https://scontent-ort2-1.xx.fbcdn.net...c8&oe=5FF59B82
Printable View
உலகம் சுற்றும் வாலிபன் வசூல் பித்தலாட்டம்
வாத்தி ஆதரவு ஏடுகளே ஒன்றுக்கொன்று முரண்.
கொழும்பு கிங்ஸ்லி ஓடிமுடிய 40 நாட்கள் வசூல் 2,03,545.50 என யாழ்நகரின் எம் ஜீ ஆர் ஏடு எழுதியுள்ளது.
அங்கு 31 நாட்கள் வசூல் 1, 36, 156.35 என கொழும்பு எம் ஜீ ஆர் ஏடு எழுதியுள்ளது.
இவர்களது கணக்குப்படி கிங்ஸ்லி அரங்கில் கடைசி 9 நாட்கள் வசூல் 67,389.15
இதன்படி இறுதி 9 நாட்களின் 1 நாள் சராசரி வசூல் 7500.00 ரூபா.
முதல் 31 நாட்களின் 1 நாள் சராசரி வசூல் கிட்டத்தட்ட சுமார் 4000.00 ரூபா.
விந்தையை பார்த்தீர்களா? எந்த ஒரு படமும் திரையிடப்பட்ட ஆரம்பநாட்களில்தான் அதிக வசூல் பெறும்.
பின்னர் போகப்போக வசூல் குறையும் .ஆனால் புரட்சித் தலைவரின் படம் இதிலும் புரட்சி செய்துவிட்டது போலும்.
யாருக்கையா கரடி விடுகின்றீர்கள்.
இதே போல்தான் கொழும்பு கெப்பிட்டல் அரங்கு சமாச்சாரமும், கொழும்பு நகர் 75 நாள் மொத்த வசூல் 5,51,951.70,
என கொழும்பு எம் ஜீ ஆர் ஏடு எழுதியுள்ளது.யாழ்நகர் எம் ஜீ ஆர் ஏடு வெளியிட்ட கிங்ஸ்லி வசூல் போக ,
கெப்பிட்டல் அரங்கின் 75 நாள் தனி வசூல் 3,48,406.20. இந்த நிலையில் 200 நாள் வசூல் 13 லட்சம் என ,
யாழ்நகர் ஏடு எழுதினால் யார்தான் நம்புவார்கள் ,வாத்தி சீடர்களே நம்பமாட்டார்கள்.
வசூலில் மட்டுமா ஹவ்ஸ்புல் காட்சிகளிலும் இரண்டு பத்திரிகைகளும் முரண்பாடாகவே
எழுதி வாசகர்களை ஏமாற்றப் பார்க்கின்றன.கொழும்பு எம் ஜீ ஆர் ஏடு எழுதுகிறது
கொழும்பு எம் ஜீ ஆர் ஏடு எழுதுகிறது 31 நாட்களில் 106 காட்சிகள் மட்டுமே ஹவ்ஸ்புல் என.
யாழ்நகர் எம் ஜீ ஆர் ஏடு எழுதுகிறது 18 நாட்களில் 150 ஹவ்ஸ்புல் என.இதில் எது உண்மை?
மேற்படி முரண்பாடுகளை எல்லாம்ஏம் ஜீ ஆர் ரசிகர்கள் கவனிக்கமாட்டார்கள் என்றோ ?
அல்லது இவை பற்றி அவர்களுக்கு புரியாது என்ற தைரியத்திலா இப்படியான பித்தலாட்ட
சாதனை விபரங்களை எல்லாம் எம் ஜீ ஆர் சார்பு ஏடுகள் வெளியிடுகின்றன.
அப்படிப்பட்ட பொய்யான , பித்தலாட்ட, முரண்பாடான வசூல் விபரங்களையெல்லாம்
படித்துவிட்டு, உண்மை புரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் வாத்தியின் ரசிகர்ளுக்கு,
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.உண்மை வசூல் விபரம் இவ் இதழின் மற்றோர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளத.
(இமேஜில் உள்ளவை)
https://scontent-ort2-1.xx.fbcdn.net...71&oe=5FF413C8
https://scontent-ort2-1.xx.fbcdn.net...ab&oe=5FF58A69
வெற்றிக்கு ஒருவன் 8/12/1979 . இன்று 41 ஆண்டுகள் நிறைவு.
https://scontent-ort2-1.xx.fbcdn.net...34&oe=5FF32B68
Thanks Vcg, Thiruppqthi
எதிர்பாராதது 9/12/1954. இன்று 66 வருடங்கள் நிறைவு.
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...5c&oe=5FF6955A
அடாத மழையிலும் விடாத வெற்றி
திருப்பரம்குன்றம் லட்சுமியில்
8/12/2020 இன்று
மாலை காட்சி 175 ஆடியன்ஸ்.
நடிகர் திலகத்தின்
சிவகாமியின் செல்வன்.
https://scontent-ort2-1.xx.fbcdn.net...7e&oe=5FF54160
(வாட்ஸ்அப் தகவல்)
மதுரையில் அடை மழை
ஆனால் நடிகர் திலகத்தின் படங்கள்
வசூல் மழை
https://scontent-ort2-1.xx.fbcdn.net...ca&oe=5FF5CCA9
(வாட்ஸ்அப் தகவல்)
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் இயக்குனர் மாதவன் இயக்கத்தில்,
வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் "ராஜபார்ட் ரங்கதுரை".
1973 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்திற்கு அப்போதைய அவரது ரசிகர்களால்
ஏகோபித்த பாராட்டைப் பெற்றது. தற்போது திரைப்படம் வெளியாகி 48 ஆண்டுகள்
நிறைவடைந்தும் மீண்டும் மதுரை சென்ரல் திரையரங்கில் திரையிடப்பட்டது.
இன்றும் அதே உற்சாகத்துடன் மதுரையில் உள்ள அவரது ரசிகர்கள்
திரையரங்கின் முன் சிவாஜியின் படத்திற்கு மாலை அணிவித்து, கற்பூர ஆரத்தி எடுத்து,
தேங்காய் உடைத்து வழிபட்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி
அங்கு குழுமியிருந்த திரளான ரசிகர்களுக்கும் ,பொதுமக்களுக்கும் இனிப்புகள்
வழங்கி கதூகலத்துடன் கொண்டாடினர்.
தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் தென் மண்டல
செயலாளர் ஆரியதேவன், அகில இந்திய சிவாஜி மன்ற தலைவர் முருகவிலாஸ் நாகராஜன்,
சிவாஜி பைன் ஆர்ட்ஸ் செயலாளர் சந்திரசேகரன், கும்பகோணம் எம் வீ சிவாஜி சேகர்
உட்பட திரளான ரசிகர்கள் இத்திரை கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
https://scontent-ort2-1.xx.fbcdn.net...84&oe=5FF7FC82
Today 3 movies of NT celebrate anniversary - Neelavanam (1965), Nenjangal (1982) and Puthiyavanam (1988). Puthiya Vanam happens to be the 275th movie of NT. Same order applies to ranking also of these three.
நீலவானம் நடிகர் திலகத்தின் 105 வது திரைப்படம்.
55 வதுஆண்டு நிறைவு 10/12/1965-10/12/2020.
நெஞ்சங்கள் நடிகர் திலகத்தின் 231 வது திரைப்படம்.
38 வதுஆண்டு நிறைவு 10/12/1982-10/12/2020.
புதியவானம் நடிகர் திலகத்தின் 275 வது திரைப்படம்.
32 வதுஆண்டு நிறைவு 10/12/1988-10/12/2020.
https://scontent-ort2-1.xx.fbcdn.net...d5&oe=5FF75A06
Thanks VeeYaar
பழைய பத்திரிகைகளிலிருந்து பழைய விடயங்களை ஏன் நான் தற்சமயம்
முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றேன் என பல நண்பர்கள்
நினைக்க்கூடும். முக்கியமாக இரண்டு விடயங்கள்.
பழைய புதிய சிவாஜி ரசிகர்கள் அனைவரும் அன்றைய கால கட்டத்தில்
வெளிவந்த சிவாஜி சார்பு பத்திரிகைகள், புத்தகங்கள், சிறப்பு மலர்கள் ,நோட்டீஸ்,
போன்றனவற்றை எல்லாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை ,எனவே அன்று பார்க்காதவர்கள்
பார்த்து பயன் பெறவும், அத்துடன்,
ஏனைய கமல்,ரஜனி, அஜித், விஜய், சூர்யா, ரசிகர்கள் நடிகர் திலகம் நிலைநாட்டிய
சாதனைகளின் உச்சத்தை தெரிந்துகொள்ளவும் ,புரிந்துகொள்ளவும் தொடர்ந்து
பழைய பத்திரிகை, மலர்கள், நோட்டீஸ் போன்றவற்றின் முக்கிய பகுதிகள்
நேரம் கிடைக்கும் பொழுது அவ்வப்போது தொடர்ந்து பதிவிடப்படும்.
என் பதிவுகளை தொடர்ந்து பார்வையிடும் அனைத்து உள்ளங்களுக்கும்,
இதயம் கனிந்த நன்றி.
.................................................. ................
போட்டியென்று வந்துவிட்டால் வெற்றி எம் ஜீ ஆருக்கே
என பிதற்றும் பித்தலாட்டக்காரர்களே பாருங்கள்.
உங்கள் சாதனையின் வேதனையை.
யாழ்நகரில் இன்றுவரை அதிக வசூல் பெற்ற படங்களை வரிசைப்படுத்தி தருகின்றேன்.
வசந்த மாளிகை ............ஓடிமுடிய.....................5,54,419. 75
எங்கள் தங்க ராஜா.........ஓடிமுடிய.....................4,04,077 .50
அவள் ஒரு தொடர் கதை..85 நாள்.......................3,14,225,25
ராஜ ராஜ சோழன்...........ஓடிமுடிய.....................2,98, 929.50
தெய்வம்........................ஓடிமுடிய........... ...........2,93,122.00
நல்லநேரம்.....................ஓடிமுடிய............ ..........2,74,199.50
யாழ்நகரில் இன்றுவரை ராமச்சந்திரனின் படங்களில் அதிக வசூல் பெற்ற படம் நல்லநேரம் ஆகும்.
