பம்மலாரின் காலண்டர் கையில் வாங்கியவுடன் ஏற்படக்கூடிய சிலிர்ப்பினை அனுபவித்தால் தான் அதன் சிறப்பை உணர முடியும்
Printable View
பம்மலாரின் காலண்டர் கையில் வாங்கியவுடன் ஏற்படக்கூடிய சிலிர்ப்பினை அனுபவித்தால் தான் அதன் சிறப்பை உணர முடியும்
நான் ரசித்த கலைஞர் நிகழ்ச்சி இப்போது கலைஞர் தொலை காட்சி
பராசக்தி பற்றிய சில காட்சிகளை லட்சிய நடிகர் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்
நீயா நானா நடிகர் திலகம் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் திரையரங்க அலங்காரங்களைப் பற்றிய நேயர்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் பகுதி தனியே யூட்யூப் இணைய தளத்தில் தரவேற்றப்பட்டுள்ளது. இப்பகுதியில் தான் முரளி சார் பேசும் தெய்வம் திரைப்படத்தின் நினைவுகளையும், கிருஷ்ணாஜீ ரோஜாவின் ராஜா திரைப்படத்தின் நினைவுகளையும் அடியேன் சொர்க்கம் திரைப்படத்தின் நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
http://www.youtube.com/watch?v=eicTiUl8NNg
நன்றி யூட்யூப் இணைய தளம் மற்றும் விஜய் டிவி
Tributes to NT : in commemoration to his ensuing Birthday celebrations
Mangaiyar thilagam : A movie with a difference in concept and performance by lead artists NT and Padmini who used to pair up hitherto but this time the later acting as the wife of NT's brother character!
Vaidya Films’ Mangaiyar Thilagam- 1955 was produced by A.C.Pillai, and directed by L.V.Prasad. Based on a Marathi story, it was a moving tale of an elder brother (S.V.Subbiah), and his wife (Padmini) who shower love and affection upon the younger brother, who grows up to become Sivaji. As he is much younger to Subbiah, he worships Padmini as his mother and is deeply attached to her. However, his wife (M.N.Rajam) gradually starts resenting his affection for Padmini, and the family’s tranquility is soon lost. (courtesy net)
https://www.youtube.com/watch?v=730Zdr-L5Pw
https://www.youtube.com/watch?v=0MCg1F3e20Q
https://www.youtube.com/watch?v=r4H5gzfuBlo
மாநகர் மதுரையில் நடிகர் திலகத்தின் வெள்ளை ரோஜா சென்ட்ரல் திரையரங்கில் வெளியிடப்பட்டு முதல் நாள் சிறப்பான வரவேற்பை பெற்றதை பகிர்ந்து கொண்டிருந்தேன். நேற்றைய தினம் தமிழகத்தில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக மாலை மற்றும் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. நேற்று காலை முதல் பதற்றமான சூழல் இருந்தும் காலை மற்றும் மதிய காட்சிகளுக்கு 200-க்கும் அதிகமான மக்கள் வந்திருக்கிறார்கள். இன்று சற்று இயல்பு நிலை திரும்பியவுடன் பொது மக்கள் குறிப்பாக தாய்மார்கள் திரையரங்கிற்கு கணிசமான அளவில் வந்திருக்கின்றனர். இன்று நண்பகல் முதலே மதுரையில் சரியான மழை. விட்டு விட்டு பெய்த மழை மாலை நேரத்தில் வலுவாகவே பெய்திருக்கிறது. ஒரு பக்கம் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுமோ என்ற பயம், பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாமல் குறைந்த அளவிலே ஓடும் சூழல், இவை போதாதென்று தொடர்ந்து பெய்த மழை இப்படி எதிர்மறை சூழல்களிலும் இன்று மாலைக் காட்சிக்கு வருகை தந்தவர்கள் எண்ணிக்கை 450. ஞாயிறு மாலைக் காட்சியைப் பொறுத்தவரை தங்கசுரங்கதையும் தாண்டிய வசூல். இன்றைய தினம் இரவுக் காட்சியோடு மொதத் வசூல் ரூபாய் 40,000/--ஐ கடந்திருக்கிறது. நேற்றைய தினத்தில் மட்டும் அந்த இரண்டு காட்சிகள் ரத்து செய்யப்படாமல் இருந்திருந்தால் மூன்று நாள் மொத்த வசூலில் புதிய சாதனை படைத்திருக்கும்.
சென்னை மகாலட்சுமியில் இன்று முதல் இரண்டு காட்சிகளாக திரையிடப்பட்டிருக்கும் நடிகர் திலகத்தின் சங்கிலி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்று சொல்லியிருந்தேன். தமிழகமெங்கும் நேற்று மாலைக் காட்சி நடைபெறவில்லை என்பதனால் நேற்று மதியக் காட்சி ஓடிய சங்கிலி திரைப்படமும் நேற்று மாலைக் காட்சி ரத்து செய்யப்பட்டது. இன்றைய தினம் பகல் மற்றும் மாலைக் காட்சிக்கு மக்கள் திரளாக வந்திருந்து ரசித்தனர்.மூன்று நாட்களில் நடைபெற்ற 5 காட்சிகளில் மொத்த வசூல் சுமார் ரூபாய் 30, 000/-.
