர்வதேச படவிழா தாஷ்கண்ட் படவிழா, கோவா படவிழா என்று பல விழாக்களில் கலந்துக் கொண்ட முதல் தமிழ்ப்படம் சத்யா மூவிஸ் 'இதயக்கனி'. இந்தப் படத்தின் 100 நாள் வெற்றி விழா ஆந்திரா முதல்வர் என்.டி.ராமாராவ் தலைமையில் நடந்தது (அப்போது அவர் முதல்வராகவில்லை. எம்ஜிஆருக்குப் பிறகுதான் அவர் அரசியலுக்கு வந்தார்).
எம்.ஜி.ஆர். நடித்து சென்னை சத்யம் திரையரங்கில் ஓடி 100 நாட்கள், வெள்ளி விழா கொண்டாடிய முதல் தமிழ்ப் படம் 'இதயக்கனி'.
எம்.ஜி.ஆர். நடித்த 'நீரும் நெருப்பும்' படத்திற்காக நடந்த ரிசர்வேஷன் கூட்டத்தை கட்டுப்படுத்துவற்காக குதிரைப்படை வரவழைக்கப்பட்டது, தமிழ் சினிமாவில் முதல்முறை நடந்த அதிசயம்.
எம்.ஜி.ஆர். அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு வயோதிகர் வேடத்தில் ஒருசில காட்சிகளில் நடித்த படங்கள் 'மலைக்கள்ளன்', 'குலேபகாவலி', 'பாக்தாத் திருடன்', 'படகோட்டி'.
அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். நடித்து விஞ்ஞான அடிப்படையில் உருவான கதையை படமாக்கப்பட்ட படங்கள் 'கலையரசி', 'உலகம் சுற்றும் வாலிபன்'. இந்த பானரில் வெளிவந்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை கலையரசிக்கே.
எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளி வந்த முதல் சமூகப்படம் 'திருடாதே'.
எம்.ஜி.ஆர். நடித்து தனது தாயாரின் பெயரில் சத்யா ராஜா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியை இயக்குநராகப் பணியாற்ற வைத்த படம் 'அரசக் கட்டளை'.
எம்.ஜி.ஆர். நடித்து பொங்கல் திருநாளன்று வெளிவந்து வெற்றிப்பெற்றப் படங்கள் 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'சக்கரவத்தி திருமகள்', 'அரசிளங்குமரி', 'ராணி சம்யுக்தா', 'பணத்தோட்டம்', 'வேட்டைக்காரன்', 'எங்க வீட்டுப் பிள்ளை', 'அன்பேவா', 'தாய்க்குத் தலைமகன்', 'ரகசிய போலீஸ் 115, 'மாட்டுக்காரவேலன்', 'மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன்'.
எம்.ஜி.ஆர். நடித்த திகில், மர்மம், கொலை, போன்ற காட்சிகளை சித்தரித்து எடுக்கப்பட்ட படங்கள் 'தர்மம் தலைகாக்கும்', 'என் கடமை', 'தாழம்பூ.
எம்.ஜி.ஆர். நடித்து காட்டின் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள் 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தாயைக்காத்ததனயன்', 'வேட்டைக்காரன்'.
எம்.ஜி.ஆர். சீர்காழியில் நடந்த 'அட்வகேட் அமரன்' நாடகத்தில் நடித்த போது கால் முறிந்து பின் குணமாகி மீண்டும் வந்து நடித்து கொடுத்தப் படம் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி'.
எம்.ஜி.ஆர். நடித்து கோவா கடற்கரையில் படமாக்கப்பட்ட படங்கள் 'நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்', கேரளா கடற்கரையில் முழுமையாக படமாக்கப்பட்ட படம் 'படகோட்டி'.
எம்.ஜி.ஆர். முதன்முதலில் வண்ணத்தில் நடித்து கொடுத்த படங்களும், நிறுவனங்களும் : 'அலிபாபாவும் 40 திருடர்களும்' - மாடர்ன் தியேட்டர்ஸ், 'படகோட்டி' - சரவணா பிலிம்ஸ், 'எங்கவீட்டுப் பிள்ளை' - விஜயா வாஹினி, 'ஆயிரத்தில் ஒருவன்' - பத்மினி பிக்சர்ஸ், 'அன்பேவா' - ஏவிஎம், 'பறக்கும் பாவை' - ஆர்.ஆர்.பிக்சர்ஸ் (டிஆர் ராமண்ணா), 'ஒளிவிளக்கு' - ஜெமினி பிக்சர்ஸ், 'நல்ல நேரம்' - தேவர் பிலிம்ஸ்.
எம்.ஜி.ஆர். வில்லனாக நடித்த படங்கள் : 'சாலிவாகனன்', 'பணக்காரி', 'மாயா மச்சீந்திரா'. 'சாலிவாகனன் படத்தில் ரஞ்சன் கதாநாயகனாக நடித்தார். 'பணக்காரி' படத்தில் வி.நாகையா கதாநாயகனாக நடித்தார்.
எம்.ஜி.ஆர். நடித்து விளம்பரப்படுத்தப்பட்டும், பூஜைபோடப்பட்டும் நின்று போன படங்களின் பட்டியலும் கொஞ்சம் பெரிதுதான்.
'சாயா', 'குமாரதேவன்', 'வாழப் பிறந்தவன்', 'பாகன் மகன்', 'மக்கள் என் பக்கம்', 'மறுபிறவி', 'தந்தையும் மகனும்', 'வெள்ளிக்கிழமை', 'தேனாற்றங்கரை', 'அன்று சிந்திய ரத்தம்', ' இன்ப நிலா', 'பரமபிதா', 'ஏசுநாதர்', 'நாடோடியின் மகன்', 'கேரளக் கன்னி', 'கேப்டன் ராஜா', 'வேலு தேவன்', 'உன்னை விடமாட்டேன்', 'புரட்சிப் பித்தன்', 'சமூகமே நான் உனக்கே சொந்தம்', 'தியாகத்தின் வெற்றி', 'எல்லைக் காவலன்', 'சிலம்புக்குகை', 'மலைநாட்டு இளரவசன்', 'சிரிக்கும் சிலை, 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு, இன்பக் கனவு', 'நானும் ஒரு தொழிலாளி'.
அ முதல் அஃகு வரை..........
-
சென்னை நகரில் திருவல்லிக்கேணி ஸ்டார் அரங்கிலும்,வடசென்னை பகுதி திரையரங்கான கிரவுன் அரங்கிலும் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
1947 ல் ஜூபிடர் நிறுவனம் தயாரித்த திரைப்படம்மான "கஞ்ஜன்" தோல்வியைத் தழுவியது. அதே நிறுவனத்திற்கு பல வெற்றியையும், சாதனை யையும், வசூலையும் பெற்று தந்த* முதல் கதாநாயகன் மக்கள் திலகமே! ராஜகுமாரி திரைப்படம் மூலம் ஜூபிடர் நிறுவனம் தலை நிமிர்ந்து நின்றது.
1947 ல் தமிழ் பட உலகில் புதிய கதாநாயகனாக புரட்சி நடிகர்*
எம் ஜி ஆர் வலம் வந்த ராஜகுமாரி மாபெரும் வெற்றி என எங்கும் முரசு கொட்டியது.
மதுரை சிந்தாமணி திரையரங்கில் 112 நாட்கள்... திருச்சி வெலிங்டன் திரையரங்கில் 147 நாட்கள் மற்றும் வேலூர், சேலம், கோவை, நெல்லை நகரங்களில் 100 நாட்களை கடந்து பெங்களூரில் நகரிலும் 100 நாட்களை வெற்றிகொண்ட திரைப் படமாக ராஜகுமாரி காவியம் திகழ்ந்தது.
சிறந்ததொரு திரைப்படமாக ராஜகுமாரி தென்னக மெங்கும் பவனி வந்தது. தமிழக திரை உலக வரலாற்றில் 30 திரையரங்குகளில் முதன் முறையாக திரையிடப்பட்டது அதன் பின்பு 18 திரையரங்குகளில அதிகமான பிரிண்டுகள் போடப் பட்டு மொத்தம் 48 திரையரங்கு களில் ராஜகுமாரி திரைப்படம் வெற்றிகரமாக ஒடியது.*
எவருடைய சிபாரிசும் இல்லாமல் தனிப்பெரும் கதாநாயகனாக தனித்து நின்று வெற்றியைக் கண்ட முதல் கதாநாயகன்.... சுதந்திர இந்தியாவின் முதல் கதாநாயகன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒருவரே !
தான் நடித்த முதல் திரைப்படத்தி லேயே வீரத்தையும், கருத்தையும், நல்ல காட்சிகளையும், நல்ல பாடல்களையும், கொள்கைப்படி விதைத்த முதல் கதாநாயகன் மக்கள் திலகம் எம். ஜி.ஆர் ஒருவரே.........
-
எம்.ஜி.ஆரை தொட முயன்று அடித்து வீசப்பட்டேன் - ஜேப்பியார்.
" 1954 ஆம் ஆண்டில் நான் S S L C படித்து முடித்திருந்தேன்.பெண்களை தொட்டுப் பார்க்க துடிக்கும் வயது அது. ஆனால் நான் தொட்டுப் பார்க்க விரும்பியதோ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை. அப்படி ஒரு அழகு, தேஜஸ் அவரிடம். 'இன்பக்கனவு' நாடகம் நடந்தபோது மேடைக்கே போய் விட்டேன். நடித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். அருகில் போய்விடலாம் என்று முயன்றால் அடித்து தொலைதூரம் வீசப்பட்டேன்.அப்படி யொரு அடியை அதற்கு முன் நான் வாழ்வில் பெற்றதில்லை. அடிக்கு பயந்து எம்.ஜி.ஆரைத் தொடும் ஆசையை விட்டுவிடவில்லை.'நாடோடி மன்னன்' வெற்றி விழாவிலும் எம்.ஜி.ஆரைத் தொட முயன்று முன்பைவிட வலுவான அடி, உதை கிடைத்தது.