நல்லநேரம் ஓடிமுடியப்பெற்ற வசூல் சாதாரண நடிகர்கள் நடித்த அவள் ஒரு தொடர்கதை ,தெய்வம்
போன்ற படங்களின் வசூலைவிட மிகவும் குறைவாகும். மேலும் இவ்இரண்டு படங்களும்
100 காட்சிகளுக்குமேல் HOUSE FULL ஆகியுள்ளன. (வசந்த மாளிகை 210 காட்சிகளுக்கு மேல் HOUSE FULL)
நடிகர் ராமச்சந்திரனின் எந்தப்படமும் இதுவரை 80 காட்சிகள் HOUSE FULL ஆனதில்லை.
இந்த நிலையில் உங்களுக்கு வசூல் ஒரு கேடு, சாதனை ஒரு கேடு.
நகர வசூலில் 6 வது ஸ்த்தானத்தில் எம் ஜீ ஆர் இருக்குப்போது போட்டி என்று வந்துவிட்டால் வெற்றி எம் ஜீ ஆருக்கா?.
இதன் பிறகும் வசூல் சாதனை இவற்றை பற்றி பேச உங்களுக்கு வெட்கமாக இல்லை?
உங்களுக்கு சூடு சொரணை கிடையாதா?நாக்கைப்பிடிங்கிக்கொண்டு சாகலாம்போல் தோன்றவில்லையா?.
நன்றி சிம்மக்குரல்
(இமேஜில் உள்ளவை)
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...d2&oe=5FF6E5EF
'இன்று நமதுள்ளமே, பொங்கும் புதுவெள்ளமே இல்லற ஓடமதே, இனி இன்பம் ஏந்திச்செல்லுமே, இன்று நமதுள்ளமே பொங்கும் புதுவெள்ளமே,
மங்கையர் குலமணியே, உன் மஞ்சள் முகந்தனிலே, மகிழ்ச்சிகள் துள்ளுமே வந்தென்னை அள்ளுமே, இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே...'
இன்று 11/12/2020 மதியம் 12.00 p.m. மற்றும் இரவு 07.00 p.m. மணிக்கு முரசு டி.வி. யில் நடிகர் திலகம் நடித்த ஹிட் படம் "தங்கப்பதுமை"
காவியப்படத்தை காண தவறாதீர்கள். ¶
இந்த படத்தில் நடிகர் திலகம், பத்மினி, நம்பியார், என். எஸ். கே மற்றும் பலரும் நடித்து உள்ளனர்.
Subject to change.
Thanks Jeyavelu Kandaswami
'ஒன்றானவன் உருவில் இரண்டானவன்.
உருவான செந்தமிழில் மூன்றானவன். நன்றான வேதத்தில் நான்கானவன்
நமசிவாய என ஐந்தான வன்..இன்பச் சுவை களுக்குள் ஆறானவன்..
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன். சித்திக்கும் பொருள்களில் எட்டானவ ன்...தித்திக்கும் நவரச வித்தானவன். பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்...'
இன்று 11/12/2020 காலை 11.00 a.m. மணிக்கு சன் லைப் டி.வி. யில் நடிகர் திலகம் நடித்த சிறந்த பக்தி படம்
" திருவிளையாடல்"
வெள்ளி விழா படத்தை கண்டு களியுங்கள். ¶
இந்த படத்தில் நடிகர் திலகம், சாவித்திரி நாகேஷ், பாலைய்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
Subject to last minute change.
Thanks Jeyavelu Kandaswami
'சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடு வான், சின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான், கண்ணை இமையிரண் டும் காப்பது போல், என் குடும்பம் வண்ணமுறக் காக்கின்றான், வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்....
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான், இங்கிவனை யான்பெறவே, என்ன தவம் செய்து விட்டேன் கண்ணன் எங்கிருந்தோ
வந்தான்...'
இன்று 11/12/2020 இரவு 10.00 p.m மணிக்கு ஜெயா மூவிஸ் தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" படிக்காத மேதை " மெகா படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, ரங்காராவ், முத்துராமன், அசோகன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
Subject to last minute change.
Thanks Jeyavelu Kandaswami
அட மடையா!
அட மடையா!
அடி மடையா!
வடிகட்டிய மடையா!
ஜமக்களத்தில் வடிகட்டிய மடையா!
உன்னுடைய எம் ஜீ ஆரின் ஒரு படத்திற்கு 50 நாளில் அரை கோடி வசூல் என்றால்,
எங்கள் நடிகர் திலகத்தின் 8 படங்களுக்கு 6 கோடி ரூபா வசூலாகியிருக்காதா ?
அட மடையா
மொத்தம் 150 படத்துக்கும் சேர்த்து 6 கோடியா? என்று கேட்கும் முண்டமே!,
உனக்கு படிப்பறிவு இருந்தால் இப்படி ஒரு ஞானசூன்யமான கேள்வியை
உன் அரை உலகத்தில் கேட்பாயா?
சிவாஜி படம் ஓடாமல் இருந்ததால் கிருஷ்ணகிரி நகரசபையே ஆட்டம் கண்ட கதை தெரியாதா?.
சம்பளம் கொடுக்க பணம் இல்லாமல் சமாதானத்துக்கு வந்த கதை புரியாதா உனக்கு?
அட மடையா
அந்த நகரசபை கதைதான் தமிழக அரசுக்கும் ஏற்படும்! சிவாஜி படம் இல்லாததால் நகரசபைக்கு
சில லட்சம் வருமானம் இல்லையென்றால் தமிழகம் மழுவதும் அவருடைய படம் வசூல் இல்லாவிட்டால்,
தமிழக அரசும் ஆட்டம் கண்டுவிடும்.
அட மடையா
உன்னுடைய எம் ஜீ ஆர் வடநாட்டை பணிய வைக்கிறேன் என்று குரல் கொடுத்து (ஓட்டு வாங்கிய தி மு கழகம்)
இன்று வடவரின் கால்களிலே பதவிக்காக பலியாகிவிட்டது! வடவரை எதிர்துது பல கோடி ரூபா வாங்குவோம்
என முழங்கி (காங்கிரசை வீழ்த்தியவர்கள்) இன்று 20 கோடி ரூபாய் சண்டை போட்டு வாங்க யோக்கியதை இல்லாமல்
கள்ளுக்கடைகளை திறந்துவிட்டார்களே!.
அட மடையா!
இதுதானா வடவரை எதிர்க்கும் உனது எம் ஜீ ஆரின் யோக்கியதை?
"உரிமைக்கு குரல் கொடுப்போம் " என்ற உமது வாத்தியாரின் உரிமை எங்கே?
கள்ளுக்கடைகளை திறப்பதை தடுக்க லாயக் அற்ற நடிகர் ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்று பாட யோக்கியதை இருக்கிறதா?நினைத்ததை முடிப்பவன் என்று சொல் லாயக் இருக்கிறதா?
கேவலம் 20 கோடி ரூபாய் வருமானத்திற்காக இந்த நாட்டின் அமைதியை கெடுத்து
குடும்பங்களை நாசப'படுத்தும் தி மு கழக அரசு சிவாஜி படங்கள் வசூல் இல்லாமல் போனால்,
பல கோடி ரூபாய் இழக்க நேரிடும்.
அட மடையா
நடிகர் திலகம் படங்கள் இல்லாமல் போனால் , அடுத்தது வருமானத்திற்காக விபச்சார விடுதிகள்
திறக்கவும் இந்த அரசு துணிந்துவிடும். இந்த நாட்டிற்கு வரியாக பல கோடி ரூபாய்
பெற்றுத்தரும் தெய்வப்பிறவியை கிண்டல் செய்யாதே!
பொறுமையை சோதித்தால் மதி இழந்து போவாய் ஜாக்கிரதை!
(இமேஜில் உள்ளவை)
நன்றி மதி ஒளி
https://scontent-ort2-1.xx.fbcdn.net...12&oe=5FF85C69
"பாபு" (1971) படம் ஓடிய கதை. !!!
*************************************
ஒரு தீபாவளிக்கு முன் டீக்கடை, பேப்பர் கடை, எங்கு பார்த்தாலும் 'நீ....ம் நெ....ம்' பற்றித்தான் பேச்சு. பாபு படத்தை ரசிகர்களைத் தவிர யாரும் கண்டு கொள்ள வில்லை. ( இதோடு 'வீட்டுக்கு ஒரு பிள்ளை'யும், K.S.G. யின் பிரம்மாண்ட 'ஆதி பராசக்தி'யும் ரிலீஸ் ). ஆக தீபாவளி ரேஸில் மூன்று வண்ணப் படங்களுக்கு மத்தியில் ஒரே கருப்பு வெள்ளைப் படமாக 'பாபு' மட்டுமே வந்தது. !!!
மற்றவரின் படத்தைப் பற்றி மட்டுமே பேச்சுக்கள், எதிர்பார்ப்பு க்கள், இன்னொரு வெள்ளி விழாப்படம் ஆகும் என்ற ஆரூடங்கள், இரட்டை வேடமாம், ஈஸ்ட்மென் கலரில் உருவாகி இருக்கிற தாம், பிரம்மாண்ட செட்டுக்கள், கத்திச் சண்டைக்காட்சிகள், எனவே நிச்சயம் பயங்கர வெற்றிதான்.... பாவம் கணேசனின் பாபு படம் இப்போட்டியில் சிக்கி நசுங்கப்போகிறது,
என்றெல்லாம் கேலிப் பேச்சுக்கள். நடிகர் திலகத்தின் ரசிகர்கள் பொறுமையை காத்தனர். !!!
எல்லா ஆர்ப்பாட்டமும் தீபாவளிக்கு படங்கள் ரிலீஸாகும் வரைதான். படங்கள் வெளியானதோ இல்லையோ நிலைமை தலைகீழாக மாறியது. சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் 'பாபு' வசூலில் முந்தியது. எந்தப்படம் பெரும் போட்டியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டதோ அது பின் தங்கியது. நாட்கள் ஆக ஆக, 'பாபு' வுக்கும் 'ஆதிபராசக்தி' க்கும் மட்டுமே போட்டி இருந்தது. !!!
