Originally Posted by saradhaa_sn
டியர் பம்மலார்...
சென்னை காஸினோ அரங்கில் நடிகர்திலகத்தின் திரைப்படங்களின் சாதனைப்பட்டியல் தொகுப்பு அருமை. உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் தலைமை மன்றத்தால் பத்திரப்படுத்தப்பட வேண்டியவை. அன்னை இல்லத்துக்குப்பின் நீண்ட வருடங்களாக அங்கே நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் வெளியாகாததற்கு விசேஷ காரணங்கள் உண்டா?. (ஒருகாலத்தில் இயக்குனர் ஸ்ரீதரின் கோட்டையாக இருந்த காஸினோ அரங்கம், எழுபதுகளில் ஆங்கிலப்படங்கள் மட்டுமே திரையிடப்படும் அரங்காக மாறிப்போனது). அடுத்து மதுரை ஸ்ரீதேவி அரங்கின் சாதனைகளை வரவேற்கத் தயாராகி விட்டோம். இதுபோல திருச்சி பிரபாத், சேலம் ஜெயா, சென்னை கிரௌன் அரங்குகள் பற்றியும் அறிய ஆவலாயுள்ளோம். நீங்கள் செய்வீர்கள், இருந்தாலும் முன்கூட்டியே ஒரு விண்ணப்பம். (சென்னை கிரௌன் அரங்குக்கு ஒரு விசேஷம். அது சித்ரா, கிரௌன், சயானி காம்பினேஷனிலும் இடம் பெற்றிருந்தது. பின்னர் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி காம்பினேஷனிலும் வெற்றிக்கொடிகளைப் பறக்கவிட்டது).
மலைக்கோட்டை நகரில் 'ராஜராஜசோழன்' வெற்றிபவனி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.