1962ல் எனக்குத் திருமணமாகி பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு எம். ஜி.ஆரைக் காண பாலர் அரங்கம் (கலைவாணர் அரங்கம்) சென்றேன். குழந்தையோடிருந்தால் எப்படியும் அங்கு நடைபெறும் விழாவுக்கு வரும் அவரை நெருங்கிவிடமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு. அது வீண் போகவில்லை. என்னைப் பார்த்ததும் அருகில் வரச் சொன்ன எம்.ஜி.ஆர். 'உன் குழந்தைக்கு பெயர் சூட்டத்தானே கொண்டு வந்திருக்கிறாய் ? ' என்று கேட்டார். நானும் ஆமாம் என்று தலையாட்டினேன். "என்ன பெயர் வைக்க முடிவு செய்திருக்கிறாய் ? " என்று கேட்டார். "நீங்களே ஒரு பெயர் சூட்டிவிடுங்கள் " என்றேன். "இல்லை பெற்றோர் கருத்து தெரிந்து தான் சொல்வேன்" என்றார். விடாமல் நானும் "ராஜேஸ்வரி" என்ற பெயரைச் சொன்னேன். "விஜய ராஜேஸ்வரி" என்று பெயர் சூட்டினார். அதற்கு பின் எம்.ஜி.ஆரிடம் வந்துவிட்டேன். எனது வாழ்க்கையே அவரோடுதான் என்றானது" - AVM நினைவு அறக்கட்டளை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி சொற்பொழிவில் 'சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் பேசியதிலிருந்து - "
'#இதயக்கனி' ஆகஸ்ட் 2008 இதழிலிருந்து .
18 -06 -2020 திரு ஜேப்பியாரின்
4 ம் ஆண்டு நினைவு நாள்.
Ithayakkani S Vijayan.........
-
கண்ணென்ன கண்ணென்ன கலங்குது ... பாடலில் நடன அசைவுகளில் புரட்சித் தலைவர் கலக்கியிருப்பார். இன்னொன்று முக்கியமாக கவனிக்க வேண்டியது தலைவரின் அற்புதமான நடிப்பு. சண்டைக் காட்சிகள், இயக்கம், கேமரா கோணம், இசையறிவு ஆகிய அவரது பன்முகத்தன்மைகைள் பேசப்பட்ட அளவுக்கு அவரது நடிப்பு பேசப்படவில்லை. இந்தப் படத்தில் முருகப்பனாக வரும்போது கிராமத்தானாகவே வாழ்ந்திருப்பார். பெரும்பாலான நடிகர்கள் கைகளை என்ன செய்வதென்று, எப்படி பயன்படுத்துவதென்று தெரியாமல், அல்லது ஸ்டைல் காட்டுவதாக நினைத்து கோமாளித்தனம் செய்வார்கள். ஆனால், இதில் கிராமத்தானாக வரும்போது பல காட்சிகளில் தோளில் கிடக்கும் துண்டின் நுனியை இரு பக்கத்திலும் தலைவர் பிடித்திருக்கும் அழகே அழகு. நவநாகரிக அழகப்பனாக மாறியபிறகு அதற்கேற்ற நடை, உடை, பாவனை ஸ்டைல், அன்று வந்ததும் இதே நிலா பாடலில் நளின அசைவுகள், சரோஜா தேவி வீட்டில் வந்து அமரும் கெத்து என்று வித்தியாசத்தில் அமர்க்களப்படுத்தியிருப்பார். மறுபடியும் கண்ணென்ன... பாடலில் குடுமி வைத்தபடி கிராமத்தானின் நடன அசைவுகளை காட்டியிருப்பார். இவ்வளவையும் மிகையில்லாமல், அலட்டல் இல்லாமல், ஆ... ஓ... ஊ.... என்று கத்தாமல் வித்தியாசம் என்ற பெயரில் முகத்தைக் கோணாமல் இயற்கையாக நடித்திருப்பார். .........
-
பொன்மனச் செம்மலின் காவியங்களின் மகத்தான சாதனையில் சென்னை நகரம்..
1964 ஆம் ஆண்டு வரை சென்னையில் அதிக வசூல் பெற்ற ஒரே படமாகத் திகழ்ந்தது. எம்.ஜி.யார். பிக்சர்ஸின்*
புரட்சி நடிகர் எம் ஜி ஆர் வழங்கும் நாடோடி மன்னன்*
திரைக்காவியம் ஆகும்.
அதன் பின் 1965 ஆம் ஆண்டு எங்கவிட்டுப்பிள்ளை திரைக்காவியம் முதன் முறையாக 10 லட்சத்தை கடந்து 13 இலட்சத்திற்கு மேல் வசூலை வாரிக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எங்க வீட்டுப் பிள்ளையை தொடர்ந்து 1969 ல் எம் .ஜி.யார் பிக்சர்ஸின் இரண்டாவது தயாரிப்பான அடிமைப்பெண் காவியம் 13 லட்சத்திற்கும் மேல் வசூலைக் கொடுத்த இரண்டாவது காவியமாக திகழ்ந்தது.
அதனைத் தொடர்ந்து 1970 ஆம் ஆண்டு மக்கள் திலகத்தின் மாட்டுக்கார வேலன் திரைப்படமும் 13 லட்சத்திற்கும் மேல் வசூலை வாரிக் கொடுத்தது.**
மூன்று திரைப்படங்களும்*
13 லட்சத்திற்கும் மேல் வசூலை வாரிக் கொடுத்தது மக்கள் திலகத்திற்கு மட்டுமே.
1971ம் ஆண்டு வெளியான ரிக்க்ஷாக்காரன் திரைக்காவியம் சென்னை நகரின் 20 வாரத்தில் மட்டும் 16 லட்சத்திற்கும் மேல் வசூலை வாரிக் கொடுத்து தென்னக ரீதியில் முதன்மை பெற்ற காவியமாக திகழ்ந்தது..........
-
மக்கள் திலகத்தின் மூன்றாவது தயாரிப்பான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் "உலகம் சுற்றும் வாலிபன்" திரைப்படம் தென்னக திரைப்பட உலகில் 23 லட்சத்திற்கும் மேல் வசூலை வாரிக் கொடுத்து........
1978 ஆம் ஆண்டு வரை எந்த படத்தாலும் முறியடிக்க முடியாத சாதனையாக உலகம் சுற்றும் வாலிபன் காவியம் திகழ்ந்தது.
1978 ஆம் ஆண்டு வரை சென்னை நகரில் முதன்மை பெற்ற திரைப்படங்கள்*
உலகம் சுற்றும் வாலிபன்*
23 லட்சத்தை கடந்தது.....
இதயக்கனி திரைக்காவியம்*
100 நாளில் 20 லட்சத்தை நெருங்கியது.
மூன்றாவது 100 நாளில்*
மீனவ நண்பன் திரைக்காவியம்*
18 லட்சத்தை நெருங்கி சாதனை படைத்தது.
நான்காவதாக ரிக்க்ஷாக்காரன் திரைப்படம் 17 லட்சத்தை நெருங்கி வெற்றியைத் தொட்டது.
அடுத்து.....*
இன்று போல் என்றும் வாழ்க திரைக்காவியம் 100 நாளில்*
16 லட்சத்தை தொட்டு சாதனை படைத்தது.
அடுத்து*
பல்லாண்டு வாழ்க திரைக்காவியம் 100.நாளில்*
15 லட்சத்தை நெருங்கி சாதனை படைத்தது.
மற்ற நடிகர்களின் திரைப்படங்கள் ஒவ்வொன்றிலும் வசூலில் பெரும் ஊழல் நடந்தது.*
2 இலட்சம், 3 இலட்சம் அதிகமாகக் கூட்டி பொய்யான வசூலைக் கொடுத்து பொய்யான தகவல்களை தந்து விளம்பரப்படுத்தி போலியான வாழ்க்கையை தன் திரைப்படங்களில் நிரூபித்த நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் மக்கள் திலகமே என்றும் வசூல் சக்கரவர்த்தியாக உண்மையாக திகழ்கின்றார்..
மேலும் தலைநகர் சென்னையில் குறைந்த நாளில் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்திய காவியங்கள்*
நீதிக்கு தலைவணங்கு*
உழைக்கும் கரங்கள்*
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் நினைத்ததை முடிப்பவன் திரைப்படம் போன்றவையாகும்.
* மக்கள் திலகத்தின் உண்மையான நிலவரத்தை எடுத்துரைப்போம்!*
*பொய்யர்களின் முகமூடியைக் கிழித்தெறிவோம்!*
*பொன்மனச் செம்மலின் காவியங்களின் புகழை பட்டொளி வீசி பறக்க விடுவோம்!
இந்தியா திரையுலகில்
அசைக்க முடியாத சாதனையில்
ஒரே ஒரு உண்மையான*
நிஜ ஹீரோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டுமே!.........
-
#தமிழகத்தின்_தனித்தன்மை:
Behind woods சேனலுக்காக Anchor கோபிநாத் தொழிலதிபர் சுரேஷ் சம்மந்தம் அவர்களை நேர்காணல் செய்த வீடியோ ஒன்றை கண்டேன்!
தமிழகத்தின் தனித்தன்மை பற்றி
அவர் சொன்ன 4 விஷயங்கள்:-
1.தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே தொழிற்சாலை கள் அதிகம்! (குஜராத்திலோ, மஹாராஷ்டிராவிலோ அல்ல?)
இங்கு 38,000 தொழிற்சாலைகள் உள்ளன! 23-லட்சம்பேர் பணியாற்றி
வருகின்றனர்!
2-வது இடம் மஹாராஷ்டிரா 28,000/அவற்றில் 18லட்சம்பேர்தான்
வேலை செய்கின்றனர்!
(தமிழகத்தில் பத்தாயிரம் அதிகம்! அந்தத் தொழிற்சாலைகள் சிறிய தொழிற் சாலைகளுமல்ல!
23-லட்சம் பேர் அவற்றில் வேலை செய்கின்றனர்!)
எட்டு விமான நிலையங்கள் உள்ள ஒரே மாநிலமும் தமிழகம்தான்!
2.தமிழகத்தில் காமராஜர்காலத்தில் 40 கல்லூரிகள் என்றால்? இப்போது 1000-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன!
கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள தேனி மாவட்டத்திலேயே 30கல்லூரி கள் உள்ளன!
உயர்கல்வி பயிலுவோர் சதவீதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம்-49% (மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட சில யூனியன் பிரதேசங்களின் சதவீதத் தை தமிழகத்துடன் ஒப்பிட கூடாது)
2030-ல் இந்திய அரசு எப்பாடுபட்டாவது அடைய வேண்டும் என்று நினைக்கிற இலக்கை,5ஆண்டுகள் முன்பாகவே தமிழகம் சர்வ சாதாரணமாகத் தொட்டிருக்கிறது!
நாம் 15 ஆண்டுகள் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட முன்னேறி இருக்கிறோம்!
3.சுகாதாரத்தை ஒப்பீடு செய்தால்? அதற்கான அளவீடு குழந்தைகளின் இறப்பு விகிதம் தான்! இந்தியாவில் சராசரியாக1000-க்கு 34 குழந்தை கள் இறந்தால், இங்கே 1000-க்கு 17 குழந்தைகள் மட்டுமே இறக்கின்றன!