ஓலைக்குடிசை, கை ரிக்க்ஷா, கருப்பு வெள்ளை, வெறும் நான்கே முக்கிய கதாபாத்திரங்கள், கிழிந்த உடைகள், தாடி மீசை இவற்றோடு நடிகர் திலகத்தின் 'பாபு' போட்ட போட்டில், வண்ணங்கள் வெளுத்து போயின, பிரம்மாண்டங் கள் சரிந்தன. பாபுவுடன் போட்டியிட வந்த படம் 50 நாட்கள் ஓடுவதே இழு பறியாகிப்போனது. பாபுவோ சர்வ சாதார ணமாக வசூலை வாரிக்குவித்தது. !!!
இதில் இன்னொரு சோகம் என்னவென்றால், மற்ற படபாடல்கள் கூட பொய்த்துப் போனது.
ஆனால் பாபுவின் 'வரதப்பா வரதப்பா', 'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே' பாடல்கள் அட்டகாசமாகப் பாப்புலராயின. கேலியும் பேசிய வாய்கள் அடைத்துப் போயின. சிவாஜியின் 1972-ம் ஆண்டின் அட்டகாச பவனியை 1971 இறுதியில் 'பாபு' துவக்கி வைத்தது. !!!
நன்றி : கார்த்திக்.. ( இது ஒரு மீள் பதிவு )
Thanks Jeyavelu Kandaswami
நண்பர் ஒருவர் எழுப்பிய சந்தேகத்திற்கான விளக்கம்,
மதுரையில் முதன் முதலாக 3 லட்சம் வசூலைக் கடந்த திரைப்படம் எது?
இன்றைய நாளில் கூட 60 ஆண்டுகளுக்கு முந்தைய நடிகர் திலகத்தின் திரைப்பட ஆவணங்களை கொண்டு உறுதி செய்ய முடிகிறது,
1959 ல் வெளியான நடிகர் திலகத்தின் "பாகப்பிரிவினை'' என
1959 ல் சிந்தாமணி திரையரங்கில்
100 நாள் வசூல் ரூ 229060-58 NP ஆகும்
216 நாள் வசூல். ரூ336180-54 NP ஆகும்,
ஆறு ஆண்டுகள் கழித்து
1965 ல் வெளியான நடிகர் திலகத்தின்
" திருவிளையாடல்'
1965 ல் ஸ்ரீதேவி திரையரங்கில்
100 நாள் வசூல் ரூ 2,86,159-02 NP ஆகும்
167 நாள் வசூல்.ரூ 3,54,457-53 NP ஆகும்,
மேலும் நன்கு புரிந்து கொள்ள
பாகப்பிரிவினை' 100 நாள் வசூல்- ரூ 229060-00
திருவிளையாடல் 100 நாள் வசூல்-.ரூ 286159-00
இங்கு கவனிக்க வேண்டியது 6 ஆண்டுகள் இடைவெளியில் இருக்கும் வசூல் தொகை வித்தியாசம் ரூ 57 ஆயிரம் கூடுதல்
அதன் காரணம் டிக்கெட் விலை உயர்வு,
பாகப்பிரிவினை' 216 நாள் வசூல் ரூ 3,36,180-00
திருவிளையாடல் 167 நாள் வசூல் ரூ3,54, 457-00
ஓடிய நாட்களில் 49 நாட்கள் திருவிளையாடல் குறைவு என்றாலும் வசூல் வித்தியாசம் ரூ 18 ஆயிரம் கூடுதல் இருக்கிறது,
இதிலிருந்து தெரிய வருவது என்னவெனில்
1959 ஆண்டின் போது ஒரு திரைப்படம் வசூலித்த தொகை என்பது 1965 ஆம் ஆண்டின் திரைப்பட வசூலை விட 30% அளவிற்கும் குறைவாகவே இருக்க முடியும்,
இப்படி இருக்க
1956 ல் வெளியான மதுரை வீரன் வசூல் தொகையும்
1965 ல் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை வசூல் தொகையும் எப்படி ஏறக்குறைய நெருங்கிய தொகை இருக்கும்?
1956 மதுரை வீரன் 180 நாள் ரூ 3,67,686-74 NP
1965 எங்க வீட்டுப் பிள்ளை
175 நாளில் ரூ 3,85,108-35NP
ஏறக்குறைய 9 ஆண்டுகள் இடைவெளிக்கு குறைந்த பட்சம் 40% வ்சூல் வித்தியாசம் இருந்து இருக்கும்,
இப்பப் புரிந்து இருக்கும்,
மதுரை வீரன் 100 நாள் வசூல் வேண்டுமா?
அது கிடைக்காது,
திருவிளையாடல் 100 நாள் வசூல் ரூ 2,86,159-00
எங்க வீட்டுப் பிள்ளை
100 நாள் வசூல். ரூ 2,78,752-00
ஆகியவற்றை பார்க்க முடிகிறது
( 150 நாட்களையும் கடந்த திரைப்படங்களை ஒப்பிட்டு பார்க்கையில் மட்டுமே விபரங்கள் எளிதாக புரியும் )
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...79&oe=5FF9CECDhttps://scontent-ort2-1.xx.fbcdn.net...91&oe=5FFBDB12
Thanks Sekar .Parasuram
இன்று திருப்பூரில் ராஜபார்ட் ரங்கதுரையை காண வந்த பள்ளி மாணவர்கள்,
எதிர்காலத்தில் உண்மை, நேர்மையான தேசப்பற்று உள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டும் எனில் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள் மட்டுமே வழி வகை செய்யும்,
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...73&oe=5FF9F88F
Thanks Sekar Parasuram
கலைசக்ரவர்த்தியின்ராஜ பார்ட்ரங்கதுரை திரைக்காவியம் திருப்பூர் மணீஸ் தியேட்டரில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிரிக்கிறது இன்று ஞாயிறு மாலைகாட்சி க்கு திரைப்படம் பார்க்க வந்த பள்ளி க்குழந்தைகளுக்கும் அவரை அழைத்து வந்த ஆசிரியர்களுக்கும் ரசிகர் மன்றத்தின் சார்பில் இனிப்பு வழங்கி யபோது
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...f8&oe=5FFB78AFhttps://scontent.fybz2-2.fna.fbcdn.n...5c&oe=5FFB1A87
Thanks Selvaraj.K
இன்றைய மாலை நேர சன் செய்தியில் "நடிகர் திலகத்தின் நடையழகு' என பல்வேறு நடை கிளிப்புகளை ஒளி பரப்பு செய்து நடிகர் திலகம் சிவாஜி மட்டுமே நடிப்பில் பல்கலைக்கழகம் மற்றவர்கள் யாவரும் அவரின் மாணவர்களாக மட்டுமே இருக்க முடியும் என செய்தி குறிப்பில் குறிப்பிட்டார்கள்,
Thanks for Sun news,
Thanks Sekar Parasuram
கேள்வி பிறந்தது..! நல்ல பதில் கிடைத்தது!
கே: 'இன்ன நடிகையுடன் தான் நடிப்பேன்' என்று சிவாஜி சொல்வதில்லையே, ஏன்? (கே.எல்.சாந்தி கன்னியப்பன், சிலியாவ், மலேசியா)
ப: அவர் தன் திறமையில் நம்பிக்கை கொண்டவர்.
(ஆதாரம் : பேசும் படம், ஜூலை 1971)
https://static.xx.fbcdn.net/images/e...5/16/1f490.pnghttps://static.xx.fbcdn.net/images/e...5/16/1f490.pnghttps://static.xx.fbcdn.net/images/e...5/16/1f490.pnghttps://static.xx.fbcdn.net/images/e...5/16/1f490.pnghttps://static.xx.fbcdn.net/images/e...5/16/1f490.pnghttps://static.xx.fbcdn.net/images/e...5/16/1f490.pnghttps://static.xx.fbcdn.net/images/e...5/16/1f490.pnghttps://static.xx.fbcdn.net/images/e...5/16/1f490.pnghttps://static.xx.fbcdn.net/images/e...5/16/1f490.pnghttps://static.xx.fbcdn.net/images/e...5/16/1f490.png
கே: சிவாஜி கணேசன் தன்கூட இன்னார்தான் நடிக்க வேண்டுமென்று கூறுவதில்லையே, ஏன்? (என்.எஸ்.குமார், திருவனந்தபுரம்)
ப: மணம் வேண்டுமானால் நார் தானே பூவுடன் சேர வேண்டும்!
(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1968)
Thanks Raja lakshmi
யாழ் நகரில் உலகம் சுற்றும் வாலிபன்
யாழ் நகரில் சாதனைகள் ஏற்படுத்துவற்கென்றே அவதரித்த நடிகர்,
வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் ஒருவரே. அப்படி இருக்கும்பொழுது,
வேறு ஒரு நடிகரால் சாதனைகளை ஏற்படத்த முடியுமா?
இதோ நான் ஏற்படுத்தி காட்டுகிறேன் என அண்மையில் ஒரு வாலிபன் வந்தான்,
வந்த இரண்டாம் நாளே தடி ஊன்றவேண்டிய பரிதாபத்துக்குரிய வயோதிபன் ஆகிவிட்டான்.
ராமச்சந்தரன் ரசிகர்கள் புலி வருகிறது புலிவருகிறது என பூச்சாண்டி காட்டினார்கள்,
ஆனால் வந்ததோ பூனையிலும் கேவலம்.
சிவாஜி ரசிகர்கள் மொத்த வியாபாரிகளா என எம்மை பார்த்து கேட்டார்கள் .
ஆனால் அவர்களே டிக்கட் வியாபாரிகளாக மாறிவிட்டர்கள்.
படம் வெளிவந்த இரண்டாம்நாள் ஶ்ரீதர் அரங்கில் 4வது காட்சியின் போது ,
மிகுதிப்பட்ட முதல் வகுப்பு 10 டிக்கட் O D C 5 டிக்கட் மொத்தம் 15 டிக்கட்
வாங்கிக்கிழித்து இரவு 11 மணிக்கு ஹவுஸ்புல் போர்ட மாட்டினார்கள்.
