எஸ்வீ ஜி... அப்படிப் போட்டீங்க அருவாளை...
கலைக்கோயில் படத்தில் அத்தனை முத்தான பாடல்கள் இருந்தும் இன்று வரை காரணம் என்னவென்று அறியாமல் மனசுக்குள் சுற்றி சுற்றி மயங்க வைக்கும் பாட்டு இதுதான். இதில் ஆடியிருக்கும் சாந்தாவோ குரலிலேயே கிறங்கடிக்கும் எல்.ஆர்.ஈஸ்வரியோ .. இல்லாட்டி இது எந்த நாட்டு இசை என்று புரியாதவங்களையும் சொக்க வைக்கும் விஸ்வனாதனின் கைவண்ணமோ...அல்லது எல்லாமோ..
நானறியேன்..
மொத்தத்தில் எத்தனை யுகங்கள் போனாலும் இந்தப் பாட்டின் தாக்கம் மட்டும் குறையவே குறையாது ( of course... அதை ரசிப்போருக்கு : ) )