நாட்டின் தலைநகரமானடெல்லியை விட இந்த சதவீதம் குறைவு!
4.மனிதர்களின் மகிழ்ச்சிகுறியீட்டிற் கான அளவீடாக பொருளாதார நிபுணர்கள் கருதுவது தனிநபர் பொருளாதார வேறுபாடுகள் தான்!
இந்திய அளவில் ஒப்பீடே இல்லாது தமிழ்நாடு முன்னணியில் உள்ளது! இங்குதான் நடுத்தர மக்கள் 80% பேர் உள்ளனர்!
கல்வி மற்றும் தொழில்துறையில் நிகழ்ந்த துரித வளர்ச்சியினால் மட்டுமே இது சாத்தியமாகி உள்ளது!
எல்லோருடைய வாழ்க்கைத் தரமும் கூடியிருப்பதால்தான் இங்கு சாதாரண வேலைகளைச் செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை!
ஹிந்தி படித்தவர்கள் (பள்ளிக்கு சென்று படிக்க இயலாதவர்கள்) இங்கே கூலி வேலை செய்ய வருகின்றனர்!
கண்டிப்பாக இதற்கு காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய நான்கு முதல்வர்களும், இங்கு நிலைபெற்றிருக்கிற சமூக நீதிக் கொள்கையும்தான் காரணம்!
அண்ணா விதைத்த சிந்தனைகள், அதன் தொடர்ச்சியாகவே, தமிழக அரசியல் சூழலை சரியான திசை யில் கலைஞர் நகர்த்திச் சென்றது, வரலாற்றின் அதிசயம் தான்!
#எம்ஜிஆர்_ஒருபடி_மேலே_சென்று_நூற்றுக்கணக்கான_தொழிற ்கல்வி (என்ஜினியரிங்) கல்லூரிகளுக்கு அனுமதியளித்தார்!
ஜெயலலிதாவும், அரசு நிர்வாகம் மற்றும் கொள்கைகளில் அதே பாட திட்டத்தையே பின்பற்றினர்!
காமராஜரை மட்டுமே உயர்வாகப் பேசி விட்டு, பிறரை எந்த ஆதாரமும் இல்லாமல் தவறாகச் சித்திரிப்பது உள்நோக்கம் கொண்ட திரிபு!
சொல்லப்போனால் #காமராஜர் காலத்தில் மிகச்சிறிய அடித்தளம் மட்டுமே போடப்பட்டிருந்தது!
#மாபெரும்_மாளிகையைக்_கட்டி_எழுப்பியது_திராவிட_இயக் கங்களே!
தமிழ்நாட்டை ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் மட்டுமே ஒப்பிட முடியும்!
இவ்வளவு தெளிவான புள்ளி விவரங்களுக்கு பிறகும் இளைஞர் கள் சிலர் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்ற பொய்ப் பிரச்சாரங்களை நம்புவது என்பது வருத்தத்திற்குரிய விஷயம்!
"#காமராஜர்_ஆட்சி_அமைப்போம்"
"#திராவிடத்தால்_வீழ்ந்தோம்"
''#சிஸ்டம்_சரியில்லை”
"#மாற்று_வேண்டும்"
"#திராவிடக்கட்சிகளே_50ஆண்டுகளாக_ஆண்டுகிட்டு_இருக்க ாங்க",
"#நான்_வலதும்_இல்லை_இடதும்_இல்லை_மய்யமா_சிந்திப்போ ம்"
என்று ஒரு பம்மாத்து!
இவையெல்லாமே, அறிவும், விழிப்புணர்வும் நிரம்பிய இந்த மண்ணில் கால் பதிக்கவே துப்பில்லாத ஒரு பாடாவதி கம்பெனி மாறுவேடத்தில் அனுப்பி உள்ள டம்மி நடிகர்களின் குரல்கள் தான்!
நீட் தேர்வு, இட ஒதுக்கீட்டைக் காலி செய்தல், ஹிந்தித்திணிப்பு, மதவாத அரசியல், புதிய கல்விக் கொள்கை ஆகிய அனைத்துமே தமிழகத்தை வடமாநிலங்களைப் போல் மாற்றி விடும்!
அன்பார்ந்த இளைஞர்களே! வரலாற்றையும்,புள்ளிவிபரங்களை சரியாக தெரிந்து கொண்ட பிறகு அரசியல் பேசுங்கள்!
#வாட்ஸ்அப்_வதந்திகளை_நம்பாதீர்
மிகப்பெரிய வளர்ச்சி கண்ட மாநிலத்தின் எதிர்காலத்தை சாதி- மத உணர்வுகளில் சிக்கி வீணாக்கி விடாதீர்கள்!
தமிழகத்தின் அரசியல் இதுவரை ஆக்கப்பூர்வமான அரசியலாகவே இருக்கிறது!
#மாற்று_என்பதே_மிகப்பெரிய_வலை
அதில் சிக்கிக் கொண்டால் இன்னொரு உத்திரபிரதேசமாக நாம் மாறி விடுவோம்!
தமிழக அரசியலே, இந்தியாவின் வழக்கமான அரசியலுக்கெதிரான மாற்று அரசியல்தான் என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள்!
இனியும் திராவிட ஆட்சிமுறையைப் பற்றியே, குறைசொல்லி திரியாமல் ஊழலற்ற ஆட்சியைத் தரக்கூடிய, நிர்வாகத் திறமை மிகுந்த, சுயநலம் அற்றதோர் அரசியல் தலைமையை கண்டுபிடியுங்கள் இளைஞர்களே!
#நன்றி: D L Nadarajan, Chennai.........
-
1967ல் திராவிட முன்னேற்ற கழகம்
179 தொகுகளை வென்று
ஆட்சியை பிடித்தது ......
பரங்கிமலை தொகுதி வெற்றி வீரர் ஆனார் எம்ஜிஆர்
பேரறிஞர் அண்ணா ஆட்சி அமைத்து முதலமைச்சர் ஆனார்
இயற்கையின் அழைப்பை ஏற்று 1969ல் அண்ணா வின்னுலகம் சென்றார்
1971 ல் அண்ணாவின் மறைவிற்க்கு பின்நடைபெற்ற பொதுத் தேர்தலில்
184 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைத்து திமுகழகம்
அதன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது எம்ஜிஆர்
காலங்கள் மாறியது காட்சிகள் மாறியது
அண்ணாவின் அரசு
கலைஞர் அரசாங்கமாக மாறியது
சர்வாதிகாரபோக்கு திமுகவில் நிலவியது
கருத்து வேறுபாடுகள் தோன்றியது.
எதிர் கட்சிகள்
ஆளும் கட்சி அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறின.
எதிர் கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள்
தி.மு.கழகத்தினர் சொத்துக்கணக்கை காட்ட வேண்டும்.
தங்கள் கை சுத்தமானது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் பேசினார்
இதனால்
1972ல் தூக்கி எறியப்பட்டார் எம்ஜிஆர்.
எம்ஜிஆரை நீக்கியது மட்டுமின்றி அவரின் ரசிகர்கள் நாடு முழுவதும் தாக்கப் பட்டார்கள்
ரசிகர்மன்றங்கள் பிய்த்து எறியப்பட்டது ...
எம்ஜிஆர் மன்றங்கள் தீக்கிரையானது...
எம்ஜிஆரை அச்சுறுத்தி பார்த்தார்கள் ...
தனது ரசிகன் தக்கப்படும் செய்தி கேட்டு கவலையடைந்தார் ...
வெகுண்டு எழுந்தார் எம்ஜிஆர்...
உருவானது அண்ணா திமுக
திமுகழத்திற்க்காக உழைத்து அண்ணாவை அரியணையில் அமர்த்தியது எம்ஜிஆர்
எம்ஜிஆரின் மக்கள் சக்தியை உணர்ந்து இருந்தார் பேரறிஞர் அண்ணா .
திமுகழகத்திற்க்காக தன் உயிரையும் கொடுக்க தயார் என்று முழங்கியவர் எம்ஜிஆர்
நான் இறந்து போனாலும் என் மீது கருப்பு சிவப்பு இரு வண்ணக் கொடிதான் போர்த்தப்பட வேண்டும் என்று உணச்சி பொங்க பேசியவர் எம்ஜிஆர்
அப்படிப்பட்ட எம்ஜிஆரை தூக்கிஎறிந்ததுதோடு
ரசிகர்கள்மீது தாக்குதல் நடைபெற்றதால்தான்
அண்ணாவின் பெயரில்
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உருவானது
இன்று வரை புரட்சித் தலைவர் mgr என்கிற மூன்று எழுத்து நாயகனால் வலுவான இயக்கமாக இருக்கிறது என்றால் ...
அதற்கு mgr என்கிற மூன்று எழுத்து மந்திரம் தான் காரணம்............
-
அதிகம் படிக்காதவர் என்று சொல்லப்பட்ட
இவர்தான் மக்களுக்கு தேவையான வாழ்க்கை நெறிமுறைகளை அதிகம் போதித்தவர்....
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பர்த்தவுடன் முதல் வணக்கம் வைப்பதுடன்
வணங்கி அன்போடு பேசக்கூடியவர்....
அடுக்கு மொழியில் பேசமாட்டார் ஆனால்
மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அடக்கமாக பேசி நெஞ்சத்தை அள்ளுவார்....
வக்கீல்களிடம் என் மகன் எம்.ஜி.ஆர் ரசிகன் தவறுசெய்திருக்கமாட்டான் என்று தாயே
வாதாடி ஜெயித்த வரலாறு இவருக்கு
மட்டுமே உண்டு...
அந்த பாரதரத்னா எம்.ஜி.ஆருடைய ரசிகர் என்று சொல்வதைவிட எங்களுக்கு பெரிய
கௌரவம் இல்லை.....
அவரைத் தவிர வேறு எவரையும் நாங்கள்
நினைப்பதுகூட இல்லை.....
வாழ்க புரட்சித் தலைவர் புகழ் .............
-
தொண்டனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எம்.ஜி.ஆர். இப்படியும் ஒரு தலைவரா..!?
சென்னை- திருச்சி சாலையில் எம்ஜிஆரின் 4777 அம்பாசிடர் கார் விரைந்துகொண்டு இருக்கிறது. வழக்கம்போல ஓட்டுனர் அருகே முன்சீட்டில் அமர்ந்திருக்கும் எம்ஜிஆருக்கு ஒரே ஆச்சரியம்!.காரணம் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் மூன்று பிரமுகர்களும் திடீரென ஊமையாகி விட்டார்கள்.