கோவையில் அசாதாரண சூழ்நிலை சற்று தீவிரமாகவே இருந்தது. பதற்றம் முற்றிலும் தணிந்து விடாத நிலைமை. கோவை நகரை பொறுத்தவரை தனியார் பேருந்துகள்தான் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து. இன்றும் பெரும்பான்மையான தனியார் பேருந்துகள் இயக்கப்படாத நிலைமை. டிலைட் அரங்கை அடைவதற்கே பஸ் இல்லாத காரணத்தினால் குறிப்பிட்ட தூரம் வரை நடந்து வரவேண்டிய நிலை. சென்னை போன்று ஷேர் ஆட்டோக்கள் இல்லாத இடம். நேற்று முதல் டிலைட் அரங்கில் தினசரி 2 காட்சிகளாக திரையிடப்பட்ட எங்க மாமா திரைப்படத்தை இரண்டு தினங்களில் நடைபெற்ற 3 காட்சிகளில் [டிலைட்டில் பகல் மற்றும் மாலைக்காட்சி என்று இரண்டே காட்சிகள்தான், அதிலும் நேற்று மாலைக்காட்சி ரத்து செய்யப்பட்டு விட்டது] இந்த அசாதாரண சூழலிலும் டிலைட் போன்ற அரங்கில் திரையிடப்பட்டும் கூட 460-க்கும் அதிகமான மக்கள் பார்த்து ரசித்திருக்கின்றனர். இன்றைய பதற்றமான சூழலில் கோவையில் புதுப் படங்களுக்கு கூட பெரிய அளவில் ஆட்கள் வரவில்லையெனும் போது இது ஒரு மெச்சத் தகுந்த நிகழ்வு.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
http://i157.photobucket.com/albums/t...ps324821d3.jpg
தன்னை காண மற்றவர்களை காக்க வைத்தவர்கள் மத்தியில்Quote:
நமக்கு வெலை இருக்கிறமாதிரி கூட்டத்துக்கு வந்திருக்கிறவன்
ஒவ்வொருத்தனுக்கும் ஒரு வேலை இருக்கும்லே
நாம கூட்டம் முடிஞ்சு நம்ம வேலைய பார்க்கிறமாதிரி
ஆளுக்காள் பார்பாங்க இல்லே
எதுக்காக அவங்கள காக்க வைக்கணும்
என்று எதுவித பகட்டும் இல்லாமல் சொன்னவர்
சரியான நேரத்திற்கு கூட்டத்திற்கு கிளம்பிவிட்டார்
உங்களுக்காக மற்றவர்கள் காத்திருக்கக்கூடாது
அவர்கள் வேலைகள் கெட்டுவிடக்கூடாது
என நினைத்து செயல்பட்ட நீங்கள்தான் ஐயா
பொன்மனச்செம்மல்
http://i157.photobucket.com/albums/t...ps6e5d571d.jpg
தாங்கள் சொன்னதை சொல்லும்படியும் எழுததும்படியும் கூறி
அவற்றை சொல்லவைத்தும் எழுதவைத்தவர்களுக்கு முன்னால்
உனக்கு தோணுறத அப்படியே எழுது எனச்சொன்ன
ஐயா கணேசனே உன்போல் யார் உளர்?
உண்மையானவர்கள் நேர்மையானவர்கள் மனச்சாட்சி
உள்ளவர்கள் மட்டுமே உன்னை புரிந்துகொண்டவர்கள்
Tributes to NT : in commemoration to his ensuing Birthday celebrations
பழுத்த மரம்தான் கல்லடி வாங்கும். பசுமரமோ இடி தாங்கும் . பட்டமரமோ அடியோடு விழுந்து விடும்! மனிதவாழ்வும் இந்தத் தத்துவத்திற்கு உட்பட்டதே! வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம்!
நான் பெற்ற செல்வம் (1958) திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் காட்சியில் நடிகர்திலகத்தின் Close-up shot superimpose செய்யப்பட்டு அவரது நுண்ணிய முகபாவ மாற்றங்கள் ஒரே shotல் நம்மை மெய்மறக்க வைக்கும்!
இத்தகைய concept shots ரசிகர்களின் மனதில் பதிவது நடிகனின் திறமையான பாடல் வரிகளுக்கேற்ற expressions மூலமே! சிவாஜிகணேசன் ஏன் நடிகர்திலகமாக நடிப்புப்பேரரசராக ரசிகர் மனதில் சிம்மாசனமிட்டு வீற்றிருக்கிறார் என்பதற்கு இக்காட்சி ' ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'
பாவமன்னிப்பு திரைப்படத்தில் இடம்பெற்ற 'சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்...' பாடலும் இத்தகைய concept பாடலே!
இதன்பிறகு 1964ல் வெளிவந்த சங்கம் ஹிந்தி திரைப்படத்திலும் கதாநாயக இயக்குனர் ராஜ்கபூர் அவர்கள் இதே conceptல் ஒரு பாடல் காட்சியை அமைத்திருப்பார்
https://www.youtube.com/watch?v=_ongMRRVZrk
https://www.youtube.com/watch?v=OrrHhgNBMX8
https://www.youtube.com/watch?v=OLnSZSSJp5M