டிக்கட் கிழித்தும் 13 காட்சிகளுக்கு மேல் தொடர்து ஹவுஸ்புல் ஆக்கமுடியவில்லை.
இரண்டாம் நாள் மனோகராவில் காலைக்கட்சி ஹவுஸ்புல் ஆகவில்லை,என்பதை
அறிந்த வாத்தி சீடர்கள் ஓடினார்கள் தியேட்டரை நோக்கி ,
போய் பார்த்தால் 500 ரூபாவிற்கான டிக்கட் மிகுதிப்பட்டிருந்தது.
அவ்வளவு பணம் அவர்களிடம் ஏது? அதனால் மறுபேச்சின்றி உடனே திரும்பிவிட்டார்கள்.
உலகம் சுற்றும் வாலிபன் மனோகரா இரண்டாம் நாள் காலைக்காட்சி வசூலைவிட
தங்கப்பதக்கம் கடைசி நாள் காலைக்காட்சி வசூல் அதிகம்.
ஒரு புதிய படம் (குறிப்பாக சிவாஜி எம் ஜீ ஆர் படங்கள்) திரையிடப்பட்ட 2,3 வாரத்திற்கு
குறிப்பிட்ட நேரத்தைவிட சில மணி நேரம் முன்னதாகவே ஆரம்பிப்பதுதான் வழக்கம்.
அனால் இப்படமோ குறிப்பிட்ட நேரத்திற்கு சில மணி நேரம் தாமதமாகவே
காட்சிகள் காண்பிக்கப்பட்டு வருகிறது.இதை எல்லாம் கவனித்த
மா கோ ராமச்சந்திரனின் ரசிகர்கள் நாடி தளர்ந்துபோய் காணப்படுகின்றார்கள்.
படம் திரையிப்பட்ட முதல் காட்சி மனோகராவில் ஆரம்பமாகும் வேளை
டிக்கட் கிடைக்காத ரசிகர்கள் தியேட்டர் கண்ணாடிகளை உடைத்தார்கள்,
மரம் செடிகளை முறித்தார்கள், அடுத்த ரசிகர்களை அடித்தார்கள்.
(இதுவிதம்தான் நான் ஏன் திரையிடப்பட்ட அன்றும் அருகில் இருந்த வீடுகளுக்கு
கல் எறிந்து கலாட்டா செய்தார்கள்) அவ்வளவு கலாட்டாக்களை செய்தும்
இவர்களால் சாதிக்கமுடிந்தது இரண்டு அரங்கிலும் சேர்த்து மொத்தம்
19 தொடர் ஹவுஸ்புல் காட்சிகள் மட்டுமே.
வாலிபனும் வாத்தி சீடர்களை ஏமாற்றிவிட்டான் .
நன்றி சிம்மக்குரல்
(இமேஜில் உள்ளவை)
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...ae&oe=5FFCE8A4
........................
இலங்கையில் உலகம் சுற்றும் வாலிபனின் முக்கியமான சில பின்அடைவுகளுக்கு காரணம்
எம் ஜீ ராமச்சந்திருனும் அவரது கை கூலிகளும்தான் .விரிவாக விபரம் பின்னர்.
ஜனவரி 1, 2021 முதல் தமிழகமெங்கும் நடிகர்திலகம் நாட்டியபேரொளி வாழும் வியட்நாம் வீடு. குடும்பத்துடன் கண்டுகளிக்க தகுதியுள்ள திரைக்காவியம்.
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...0c&oe=5FFF4662
Thanks Subramanian Subbraman
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...ca&oe=5FFE3B82
Thanks Vijaya RajKumar
மா கோ ராமச்சந்திரனின் ரசிகர்களது தில்லு முல்லு.
மற்றுமோர் ஆதாரம்.
.
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...64&oe=5FFD8EE6
23/05/1976 ல் திரைக்குவந்த படம் நடிகர் ராமச்சந்திரனின் உழைக்கும் கரங்கள்.
5/08/1976 வியாழக்கிழமை சேலம் அலங்கார் தியேட்டரில் வெற்றிவாகை சூடும்
96 வது நாளாம், விளம்பரம் சொல்கிறது.
23/05/1976 படம் ரிலீஸ் .......மே............................மாதத்தில்.... .............09 நாட்கள்.
...........................................யூன்... .......................மாதத்தில்.................3 0 நாட்கள்.
...........................................யூலை... .. ..................மாதத்தில்.................31 நாட்கள்
5/08/1976 வியாழக்கிழமை 96 நாள் என விளம்பரம்..எனவே ஆகஸ்ட்டில் 05 நாட்கள்
5/08/1976 வரை மொத்தம்........................................... ...........................75 நாட்கள் தான் வருகிறது.
ஆனால் விளம்பரத்திலோ 96 நாட்கள் .எம் ஜீ ஆர் ரசிகர்களின் பட்டறையில் தயாரான விளம்பரம்.
இந்த விளம்பரம் எம் ஜீ ஆர் ரசிக நண்பர் ஒருவரால் பிறிதொரு
முகநூல் பதிவில் பதிவிட்டு பின் தூக்கப'பட்டுவிட்டது.
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...62&oe=5FFBD405
இப்படி எத்தனை எத்தனை புரட்டு விளம்பரங்களோ?
ஜஸ்டிஸ் கோபிநாத் 16/12/1978 . இன்று 42 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fymy1-2.fna.fbcdn.n...9c&oe=60001229
Thanks Vcg Thiruppathi
சாதனை படைப்பதில் சிவாஜி ஒரு தொடர் கதை
தங்கப் பதக்கம் 91 காட்சிகள் தொடர் ஹவுஸ் புல் ஆகி சாதனை படைத்ததும் ,
நன்றாக சாதனை புரியுங்கள் இதுதான் உங்களுக்கு கடைசிப்படம் என எழுதியுள்ளார்
ஒரு எம் ஜீ ஆர் ரசிகர் .அவர் அவ்விதம் எழுதி ஒரு சில நாட்களிலேயே
அவர் கடைசிப்படமென வர்ணித்த தங்கப் பதக்கத்தின் மேற்கண்ட சாதனை முறியடிக்கப்பட்டுவிட்டது.
வேறு யார் படத்தாலும் அல்ல நடிப்புச்சக்கரவர்த்தியின் 175 வது படமான அவன்தான் மனிதன்
24 நாளில் 105 காட்சிகள் தொடர் ஹவுஸ்புல் ஆகி வரலாற்றுச்சாதனை படைத்துள்ளது.
எமது சாதனை பற்றி பேச உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
உங்களுக்கு சூடு சொரணை கிடையாதா? ஏன் வீணாக சாதனையின் இமயத்தை பார்த்து
மூச்சுத்திணறுகிறீர்கள்? சாதாரண நடிகர்களுடன் மோதியே மூக்கு உடைபட்டு நிற்கும் உங்களுக்கு
சாதனை பற்றி பேச அருகதையே இல்லை.
எமது படங்கள் வருவதற்கு முன்னரே இது தோல்விப்படம், இது ஓடாது என எழுதி அற்ப சந்தோஷம்
அடையும் ஈனப்பிறவிகளே,நீங்கள் எழுதியதில் ஏதாவது உங்கள் எண்ணப்படி நடந்துள்ளதா?
இங்குமட்டுமல்ல இந்தியாவிலும் இதே நிலமைதான்.
வசந்த மாளிகை , பட்டிக்காடா பட்டணமா? , தங்கப்பதக்கம் போன்ற மாபெரும் வெற்றிப்படங்களையே ,
படு தோல்விப்படதென எழுதியவர்களாயிற்றே நீங்களும் உங்கள் சகபாடிகளும்.
எந்த ஒரு படமும் ,ஓடி முடிந்தபின் அதன் வெற்றி தோல்வி பற்றி எழுதுங்கள்.
இனிமேல் போட்டிக்கு சாதனைத் திலகம் சிவாஜி கணேசனின் படங்களுடன் ஒப்பிட வேண்டாம்.
முதலில் சாதாரண நடிகர்களின் படங்களை முறியடிக்க முயற்ச்சி செய்யுங்கள்.
முடியாவிட்டால் முக்காடிட்டுக் கொள்ளுங்கள்.
(இமேஜில் உள்ளவை)
நன்றி சிம்மக்குரல்
https://scontent-ort2-1.xx.fbcdn.net...68&oe=5FFEA3E8
சிங்காரச் சென்னையில்
சிங்கத் தமிழனின்
சிறப்புமிகு சாதனை
அண்ணன் ஒரு கோயில் வசூல் சாதனையை ஜீரணிக்கமுடியாமல் வாத்தி சீடர்கள் தவிப்பு.
* தனி அரங்கில் 100 நாள் வசூலில் முன் நிற்பது
அண்ணன் ஒரு கோயில் 8,74,682.90
* மூன்று அரங்குகளில் 100 நாட்கள் வசூலில் முன்நிற்பது
அண்ணன் ஒரு கோயில் 18,19,153.10
* மூன்று அரங்குகளில் 100 நாட்களில் 4 1/2 லட்சம் தாண்டிய மூன்று படங்களில்
அண்ணனுக்கு 2 , சிவகுமாருக்கு 1 நாயருக்கு ஒன்றும் இல்லை.
*மூன்று அரங்குகளில் 100 நாட்களில் 17 லட்சம் பெற்ற இரு படங்கள்
தங்கப் பதக்கம், அண்ணன் ஒரு கோயில் மட்டுமே ராமச்சந்தநாயர் உட்பட
எந்த நடிகரின் படமும் இச்சாதனையில் இல்லை.
*3வது ஏரியாவில் 5 லட்சம் தாண்டிய திரைப்படம் தங்கப்பதக்கம் .
தற்போது அண்ணன் ஒரு கோயில் பெற்றுள்ளது.
ராமச்சந்திரனின் எந்தப்படமும் 4 லட்சம் பெறவில்லை.
*சாந்தி தியேட்டரை விட பெரிய அரங்குகளான சத்தியம், தேவி பாரடைஸ்
போன்றவற்றில் எல்லாம் வாத்தி படங்கள் திரையிட்டும், தனி அரங்கில்
100 நாள் வசூலில் முன்நிற்க முடியவில்லை வெட்கக்கேடு.