எம்ஜிஆர் நீண்ட தூரப்பயணங்களில் வழக்கமாக உடன் வரும் நண்பர்கள்தான் அவர்கள்.கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்கள் , பல ஆண்டுகளாக அவரோடு இரவு பகல் பாராமல் பயணித்துக்கொண்டு இருப்பவர்கள்தான்.
அன்றும் அவர்களை வழக்கம்போல வீட்டுக்கு அழைத்திருந்தார். எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டார்கள்,சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
அப்போதுதான் எம்ஜிஆர் அறைக்குள் போய் ஒரு பணகட்டும் சிறு நகைப் பெட்டி ஒன்றுமாக எடுத்துக்கொண்டு வந்து 'வாங்க ஒரு கல்யாணத்துக்கு போகலாம்' என்று மூவரையும் காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பிவிட்டார்.கார் தாம்பரம் வரும் வரை எல்லோரும் சாதாரணமாக பேசிக்கொண்டுதான் வந்தார்கள். எம்ஜிஆர், திடீரென நினைத்துக் கொண்டவராக,' ஆமா,நாம யார் வீட்டுக் கல்யாணத்துக்குப் போறோம் தெரியுமா? என்று பின் சீட்டில் இருந்தவர்களைப் பார்த்து கேள்வியையும் கேட்டுவிட்டு ,பதிலையும் அவரே சொன்னார் '............!' திருச்சி அருகில் இருக்கும் ஒரு ஊரைச்சேர்ந்த பிரமுகரின் பெயரைச்சொல்லி, அவர் வீட்டுக்கு கல்யாணத்துக்குத்தான் போய்கிட்டு இருக்கோம்' என்றார். அதுவரை கலகலப்பாக பேசிக்கொண்டு வந்த மூவரும், அந்த விநாடி முதல் அவர்கள் மூவரும் ஊமயாகி விட்டார்கள்.ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்,ஆனால் வார்த்தையும் வரவில்லை,மனதிலுள்ளதை தலைவரிடம் சொல்லும் தைரியமும் வரவில்லை.
இதை உணர்ந்து கொண்ட எம்ஜிஆர், என்ன விசயம் என்று கேட்க,மூவரும் வண்டி விழுப்புரம் போகும்வரை அந்தக் கல்யாண வீட்டுக்காரரின் மேல் அடுக்கடுக்காய் குற்றம் சாட்டுகிறார்கள்.
எம்ஜிஆர் வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கி கையைக் கட்டிக்கொண்டு சிந்திக்கிறார். அப்போதெல்லாம் அது சிங்கிள் ரோடு பெரும்பாலான வாகனங்கள் எல்லாம் போய்விட்டிருந்த நேரம்.அப்போதே மணி இரண்டாகிவிட்டது. சில் வண்டுகளின் சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருக்கிறது. அன்றைய பிரமுகர் வீட்டுக் கல்யாணத்திற்கு போகக் கூடாது என்று நண்பர்கள் சொல்வதில் நியாயமிருக்கிறது. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கையில்,சாலையின் இடதுபுறம் தூரத்தில் ஒரு இரட்டை இலை சீரியல் லைட்டுகள் எரிவது எம்.ஜிஆரின் கண்ணில் படுகிறது.
எம்ஜிஆர் காரில் ஏறிக்கொண்டு இரட்டை இலை வெளிச்சம் தெரிந்த இடத்தை நோக்கி காரை செலுத்தச் சொல்கிறார்.எல்லோருக்கும் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருக்கிறார்கள். கொஞ்ச தூரம் போனதும் இடது புறமாக பிரியும் ஒரு கிராமத்து சாலை பிரிகிறது. எம்ஜிஆர் அந்தச் சாலையில் காரைத் திருப்பச் சொல்கிறார்.மற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, அவர் கண்கள் மட்டும் அந்த இரட்டை இலை சீரியல் செட்டையே பார்த்துக்கொண்டே இருக்கின்றன.
நேரம் ஆக ஆக அந்த இரட்டை இலை பிரகாசமாகிக்கொண்டே வருகிறது. இப்போது சாலையின் வலதுபுறத்தில் ஒரு உள்ளடங்கிய கிராமத்தில் இருந்து அந்த இரட்டை இலை மட்டுமல்ல ' வெல்கம்' என்கிற சீரியல் செட்டும் தெரிகிறது. எம்ஜிஆர் காரை அங்கே விடச்சொல்கிறார்.கார் அந்த ஊருக்குள் நுழைகிறது. தெருநாய்கள் கூட உறங்கிவிட்ட நேரம். கார் அமைதியாகப் போய் நிற்கிறது. யாரோ ஒரு எளிய அ.தி.மு.க தொண்டனின் வீடு என்று தெரிகிறது,சின்னஞ்சிறு தென்னை ஓலை பந்தல்.அங்கங்கே சுருண்டு தூங்கும் கல்யாண விருந்தினர்கள். எதிர் வீட்டு பக்கத்து வீட்டு தின்னையில் உறங்கும் சொந்தங்கள்.
எம்ஜிஆர் காரை விட்டு இறங்குகிறார்.ஒரே ஒரு கட்டில் வாசிலில் போடப்பட்டு இருக்கிறது.அதில் ஒரு ஒல்லியான இளைஞன் தூங்கிக்கொண்டு இருக்கிறான். அவன் கையில் கட்டப்பட்டு இருக்கும் காப்பு அவன்தான் மணமகன் என்று காட்டுகிறது.எம்.ஜி.ஆர் குனிந்து அவன் கன்னத்தை தட்டுகிறார்,கண்விழித்துப் பார்த்த அவன் போட்ட ' தலைவரே' என்கிற கூச்சலில் அந்த ஊரே விழித்துக்கொள்கிறது.
அடுத்த விநாடி எல்லா விளக்குகளும் எரிகின்றன.யாருக்கும் என்ன நடக்கிறது என்றோ என்ன செய்யவேண்டும் என்றோ புரியவில்லை.ஓரமாக அடுக்கப்பட்ட இரும்பு மடக்கு சேர்களில் இருந்து ஒன்றை எடுத்து வந்து யாரோ போட எம்.ஜி.ஆர் அதில் அமர்ந்துகொள்கிறார்.அங்கிருந்த அனைவருக்கும் நடப்பது அத்தனையும் கனவா அல்லது நிஜமா என்று ஒரு பக்கம் குழப்பமாக இருந்தாலும் சிலர் 'தலைவரே. என்றும் 'எந்தெய்வமே..' என்று பரவசத்தில் பெருங்குரலெடுத்து கத்துகிறார்கள்.
அவர்களை மெதுவாக ஆசுவாசப்படுத்திக்கொள்ள விடுகிறார். சற்று நேரத்தில் அமைதியாகிறது அந்த இடம்.ஒருவர் மட்டும் எம்.ஜி.ஆர் அருகில் வந்து "அய்யா இப்படித் திடுதிப்புன்னு வந்திட்டிங்க..!? என்கிறார் பிரமிப்பு விலகாமல்." முகூர்த்தம் எத்தனை மணிக்கு ?" என்கிறார் எம்.ஜி.ஆர். " எங்க சாமியே வீட்டுக்கு வந்திருக்கு. இனி எல்லா நேரமும் முகூர்த்த நேரந்தானே " என்கிறார் பவ்வியம் காட்டியவர்.அப்புறம் என்ன?... திருமண நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்களும்,மணமக்களும் உடனடியாக குளித்து அலங்கரித்துக்கொள்ள, அப்போதே திருமணம் நடைபெற்று முடிகிறது.
தன்னை கனவிலும் எதிர்பார்க்காத ஒரு தொண்டன் வீட்டில் அழையாத விருந்தாளியாக நுழைந்து,அதிர்ச்சி விலகாத மணமக்கள் தாலிகட்டும் வரைக் காத்திருந்து,திருச்சி பிரமுகருக்குத் தர கொண்டுவந்த சங்கிலிகளை இருவருக்கும் பரிசளித்து,மணமகன் கைகளில் அந்தப் பணக்கட்டையும் தினித்துவிட்டு கிளம்பினாராம் எம்ஜிஆர்.அதனால்தான் அவர் 'புரட்சித்தலைவர். 'பொன்மன செம்மல்'!.........
-
#எம்ஜிஆர்_சுளிர்_பதில்கள்...
#ஒரு_ஃப்ளாஷ்பேக்
நீங்கள் நடிக்க வந்தது ஏன்?
வறுமைதான்.
நடிகன் ஆனதை உங்கள் பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா?
வேறு என்ன செய்ய முடியும்? பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்களே. பசியை போக்க நடிக்க வந்தேன். அதற்கு ஏன் தடை சொல்ல போகிறார்கள்.
முதல் அனுபவம் எப்படி? நடிப்பு சொல்லிக் கொடுத்தது யார்?
ஆறு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். நாடகம் பெயர் லவகுசா. அதில் நான் குசன். அந்த பாத்திரத்தை எப்படி நடிக்க வேண்டும் என்பதை என்னுடைய பள்ளி ஆசிரியர் சொல்லித் தந்தார். அவர் பெயர் ஞாபகம் இல்லை.
மேடையில் எப்படி அனுபவம்?
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தேன். அங்கே காளி என் ரத்தினம் நடிப்பு சொல்லித் தந்தார். அப்புறம் எம். கந்தசாமி முதலியார் கற்றுக் கொடுத்தார்.
பெண் வேடம் போட்டீர்களா? கதாநாயகன் வேடம் எது?
பல நாடகங்களில் பெண் வேடம் போட்டிருக்கிறேன். மனோகரா நாடகத்தில் முதல் தடவையாக கதாநாயகன் ஆனேன். மனோகரன் பாத்திரம்.
உங்களுக்கு பாட வருமா?
பின்னணி, டப்பிங் எல்லாம் அப்போது இல்லை. நடிப்பவர்கள் சொந்தக் குரலில் பாட வேண்டும். பாடத் தெரிந்தால்தான் கதாநாயகன் வேடம் கிடைக்கும். நானும் அதில் தப்பவில்லை.
சினிமாவுக்கு வந்தபோது கேமராவை பார்த்தபோது எப்படி இருந்தது?
வேல் பிக்சர்ஸ் என்று ஒரு ஸ்டுடியோ இருந்தது. பிற்பாடு அதுதான் வீனஸ் ஸ்டுடியோ ஆனது. அங்கேதான் முதல் ஷாட். எம்.கே.ராதா, என்.எஸ்.கே., டி.எஸ்.பாலையா உடன் இருந்தார்கள். எங்கள் எல்லாருக்குமே நாடக அனுபவம் இருந்ததால் கேமரா முன்னால் நடிக்க தயக்கம் இல்லே
நாடகம், சினிமா இரண்டில் உங்களுக்கு அதிக திருப்தி தருவது எது?
