எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
Printable View
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஷாஜஹான் ஒரு தேவதாஸ்
அது போலத்தான் உன்னோடு நான்
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள்நெஞ்சு சொல்கின்றது
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
தொட்டுத் தொட்டுப் பாடவா
தொடர்ந்து வந்து பாடவா
கட்டிக் கொண்டு பாடவா
கன்னம் பார்த்துப் பாடவா
பாடவா உன் பாடலை பாடவா உன் பாடலை என் வாழ்விலே ஒரே பொன் வேளை
என் வாழ்விலே வரும் அன்பே வா
கண்ணே வா நிலா முகம் கண்டேன் வா
ஒரே சுகம் நாம் காண
ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது
உன் கண்ணில் நீர் வழிந்தால் என்
நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
பாவை பாவைத்தான் ஆசை ஆசைத்தான் பார்த்து பேசினால் ஏக போகம்தான் தானே
பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்
பாடும்போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று
தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது
தன் பெட்டைத் துணையை தேடுது
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே
என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும் உன்னை யாருக்கும் தர மாட்டேன்
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
கபடமெல்லாம் கண்டுகொண்டேனே முன்பே தானே
கண்டுகொண்டேன் நான் வந்தது யாரென்று கண்டு கொண்டேன்
வண்ணமயில் வடிவில் இங்கே கண்டு கொண்டேன்
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு வாசமுள்ள மல்லிகை போல் மணம்
வாசமுள்ள வெட்டிவேரு வந்து விளையாடுதடி
ஒரு நேசமுள்ள மல்லியப்பூ கொஞ்சி மணம் வீசுதடி
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனச பாத்துக்க நல்லபடி
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
தெய்வம் நீதானே தாயும் நீ தானே
அண்ணனே உனை தள்ளியே மனம் போகாதே
நீதானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
நல்ல நாளில் கண்ணன் மணி தோளில்
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் - அடி தங்கமே தங்கம் கண்டுவரவேணுமடி
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் .
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
உன் மேல ஒரு கண்ணு நீதான் என் மொரப் பொண்ணு
ஒன்னோட இவ ஒன்னு ஒன்ன மறந்த வெறும் மண்ணு
கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே உனக்கு
உனக்கும் எனக்கும் ஆனந்தம்
விடிய விடிய சொந்தம்
படுக்கை அறையில் ஆரம்பம்
விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் என் மார்பில் உலா வரும்
என் மனம் பொன்னம்பலம்
அதில் உனது எழில் ரூபம்
எனது நாவில் உன் திருநாமம்
புண்ணிய நெய்வேத்யம்
உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன்
என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து போனவன் போனானடி
தன்னைக் கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாண்டி
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் – அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞானத் தங்கமே