(இமேஜில் உள்ளவை)
நன்றி சிம்மக்குரல்
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...cf&oe=60021DB2
எழுதுகோல் முனையில்........
எழுதுபவர்--இணை ஆசிரியர்.
சென்ற இதழில் சின்ன சின்ன செய்தியில் முதலாவதாக குறிப்படப்பட்டிருந்தது,
எவ்வளவு உண்மையாகிவிட்டது என்பதற்கு கடைசியாக வந்த உரிமைக் குரல் சான்று.
ராமச்சந்திரன் ரசிகர்களுக்கு சாதனைகள் எதுவுமில்லை, எனவே முந்தானை முடிசு;சு ,ஆட்டுக்கார அலமேலு
போன்ற படங்களின் வசூல்களை சிவாஜி படங்களுடன் ஒப்பிட்டு எழுதுகிறார்கள்.
சிவாஜி படங்களுடன் ஒப்பிட்டு எழுதும் அளவிற்கு எம்ஜீ ஆர் படங்களுக்கு வசூல் இல்லை.
எம் ஜீ ஆர் படங்களுக்கு இந்த நிலையா ஏற்படவேண்டும்?
பரிதாபத்திற்கு உரியவர்கள் வாத்தி சீடர்கள்.
தற்பொழுது யாழ் ராஜா அரங்கில் மேல் வகுப்பு கட்டணத்தை அதிகரித்துள்ளார்கள்.
இதை அறிந்த எம் ஜீ ஆர் ரசிகர்கள் தற்பொழுது ராஜா அரங்கில் ஒரு எம் ஜீ ஆர் படம்
வெளியடப்பட்டால் வசூலில் முன்நிற்கும் எங்கள் தங்க ராஜா வசூலை
முறியடிக்கலாம் என எண்ணுகிறார்கள்.குறைந்த கட்டணத்தில் முடியாதென்பது அவர்களுக்குத் தெரியும்.
இப்படித்தான் தமிழ் நாட்டில் தங்கப்பதக்கத்தை முறியடிப்பதற்காக
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரையிட்ட பல அரங்குகளில் கட்டணத்தை அதிகரித்துள்ளார்கள்.
ஆனால் கட்டணத்தை அதிகரித்தும் முடியவில்லை. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனை புறமுதுகிட்டு ஓட
மக்கள் தியேட்டரைவிட்டே கலைத்து வருகின்றார்கள்.
(இமேஜில் உள்ளவை)
நன்றி சிம்மக்குரல்
https://scontent-ort2-1.xx.fbcdn.net...21&oe=5FFF64B8https://scontent-ort2-1.xx.fbcdn.net...e5&oe=5FFED789
ஆந்திரா விஜயவாடாவில் திருவள்ளுவர் பெயரில் நடக்கும்
தமிழ் பாடசாலைக்கு நடிகர் திலகம் ரூபாய் பத்தாயிரம் வழங்கியபோது.
மனித வளம் பெற நடிகர் திலகம் வழங்கியது.
உன்னை மிஞ்சும் நடிகன் உலகில் தோன்றவில்லை.
https://scontent-ort2-1.xx.fbcdn.net...bc&oe=60015A52
(வாட்ஸ் அப் பில் வந்த பதிவு)
நாட்டுக்கு செய்த சேவை.
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...21&oe=60005D8E
Thanks Vijaya Raj Kumar
#நாளைமுதல் #
#சென்னை #MMதியேட்டரில் #தினசரி #மதியம் 3.00&
#மாலை 6.30 #காட்சிகள்
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...b9&oe=60000902
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...42&oe=6000939E
Thanks Sattur Nagarajan
சவாலுக்கு சவால் சந்திக்கத் தயாரா?
ஈழத்தில் புதிதாக முளைத்துள்ள வாத்தியாருக்கு ஜால்ரா போடும் உரிமைக்குரல் ஏடு,
சிம்மக்குரல் மூலம் சிவாஜி ரசிகர்கள் விடும் சவால்களை சமாளிக்க முடியாமல் புலம்பித்திரிகிறது.
நேற்றுச் சொன்னதை இன்று சொல்லவில்லை என்று மறுப்பது,உண்டையை திரிப்பது,
பொய்யை மெய்போல பேசுவது, மழுப்புவது, குழப்புவது ஆகியயவை எம ஜீ ஆருக்கு கைவந்த கலையே ,
அது போலவே ரசிகர்களும் அந்தக் கலையில் தீரம் மிக்கவர்கள் என்பதில் ஐயமில்லை.
உரிமைக்குரல் விட்ட சவால்களை சிம்மக்குரல்மூலம் அதை சமாளித்து சவாலுக்கு சவால் விடும்,
சிவாஜி ரசிகர்களின் முழு முகவரியுடன் விட்டதை ஏற்க நெஞ்சில் துணிவு இல்லாத, அரைவேக்காடு
ஈனப்பிறவி விலாசமே சரியாக எழுதத்தெரியாத ரசிகர்கள் என்று பொய்யான களங்கம் கூறும்,அறிவிலியே,
மதம் கொண்ட யானையின் மந்தகத்தை பிளந்து அதன் ரத்தத்தை குடிக்கும் சிங்கத்தின் முன் ,
உங்களைப்போன்ற குள்ளநரிக்கூட்டம் எம்மாத்திரம்.
தூங்குபவனை எழுப்பலாம் ஆனால் தூங்குவனை போல் பாவனை செய்பவனை எப்படி எழுப்பமுடியும்?
அதே போன்றே சாதனை திலகம் சிவாஜி தான் என்பதை புரிந்துகொண்டிருக்கும் உங்களுடன் வாதாடுவது,
தண்ணீரை கலக்கிவிட்டாலும் ஓனாய் சாதுவான ஆட்டை கிலிக்குள்ளாக்குவதைபோன்று இருக்கிறது.
நீங்கள் எப்பொழுதும் புரட்டுத்தான் எழுதுவீர்கள் என்பது எதிர்பார்த்ததே.
ஆனால் தலைவனைவிட ஒரு படி மேலே போய்விட்டீர்கள்.
பொய்களை உண்மையாக்கி வெளியிட உங்களக்கு ஒரு ஏடு தேவைதான்.
உண்மையை உணராத நீங்கள் பத்திரிகை நடாத்த அருகதை அற்றவர்கள்.
ஏன் பத்திரிகை நடாத்தி அதன் தொழிலுக்கே களங்கம் உண்டாக்குகிறீர்கள்.
சாதனைகளை மக்கள் முன் கூறுங்கள்,ஆனால் வேதனைகளை சாதனையாக்க முயலாதீர்கள்.
மூக்கு உடை படுவீர்கள் ,பொய்களை மூட்டைகளாக்கி ,அதை பத்திரிகைபோல வெளியிடும்,
திறமையை நீங்களேதான் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டும்.
எம்ஜீ ஆர் ரசிகர்கள் தெளிவு பெற ...
1) சூரியனைப் பார்த்து நாய் குரைப்பதால் சூரியனுக்கு எந்தவித குறையும் ஏற்படப் போவதில்லை.
அப்படி குரைப்பதைப் போல் முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை.
2) ஆகாயத்தை நோக்கி காறி உமிழ்கின்ற எச்சில் தன் மீதுதான் விழும் என்பதைகூட,
புரிந்துகொள்ளமுடியாத உங்களுக்கு நாங்கள் என்ன உபதேசம் கூறுவது.
3) கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? அது போல கழுதைக்கு
உபதேசம் கூறினால் அது தரும் பதில் காள்.. காள்.. காள் தான்.
சாதனை என்றால் என்ன என்பதனை கூட புரிந்து கொள்ள முடியாத அரைவேக்காடு அவர்கள்.
முன்பு சிம்மக்குரலில் இந்தியா முழுவதும் தங்கப்பதக்கம் ஓடி முடிய 1 1/2 கோடி வசூல் விபரம்,
ஊர், தியேட்டர் வாரியாக வெளியிட்டது பார்க்கவில்லை போலும்.
அரை குறையுடன் உளறும் அதிமேதாவியே, எதையாவது ஒன்று முழுமையாக தெரிந்துகொண்டு
சாதனைக்கு விளக்கம் கூற வா. தமிழக சாதனைகளை அக்டோபர் /8 /1974 நவசக்தி தின இதழில்,
தங்கப்பதக்கம் வசூல் பார்க்கவில்லையா? சிவாஜி புரெடக்*ஷன்ஸ கணக்குப்பார்த்து ,
பத்திரிகை ,பிலிம்ஷேம்பர் அங்கீகாரத்துடன் சென்னையில் அதக வசூல் பெற்ற படம் தங்கப்பதக்கம் தான் என்பது,
"தமிழ்முரசு" 25/12/1974 ஏட்டில் வந்ததே அதைக்கூடவா நீங்கள் பார்க்கவில்லை ;
நான் மறந்துவிட்டேன் நீங்கள்தான் கிணற்றுத் தவளைகள் ஆயிற்றே,சமுத்திரம் பார்த்திருக்கமாட்டீர்.
ரிக்*ஷாகாரன் வசூலை வெளியிட்டதாக ஓலமிடும் அறிவாளி அவர்களே! கறுப்பு வெள்ளை படங்களில்
இத்தனை ஆண்டுகளாக எந்தப்படத்தாலும் நெருங்க முடியாத சரித்திர வசூல் சாதனை புரிந்த
பட்டிக்காடா பட்டணமா?, 6 வார வசூலை 51 வது நாள் விளம்பரத்தில் தினத்தந்தியில் முழுப்பக்கம்
தயாரிப்பாளர் p. மாதவன் அறிவித்தது நீர் பார்க்கவில்லையா?