நாடகம். அதனால்தான் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் விடாமல் ஊர் ஊராக சென்று நாடகம் நடத்துகிறேன், நடிக்கிறேன். ஒரு காட்சி நன்றாக நடித்தால் மக்கள் உடனே கைதட்டி பாராட்டுவதை நாடக கொட்டகையில்தான் பார்க்க முடியும். சினிமாவில் அது முடியாதே.
நாடகத்துக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்?
நிறைய உண்டு. ஒன்றை சொல்கிறேன். என் தங்கை நாடகத்தில் நன்றாக அழுவேன். மக்களும் நன்றாக ரசித்தார்கள். அதனால் சினிமாவிலும் அசலாக அழ நினைத்தேன். கிளிசரின் போட மாட்டேன் என்று சொல்லி விட்டேன். அப்புறம் படம் பார்க்கும்போது நான் அழுத மாதிரியே இல்லை. கஷ்டப்பட்டு நான் விட்ட கண்ணீர் மொத்தமும் ஆர்க் லேம்ப் வெளிச்சத்தின் சூட்டில் உடனே உலர்ந்து விட்டது. பிறகுதான் நானும் கிளிசரின் பயன்படுத்த ஆரம்பித்தேன்.
பம்பாயில் நாடகம் போட்டீர்களே, எப்படி வரவேற்பு?
நாடகம் எப்படி என்பதை பார்த்தவர்கள்தான் சொல்ல வேண்டும். ஆனால் நல்ல வரவேற்பு. கடைசி நாளில் வந்தவர்கள் பலர், ‘ஆரம்பம் முதலே வராமல் தவற விட்டேனே' என்று வருத்தப் பட்டார்கள். பிருதிவிராஜ் வந்திருந்தார். பழைய அனுபவங்களை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டோம்.
உங்களை வளர்த்தது நாடகமா, சினிமாவா?
சினிமாவுக்கும் தாய் நாடகம்தானே. நடிப்பு கற்றுக் கொள்கிற பட்டறையாக நாடகம் இருக்கிறது. சினிமாவில் நிறைய வசதிகள், தொழில்நுட்ப உத்திகள் இருக்கிறது. காட்சிகளை நமது வசதிப்படி மாற்றி மாற்றி எடுக்கலாம். திரும்பத் திரும்ப எடுக்கலாம். பிறகு தேவை இல்லாததை வெட்டி எறிந்து விட்டு தொகுக்கலாம். ஒவ்வொரு காட்சிக்கும் மெருகூட்ட முடியும். நாடகத்தில் அப்படி இல்லை. ஒரே காட்சியில் சிரிப்பு, அழுகை, கோபம் என்று பல பாவங்களை வெளிப்படுத்த வேண்டும். சுருக்கமா சொல்வதென்றால் நாடகத்தில் நான் என் திறமையை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். சினிமாவில் மற்றவர்களின் திறமையில் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி பார்க்கும்போது இரண்டுமே என்னை வளர்த்தது என்பதுதான் சரி.
ஆங்கில படத்தில் நடிப்பீர்களா?
இங்கிலீஷே நமக்கு சரியா தெரியாதுங்க. இதுல இங்கிலீஷ் படத்துல நடிக்கிறதாவது. அடிமைப்பெண் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடந்தபோது ராஜ்ஸ்ரீ பிக்சர்ஸ் தாராசந்த் ஒரு விருந்து கொடுத்தார். இந்திப் படத்தில் நான் நடிக்கணும்னு சொன்னார். நான் பேசுகிற இந்தியை தாங்கிக் கொள்ளும் சக்தி இந்தி ரசிகர்களுக்கு இருக்குமானால் நடிக்கிறேன்னு சொன்னேன். இங்கிலீஷ் படத்துக்கும் அதுதான்
மலையாளம் தெரியுமா? மலையாள படத்தில் நடிப்பீர்களா?
தெரியும். முன்னோர் மலையாளிகள் என்றாலும் நான் பிறந்தது இலங்கை கண்டியில். அங்கிருந்து தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பேசவும் எழுதவும் தெரிந்த மொழி தமிழ்தான். மலையாளம் மட்டும் தெரிந்தவர்களுடன் அதில் பேசுவேன். மலையாளப் படம் தயாரித்து நடிக்கும் எண்ணமும் உண்டு. இந்தியிலும் அப்படி செய்ய விருப்பம்.
கடவுள் நம்பிக்கை உண்டா? கோயிலுக்கு போவீர்களா?
நிச்சயமா கடவுள் நம்பிக்கை உண்டு. கோயில்களுக்கு போவேன். 12, 13 வயதில் திருப்பதிக்கு இரண்டு தடவை போயிருக்கிறேன். அங்கே தாமரை மணி மாலை வாங்கினேன். ரொம்ப காலம் அதை கழுத்தில் அணிந்திருந்தேன். சிலர் நினைப்பது போல அது ருத்ராட்ச மாலை இல்லை. கோயில்களுக்கு போவேனே தவிர, அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் கிடையாது. வேண்டுவதுகூட தப்பில்லை. நமக்கு நேரும் கஷ்டங்களுக்கு கடவுளை குறை சொல்வதுதான் எனக்கு பிடிப்பதில்லை.
உங்களுக்கு குல தெய்வம் உண்டா?
காளி எங்கள் குல தெய்வம். காளியையும் விஷ்ணுவையும் தவறாமல் வணங்கி வந்தார் என் தாய். திருப்பதி வெங்கடாஜலபதி மேல் அவருக்கு ரொம்ப பக்தி.
உங்கள் வீட்டு பூஜை அறையில் எந்தெந்த கடவுளை வணங்குகிறீர்கள்?
என் வீட்டு பூஜை அறையில் இருப்பதெல்லாம் என் தாய், தந்தை, என் மனைவியின் தாய் தந்தை, மகாத்மா காந்தி ஆகியோரின் படங்கள்தான்.
நிறைய பேருக்கு உதவி செய்கிறீர்கள். நீங்கள் யாரிடமாவது உதவி கேட்டிருக்கிறீர்களா?
என்ன இப்படி கேட்டுட்டீங்க. நான் வளர்ந்ததே மற்றவர்கள் செய்த உதவிகளால்தான். என்றுமே அதை மறக்க மாட்டேன்.
அப்படி உதவி செய்தவர்களில் ஒருவரை சொல்லுங்களேன்?
கலைவாணர் அப்போது கீழ்ப்பாக்கத்தில் குடியிருந்தார். அவர் வீட்டில் கோவிந்தன் என்ற தோழர் வேலை செய்தார். மாதம் 15 ரூபாய் சம்பளம். அந்த நிலையில் எனக்கு ஒரு தேவை வந்தபோது 2 ரூபாயை உடனே எடுத்துக் கொடுத்தார். இன்றும் மனதில் நிறைந்து இருக்கும் அந்த நண்பனைத் தேடுகிறேன். கிடைக்கவில்லை.
ஸ்டுடியோ பணியாளராக இருந்து அதன் உரிமையாளராக உயர்ந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நெப்டியூன் ஸ்டுடியோவில் யாரோ ஒரு ஊழியனாக வேலை செய்தேன். முதலாளி ஜூபிடர் சோமு மிகப் பெரிய மனிதர். அனுபவத்திலும் ஆற்றலிலும் என்னைவிட எத்தனையோ மடங்கு உயர்ந்தவர். அவருக்கே இந்த நிலைமை என்றால் நானெல்லாம் எத்தனை காலம் முதலாளியாக இருந்துவிட முடியும் என்று தோன்றுகிறது. இதுதான் வாழ்க்கை. மனிதனின் உடல் நிரந்தரம் இல்லாதது; நீர்க்குமிழி போல் எந்த நொடியும் அழையக் கூடியது என்பார்கள். உடல் மட்டுமா? பெயர், புகழ், செல்வாக்கு எல்லாமும் அப்படித்தான். அதைத்தான் நினைத்துக் கொள்வேன்.
தமிழ் சினிமா முன்னேறி இருக்கிறதா?
சினிமா ஒரு கூட்டு முயற்சி. ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள ஆனால் வெவ்வேறான செயல்களின் விளைவுதான் ஒரு திரைப்படம். கதை, வசனம், காட்சி அமைப்பு, இசை, நடிப்பு, உடை, ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் என வேறு வேறு அம்சங்கள் இருக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு பிரிவிலும் தமிழ் சினிமா நிச்சயமாக முன்னேறி இருக்கிறது.
சினிமா விமர்சனம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஒரு பத்திரிகை என் நடிப்பு அற்புதம் என்கிறது. இன்னொரு பத்திரிகை மோசம் என்கிறது. மூன்றாவது பத்திரிகை அந்த இரண்டுக்கும் பொதுவாக என் நடிப்பு சுமார் என்கிறது. இதில் எதை நான் எடுத்துக் கொள்வது? எப்படி என் நடிப்பை திருத்திக் கொள்வது? இங்கே சினிமா விமர்சனம் பெரும்பாலும் இப்படிதான் இருக்கிறது. எம்ஜிஆர் என்ற நடிகனின் நடிப்பை மட்டும் பார்க்காமல் என் கட்சியை, என் கட்சியின் கொள்கையை என் தனிப்பட்ட வாழ்க்கையை மனதில் தேக்கிக் கொண்டு பார்ப்பதால் விமர்சனத்தின் நேர்மை கேள்விக்குறி ஆகிறது. படத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் குறைகளை அடுத்த படத்தில் நிவர்த்தி செய்து கொள்ள ஊக்கமாக விமர்சனம் இருந்தால் நல்லது என்பேன்.
சில படங்களில் நடிக்க நீங்கள் மறுத்து விட்டதாகவும், சில படங்களில் நடிக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மையா?
இரண்டு படங்கள். ஒன்று காத்தவராயன். இன்னொன்று லலிதாங்கி. இரு படங்களில் இருந்து விலகினேன். ஆனால் பத்திரிகைகள் கூறும் காரணங்களால் அல்ல. சாமி கும்பிட மறுத்து விலகினேன் என்பது தவறு. கடவுள் வழிபாடு என்பது அவரவர் சொந்த விஷயம். காத்தவராயன் படத்தில் மாந்தரீக காட்சிகள் நிறைய. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என் மாமன் ஒருவர் மாந்தரீகனாக இருந்தார். எனவே எனக்கு நன்றாக தெரியும். மாந்தரீகம் ஒரு பித்தலாட்டம். மந்திரத்தில் மாங்காய் விழாது. படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவனும் சினிமா பார்க்கிறான். அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன். நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது. அதனால் ஒப்பந்தம் போடும்போதே அதையெல்லாம் மாற்றினால்தான் நடிப்பேன் என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பிறகு பின்வாங்கினார்கள். கர்ண பரம்பரையாக சொல்லப்படும் கதையை மாற்றினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். நான் விலகாமல் என்ன செய்வது?
