-
இந்த பாடலில் தலைவரின் நடனம் மிகவும் அற்புதமாக இருக்கும் அதுவும் கடைசி காட்சிகளில் தலைவர் உயர உயர பறந்து தன்னுடைய நடனத்தை வெளிப்படுத்தி இருப்பார் . மேலும் அவர் அணிந்து உள்ள சூ சூப்பர் ஆக இருக்கும் (shoe ) எத்தனை ஜென்மங்கள் புண்ணியம் செய்ததோ அந்த சூ நம் தெய்வத்தின் செந்தாமரை பாதங்களை சுமப்பதற்கு
http://www.youtube.com/watch?v=RNZlFZM60SQ
-
http://i58.tinypic.com/w1tc1z.jpg
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் திரு. வினோத் அவர்கள் இன்று போல என்றும் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க.
ஆர். லோகநாதன்.
-
-
-
-
http://i61.tinypic.com/28gsdxy.jpg
இதய வீணை - சிறப்பு பார்வை
-----------------------------------------------
வெளியான நாள்:20/10/1972.
42 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆகிய பின் வெளியான படம்.
"பாரத் எம்.ஜி.ஆர். " என்கிற அடைமொழியுடன் டைட்டிலில்
வெளியான படம்.
வடசென்னை ஸ்ரீ கிருஷ்ணாவில் முதல் வாரத்தில் முதன் முறையாகவும் , பின்பு 6 வது வாரத்திலும் , 10 வது வாரத்திலும் கண்டு களித்தேன் .
ஆரம்ப காட்சிகளே அமர்க்களம். கண்ணுக்கு குளுமையான எழில் கொஞ்சும் காஷ்மீர் நகரில் எடுக்கப்பட்ட காஷ்மீர் பியூடிபுல் பாடலுடன் தொடக்கம்.படு உற்சாகமாக தொடக்கம்.
ஆனந்தம் இன்று ஆரம்பம் - படத்தின் முதல் முதலாக பதிவு செய்யப்பட்ட பாடல். புரட்சி தலைவர் இளமை துள்ளலுடன் கிளுகிளுப்பாக நடித்த பாடல்.
பொன்னந்தி மாலைப்பொழுது - பல மெட்டுகள் போட்டு குழம்பி இருந்த இசைஅமைப்பாளர் சங்கர் கணேஷ் தலைவரிடம் அணுகி 13 மெட்டுகளை காண்பித்தபோது ,
தலைவர் அவற்றை கோர்வையாக வரும்படி தொகுத்து உருவான பாடல். தலைவரின் இசைஞானத்திற்கு இந்த பாடல் ஒரு சான்று. இந்த செய்தியை பல நிகழ்ச்சிகளில்
இசை அமைப்பாளரே தெளிவு படுத்தியுள்ளார்.
எனக்கு பிடித்த தலைவரின் காதல் பாடல்களில் இதுவும் ஒன்று. தலைவரின் ஸ்டெப்புகள், ட்விஸ்ட் மூவ்மெண்ட்ஸ் அருமையாக இருக்கும்.
திருநிறைச்செல்வி - மணமக்களை வாழ்த்தும் பாடல்.
அருமையான கருத்துக்கள் .தலைவருக்கு இந்த பாடலில்
ஒப்பனை நன்றாக இருக்கும் .
நீராடும் அழகெல்லாம் - ரசிக்கும்படியான பாடல். படத்தில்
திருப்பம் ஏற்பட உதவும் பாடல்.
ஒருவாலுமில்லெ -தத்துவக் கருத்துக்கள் நிறைந்த இனிமையான பாடல்.
மக்கள் திலகம் பல மாறுபட்ட வேடங்களில் , அருமையான ஒப்பனைகளில் (விவேகானந்தர் , சந்நியாசி ) தோற்றங்களில் கன கச்சிதமாக நடித்திருப்பார்.
எனக்கு நினைவு தெரிந்தவகையில் 25,40, 50,60,70,80,100
என விநியோகஸ்தர் சுவரொட்டிகள் ஒட்டியது இந்த படத்திற்கு தான் இருக்கும்.
குளோபில் 105 நாட்கள், ஸ்ரீ கிருஷ்ணாவில் 87 நாட்கள் .
மகாலட்சுமி, ராஜகுமாரியில் 10 வாரங்கள் ஓடிய வெற்றிப்படம்.
மற்றும் மதுரை , திருச்சி ஆகிய ஊர்களில் 100 நாட்கள் மேல் ஓடியது. மறு வெளியீடுகளில் பல நகரங்களில் வெளியாகி
வெற்றி நடை போடும் படங்களில் ஒன்று.
-
-
-
-