உலகம் சுற்றும் வாலிபன் 6 மாதத்தில் 60 லட்சம் வரி செலுத்தியது உண்மை.ஆனால் அப்படம்
பெற்றது 1 கோடி வசூல் மட்டுமே! எப்படியென்றால் அப்பொழுது கூட ரூபாவிற்கு 60 காசு வரி
வசூலிக்கப்பட்டது, ஊர் அறிந்த உண்மை.ஆகையால் தங்கப்பதக்கம் 6மாதத்தில் 1கோடியே 20 லட்சமும்,
1 வருடத்தில் 1 1/2 கோடியும் பெற்ற மாபெரும் சாதனைப்படம் தங்கப்பதக்கமே உணருவீர்.
எங்கள் சிவாஜி ரசிகர்கள் ஒவ்வொருவரும் வீடு விலாசத்துடன் நகரில்தான் உள்ளது.
ஆனால் சுடுகாட்டில் சாக்கடை ஓரத்தில் கடை வைத்துக்கொண்டு
விலாசமே தெரியாமல் உளறவேண்டாம்.
பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை ஆனால் சாக்கடைகள் கொக்கரிக்கும் போது,
சவுக்கடி தந்து சாத்தான்கள் வாயை அடைப்பது நம் கடமை.ஆகையால் இதுவரை பல முறை ,
தங்கப்பதக்கம் சௌத்திரியின் காலடியில் உலகம் சுற்றும் வாலிபன் ஓலமிட்டதை தந்திருந்தோம்,
ஆனால் மீண்டும் ஒருமுறை தருவோம்.எம் ஜீ ஆர் ரசிகர்களே,
கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
வசூல் விபரம் 2ஆம் பக்கம் பார்க்கவும்..
(இமேஜில் உள்ளவை)
நன்றி சிம்மக்குரல்
https://scontent-ort2-1.xx.fbcdn.net...6e&oe=6000BB83https://scontent-ort2-1.xx.fbcdn.net...cc&oe=6002C97C
ஒரு அருவியின் சில நீர்த் திவலைகள்..
நடிகர்திலகம் ...
எந்த ஒரு படைப்பாளியின் சுதந்திரத்திலும்
தலையிடாத அர்ப்பணிப்பு மிக்க கலைஞர்.
"நீங்கள் என்னிடம் என்ன எதிர் பார்க்கிறீர்களோ அதை சொல்லுங்கள், அதைச் செய்கிறேன் பிடித்தால் எடுத்துக் கொள்ளுங்கள். இன்னும் வேண்டுமானாலும் செய்கிறேன்."
இந்த பாடலில் இது பிடிக்கவில்லை , அந்த வரி சரியில்லை என்ற தலையீடுகள் இல்லை.
3 ஷிப்டில் வேலை செய்தார்.ஒரு நாளோ, பல நாளோ இல்லை.பல வருடங்கள்.இப்படி எந்த மனிதராவது வேலை செய்யும் போது சோர்வு பிடித்து தள்ளாதா?
ஆனால் அந்த முப்பது வருட உழைப்பில் எந்த ஒரு சிறு காட்சியிலாவது அந்த சோர்வை காண்பித்து இருப்பாரா?
என்னப்பா,
'அண்ணன் நேத்திருந்து சரியா சாப்பிடலையாம், தூங்காம நைட் பூரா வேறு வீட்டை சுத்தி சுத்தி வந்தாராம் '
"இன்னைக்கு பாசமலர் க்ளைமாக்ஸ் எடுக்கப் போறாங்களாம்.அது ரொம்ப சோகமான சீனாம்.பல நாள் சாப்பிடாம, தூங்காம ஊரைச் சுத்தி வந்த மனுஷனோட நிலைமை எப்படியிருக்கும்.
அதை காட்டணும்."
'என்ன சோகமான சீனா இருக்கட்டும் .அவர்
செய்யாத ஆக்டாயா?'
"அது சரிப்பா, என்ன சிறப்பா செஞ்சாலும் முகத்திலும், உடம்பிலும் அந்த எபெக்ட் காட்டணும்தானே, அதுக்குத்தாய்யா இவ்வளவு மெனக்கெடல்."
அண்ணன் தங்கை பாசக்கதையை சாதாரணமாக வந்து செய்துவிட்டு சென்றுவிடவில்லை நடிகர்திலகம்.
அவர் சிரத்தையை புரிந்து கொள்வது பார்ப்பவர்களின் அறிவைப் பொறுத்தது.
12 வருடத்தில் நூறு படம்.ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மாதிரி.சாதாரண படங்களா செய்திருக்கிறார்.?ஒவ்வொன்றும் காவியமாயிற்றே!
பட அதிபர்களின் முற்றுகை எந்த நேரமும்?
இதே நிலைமையிலே வேற நடிகர்கள் இருந்திருந்தால் அவர்களை வைத்து எடுக்க கோடீஸ்வர அதிபர்கள் தான்
முன் வர வேண்டும்.நல்ல கதையா?
' நல்ல ரோலா? செய்யறேன்?'..
இந்த உயரம் சென்றவர், பத்தாயிரம் ரூபாயை பார்த்து என்ன இவ்வளவு பணம்?
இதில் எவ்வளவு தாள்கள் இருக்கும்? என்றாராம்.நடிப்பின் மீது அவர் காட்டியது பக்தி.
பணத்தின் மீது பக்தி கொண்ட கலைஞர்களிடம், அர்ப்பணிப்பான உழைப்பு சாயம் போகும்படியாய்தான் இருக்கும்.
நடிகர்திலகத்தின் படங்கள் நின்றிருக்கலாம்.நடிகர்திலகத்தால் எந்த படமும் நின்றதில்லை.
"சிவாஜி நடிச்ச படம் இவ்வளவு நாளாச்சு இன்னும் காணலியே! "
'அந்த படம் பைனான்ஸ் பிராப்ளத்தாலே ஷுட்டிங் விட்டு விட்டு நடக்குது. '
"சிவாஜி ரொம்ப பிஸியால்லே இருப்பாரு.
இப்படி விட்டு விட்டு ஷுட்டிங் போனா அவருக்கு கால்ஷீட் பிரச்சினை வராதா?"
'அவரென்னப்பா? மூணு வேஷத்தையே பத்து நாளிலிலே முடிச்சாரு.தன்னாலே யாரும் நஷ்டப் படக்கூடாதுன்னு கேட்டப்போ வந்து முடிச்சுக் குடுத்துடுவாரு!'
இன்னும் கூட இறங்கி வந்து சம்பளம் வாங்காமயோ, குறைச்சோ நடிச்சு குடுத்துடுவாரு.'
சினி பீல்டு நல்ல நிலைமையில இருக்குன்னா அவர்தாம்பா காரணம்.
வருஷத்துக்கு எட்டு படம் கணக்கால்லே
செஞ்சாரு!
தியேட்டர் அதிபர்களில் இருந்து போஸ்டர் ஒட்டுபவர்கள் வரை ஒரு சுழற்சியா எவ்வளவு பெரிய பிசினஸ் நடந்துச்சு..ரெகுலரா, இடைவெளி இல்லாம..அந்த பீரியட்தான்யா தமிழ் பீல்டு
பெஸ்ட்டா இருந்துச்சு..
அண்ணே! அவர் ரொம்ப கஷ்டத்துல இருக்கார்.நீங்க ஒரு படம் பண்ணிக் கொடுத்தால் கடனை அடைச்சி நிம்மதி அடைசிருவார்.உங்ககிட்ட வந்து கேட்க கொஞ்சம் சங்கோஜப்படறார்.இனி நீங்க சொல்றீங்களோ அதை அவர்கிட்ட நான் சொல்லிடுவேன்.
அவருக்கு பண்ணிக் கூடாதுன்னு ஏதுமில்ல.நீங்க சொல்றதால பண்ணிடலாம்.சம்பளம் கூட வேண்டாம்.
இது தான் சிவாஜி குணம்.
ஆனா, அந்த தயாரிப்பாளர் என்ன செஞ்சார்? டிபன் பாக்ஸ்ல கொஞ்சம் பணத்தை வச்சி அனுப்பிச்சு வச்சார்.இது நல்லாவா இருக்கு? அப்புறம் அவர்
புரிஞ்சுகிட்டார்.நாலு ஜென்மத்துக்கு செருப்பா இருப்பேன்னு, சொல்லிட்டாரே.
நடிகர்திலகம் ஒரு படத்தில் சொல்வார்.
நம்மை சுத்தி இருக்கறவங்க நல்லா இருக்கணும்.படத்தோட டயலாக்கை வசனம் பேசியதோடு நிறுத்தி கொள்ளவில்லை.நல்ல விஷயங்களை வாழ்க்கையிலும் செய்தவர் சிவாஜி.
"நான் இன்னைக்கு நடிக்கப் போறதோ
பரதேசி வேஷம்.இவ்வளவு உசத்தியான ட்ரெஸ்ஸில தைச்சு போட்டுட்டு நடிச்சா அது நான் நடிக்கிற நடிப்போட ஒட்டுமா? "
ஷுட்டிங் வேற ஆரம்பிக்க போகிறது.
உதவியாளர்கள் வேறு காஸ்ட்யூம் தேடி அலைகின்றனர்.நேரம் வேறுசெல்கிறது. அங்கே பக்கத்தில் ஒரு கிணறு இருக்கிறது.கிணற்றடியில் கிழிந்த சாக்கு ஒன்று கிடக்கிறது.பார்த்தார் நடிகர்திலகம்.
அடுத்த நிமிடம்அது இடையில்.இதை விட பொருத்தமான காஸ்ட்யூம் இந்த காட்சிக்கு இருக்காது என்பதை வெண்திரையில் பார்த்தோமே.அது மெனக்கெடல் இல்லை.ஆனால், சரியான சமயோசித புத்தி.இயக்குனர்கள் கொண்டாடுவதில் என்ன வியப்பு? (குறவஞ்சி)
அண்ணே! எனக்கொரு படம் நடிச்சுக் கொடுங்க. நட்புடன் அந்தக் கோரிக்கை நடிகர்திலகத்திடம் வைக்கப்பட்டது.கதையை கேட்டார்.பக்கத்து மாநிலத்தில் ஹிட்டடித்த கதைதான்.