அப்படித்தான் லலிதாங்கியும். அதில் கதாநாயகன் எல்லா பெண்களும் விபசாரிகள் என்கிறான். தாய்க்குலத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லிவரும் நான் எப்படி அதை உச்சரிக்க முடியும்? லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலமே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன். இதுதான் நடந்தது.
ஹீரோ விரும்புகிற மாதிரியெல்லாம் கதையை மாற்றினால் பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர் கதி என்னாவது?
ஒன்றும் ஆகாது. நான் நடிகன் மட்டுமல்ல. படம் எடுத்திருக்கிறேன். இயக்கியும் இருக்கிறேன். எவ்வளவு காலமாக நடித்துக் கொண்டிருக்கிறேன். என்ன செய்தால் படம் ஓடும் என்பது தெரியும். மதுரை வீரன் படமும் காத்தவராயன் மாதிரி கர்ணபரம்பரை கதைதான். வெள்ளையம்மாள் பாத்திரம் படுமோசமாக சித்தரிக்கப் பட்டிருக்கும். படத்தில் அந்த பாத்திரத்தை வேறுமாதிரி மாற்ற ஆலோசனை சொன்னேன். தயாரிப்பாளர் சம்மதித்தார். படம் பெரிய வெற்றி. அதே மாதிரி மலைக்கள்ளன் படத்திலும் அலிபாபாவும் 40 திருடர்கள் படத்திலும் சில ஆலோசனைகளை சொன்னேன். பட முதலாளிகள் ஏற்றுக் கொண்டு மாற்றியமைத்தார்கள். அந்த படங்களும் பெரும் வெற்றி பெற்றன. என்னுடைய கருத்தை நான் திணிப்பதாக நினைப்பது தவறு. என்னுடைய அனுபவத்தை அதில் கிடைத்த அறிவை பட முதலாளிகள் பயன்படுத்திக் கொள்ள நான் அனுமதிக்கிறேன், அவ்வளவுதான்.
சம்பளம் வாங்கும் நடிகர் அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நடித்துவிட்டு போவதுதானே முறை? நீங்கள் செய்வது சர்வாதிகாரம் ஆகாதா?
ஊதியம் வாங்கும் பணியாளன் என்றாலும், நடிகனுக்கும் சமூக கடமைகள் உண்டு. அர்த்தமில்லாத, போலியான, பித்தலாட்டமான மூடத்தனமான காட்சிகளை அமைத்து மக்களை நம்ப வைக்க முயன்றால் அது தப்பில்லையா? அதற்கு நடிகன் உடந்தையாக இருக்க முடியுமா? நம்பத்தகுந்த, நம்பக்கூடிய காட்சிகள் என்றால் பரவாயில்லை. நம்பவே முடியாத, தர்க்க ரீதியாக ஏற்க முடியாத காட்சிகளை திணித்து மக்களிடம் காசு பறிக்க முயல்வது பேராசை. அதை ஒரு நடிகன் என்ற முறையில் நான் அனுமதிக்க முடியாது.
பத்து இருபது பேரை ஏக காலத்தில் தன்னந்தனியாக அடித்து வீழ்த்துவது மட்டும் நம்பக் கூடியதா?
தமிழ் சினிமாவில் வந்தால் மட்டும் நம்ப மாட்டீர்களா? புராணங்களில் அப்படி வரும் காட்சிகளை மக்கள் ரசிக்கத்தானே செய்கிறார்கள். மகாபாரதம் கதையில் அர்ஜுனன் பெரிய வில் விற்பன்னர்களுடன் மோதுகிறான். சிக்கலான வியூகத்தை எளிதாக உடைத்து, எதிரிகள் அத்தனை பேரையும் முறியடித்துவிட்டு திரும்புகிறான். அதை நம்பி ஏற்றுக் கொள்கிறீர்கள். அர்ஜுனனால் அது சாத்தியம் என்றால் என்னை போன்ற ஹீரோக்களால் இதுவும் சாத்தியம்தான்.
வயதுக்கு பொருந்தாத பாத்திரங்களில் நடிக்கிறீர்களே?
விமர்சகர்கள் சொல்கிறார்கள். மக்கள் அப்படி என்னைச் சொல்லவில்லையே. தவிர இன்னொன்றையும் கவனியுங்கள். 25 வயது நடிகன் கல்லூரி மாணவனாக நடிப்பது புதுமையல்ல. அவனே மேக்கப் போட்டு முதியவனாக நடிப்பதும் சுலபம். தத்ரூபமாக நடித்ததாக அதை பாராட்டவும் செய்கிறார்கள். ஆனால், வாலிப பருவத்தை கடந்த ஒரு நடிகன் தொடர்ந்து இளைஞனாக நடிப்பதும், மக்கள் அதை ஏற்றுக் கொண்டு பாராட்டுவதும் சுலபமான காரியம் அல்ல. அந்த கடினமான காரியத்தை நான் செய்து அதற்கு மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறேன். இதைப்போய் சிலர் குறை கூறுகிறார்கள்.
உங்கள் படங்கள் சரியாக ஓடாததால் அரசியலில் தீவிரம் காட்டுவதாக சொல்கிறார்கள். நடிப்பதை நிறுத்திக் கொள்ளும் எண்ணம் இருக்கிறதா?
வியாபரம் ஓகோ என்று நடக்கும்போது யாராவது கடையை மூட நினைப்பார்களா? என் படங்களின் வசூலில் எந்த குறைவும் இல்லை. நீங்கள் வேறு யாரையும் கேட்க தேவையில்லை. என் படம் ஓடும் எந்த தியேட்டருக்கு போனாலும் நீங்களே தெரிந்து கொள்ளலாம். இதோ, சமீபத்தில் வெளியான என் படத்துக்கு 1 ரூபாய், 20 பைசா டிக்கெட், தியேட்டருக்கு வெளியே 16 ரூபாய்க்கு விற்கப்படுவதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது.
கோயில், கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நீங்கள் நடிக்க மாட்டீர்களாமே?
அது வெறும் வதந்தி. யார் கிளப்பியதோ தெரியாது. நான் கடவுள் மறுப்பாளன் கிடையாது. ஜெனோவா படத்தில் நடித்தேன். பரமபிதாவில் நடிக்கிறேன். பெரிய இடத்து பெண் படத்தில் எல்லாரையும் கோயிலுக்கு அழைத்து செல்வேன். சமீபத்தில் மருதமலை கோயிலுக்கு போய் வந்தேன்.
பிறகு ஏன் பக்தி படங்களில் நடிப்பதில்லை?
படம் எடுத்து அல்லது படத்தில் நடித்துதான் பக்தியை வளர்க்க முடியுமா. அப்படி இல்லை. பக்தி என்பது பரிசுத்தமானது. முன்பெல்லாம் மனசையே கோயிலாக்கி கடவுளை அதில் அமர்த்தி வைத்திருந்தார்கள். மனசு அழுக்கானதாலோ என்னவோ பிறகு கடவுளை கோயிலுக்கு அனுப்பி விட்டார்கள். எங்கு பார்த்தாலும் கோயில்கள். இத்தனை கோயில்களை வைத்துக் கொண்டு வளர்க்க முடியாத பக்தியை சினிமா படங்களா வளர்த்து விடப் போகிறது? என்னை பொருத்தவரை தாயிடம் அன்பு, தந்தையிடம் மரியாதை, ஆசானிடம் பயபக்தி, நண்பனிடம் பாசம், ஏழையிடம் இரக்கம். இந்த பண்புகள்தான் மனதை தூய்மையாக்கும். மனம் தூய்மையானால் அதுதான் பக்தி. கடவுளாக வேஷம் போடாமலே அந்த பக்தியை நான் பரப்பிக் கொண்டுதான் இருக்கிறேன்.
திடீரென்று வெள்ளை தொப்பி போட என்ன காரணம்?
அடிமைப்பெண் ஷூட்டிங் நடத்த ராஜஸ்தான் சென்றபோது பாலைவனத்தில் வெயில் தாங்க முடியாமல் இருந்தது. ஒருத்தர் இந்த தொப்பியை கொடுத்து, ‘தலையில் போட்டுக்குங்க, வெயிலுக்கு இதமா இருக்கும்' என்றார். அப்ப்டித்தான் இருந்தது. பிறகு தேர்தல் வந்தது. பிரசாரத்துக்கு வெயிலில் மழையில் ரொம்ப சுற்ற நேர்ந்தது. அப்படியே தொப்பியை பழக்கமாக்கிக் கொண்டேன்.
வேறு மாதிரி காரணம் சொல்கிறார்களே?
தெரியும். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனக்கு எது தேவையோ அதை நான் பயன்படுத்துகிறேன். என் தலையில் முடி இல்லை என்றே வைத்துக் கொள்வோம். உடனே நான் எம்ஜிஆர் இல்லை என்று சொல்லி விடுவீர்களா, என்ன? இந்தி சினிமா நடிகர்கள் நிறைய பேர், என்னைவிட வயதில் குறைந்தவர்கள் தலையில் விக் இல்லாமல் வெளியே வருவதில்லை. அதுக்கு என்ன சொல்வீர்கள்? யார் என்ன சொல்வார்களோ என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் எதுவும் செய்ய முடியாது. முன்பு ஜிப்பா போட்டேன். அப்புறம் காலர் வைத்த முழுக்கை சட்டைக்கு மாறினேன். அதை ஏதோ பேசினார்கள். ஒருநாள் சட்டையில் கை கிழிந்து விட்டது. சுருட்டி விட்டிருந்தேன். அதை பார்த்ததும், ‘எம்ஜிஆர் ரவுடி மாதிரி சட்டையை சுருட்டி விட்ருக்கார், பாரு' என்றார்கள். இதுக்கெல்லாம் நான் என்ன பதில் சொல்ல முடியும்.
சினிமாவில் உங்களுக்கு எதிரிகள் உண்டா?
என்னைச் சுட்டது கூட பாசத்தால் என்கிறீர்களா? எதிரி யாருக்குதான் இல்லை? மனிதன் பிறக்கும்போதே அதுவும் தோன்றி விடுகிறது. தளர்ச்சி, அயர்ச்சி, பலவீனம் என்று இயற்கை எத்தனை தடைகளை மனிதன் மீது சுமத்துகிறது. அதைவிட பெரிய எதிரி என்று யாரும் இல்லையே. அதையெல்லாம் தாண்டித்தானே வளர்கிறோம். சினிமாவில் அப்படி எதிர்ப்பு, ஆதரவு கலந்துதான் இருக்கும். மேக மூட்டம் மாதிரி. மேகத்தை பார்த்ததும் இங்கு மழை பெய்யும் என எதிர்பார்ப்போம். எங்கிருந்தோ வரும் காற்று மேகத்தை தள்ளிக் கொண்டு போய்விடும். மழை வேறு எங்கோ பெய்யும். எதிர்ப்பை அப்படித்தான் எடுத்துக் கொள்வேன்.
எந்த எதிர்ப்பையும் தாங்கும் இந்த மனப் பக்குவம் எப்படி வந்தது?
இன்று நான் பெரிய நடிகன். வசதியாக வாழ்கிறேன். எனது வளர்ச்சி சிலரை பாதிக்கலாம். எனக்கு சிலர் தரும் ஆதரவு பலரை பாதிக்கலாம். நானே தெரியாமல் சில தவறுகள் செய்திருக்கலாம். இந்த காரணங்களால் எதிரிகள் உருவாகலாம். ஆனால் இந்த காரணங்கள் எதுவுமே இல்லாத காலத்தில் பல துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்து பரிதாப நிலையில் வாழ்ந்தேனே, அதற்கு யாரை குற்றம் சொல்ல முடியும்? அந்த நிலையை நினைத்துப் பார்க்கும்போது இன்று எல்லா எதிர்ப்பும் சாதாரணமாக தெரிகிறது.
சினிமாவுக்கு புதுசு புதுசாக நடிகர் நடிகைகள் வருவது நல்லதா?
நிசயம் நல்லது. ஆனால் அப்படி நடக்கவில்லை. பயிற்சி பெறாதவர்கள் வந்தால் நீடிக்க முடிவதில்லை. இப்படியே போனால் நடிகனுக்கு பஞ்சம் வந்து விடும்.
அதற்காக நீங்கள் ஏதாவது செய்யக் கூடாதா?
செய்ய வேண்டும். 1948-ம் ஆண்டிலேயே இது பற்றி ஜூபிடர் சோமுவுடன் பேசி இருக்கிறேன். புதிதாக நாடக கம்பெனிகளை உருவாக்க வேண்டும். அதில் சிறப்பாக நடிப்பவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தர வேண்டும். அவர்கள் அவ்வப்போது நாடகத்திலும் நடிக்க வேண்டும் என்று ஒரு திட்டம் போட்டேன். அது நடக்கவில்லை.
அதோடு விட்டு விட்டீர்களா?
நடிகர் சங்கத்தில் இதை விவாதித்தோம். சிறந்த எழுத்தாளர்களை அழைத்து நாடகம் எழுத சொல்வோம். அமெச்சூர் நாடக நடிகர்களை அதில் நடிக்க சொல்வோம். பட முதலாளிகள் அந்த நாடகங்களை பார்த்து திறமையானவர்களை தேர்வு செய்யட்டும். அவர்களுக்கு சினிமா வய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சங்கத்தில் தீர்மானமே போட்டோம்.
அதுவும் நடக்கவில்லையா?
நடக்கவில்லை. பிறகு பட முதலாளி என்ற வகையில் ஃபிலிம் சேம்பரில் ஒரு யோசனை சொன்னேன். ஒரு நடிகனை ஒரே நேரத்தில் 6 படங்களுக்கு மேல் ஒப்பந்தம் போடக்கூடாது. அப்படி உச்சவரம்பு வைத்தால் புது நடிகர்கள் வர வழி கிடைக்கும் என்று சொன்னேன். இப்படி பல யோசனைகள் சொல்லியும் ஏனோ நடக்கவில்லை.
நடிகர் சங்கம் மூலமாக நடிப்பு பயிற்சி அளிக்கலாமே?
அதையும் முயற்சி செய்து பார்த்தேன். ஒவ்வொரு வருடமும் நாடக போட்டி நடத்தி, அதில் முக்கியமான வேடங்களை புதுமுகங்களும் சின்னச் சின்ன வேடங்களை பிரபல நடிகர்களும் ஏற்று நடிக்க வேண்டும். புதிய நடிகர்களின் திறமையை அதில் வெளிப்படுத்தி சினிமா உலக முக்கியஸ்தர்கள் அதை அங்கீகரிக்க செய்ய் வேண்டும் என்று முயற்சி செய்தேன். பலரும் ஒத்துழைப்பு தந்தார்கள். ஆனால் சில முக்கிய புள்ளிகள் இடையூறாக இருந்து திட்டத்தையே நடக்க விடாமல் தடுத்து விட்டார்கள். நடிப்புக்கென்று தனியாக பள்ளிகள் இல்லாததால் சங்கம்தான் அதை எடுத்து செய்ய வேண்டும்.
உங்களை போல மற்ற நடிகர்கள் ஏன் ஏழைகளுக்கு வாரி வழங்குவது இல்லை?
வாரியெல்லாம் நான் வழங்குவதில்லை. தேவைகளைப் பார்த்துக் கொடுக்கிறேன். அதிலும், உதவி கேட்ட எல்லாருக்கும் செய்ய முடியவில்லை என்ற வருத்தம் உண்டு. மற்ற நடிகர்கள் செய்யவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவரவர் வசதிக்கு ஏற்ப கொடுத்துக் கொண்டுதான் இருப்பார்கள். வெளியே தெரியாமல் இருக்கலாம். கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்?.........
-
1000 பாடல்களுக்கு மேல் எழுதிய கவிஞர் முத்துலிங்கம்
எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் உள்பட பிரபல நடிகர்கள் நடித்த படங்களுக்கு பாடல் எழுதியவர், கவிஞர் முத்துலிங்கம்.
இவருடைய சொந்த ஊர் சிவகங்கை. பெற்றோர்: சுப்பையா சேர்வை - குஞ்சரம் அம்மாள்.
சிவகங்கையில் உள்ள அரசர் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார்.
சிறு வயதிலேயே கவிதை எழுதுவதில் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். கவிஞர் சுரதா நடத்திய "இலக்கியம்'' என்ற கவிதை இதழில், இவருடைய முதல் கவிதை பிரசுரமாயிற்று.
1958-ல் எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன்'' படம் வெளிவந்தது. அந்த படம் பற்றி, சுரதா ஒரு கவிதைப்போட்டி நடத்தினார். "நாடோடி மன்னன் போல் நல்ல திரைப்படமும் ஓடோடி வாரா உயர் தமிழில்...'' என்று தொடங்கும் கவிதை எழுதி பரிசு பெற்றார், முத்துலிங்கம்.
இந்தப் பாடலைப் பார்த்த முத்துலிங்கத்தின் நண்பர்கள், "கவிதை நன்றாக இருக்கிறது. சுரதா மூலம் எம்.ஜி.ஆரை சந்தித்தால், நீயும் சினிமாவுக்குப் பாடல் எழுதலாம்'' என்று கூறினார்கள். நண்பர்கள் கொடுத்த ஆர்வம்தான், திரைப்பட பாடலாசிரியர் ஆக வேண்டும் என்ற ஆசையை முத்துலிங்கத்தின் உள்ளத்தில் வளரச் செய்தது.
படிப்பு முடிந்தது, திரைப்படக் கவிஞர் ஆகவேண்டும் என்ற ஆசையுடன் முத்துலிங்கம் சென்னைக்கு வந்தார். ஆனால், உடனடியாக அந்த ஆசை நிறைவேறவில்லையென்றாலும், "முரசொலி'' பத்திரிகையில் துணை ஆசிரியர் ஆனார்.
அப்போது கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்த கவியரங்குகளில் கலந்து கொண்டு கவிதை பாடும் வாய்ப்பைப் பெற்றார்.
இந்தக் கட்டத்தில், வசனகர்த்தா பாலமுருகனின் நட்பு கிடைத்தது. அவர் முயற்சியால், டைரக்டர் மாதவனுக்கு சொந்தமான அருண்பிரசாத் மூவிஸ் தயாரித்த "பொண்ணுக்கு தங்க மனசு'' என்ற படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு, முத்துலிங்கத்துக்கு கிடைத்தது.
இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். அப்போது இளையராஜா அவரிடம் உதவி இசை அமைப்பாளராக இருந்தார்.
இளையராஜா போட்டுக்காட்டிய மெட்டுக்கு, முத்துலிங்கம் "தஞ்சாவூருச் சீமையிலே - கண்ணு தாவி வந்தேன் பொண்ணியம்மா'' என்ற பாடலை எழுதி, திரை உலகில் காலடி எடுத்து வைத்தார்.
இந்தப் படத்தில் சிவகுமார், விஜயகுமார், ஜெயசித்ரா, விதுபாலா ஆகியோர் நடித்தனர். விஜயகுமாருக்கு இது முதல் படம்.
தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். விலகி, அ.தி.மு.க.வை தொடங்கியபோது, முத்துலிங்கம் அ.தி.மு.க.வில் சேர்ந்து பொதுக்கூட்டங்களில் பேசினார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு நாள், தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆரின் அலுவலகத்துக்கு முத்துலிங்கம் சென்றார். எம்.ஜி.ஆர். மாடியில் இருந்தார். அவருடன் `இன்டர்காம்' டெலிபோனில் முத்துலிங்கம் பேசினார்.
"நீங்கள் வேலை இல்லாமல் சிரமப்படுகிறீர்கள். மானேஜர் குஞ்சப்பனிடம் சொல்லி உங்களுக்குக் கொஞ்சம் பணம் தரச் சொல்கிறேன். வாங்கிக் கொள்ளுங்கள்'' என்று எம்.ஜி.ஆர். கூறினார்.
அதற்கு முத்துலிங்கம், "பணம் வேண்டாம். எனக்கு வேலை கொடுங்கள்'' என்றார். "வேலை கொடுக்கும்போது கொடுக்கிறேன். இப்போது பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்'' என்று எம்.ஜி.ஆர். கூறியும், முத்துலிங்கம் பணத்தை வாங்கிக் கொள்ளவில்லை.
முத்துலிங்கத்தின் மனதைப் புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., தொடர்ந்து தன் படங்களில் பாட்டு எழுதும் வாய்ப்பை கொடுத்தார்.
எம்.ஜி.ஆர். நடித்த "உழைக்கும் கரங்கள்'' (1976) படத்துக்கு, முத்துலிங்கம் இரண்டு பாடல்கள் எழுதினார்.
"கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில்'' என்று தொடங்கும் பாடலை வாணி ஜெயராம் பாடினார்.