நம்மூர்க்காரன் ரசனை வேறு.இதை எடுத்து ஹிட் ஆக்குவது தமிழ்நாட்டில் கஷ்டம் என்பதை சொல்கிறார்.நட்பு உணரும் இல்லை.வேறு வழி இல்லாமல் நட்புக்காக நடிக்கிறார்.ஆனால் நடிப்பை குறைத்து நடிக்கவில்லை.சாதாரணமாக செய்து மெகா ஹிட்டடித்த படங்களை விட இதில் நல்ல நடிப்புத்தான்.உழைப்புத்தான்.
ஆனால் முடிவு அவர் சொன்னதே.இது யார் தவறு?
ஒரு படத்தில் நடிக்க குறிப்பிட்ட நாட்களை கொடுத்தார் நடிகர்திலகம்.ஒரு நாள் ஷுட்டிங் முடிந்து கிளம்பும் போது நாளைக்கு என்ன காட்சியப்பா?
உங்க போர்ஷன் இன்னையோடமுடிஞ்சாச்சு சார்?
என்னப்பா! இன்னும் ரெண்டு நாள் இருக்கே கால்ஷீட்!
ஆமாம் சார் .ஆனால் உங்க சீன் எல்லாத்தையும் எடுத்தாச்சு சார்.
தயாரிப்பாளர்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கொடுத்த நடிகர்.
சாதா நடிகனின் படம் எடுக்க ஆகும் பிலிம் செலவை வைத்து நடிகர்திலகத்தின் நான்கு படங்களை முடித்து விடலாம்.
பெரிய நடிகனின் நூறு பட நடிப்பு நடிகர்திலகத்தின் ஒரு பட நடிப்புக்கு ஈடாகாது.
மீண்டும் பேசலாம்.
Thanks Senthilvel Sivaraj
50 வது நாள் விளம்பரம் பிராப்தம்
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...af&oe=6003746D
இன்று முதல் (!7/12/20200
மாரண்டஹள்ளி (தர்மபுரி dt) பொன்முடி,
மற்றும் மேட்டூர் டேம் கற்பகம் திரையரங்குகளில் கர்ணன் குதூகல ஆரம்பம்,
https://scontent-ort2-1.xx.fbcdn.net...f4&oe=60023FCE
Thanks Divyafilms Chockalingam
நடிகர் திலகம் பொதுவாகவே விளம்பரங்களைத்தேவையில்லாமல் தேடுபவர் இல்லை.
அன்புள்ள அப்பா படப்பிடிப்பு ஏவிஎம் கார்டென வீட்டில் நடந்தது. நடிகர் திலகத்தின் நண்பர் சிங்கப்பூரில் இருந்து வந்திருந்தார். அவரை அழைத்துக்கொண்டு சென்றேன்.
அப்போது, ஏவிஎம் ஸ்டுடியோவில் "மேஸ்திரி" என்று அழைக்கப்பட்ட ஊழியர் நடிகர்திலகத்துடன் பேசிக்கொண்டிருந்தார். அது அவரது பெண்ணின் திருமணம் சம்பந்தமாக. நடிகர் திலகம் அவருக்கு ஒரு கவரில் பணம் வைத்துக்கொடுத்தார். அத்துடன் நடிகர் திலகத்துடன் ஒரு படம் வேண்டும் என்று தயக்கத்துடன் கூற, நான் என் கமெராவில் படம் எடுத்துக்கொண்டேன்.
சிங்கப்பூர் நண்பரிடம், விவரத்தைக்கூறினேன். அவர் எனக்கு அந்த படத்தின் பிரதி ஒண்ணு குடுங்க. நம்ம பத்திரிகைல போடலாம்னு சொல்ல, நடிகர் திலகம் பதறிப்போய், "நோ நோ வேண்டாம். இது பத்திரிகைல வந்தா, மேஸ்திரி குடும்பத்துக்கு தேவையில்லாம தர்மசங்கடம் உண்டாகும். நாம கொடுக்கறது, ஒரு நண்பன் குடும்பத்துக்கு செய்யற உதவி. இதுக்கு எல்லாம் நியூஸ்/போட்டோ போடாதீங்க."
இதை யாராவது யோசித்தோமா? அது தான் நடிகர் திலகம்.
Thanks Chandramouli Mohan (Sivaji Group)
(நன்றி "ரசிகன்" நவம்பர் 1973)
ஆட்சேபனை அரங்கு
"வசந்த மாளிகை மர்மம்"
இலங்கையில் வசந்த மாளிகை புரிந்த மகத்தான சாதனை சிலருக்கு வயிற்ரெரிச்சலை உண்டுபண்ணியுள்ளது.கொழும்பு கெப்பிட்டல் திரையரங்கில் 250 நாட்களும் யாழ் வெலிங்டன் திரையரங்கில் 208 நாட்களும் காட்சியளித்து மாபெரும் சரித்திரமாக மாறியிருக்கும் வசந்த மாளிகை இன்னும் ஈழத்தில் பல்வேறு நகரங்களில் காட்டப்படு அங்கெல்லாம் வசூலில் சாதனைகள் புரிந்தவண்ணம் இருக்கிறது.
இச்சமயத்தில் இச்சாதனையை சிலர் வேதனையோடு அவதானிக்கிறார்கள். அதுமட்டுமல்ல வீண் புரளிகளை கிளப்பி தங்கள் மேதாவித்தனத்தையும் பறைசாற்றிக் கொள்கிறார்கள். கலண்டர் கொடுத்து வசந்த மாளிகை ஓடியதாக சிலர் கருதுகிறார்கள்.கலண்டர் கொடுத்து ஒரு படத்தை ஊட்டுவதாக இருந்தால், திரையிடப்படும் எல்லா படங்களுக்கும் ஒரு சில ஆயிரங்களில் கலண்டர் விநியோகித்து ஓட்டலாமே! வசந்த மாளிகையின் வெற்றியின் ஞாபகார்த்தமாகத்தான் கலண்டர் விநியோகிக்கப்பட்டதே தவிர கலண்டருக்காகத்தான் படமே ஓடியது கீழ்ப்பாக்க ஆசாமிகள் தாங்கள்தான் என பறைசாற்றுவதற்கு ஒப்பாகும்.இதுபோன்றதொரு விதண்டாவாதம்.
தனிப்படதொரு ஸ்த்தாபனத்தின் கடைசி இறக்குமதியாக வசந்த மாளிகை இருந்ததனால்தான் வசந்த மாளிகை ஓட்டப்படது.என கூறப்படுகிறது.அட மடையா! தனிப்பட்ட ஸ்த்தாபனத்தின் இறக்குமதியாக இருப்பதால கட்டாயமாக அப்படத்தை ஓட்டித்தான் ஆகவேண்டுமா?அப்படியானால் ஏனைய ஸ்த்தாபனங்களின் திரைப்படங்கள் ஏன் அப்படி ஓட்டப்படவில்லை? எம் ஜீ ஆரின் இதயவீணை கூட கடைசி இறக்குமதிதானே? அது ஏன் 99 நாட்களுடன் ஓடி ஒழிந்துவிட்டது. அட மடையா! சொல்வதற்கு ஒன்றும் இல்லாவிட்டால் ஏன் பைத்தியக்காரன்போல் உளறுகிறாய்.
இச்சமயத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இலங்கை வருவார் என கூறியதால்தான் வசந்த மாளிகை ஓடியது என கூறும் கோமாளிகளே எம் ஜீ ஆர் இலங்கை வந்தும் எங்க வீட்டுப் பிள்ளை படத்தை 100 நாட்கள் ஓட்டமுடியாத பரிதாபத்தைதான் பா◌ாத்தோமே.அப்படி இருக்கும் போது , சிவாஜி வருவார் என கூறி எப்படி படத்தை ஓட்ட முடியும்?
எப்படியோ தங்கள் உளறுதல் மூலம் வசந்த மாளிகை 250 நாட்கள் ஓடியதை இவர்கள் ஒத்துக் கொள்கின்றார்கள்.அனால் தமிழகத்தின் :புரட்சியார் ரசிகன்" வசந்த மாளிகை 200 நாட்கள் ஓடவில்லை அத 73 ஆம் ஆண்டின் பெரும் பொய் என கதறுகிறது. கருடனுக்கு எங்கே வெளிச்சம் தெரியப் போகிறது. அதுகள் நல்லவைகளை ஒரு போதும் கேட்பதோ, பார்ப்பதோ தான் இல்லையே.அவ்வளவு ஏன் தன் வாத்தியாரின் உ சு வாலிபன், ப ◌ாபன்னையா ஆகியவையே இன்னும் பார்க்காத புரட்சியார் ரசிகன் வசந்த மாளிகையின் வெற்றியை எங்கே அறியப்போகிறது.
எந்த வழியில் பார்த்தாலும் வசந்த மாளிகையின் வெற்றியின் மர்மம் உங்களுக்கு என்றைக்குமே புரியாது. அதை விளக்கிக் கூறினாலும் அறிந்துகொள்ளக்கூடிய நிதானம் உங்களிடம் இல்லை.
எனவே வசந்த மாளிகையின் மர்மம் உங்களுக்கு மர்மமாகவே இருக்கட்டும்.
எம்.சுப்ரமணியம், லோவர் வீதி ,பதுளை.
(இமேஜில் உள்ளவை)
நன்றி "ரசிகன்"
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...28&oe=6004BF58
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...cc&oe=6002E35A
(நன்றி மதி ஒளி-1/09/1971)
ஆர் எம் வீரப்பனுக்கு ஒரு சவால்!
அன்புள்ள ஆசிரியருக்கு!
வணக்கம். சென்ற வாரம் ராணி இதழில் சத்தியா மூவிஸ் அதிபராம்
திரு ஆர் எம் வீரப்பன் அவர்கள் எம் ஜீ ஆர் நடித்த படங்கள்தான் ,
எம் ஜீ ஆர் அளிக்குமென்றாலே ஓடுகிறது என்று தனது பாணியிலேயே சொல்லிருக்கிறார்.
அவர் இந்த சமயத்தில் ஒரு விசயத்தை மறந்துவிட்டார் போலிருக்கிறது.