"முத்துலிங்கம் எப்படி எழுதுகிறார்?'' என்று இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் எம்.ஜி.ஆர். கேட்டபோது, "முத்துலிங்கம் பாடலில் மீட்டரும் சரியாக இருக்கிறது; மேட்டரும் சரியாக இருக்கிறது'' என்றார், விஸ்வநாதன்.
எம்.ஜி.ஆர். நடித்த "இன்றுபோல் என்றும் வாழ்க'' படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடல் எழுதிக் கொண்டிருந்தார், முத்துலிங்கம். "ஏர்கண்டிஷன்'' அறையில் அவருக்கு சிந்தனையோட்டம் தடைபட்டது. எனவே, அறைக்கு வெளியே வந்து, அங்கிருந்த சவுக்குக் கன்றுகளை தொட்டபடி, பாடலுக்கான கருத்தை சிந்தித்துக் கொண்டே நடந்தார்.
அதைப்பார்த்த பட அதிபர், "என்னய்யா இவன்! மரத்தைப் பிடிக்கிறான், மட்டையைப் பிடிக்கிறான்! பல்லவியை படிக்கமாட்டேன் என்கிறானே!'' என்று கூறினார்.
இது, முத்துலிங்கத்தின் காதில் விழுந்தது. "ஆம். நான் அதைப் பிடிப்பேன், இதைப்பிடிப்பேன். எதையும் பிடிக்காதவர்களாகப் பார்த்து, உங்களுக்குப் பிடித்தபடி பல்லவியை எழுதிக்கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டு, கோபமாக வெளியேறினார்.
பின்னர் டைரக்டர் கே.சங்கரும், எம்.எஸ்.விஸ்வநாதனும் அவரை சமாதானப்படுத்தினார்கள். "சினிமா உலகில், பலரும், பலவிதமாகப் பேசுவார்கள். அதற்காகக் கோபப்பட்டால் முன்னுக்கு வரமுடியாது. பாடல் எழுதுவதில் உங்கள் திறமையைக் காட்டுங்கள்'' என்றார்கள்.
அதன்பின் முத்துலிங்கம் எழுதிய பாட்டு, "சூப்பர்ஹிட்'' பாடலாக அமைந்தது.
அன்புக்கு நானடிமை - தமிழ்ப் பண்புக்கு நானடிமை - நல்ல கொள்கைக்கு நானடிமை - தொண்டர் கூட்டத்தில் நானடிமை - இதுவே அந்தப் பாடல்.
எம்.ஜி.ஆருக்கு பாட்டெழுதும்போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி முத்துலிங்கம் கூறியதாவது:-
"எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை இசைக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். இசைக்கேற்றபடி கருத்துக்கள் வரவில்லையென்று கருதினால், பாடலை எழுதச்சொல்லி அதற்கேற்ப மெட்டமைக்கச் சொல்வார்.
``மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' படத்திற்குப் பாடல் எழுதும்போது, ஒரு காட்சிக்கான பாடலை, அவருக்கு மன நிறைவு ஏற்படும்வரை எழுத பலநாட்களாகி விட்டன.
"இதில் கவித்துவம் இருக்கிறது; கருத்துக்கள் இல்லை. இதில் கருத்துக்கள் இருந்தாலும், வன்முறையைத் தூண்டுவதுபோல் இருக்கிறது. இதில் எல்லாம் இருக்கிறது என்றாலும், நான் நினைப்பது போல் இல்லை'' என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றைக் குறை கூறிக் கொண்டே இருந்தார். `நான் நினைப்பதுபோல் இல்லை'யென்றால், என்ன நினைக்கிறார் என்று அவர் சொல்ல வேண்டுமல்லவா? சொல்லமாட்டார்.
அவர் சொல்லாமலேயே அவர் நினைப்பதை யார் புரிந்து கொண்டு எழுதுகிறார்களோ அவர்கள்தான் அவர் படத்தில் தொடர்ந்து பாடல்கள் எழுதமுடியும். அப்படிப் புரிந்து கொண்டு எழுதியவர்களில் நானும் ஒருவன்.
ஒரு நாள் அந்தப் படத்திற்குப் பாடல் எழுத வேண்டிய அந்தக் காட்சிக்கு சில மெட்டுக்களைப் போட்டு அதற்குப் பல்லவியும், அனுபல்லவியும் அண்ணன் எம்.எஸ்.வி. அவர்கள் என்னை எழுதச் சொன்னார். எழுதிய பிறகு அதை `டேப்'பில் அவரே பாடிப் பதிவு செய்து, மைசூரில் இதே படத்திற்காகப் படப்பிடிப்பிலிருந்த எம்.ஜி.ஆரிடம் சென்று காண்பித்து ஒப்புதல் வாங்கி வாருங்கள் என்று என்னை அனுப்பி வைத்தார்.
அதை எம்.ஜி.ஆர். கேட்டுவிட்டு "எல்லாமே நன்றாக இருக்கிறது. இதை இப்படியே ஒரு பாட்டாக்கி ஒலிப்பதிவு செய்து விடுங்கள்'' என்றார். அந்தப்பாடல் இதுதான்:
"தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
ஒற்றுமையால் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்''
இந்தப் பாடல், உலகெங்கும் உள்ள இலங்கைத் தமிழர்கள் விரும்பக்கூடிய பாடல். அதே நேரம், இலங்கை வானொலியில் 1983-க்குப்பிறகு தடை செய்யப்பட்ட பாடல்! இந்தப்பாட்டின் இறுதியில் "வீரம் உண்டு வெற்றி உண்டு; விளையாடும் களம் இங்கே உண்டு; வா வா என் தோழா; பூனைகள் இனம் போலப் பதுங்குதல் இழிவாகும்; புலியினம் நீயெனில் பொருதிட வாராய்'' என்று எழுச்சியோடு சில வரிகள் வரும்.
இதனால் தடை போட்டார்களோ என்னவோ தெரியவில்லை.''
இவ்வாறு முத்துலிங்கம் கூறினார்..........
-
இரங்கல் செய்தி*
-------------------------
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*சகோதரர்*திரு.எம்.ஜி.சக்கரபாணி அவர்களின்*மகன் திரு.சந்திரன் உடல் நல குறைவால்*மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை*பலனின்றி உயிர் இழந்தார்*என்ற செய்தி கேட்டு*மிகுந்த துயரமுற்றேன் . அன்னாரின் ஆன்மா சாந்தி*அடைய*இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும்*. திரு.சந்திரன் அவர்கள் பிரிவால்*வாடும்*அவரது*குடும்பத்தினர் ,நண்பர்கள் அனைவருக்கும் ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்*குழு சென்னை சார்பில்*ஆழ்ந்த இரங்கலையும் ,அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் .
ஆர். லோகநாதன் .
-
இலங்கையில் "நீரும் நெருப்பும்" திரைக்காவியம் ஓடிய சாதனைகள்* சில!.........
01.01 1972 ல் திரையிடப்பட்ட மக்கள் திலகத்தின் மாறுபட்ட இரு வேடங்களில் பவனி வந்த நீரும் நெருப்பும் திரைக்காவியம் கொழும்பிலுள்ள ஜெயின்ஸ்தான் திரையரங்கில் 84நாட்களும் ஈரோஸ் திரையில் 45 நாட்களும் நவா திரையில் ஏழு நாட்களும் காண்பிக்கப்பட்டு மொத்தம் 136 நாட்கள் கொழும்பில் முதல் கட்டமாக ஓடிய திரைப்படம் நீரும் நெருப்பும்.
01.01 1972 ல் யாழ்ப்பாணம் நகரில் காலை 6 மணிக்கு முதல் காட்சி துவங்கியது. தொடர்ந்து ஆறு காட்சிகளும் அரங்கு நிறைந்து சாதனை. இரண்டாவது நாளில் 5 காட்சி நடைபெற்றது 5 காட்சியும் அரங்கு நிறைந்து சாதனை. தொடர்ந்து நான்கு காட்சிகள் வீதம் காண்பிக்கப்பட்டு மொத்தம் ராஜா திரையரங்கில் 65 நாட்கள் ஓடியது நீரும் நெருப்பும்.
16 .02 .1972 திரிகோணமலை சரஸ்வதி தியேட்டரில் திரையிடப்பட்ட நீரும் நெருப்பும் திரைப்படம் 50 நாட்களை கடந்து சாதனை படைத்தது. இலங்கையில் நீரும் நெருப்பும் திரைப்படம் பல பகுதியில் திரையிடப்பட்டு சாதனையாகும்.
அடுத்து இலங்கையில் ரிக்க்ஷாக்காரன் திரைக்காவியம் 18.2 .72 ல் திரையிடப்பட்டு சாதனை படைத்தது. கொழும்பில் 4 திரையில் திரையிடப்பட்டது மக்கள் திலகத்தின் ரிக்க்ஷாக்காரன். கொழும்பு கேப்பிட்டல், கிங்ஸ்லி பிளாசா, சபையர் ஆகிய நான்கு திரைகளில் .....
கிங்ஸ்லி அரங்கில் 20 நாட்களும், பிளாசா திரையில் 35 நாட்களும், சபையர் திரையில் 12 நாட்களும், கேப்பிட்டல் திரையில் 78 நாட்களும் ஓடி கொழும்பில் மொத்தம் 145 நாட்கள் ஒடி சாதனை படைத்தது.
யாழ் நகரில் வெலிங்டன் திரை மற்றும் லிடோ திரையரங்கில் திரையிடப்பட்ட ரிக்க்ஷாக்காரன் லிடோ அரங்கில் 29 நாட்களும், வெலிங்டன் தியேட்டரில் 72 நாட்களும் வெற்றி முரசு கொட்டி முதல் வெளியீட்டில் 101 நாட்கள் ஒடியது. ஒரே நாளில் ஆறு காட்சிகள்
காண்பிக்கப்பட்டு 12 காட்சிகளும் அரங்கு நிறைந்து அதன் பின்பு ஐந்து காட்சிகள் திரையிடப்பட்டு அரங்கு நிறைந்து தொடர் சாதனை புரிந்தது....
இலங்கையில் தொடர்ந்து இடைவெளி இல்லாது வந்து மகத்தான சாதனையை படைத்த இரண்டு காவியங்கள்...
நீரும் நெருப்பும்
ரிக்க்ஷாக்காரன்...
கணேசனின் இரண்டு படங்கள்
ராஜா... ச.சமாளி* சாதனையின்றி கிடந்தது....
மேலே மக்கள்திலகம் செய்த சாதனையை பார்த்து முக்காடிட்டு மூலையில் ஒதுங்கி நின்றனர்.*
தகவல்
அ.டேவிட்
57,டேவிட் ரோட்,
யாழ்பாணம்
இலங்கை.........