1966 ஆம் ஆண்டு அவர் தயாரித்து வெளியிட்ட நான் ஆணையிட்டால் என்ற படம் ,
5 லட்சம் ஜனத்தொகை கொண்ட மதுரை மாநகரிலே சென்ட்ரல் திரை அரங்கில்,
29 நாட்கள் ஓடியது என்பதை அவருக்கு ஞாபகப்படுத்துகிறோம்.
அடுத்து வெளியிட்ட கண்ணன் என் காதலன் என்ற படம் மதுரையில் 96 நாட்கள்,
(சிந்தாமணி தியேட்டரில்) இழு பறி நிலையில் ஓட்டப்பட்டது என்றும்
பணவன்புடன் தெரிவிக்கின்றோம்.
இந்த நேரத்தில் மதிப்புக்குரிய உயர் திரு வீரப்பன்அவர்களுக்கு மற்றுமோர் விசயத்தையும் தெரிவிக்கின்றோம்.
எம் ஜீ ஆர் படம் ஓரளவுக்கு தற்பொழுது ஓடுகிறதென்றால் , அதற்கு காரணம் அதில் நடிக்கும் கதாநாயகிதான்.
இந்த விடயம் எம் ஜீ ஆர்க்கோ, அல்லது வீரப்பனுக்கோ தெரியாமல் இருக்க முடியாது.
நடிகர் திலகத்தைபோல பத்மினி,சௌகார்ஜானகி ஆகியோருடன் திரு எம ஜீ ஆர் ஒரு படத்தில் நடிக்கட்டுமே ,
அந்தப்படம் எப்படி ஓடும் என்று? குறைந்த வயது நடிகைகளுடன் அவர் நடிப்பதால்தான் கூட்டம் வருகிறதே தவிர
எம் ஜீ ஆருக்காக இது நாள்வரை எந்தப் படத்துக்கும் கிடையாது.
இந்த உண்மையை ஒப்புக்கொள்ள வீரப்பன் மறுத்தால் .....
அவருக்கு ஒரு சவாலும் காத்திருக்கிறது.
தனது அடுத்த படத்தில் பத்மினி, சௌகார்ஜானகி இதில் யாராவது ஒருவரை எம்ஜீ ஆரக்கு இணையாகப் போட்டு,
படம் எடுத்து அதை வெற்றிபெறச் செய்தால் எம் ஜீ ஆர் படத்துக்கு மவுசு இருக்கிறது என்று தெரிய வரும்.
இதைவிட்டுவிட்டு 61-ல் 16-ஐ மோத விட்டு கூட்டம் கூடினால் அது 16 க்குத்தான் பெருமையே தவிர ,
இந்த இடத்தில் 61 க்கு எள்ளவும் மதிப்பில்லை.
இப்போதாவது மதிப்பிற்குரிய ஆ◌ா எம் வீரப்பன் அவர்கள் தெளிவடைந்து இருப்பார் என நம்புகிறோம்.
பத்மஶ்ரீ சிவாஜி கணேசன் ரசிகர்கள்
ஆர் .அமர்நாத்.
எஸ் .லட்சுமணன்.
டீ. வேணுகோபால்
சிவகாசி
(இமேஜில் உள்ளவை)
நன்றி மதிஒளி
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...e3&oe=6003BD50
பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை உதவியாக வழங்கிய நடிகர் திலகம் சிவாஜி,
5000 கோடி ரூபாயை வாரி வழங்கி இருக்கிறார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,
ஆமாம் தமிழகத்தில் உள்ள 2 கோடி ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ 2500 என ஜனவரி மாதம் முதல் வாரி வழங்கப் போகிறார்கள்,
எல்லாமும் மக்கள் வரிப் பணம் தான் மக்கள் பணம் மக்களுக்கே என எப்போதும் போல சாமான்ய மக்களின் குரல் கேட்கவே செய்கிறது,
தமிழகத்தின் மறைந்த முந்தைய முதலமைச்சர்கள். இது போல மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்,
அவர்கள் எல்லாம் "வள்ளல்' பட்டம் சூட்டிக் கொண்டது போல எதிர்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் சூட்டிக் கொள்வாரா? எனப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்,
அரசுப் பணத்தை வாரிக் கொடுப்பதில் என்ன ஆச்சர்யம் இருக்கப் போகிறது
ஆனால் பாருங்கள் 65 ஆண்டுகளுக்கு முன்னரே நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான் நடித்து சம்பாதித்த பணத்தை கோடிக் கணக்கில் பல்வேறு வகையான நலத்திட்டத்திற்கும், ஏழை எளிய மக்களுக்காகவும் வாரி வழங்கி இருக்கிறார்,
1952 ல் பராசக்தி முதல் படத்திற்காக ரூபாய் 2500 ஐ ஊதியமாக பெற்ற நடிகர் திலகம் அடுத்து ஒப்பந்தம் செய்து கொண்ட படமான பரதேசிக்கு ரூபாய் முப்பதாயிரம் என உயர்ந்தது, அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து பவனி வந்த நடிகர் திலகம் அடுத்த பத்து ஆண்டுகளிலேயே 80க்கும் மேலான படங்களை கடந்தார்
அதன் மூலம் அன்றைய மதிப்பில் சுமார் 250 லட்சங்களை குவித்திருப்பார் என ஊகிக்கலாம்,
நடிகர் திலகத்தை மட்டுமே நம்பி இருந்த அவரது சிவாஜி நாடக மன்றக் குழுவினரின் குடும்பங்களுக்காகவும் பல்வேறு அறக்கட்டளைகளுக்காகவும் வேண்டி நாடகங்களை தொடர்ந்து அரங்கேற்றமும் செய்து வந்தார் அதன் மூலம் பல நூறு இலட்சங்களை வசூலித்து பல குடும்பங்கள் வாழவும் தர்ம காரியங்கள் நடந்திடவும் வழி வகை செய்து வந்தார்,
உதாரணத்திற்கு
1)பெருந்தலைவர் காமராஜர் அவர்களது உயர்ந்த எண்ணத்தில் உதித்த பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு திட்டத்தை தொடர்ந்து நடத்திட ரூ ஒரு லட்சம்
2) பிரதமர் நேரு அவர்களிடம் தாமபரத்தில் டி.பி நோயை குணமாக்க மருத்துவமனை அமைக்க ரூ ஒரு லட்சம்
3) போடி நாயக்கனூரில் தொழிர் கூடம் அமைக்க ரூ 3 லட்சம்
4) புயல் பெரு வெள்ளம் காரணமாக இயற்கை இடர்ப்பாடுகளிலிருந்து மக்களின் துயர் போக்கும் விதமாக பல லட்சம் மதிப்பிலான் உணவு பொட்டலங்கள் அத்தியாவசிய பொருட்களுடன் முதலமைச்சர் நிவாரண நிதியாக இரண்டு லட்சங்கள்,
5) தமிழகத்தில் பழுதடைந்த நிலையில் இருந்த கல்விக் கூடங்கள்,கல்லூரிகள் மறு சீரமைக்கவும், நலிவடைந்த நாடக கலைஞர்கள் வாழ்வில் உயர்ந்திடவும் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை நூற்றுக்கணக்கான முறையில் நடத்தியதன் மூலம் வசூலான ரூ 32 இலட்சத்தையும் வழங்கினார்,
6) இந்தியா- சீனா யுத்தத்தின் போது யுத்த நிதிக்காக ரூபாய் நாற்பதாயிரத்துடன் 400 கிராம் தங்க நகைகள்,
7) இலங்கை தமிழர் நலனுக்காக வேண்டி இலவச வைத்தியசாலை அமைத்திட உதவி,
8) டெல்லி வாழ் தமிழர்களின் நலனுக்காக ரூபாய் இரண்டு லட்சம் வழங்கியது
9) ராமநாதபுர மாவட்டம் புயலால் முழுவதுமாக பாதிக்கப்பட்ட போது அவர்களது நலனுக்காக ரூபாய் ஒரு லட்சம்
10) எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது அவரது சத்துணவு திட்டத்தை தொடர்ந்து நடத்திட ரூபாய் 4 கோடியை நாடகங்களை நடத்தி வசூலித்து கொடுத்தது
என
இவ்வாறு முப்பது ஆண்டுகள் காலத்திலேயே தனது வருமானத்தில் வந்த வருவாயில் ஏறக்குறைய 50% அளவிற்கும் கூடுதலாக வழங்கி இருக்கிறார்,
அன்றைய 50 களில் வருடங்களாகட்டும் பிற்பாடாகட்டும் நடிகர் திலகம் வழங்கிய ரூபாயில் லட்சத்திற்கும் அதிகமான தொகையை போல அப்போதைய பிற நடிகர்கள் யாரேனும் வழங்கியோரைப் பற்றிய வரலாற்று குறிப்புகளை பார்க்க முடியாது,
நடிகர் திலகம் சிவாஜி மட்டுமே வரலாற்று குறிப்புகள் கொண்டு உயர்ந்து நிற்கிறார்,
அத்தகைய தொடர் கணக்கீடுகளைக் கொண்டு பார்த்தோமானால் நடிகர் திலகம் வாரி வழங்கிய தொகயின் மதிப்பீடு இன்றைய நாளில் பத்தாயிரம் கோடிகளையும் தாண்டி வியப்பில் போற்ற வைக்கிறது,
அதனால் தான் வேறு எந்த நடிகர்களுக்கும் அமைந்து விடாத மஹாபாரத வள்ளல் கர்ணன் பாத்திரம் நடிகர் திலகம் சிவாஜிக்கு மட்டுமே அமைந்தது
அந்த கர்ணன் 1964 ல் வெற்றி வாகை சூடியது போலவே
2012 ல் டிஜிட்டல் வடிவில் வெளியாகி வசூல் புரட்சியை இன்று வரையிலும் செய்து வருகிறது,
என்றென்றும் வள்ளல் கர்ணன் நடிகர் திலகம் சிவாஜி புகழ் வாழ்கவே!!
https://scontent.fymy1-2.fna.fbcdn.n...2a&oe=600321E3https://scontent.fymy1-1.fna.fbcdn.n...52&oe=6004562B
https://scontent.fymy1-2.fna.fbcdn.n...de&oe=6003BFA2
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...bb&oe=60050F08
Thanks Sekar Parasuram